Thursday, May 2, 2013

தூக்கு தண்டனை அளிப்பதன் மூலம் குற்றங்கள் குறைந்து விடாது -செய்தியாளர் சந்திப்பில் வைகோ

இன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தூத்துக்குடிக்கு வந்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி நடைபயணம் மேற்கொண்டு
வருகிறோம். இது வெற்றிகரமாக முடியும். காமராஜர், அண்ணா ஆட்சி காலத்தில் மது மூலம் கிடைக்கும் வருமானம் தேவையில்லை என்று மதுக்கடைகளை திறக்கவில்லை. ஆனால் இப்போது வருமானத்திற்காக மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.



சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டால் வியாபாரிகள், பயனாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பன்னாட்டு நிறுவனங்களை இந்தியாவில் இருந்து அகற்ற வேண்டும். ராஜீவ் கொலையாளிகளின் தூக்குதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும். தூக்கு தண்டனை அளிப்பதன் மூலம் குற்றங்கள் குறைந்து விடாது. மரண தண்டனையை ஒழிக்க வேண்டும்.

மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். அதேப்போல் கூடங்குளம் அணுமின்நிலையத்தையும் மூட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட செயலாளர் ஜோயல் உடனிருந்தார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தூத்துக்குடிக்கு இன்று கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறார் .

No comments:

Post a Comment