“அணு உலை அறிவோம்” நூல் வழங்கும் ஆணித்தரமான சாட்சியங்கள்;
ஜெ.பிரபாகரன் எழுதிய “அணு உலை அறிவோம்” நூல் வெளியீட்டு விழா 9.5. 2013 அன்று மதுரையில் எழுத்தாளர் பா.ஜெயப்பிரகாசம் தலைமையில் நடை பெற்றது. இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் நூலை வெளி யிட, கழகப் பொதுச் செயலாளர் வைகோ, நூலின் முதல் படியைப் பெற்றுக் கொண்டு சிறப்பு உரையாற்றினார். அவரது உரையில் இருந்து.....
அணு உலையை ஆதரிப்பவர்களே, படித்துப் பாருங்கள்!
அணு உலை மனிதகுலத்தின் உயிருக்கு உலை என்று அணு உலை விபத்துகள் வழங்கிய எச்சரிக்கையை, ஒரு ஆவணமாக, நிழற்படங்களின் தொகுப்பு ஆவ ணமாக, அணு உலை அறிவோம் என்கின்ற, தமிழ் இனத்தைக்காக்கின்ற ஆயு தமாக நூல் ஆசிரியர் ஆருயிர்த்தம்பி பிரபாகரன் அவர்கள் உருவாக்கித் தந்து இருக்கின்றார்கள்.