Wednesday, May 8, 2013

இனி, மத்தியில் ஒரு கட்சி ஆட்சி வரவே வராது.

ம.தி.மு.க.வின் இருபதாம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் புதுக்கோட் டை சின்னப்பா பூங்காவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் டாக்டர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது:-

இந்த இயக்கம் கடந்த 19 ஆண்டுகளாக கடந்து வந்துள்ள பாதையை நினைத்து பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. நமக்கு உரிய இடத்தை தமிழக மக்கள் தந்துள்ளனர்.

தமிழக மக்கள் நம்மை அக்னி பரீட்சை கொண்டு பார்த்துள்ளனர். இந்த இயக் கம் ஆரம்பிக்கப்பட்டு பல துயர சம்பவங்கள், இழப்புகள் மற்றும் அடிகளை சந்தித்து வந்துள்ளது.




தமிழகம் கொடிய வறட்சியின் பிடியில் இருக்கிறது. இது அழிவை தரக்கூடியது என்று ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு கூறுகிறது. தமிழகத்தில் காவிரி நீரை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணையை உடைக்க கேரள அரசு முயற்சிக்கிறது. கேரள அரசு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக் காமல் இருப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு ஏற்புடையதாக இல்லை. தங்கள் மாநிலத்திற்குள் இருக்கும் அணையை உடைப்பது அந்த மாநிலத்தின் அதிகார முடிவு என்றால் ஒரு சொட்டு தண்ணீர்கூட இங்கு கிடைப் பது கேள்விக் குறி யான ஒன்றாகும்.

தமிழகத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு அரசு இனி வரக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண் டும். ஒரு கட்சி ஆட்சி, ஒரு குடும்ப ஆட்சி இனி எப்போதும் வரக் கூடாது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் இப்போது உள்ள அரசு தூக்கி எறியப்படும்.

இறையாண்மை பற்றி பேசும் மத்திய அரசு, முல்லை பெரியாறு பிரச்னையில் உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கிய பிறகும், அதற்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட அணைகள் பாதுகாப்புச் சட்டத்தை தடுக்கத் தவறியது.

புதிதாக மத்திய அரசு, நீர்மேலாண்மை பாதுகாப்பு மசோதாவை கொண்டுவர முயற்சி செய்து வருகிறது. இந்த மசோதாவின்படி அணை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பில் அந்தந்த மாநிலத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுவிடும். இதனால் காவிரியில் இருந்து கர்நாடகம் தண்ணீர் தராது. முல்லை பெரியாறு அணையை என்ன வேண்டுமானாலும் செய்ய கேரளம் தயங்காது. இதனால் தமிழகம் பாலைவனமாகும். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் சோவியத் ஒன்றியத்தைப் போல நாடு சிதறிப்போகும்.

மத்திய காங்கிரஸ் அரசு ஈழத் தமிழர்களுக்கு செய்த துரோகத்தை ஒருபோதும் மன்னிக்க முடியாது. இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மெளனமாக உள்ளது. இனியும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் நீடிக்கக்கூடாது. இந்த அரசு தூக்கி எறியப்பட வேண்டும்.

காங்கிரஸ் அரசு தமிழர்களுக்கு செய்த துரோகம் மன்னிக்க முடியாதது. மீத்தேன் வாயு எடுக்க பூமிக்கடியில் 500 அடியில் முதல் ஆயிரம் அடிவரை துளை போடுவர். இதனால் அங்குள்ள விளை நிலங்கள் பாதிக்கப்படும். மேலும் அப்பகுதியில் உப்புநீர் வரும். இதனால் பூமி அதிர்வும் ஏற்படும். எனவே இதற்காக நிலங்களை யாரும் விற்கவேண்டாம். எந்த நாட்டில் தமிழனுக்கு ஒரு துயரம், துன்பம் என்றாலும் அதற்கு நாங்கள் குரல் கொடுப்போம்.

No comments:

Post a Comment