Saturday, May 18, 2013

இது என்ன தமிழ்நாடா? ராஜபக்சே ஆளும் கண்டி அனுராதபுரமா?

முதல் அமைச்சர் மகனுக்குப் பிறந்தநாள் கொண்டாட்டம்... 
முத்துக்குமார் மலர்த்தூணுக்கு அனுமதி மறுப்பு! 
இது என்ன தமிழ்நாடா?
ராஜபக்சே ஆளும் கண்டி அனுராதபுரமா?
கருணாநிதிக்கு வைகோ கேள்வி

ஈழத் தமிழர்களுக்காக இன்னுயிர் ஈந்த முத்துக்குமார் உள்ளிட்ட 16 தியாகி க ளின் முதலாம் ஆண்டு புகழ் அஞ்சலிக் கூட்டம் ‘இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம்’ சார்பில் சென்னையில் 29.01.2010 அன்று நடைபெற்றது. இக்கூட்டத் தில் வைகோ ஆற்றிய உரையில் இருந்து...

பன்னிரண்டு மாதங்களுக்கு முன்னால், உலகமெலாம் வாழுகின்ற தமிழர்கள்,
சூறைக்காற்றிலே சிக்கிய மரக்கலம் திசை தெரியாமல், கடலில் பொங்கி எழு கின்ற அலைகளுக்கு நடுவே தடுமாறித் தவிப்பதைப் போல, துன்பப் புயலில்
தவித்துக்கொண்டு இருந்தோம். சிங்களவர்களின் கொடூரத் தாக்குதலில் பல் லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டு இருந்த துயரமான நேரத்தில், இந்த இருளில் வெளிச்சமே தெரியாமல் போய்விடுமோ? என்று கவலை மூண்டு இருந்த வேளையில், இதற்கு ஏதாவது ஒரு தீர்வு அமை யாதா? தமிழர்களின் மரண ஓலம் நிற்காதா? சாக்காட்டில் தூக்கி எறியப்பட்ட 
இந்தத் தமிழ்ச் சாதியைக் காப்பாற்ற வழி பிறக்காதா? என்று புலம்பித் தவித்துக் கொண்டு இருந்தோம். அந்த நேரத்தில்தான், அதே கவலைக்கு ஆட்பட்ட கொலுவைநல்லுhர் முத்துக்குமார், தன் தங்கையின் எளிய வீட்டில், அவர்க ளெல்லாம் அயர்ந்து தூங்கியதற்குப் பின்னர், இரவெல்லாம் கண் விழித்து, கணினி யில் தன்னுடைய இதய தாகத்தைத் தட்டச்சு செய்து மரணப் பட்டய மாக, உயிராயுதமாக, எந்தப் பதற்றமும் இல்லாமல், ஆழ்ந்து, ஆராய்ந்து சிந்தித் து, நாளை பொழுது விடிந்தவுடன் சாகப் போகிறோம் என்று தீர்மானித்துக் கொண்டு, அந்த நீண்டதோர் மரண சாசனத்தை வடித்தான்.



விடிந்தவுடன் சாஸ்திரி பவனத்துக்குச் சென்று,காலை பத்து மணிஅளவில், தன் உடம்பில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு நெருப்பு வைத்துக் கொண்டான்.
கருகிக்கிடந்த அவனது உடலை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள்.அந்தச் செய்தி என் காதுகளில் விழுந்தவுடன், அந்த மருத் துவமனையின் டாக்டர் சகோதரி இந்திரா அவர்களிடம் நான் தொலைபேசி யில் தொடர்பு கொண்டு கேட்டபோது, இன்னும் சில நிமிடங்கள் மட்டுமே அவ ரது உயிர் இருக்கும்; அணைந்து கொண்டு இருக்கிறது. ஆனால், வீரஉணர்ச்சி யோடு பேசுகிறார்; தான் பிறந்த ஊரையும் அதன் பெருமைகளையும் சொல்லு கிறார்; கொலுவைநல்லூராம்- அது சங்க காலத்தில் போர்க்களத்துக்குச்சென்ற மாவீரர்களைத் தந்த ஊராம்.முத்துக்கள் விளைகின்ற, கடல் அலைகள் தாலாட் டு கின்ற துhத்துக்குடி மாவட்டத்தில், ஆத்தூருக்கு அருகில் இருக்கின்ற கொலு வைநல்லுhரில் பிறந்த முத்துக்குமார், மடியப் போகும் நேரத்திலும்கூடத் தன் மண்ணின் பெருமையைச் சொல்லி இருக்கிறான்.

அதற்கு ஒருசில நிமிடங்களுக்குப் பிறகு, அந்த உயிர்விளக்கு அணைந்து விட் டது என்பதை அறிந்தவுடன், நானும், வேளச்சேரி மணிமாறனும் மருத்துவ மனைக்கு ஓடோடிச் சென்று, உள்ளே நுழைந்தோம். அங்கே கருகிய உடலைத் தான் கண்டேன். அதன்பின்னர்தான், அவரது உடம்புக்கு, பஞ்சும் துணியும் வைத்து மூடினார்கள். அங்கே இருந்து கொளத்துhருக்குக் கொண்டு வந்தோம்.
மாவீரன் அண்ணன் பழ.நெடுமாறன் அவர்களும், நானும், மாலை ஐந்து மணி வரையில் அங்கே இருந்தோம். வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் அவர் களும், அவரது சகோதரர் இயக்குநர் புகழேந்தி அவர்களும் அங்கே வருவதற் குச் சற்று முன்னதாக, முத்துக்குமாரின் தங்கையின் கணவர் கருக்குவேல் ராஜன் அங்கே வந்தார். அப்பொழுதுதான், யாரோ ஒரு இளைஞன் தீக்குளித்து விட்டான் என்று கேள்விப்பட்டு, ஒருவேளை நமது முத்துக்குமாராக இருக்கு மோ? என்று நான் மனதிலே நினைத்தேன். சில நாள்களாகவே அவருடைய
போக்கு புதிராகவே இருந்தது’ என்று சொன்னார்.

தன் உடலில் தீ வைத்துக் கொள்வதற்கு முன்னர் முத்துக்குமார் வழங்கிய மர ண சாசனம் எங்கள் கைகளுக்குக் கிடைத்தது. படிகள் எடுக்கச் சொன்னோம். இல்லாவிட்டால், தமிழர்களின் கைகளில் அது கிடைக்காமலேயே போயிருக் கும். அவனது மரண சாசனம் ஈழத்துக் கும் போய்ச் சேர்ந்தது. ‘பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாருங்கள்’ என ஐ.நா.மன்றத்தின் துhதுவர்கள் அழைத்ததன்
பேரில், வெள்ளைக் கொடி பொருத்தப்பட்ட வேனில் வந்தவர்களை, மனிதாபி மானமற்ற முறையில் சுட்டுக் கொன்றார்கள். துப்பாக்கிக் குண்டு களால் சிதற டிக்கப் பட்டார்கள் எங்கள் நடேசன், எங்கள் புலித்தேவன்,எங்கள் ரமேஷ். ஐயோ, கொடுமை என்று தடுக்க முயன்ற நடேசனின் மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அந்த நடேசன் என்னிடம், ‘அண்ணா, முத்துக்குமார் என்ற ஒரு வீர வாலிபன் தமிழகத்தில் தீக்குளித்து மடிந்தானாமே? எங்கள் தமிழ் ஈழம் வேதனையில்
துடிக்கிறது. நாங்கள் துடிக்கிறோம். இதோ, என் பக்கத்தில் இருக்கின்ற கவிஞர் புதுவை இரத்தினதுரை உங்களிடம் பேச விரும்புகிறார்’ என்றார். அழுது கொண்டே, கதறிக்கொண்டே இரத்தினதுரை பேசினார். ‘அண்ணா எங்களைச் சுற்றிலும் இங்கே எண்ணற்றோர் இறந்து கிடக்கின்றனர். வயது முதிர்ந்தவர் கள், பெண்கள், குழந்தைகள் செத்துக் கிடக்கிறார்கள். அதற்கு நடுவே நாங்கள் இருக்கிறோம். அங்கே தமிழகத்தில், எங்களுக்காக ஒரு வீரச்சகோதரன் தீக் குளித்து மடிந்து இருக்கிறானே’ என்று கதறி வேதனைப்பட்டுத் துடித்தார்.
அதே உணர்ச்சியோடு ஒரு கவிதையை எழுதி, மறுநாள் அனுப்பி வைத்தார்.

‘முத்துக்குமார்.. முகம் தெரியாத எங்கள் நண்பனே...
எங்களுக்காக நீ செத்துக் கிடக்கின்றாயாமே’
யாராவது அவனைப் பொதி செய்து,
ஈழத்துக்கு அனுப்பி வைக்க மாட்டார்களா?
உன்னை வனப்புச் செய்து வரவேற்கத் தமிழ் ஈழம்,
விழி உடைத்துப் பெருகி நிற்கிறது.
நீ மூட்டிய சோதி நெருப்பு சும்மா அணையாது.
அது விண் தொட எழும்
அந்த வெளிச்சத்தில் தமிழ் ஈழம் மலரும்’

என்ற கவிதையைத் தந்தார் புதுவை இரத்தினதுரை.இன்றைக்கு வதை முகாமி லே இரத்தினதுரை உயிரோடு இருக்கிறாரா? அல்லது கொல்லப்பட்டாரா? எனக்குத் தெரியவில்லை.

இன்றைக்கு, இங்கே அருமைச் சகோதரர் புகழேந்தி அவர்களுடைய முயற்சி யால், முத்துக்குமாருக்கு மலர்த்தூண் நிறுவப்பட்டு இருக்கிறது. அதே இடத் தில்தான், முத்துக்குமாரின் சடலம் மூன்று நாள்கள் வைக்கப்பட்டு இருந்தது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். தமிழகத்தில் உணர்ச்சி மடிந்து விடவில்லை. ஆம்;முத்துக்குமார் ஏற்றி வைத்த அந்த உணர்ச்சி அழியாது. ஜனவரி 31 ஆம் நாள், முத்துக்குமாரின் உடலை, மலர்களால் அலங்கரிக்கப் பட்ட ஊர்தியில் மூலக்கொத்தளம் சுடுகாட்டை நோக்கி எடுத்துச் சென்றபோது, இலட்சக்கணக்கான மக்கள் வழி நெடுகிலும் திரண்டு நின்று மலர்களைத் தூவினார்கள்.தாய்மார்கள், தங்கள் செல்லக் குழந் தைகளைத் தோளிலே துhக்கிக்கொண்டு வந்து, முத்துக்குமார் உடல் வந்த வண்டியில், தங்கள் குழந்தைகளை உட்கார வைத்துத் தொட்டுக் கும்பிடச் சொன்னார்கள்.வழிநெடுகிலும் மெழுகுவர்த்திகளை ஏந்திக் கொண்டு நின்றி ருந்தார்கள். தெரு ஓரங்களில் நமது தாய்மார்கள் விளக்குகளோடு நின்றார் கள். என் வாழ்நாளில், அப்படி ஒரு காட்சியை நான் கண்டது இல்லை.

ஆகவே, தமிழ்ச் சமுதாயத்திடம் உணர்ச்சி இல்லை என்றோ, சொரணை அற்ற ஜென்மங்கள் என்றோ கருத வேண்டாம். உணர்ச்சி எழுந்தது. அது எரிமலை யாகச்சீறிப் புறப்பட்டது. தாளமுத்து-நடராசன் உடல்கள் எரிக்கப்பட்ட மூலக் கொத்தளத்தில், ‘இந்த நெருப்பு அணையவே அணையாது’ என்றாரே 1938 இல்
அண்ணா. அதே இடத்தில், முத்துக்குமாரின் உடலையும் சிதையில் வைத்து, நாம் உறுதி எடுத்தோம்.

அன்புள்ள சகோதரர்களே, மிகுந்த துன்பமும், துயரமும் நம்மை வளைத்து இருக்கிறது. முத்துக்குமார் தீக்குளிக்கின்றபோது, தான் மடிந்ததற்குப் பின்னர் ஒரு உணர்ச்சித் தீ எழும். என் உயிரை ஆயுதமாகத் தருகிறேன். மாணவர் பட் டாளம் அதை ஏந்திக்கொண்டு எழும் என்ற நம்பிக்கையோடு மடிந்தான். அதன் பின்னர் ஏற்பட்டு விட்ட அவலங்களை, நேர்ந்து விட்ட துயரங்களை, என் சகோ தரனே நீ அறிய மாட்டாய். நீ உன் உயிரை எந்தத் துன்பத்துக்காக மடித்துக்
கொள்ள வேண்டும் என்று கருதினாயோ, அதைவிடக் கோடி மடங்குத் துன்பம்
நேர்ந்து விட்டதே? முத்துக்குமார் தீக்குளித்த செய்தியைத் தொலைக்காட்சி யிலே பார்த்துவிட்டு, பள்ளப்பட்டி ரவி தீக்குளித்தான்.

இந்த நிகழ்ச்சியை நடத்துகின்ற எங்களுக்கு எந்த அரசியல் நோக்கமும் இல் லை. இங்கே செய்தியாளர்கள் வந்து இருக்கிறார்கள். நடு நிலையோடு எடை போட்டுப்பாருங்கள். இது ஒரு புனிதமான வேளை.முத்துக்குமாரின் தியாக மரணம், தமிழர்களின் நெஞ்சில் நெருப்பை மூட்டிற்று. இதே இடத்தில், நான்கு
நாள்களுக்கு முன்னர், தமிழகத்தின் முதல் அமைச்சர் பேசி இருக்கிறார்.

முதல் அமைச்சர் அவர்களே, தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்த வந்தீர் கள்.

தியாகிகளை, தியாகிகள் மதிக்கலாம். தியாகிகளுக்குத் துரோகிகள் வீர வணக் கம் செலுத்த முடியாது. ஒருவீரனை, இன்னொரு வீரன்தான் மதிப்பான். உங்க ளுக்கு அந்தத் தகுதி இல்லை.

நான் காவல்துறையை மதிக்கிறேன். அவர்களது உடலில் ஓடுவதும் தமிழ் இரத்தம்தான். ஆனால், அவர்களது எஜமானர்கள், என்ன உத்தரவு போடுகிறார் கள்? முத்துக்குமாருக்கு நினைவுத்தூண், மலர்த்தூண் அமைப்பதற்கு ஏன் அனுமதி கொடுக்கவில்லை? நீதிமன்றத்துக்கு அல்லவா சென்றார் புகழேந்தி?
தாய்த்தமிழகத்தின் தலைநகரத்திலே, அண்ணா கோலோச்சிய தமிழகத்திலே, கோடிக்கணக்கான தமிழர்கள் வாழுகின்ற தமிழ்நாட்டின் தலைநகரத்திலே, இந்த இனத்துக்காகத் தன் உயிரை ஈந்த உத்தமனுக்கு மலர்த்தூண் வைக்க, கலைஞர் கருணாநிதி அனுமதி கொடுக்கவில்லை. அனுமதி கொடுப்பதைப் பற்றிக் காவல்துறை பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு இட்டது. அனுமதி கொடுக்காவிட்டாலும் தூண் எழுப்பப்படும்; அடக்குமுறை யை உடைப்பதற்கு ஒரு கூட்டம் புறப்பட்டு வரும்; மலர்த்தூண் எழுப்புவோம்; எந்தப் பட்டாளம் வந்தாலும் அதைப் பார்ப்போம்’ என்று நான் புகழேந்தியிடம்
சொன்னேன்.

முத்துக்குமாருக்கு மலர்த்தூண் வைக்க அனுமதி மறுத்தீர்களே, இது என்ன தமிழ்நாடா? இல்லை ராஜபக்சே ஆளுகின்ற கண்டி அனுராதபுரமா? 

கோடிக்க ணக்கான தமிழர்கள் வசிக்கின்ற தமிழகத்தின் தலைநகரில், முத்துக் குமாருக்கு மலர்த்தூண் வைக்க அனுமதி மறுத்தார்கள். கடைசியில் நீதிமன் றம் உத்தரவு இட்டதற்குப்பின்னர்தான் கொடுத்தார்கள்.

நான் கேட்கிறேன். கடந்த ஆண்டு, முத்துக்குமார் சடலம் இங்கே வைக்கப் பட்டு இருந்தபோது, இலட்சக்கணக்கான இளைஞர்கள் கொந்தளிக்கும் இதயத் தோடு சூழ்ந்து இருந்தார்கள். தமிழகமே தணலில் இருந்தபோது, உங்கள் மக னுக்கு மதுரையில் பிறந்தநாள் ஏற்பாடு. முத்துக்குமார் உடல் இங்கே; கூடி அழும் தமிழர்கள் இங்கே. ஆனால், மதுரையில் முதல் அமைச்சரின் மகனுக்கு ஆடம்பரப் பிறந்தநாள்.தெருத்தெருவாகக் கிடா வெட்டிக் கறிவிருந்துக் கொண் டாட்டம். எங்கு பார்த்தாலும், விளம்பர போர்டுகள். முதல் அமைச்சரோ, மைந் தனின் அருமைபெருமைகளைக் கேட்பதற்காக, பட்டு வேட்டியும், பட்டுச் சட் டை பீதாம்பரத்தோடு தனது மகன் வாயிலே கேக்கைத் திணிக்கிறார். மூன்று நாள்களாக எந்த இரங்கல் அறிக்கையும் தெரிவிக்கவில்லை.கட்சியின் செயற் குழு கூடுகிறபோது, தி.மு.கழகத்திலும் இன உணர்ச்சி கொண்ட பழைய தோழர் கள் இருக்கிறார்கள் அல்லவா? இன உணர்வு கொண்டவர்கள், தியாகத்தை மதிப்பவர்கள் இல்லாமல் போய்விடவில்லை. காண்ட்ராக்டுக்கும், கமிசனுக் கும் கட்சி என்று சொல்லிக் கொண்டு திரிபவர்களை நான் கேட்கவில்லை. பழைய திராவிட முன்னேற்றக் கழகத்தோழர்களின் உள்ளத்தில் வேதனைப் புயல் வீசும் என்பதாலே, ஒப்புக்கு ஒரு தீர்மானத்தைப் போட்டார்.

முத்துக்குமார் மறைவைத் தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு, பள்ளப்பட்டி இரவி தீக்குளித்தான். நான் மதுரைக்குச் சென்று பார்த்தேன். காவல்துறை அறிக்கை என்ன சொன்னது தெரியுமா?

நம்மில் பலருக்கு மறதி அதிகம். எனவேதான், நடந்த நிகழ்வுகள் சிலவற்றை நான் நினைவுபடுத்திச் சொல்ல வேண்டிய நிலை இருக்கிறது. தமிழர்களின் வரலாற்றில், கடந்த ஆண்டைப் போல அவலம் நிறைந்த காலமே கிடையாது. மணிமுடி தரித்த மன்னர்கள் ஆண்டு இருக்கலாம்; மகோன்னதமாக வாழ்ந்து இருக்கலாம், தமிழை வளர்த்து இருக்கலாம்; கடல் கடந்த நாடுகளுக்குப் படை நடத்தி வென்று இருக்கலாம். மனித குலத்துக்கு வேறு எந்த மொழியிலும் கிடைக்காத தமிழ் இலக்கியங்களை நமது முன்னோர்கள் தந்து இருக்கலாம்.
நாகரிகம், பண்பாட்டை உலகத்துக்கே போதிக்கக்கூடிய நிலை இருந்து இருக் கலாம். ஆனால், எல்லாம் போயிற்றே?

இன்றைக்கு நானிலத்தில் நாதி அற்றவர்களாக ஒரு இனம் இருக்கிறது என் றால், அது தமிழ் இனம்தான். வேறு எந்த இனத்துக்கும் இந்தக் கொடுமை ஏற் படவில்லை.இரத்தக்காட்டேரியைப் போல உடம்பை முறுக்கிக்கொண்டு நிற் கின்ற கொலை வெறியனுக்குச்சிங்களவர்கள் மீண்டும் முடிசூட்டி இருக்கிறார் கள். கெக்கலி கொட்டுகின்ற கொலைவெறியனைப் பார்க்கச் சகிக்கின்றதா? எத்தனைத் தமிழர்களைக் கொன்றான்? பச்சிளங்குழந்தைகளைப் பலியிட் டான்? பெண்களைச் சிதைத்தான்? தமிழ் இனத்தையே கரு அறுத்து விட்டானே?

கடந்த ஆண்டில் டெல்லிக்கு வந்தபோதும், மகிந்த ராஜபக்சே இதே திமிரோடு தான் பேசினான். தமிழ் இளைஞர்களுக்குச்சொல்லுகிறேன். இதைவிடக் கொடு மையான நிலைமை ஏற்பட்டது உண்டா? இந்த நிலைமைக்கு யார் காரணம்?

இந்திய அரசு மட்டும்தான் காரணம்? முத்துக்குமார் இறந்தபோது கொதித்து
எழுந்த தமிழகத்தைக் காட்டி, போரை நிறுத்துகிறாயா? இல்லையா? என்று கேட்கின்ற கடமையை, முதல்வர் ஏன் செய்யவில்லை? அந்த வேளையில், மொத்தத் தமிழகமும் ஒன்றாகத் திரண்டு நின்றது. சட்டமன்றத்தில் நீங்கள் கொண்டு வந்த தீர்மானத்தை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற் றக் கழகம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஆதரித்தன. தமிழக
அரசியலில் இது ஒரு அபூர்வமான காட்சி. 234 சட்டமன்ற உறுப்பினர்களும் ஏகோபித்து நிறைவேற்றிய ஒரு தீர்மானம், போரை நிறுத்த இந்திய அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று. இதையே நீங்கள் முன்னிறுத்தி, இந்திய அரசை வற்புறுத்தினீர்களா?

நிறுத்துகிறாயா இல்லையா என்று நீங்கள் கேட்கவில்லையே? ஒரு வாரப் பத் திரிகையில், இந்தியா டுடே என்று நினைக்கிறேன். அவரிடம் கேட்கிறார்கள்.
நீங்கள் நினைத்து இருந்தால், இந்தப் போரைத் தடுத்து நிறுத்தி இருக்கமுடியும். இந்திய அரசை வற்புறுத்தி இருக்க முடியும் என்ற விமர்சனம் உங்கள் மீது
வைக்கப்படுகிறதே? என்று செய்தியாளர் கேட்கிறார்.முதல் அமைச்சர் என்ன பதில் சொன்னார்? அப்படி நெருக்கடி கொடுத்து இருந்தால், என்னுடைய ஆட் சிக் கு ஆபத்து வந்து இருக்கும். இதுதான் அவரது பதில்.

இந்த வாய்தானே, மயிலாப்பூரில் உயிரையே கொடுப்போம் என்று பேசியது? இந்தக் காரணத்துக்காக நீங்கள் ஆட்சியை இழந்து இருந்தால், ஈழத்தமிழர் களைக் காக்கக் குரல் கொடுத்து இந்திய அரசை, அதன் துரோகத்தைத் தடுக்க முயன்று, போரை நிறுத்தப் போகிறாயா? இல்லையா? என்று நீங்கள் வெகுண்டு இருந்திருந்தால், தமிழகத்தைக் கிளர்ச்சிக் களத்துக்கு நான் ஆயத் தப்படுத்துவேன் என்று சொல்லி இருந்தால், அரசுக்கு ஆதரவு கொடுக்க மாட் டேன் என்று நீங்கள் கூறி இருந்தால், அதன் விளைவாக நீங்கள் ஆட்சியை இழந்து இருந்தால், நான் சொல்லுகிறேன், உலகம் முழுவதும் இருக்கின்ற தமி ழர்கள் உங்களை இனத்தின் தலைவன் என்று முடிசூட்டி இருப்பார்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட களங்கம், கறை எல்லாம் துடைக்கப்பட்டு இருக்கும். உங் கள் வாழ்நாளில் என்றும் கிடைக்காத புகழ் மகுடம் உங்களுக்குச் சூட்டப்பட்டு இருக்கும். ஆயிரம் ஆண்டுகளுக்கு அந்தப் புகழ் இருக்கும்.அதைவிடவா இந்தப் பதவி உங்களுக்குப் பெரிதாகப் போயிற்று?

இதையா பாவேந்தர் சொன்னார் உயிரையே கொடுப்போம் என்று? இந்தப் பதவி ஒரு கேடா? பட்டம், பதவிகளுக்காகவா அண்ணா இயக்கம் தொடங்கினார்?

உங்கள் மனதுக்கு உள்ளேயே புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்று நினைத் தீர் கள். உங்களுடைய உள்நோக்கம் அதுதான். அதனால்தான், முத்துக்குமார்
அழகாகச் சொன்னான், ‘வின்னர் பட காமெடியன் வடிவேலுவை வென்று விட் டார் கருணாநிதி’ என்று. இதைச் சொல்ல யாருக்கும் துணிச்சல் இல்லை தமிழ் நாட்டிலே. அப்படிச் சொன்னாலும், அதை வெளியிட எந்தப் பத்திரிகையும் தயா ராக இல்லை. நான் செய்தியாளர்களைக் குறை சொல்லவில்லை.நீதி, நியா யம், நேர்மையான செய்திகள் இன்றைக்குப் பத்திரிகைகளில் வரவில்லை. தமி ழகத்தில் ஜனநாயகத்தின் மென்னி முறிக்கப்பட்டுக் கிடப்பதற்குக் காரணம், பத்திரிகைகளின் முதுகு எலும்பு நொறுக்கப் பட்டு விட்டது. தவறு எங்கே இருந் தாலும் சுட்டிக்காட்ட வேண்டியது பத்திரிகைகளின் கடமை. அந்தக் கடமை யில் தவறிவிட்டார்கள்.

ஈழப்பிரச்சினையை விட்டுவிடுங்கள். மதுரையில்,பட்டப்பகலில் ஒரு பத்திரி கை அலுவலகம் தாக்கப்பட்டு, தீவைத்துக் கொளுத்தப்பட்டது. மூன்று இளை ஞர் கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அந்தக் கொடுமையான கோரக் கொலைக்குக் காரணமான அனைவரும் விடுவிக் கப்பட்டு, அத்தனைச் சாட்சி களும் பிறழ் சாட்சிகள் ஆகி, சப்-இன்ஸ்பெக்டர் உட்பட, காவல்துறை துணை
ஆய்வாளர் உட்பட எல்லோரும் பிறழ் சாட்சிகள் ஆகி, அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதே? ஒரு பத்திரிகையாவது கண்டித்துத் தலையங்கம் எழுதியதா? எங்கே இருக்கிறது பாதுகாப்பு?

எப்போதெல்லாம் தமிழகத்தில் பெரும் பிரச்சினைகள் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் முதல் அமைச்சர் மருத்துவமனையில் போய்ப் படுத்துக்
கொள்கிறார். அதைக் கேட்டால், விமர்சனம் செய்வதற்குப் பத்துப் பேரைத் தயாராக வைத்து இருக்கிறார். இதற்குப் பயந்து யாரும் வாயைத் திறப்பது
இல்லை.

ஆனால், முத்துக்குமார் சொன்னான். அவன், பிரபாகரனை நெஞ்சில் வைத்து பூஜித்தான். அதனால்தான், அஞ்சாமல் சொன்னான், தயக்கம் இல்லாமல் சொன்னான், நக்கீரனைப் போலச் சொன்னான். அவன் சொன்னதுதான் உண் மை. 

நீங்கள் திட்டமிட்டுத்தான் மருத்துவமனையில் போய்ப்படுத்துக் கொண்டீர் கள். இந்திய அரசின் ஆதரவோடு ஈழத்தில் சிங்கள அரசு போரைத் தீவிரப் படுத் தப்போகிறது என்ற உண்மை உங்களுக்குத் தெரியும். எம்.கே.நாராயணன் வந்து நேரடியாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். வெகு சீக்கிரத்தில் புலிகள் கதை முடிந்து விடும். அனைவரும் கொல்லப்பட்டு விடுவார்கள்.பிரபாகரன் உயிருக்கும் ஆபத்து நேரும். அழிக்கப்பட்டு விடுவார்கள்’ என்று சொல்லி விட் டுப் போய்விட்டார்.

எனவே, நீங்கள் ஒரு கணக்குப் போட்டீர்கள்.ஆழிப்பேரலையின்போது செய்த தைத்தான் இப்போதும் செய்தீர்கள். ஈழத்தமிழர்களுக்காகத் தமிழகத்தில் தீக்கு ளித்த அனைவரின் இல்லங்களுக்கும் நான் சென்று வந்தேன். ஒரேயொரு வீட் டைத் தவிர.தென்சென்னையில் தீக்குளித்த திராவிட முன்னேற்றக்கழகத் தோழ ரின் இல்லத்துக்குச் செல்ல வேண்டாம்.நீங்கள் வந்தால் கலவரம் செய் யச் சொல்லி உத்தரவு போட்டு இருக்கிறார்கள் என்று சொன்னதால் நான் போக வில்லை. முதல் அமைச்சர் அவர்களே, இவர்களுள் ஒருவருக்காவது நீங்கள் இரங்கல் தெரிவித்தீர்களா?திராவிட முன்னேற்றக் கழகத்துக்காக, உங் களுக்காக உழைத்த தொண்டர்கள் சிவப்பிரகாசம், சிவகாசி கோகுலகிருஷ் ணன் தீக்குளித்துச் செத்ததற்கும் ஒரு வரி இரங்கல் தெரிவிக்க உங்களுக்கு மனம் இல்லையே?

எது பாசம்? யார் உடன்பிறப்பு? உங்கள் குடும்பத்துக்கு மட்டும்தான் உங்கள் பாசம். அது மட்டும் அல்ல, இலட்சியத்துக்காகத் தீக்குளித்தவர்களை, சொந்தப்
பிரச்சினைகளுக்காகத் தீக்குளித்தார்கள் என்று காவல்துறையை விட்டு அறிக் கை விடச் செய்து கொச்சைப்படுத்தினீர்கள்.

இன்றைக்கு முத்துக்குமாருக்கு மலர்த்துதூண் வைக்க காவல்துறை அனுமதி தர முன்வரவில்லை. ஆனால், மதுரையில் நகரம் இருப்பதே தெரியவில்லை. நாளை விடிந்தால் முதல் அமைச்சர் மகனுக்குப் பிறந்தநாள். எங்கு பார்த்தா லும் அவரது கட் அவுட்டுகள், விளம்பர போர்டுகள். அண்ணாவுக்கு இந்த ஏற் பாடு இல்லை, எம்.ஜி.ஆருக்கு இல்லை, கலைஞர் கருணாநிதிக்குக்கூட இல் லாத அளவுக்கு விளம்பரங்கள். கம்ப்ரஸர் வைத்து சாலையில் ஓட்டை போட் டு, முதல் அமைச்சர் மகன் விளம்பரங்களை ஊன்றுகிறார்கள்.

முத்துக்குமார் தன் உயிரை மாய்த்துக் கொண்டபோது இருந்ததைவிடப்பெருங் கேடு இப்போது சூழ்ந்து விட்டது. இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று
குவித்த ராஜபக்சேவுக்கு, இந்தியா பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற் கிறது. திருப்பதி கோவிலில் அவன் 80 பேர் புடைசூழ வந்து, ஏழு மணி நேரம் போக்குவரத்தை நிறுத்திவிட்டுத் தரிசனம் செய்து விட்டுப் போனான்.

அவன் என்ன ஏழுமலையான் மீது பக்தி கொண்டவனா?இலங்கையில் இந்துக் கோவில்களை இடித்து நொறுக்கிய கொடியவனுக்கு, இந்தியாவில் வரவேற் பா? தமிழ் நாட்டின் தலையாக இருக்கின்ற வட வேங்கடத்தில் நின்று, உச்சந் தலையில் மிதித்து விட்டு வந்து விட்டேன் என்று அவன் கொழும்பில் போய்க் கொக்கரிக்கின்றான்.சீக்கியர்களைக் கொன்றவனை, அமிர்தசரஸ் பொற் கோவி லுக்கு அழைத்துச் சென்று வரவேற்பாரா மன்மோகன்சிங்? நாங்கள் சொரணை கெட்டவர்களா? சோற்றால் அடித்த பிண்டங்களா? உணர்ச்சி செத் துப் போய்விட்டதா?

தமிழ்நாட்டு மக்களே எண்ணிப் பாருங்கள். இப்போது நிலைமை என்ன தெரியு மா? யாழ்ப்பாணத்தில் இசைப் பேரரசி எம்.எஸ். சுப்புலட்சுமியின் சுப்ரபாதம் கேட்கிறது.ஆனால், அதையும் மீறி, பெளத்த விகாரங்களில் இருந்து சிங்கள மொழியில் பாடல் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. எங்கே? யாழ்ப்பாணத்தில்?
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழர்களின் தாயக மண்ணான யாழ்ப் பாணத்தில், சிங்கள மொழி ஒலிக்கத் தொடங்கிவிட்டது. தமிழர்கள் கலாச் சா ரம், மொழி கெடாத பகுதி என்று நாம் கருதிக்கொண்டு இருந்தோமே, அந்த யாழ்ப் பாணத்தில். என்னுடைய அன்புச் சகோதரர்களே,நான் பகுத்தறிவு இயக் கத் தைச் சேர்ந்தவன். எந்தச்சமயத்தையும் நான் குறைத்துப் பேசவில்லை. ஆனால், ஆலயங்களுக்குச் செல்லுகின்ற பக்தர்களே, நம்பிக்கையோடு செல் கிறீர்கள். ஆனால், எது நடக்கக் கூடாது என்று நாம் கருதினோமோ,அது நடக் கத் தொடங்கி விட்டது. அடுத்த கட்டமாக ராஜபக்சே, தமிழர்களின் கலாச்சாரச் சுவடே இல்லாமல் செய்யத் திட்டமிட்டுச் செயல்பட்டுக் கொண்டு இருக்கின் றான். தமிழ் இனம் என்பதன் அடையாளமே இல்லாமல் செய்யத் திட்டமிடு கிறான். இவனுக்கு என்ன வேலை யாழ்ப்பாணத்திலே? அங்கே சிங்களர்கள்
இருக்கிறார்களா? தமிழர்கள் இருக்கின்ற இடத்தில், பெளத்த விகாரங்களைப் புதிதாகக் கட்டுவதன் நோக்கமே அதுதான்.

புத்தரை நாம் நெஞ்சிலே வைத்துப் போற்றுகிறோம்.அவர் அன்பைப் போதித் தார், அமைதியைப் போதித்தார், கருணையைப் போதித்தார். ஆனால், புத்தரின்
பெருமையைப் பேசச் சிங்களர்களுக்குத் தகுதி இல்லை.வெலிக்கடைச் சிறை யில் குட்டிமணி, தங்கதுரை, ஜெகனை, நுhற்றுக்கணக்கான தமிழர்களைக் கொன்று புத்தனின் சிலைக்கு முன்னால் ஓரடி உயரத்துக்குத் தமிழனின் இரத் தத்தைப் பெருகச் செய்தவர்களுக்கு அந்தத் தகுதி இல்லை. அவர்களைக் கொண்டு வந்து தமிழர்கள் பகுதியில் குடி அமர்த்துகிறானே? நமது நடு வீட்டுக் கு உள்ளே அவன் புகுந்து விட்டான். இதை நான் சொன்னால் நீங்கள் நம்ப மறுக்கலாம். 

இதை எழுதி இருக்கின்ற பத்திரிகை, புலிகளின் ஆதரவுப் பத்திரிகை  அல்ல. ராஜபக்சே ஏற்கெனவே சொல்லிவிட்டான். தமிழர்களுக்கு என்று பூர்வீகத் தாயகம் என்ற கருத்துக்கே இடம் இல்லை என்று. ஆங்கிலேயர்கள் இலங்கை யை விட்டு வெளியேறியதற்குப் பின்னர் எத்தனையோ சிங்கள அதிபர்கள் வந்து இருக்கிறார்கள். கேடு செய்து இருக்கிறார்கள். அமைதி வழியில் தமிழர் கள் நடத்திய போராட்டங்களையெல்லாம் இராணுவத்தைக் கொண்டும், காவல் துறையைக் கொண்டும் நசுக்கி இருக்கிறார்கள். ஆனால், ராஜபக்சே யைப் போன்ற கொடியவன் வேறு எவனும் இல்லை.

2005 இல் அவன் வெற்றி பெற்றபோது என்னிடம் செய்தியாளர்கள் கருத்துக் கேட்டார்கள். அப்போதே சொன்னேன்: ‘இவன் கொலைகாரன், ஈவு இரக்கம்
அற்றவன். இதுவரை இல்லாத கொடுமை நடக்கப்போகிறது’ என்று சொன் னேன். அதுதான் நடந்தது.

இன்றைக்குச் சில கைக்கூலிகள் எழுதுகிறார்கள். ‘இராஜ பக்சே, தமிழர்களுக் குத் தீர்வு கொடுக்கப் போகிறானாம்.நான் சொல்லு கிறேன்: ‘அவன் தமிழர்கள் என்ற அடையாளத்தையே அழிக்கப் பார்க்கிறான். இதற்கெல்லாம் காரணம் இந்திய அரசு. இந்தப் போரை நடத்தியதே இந்திய அரசுதான். தமிழர்கள் சிந்திய ஒவ்வொரு சொட்டு இரத்தத்துக்கும் மன்மோகன் தலைமையிலான அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும். நீ குற்றவாளி, நீ கொலைகாரன், தமிழர்களைக் கொன்று குவிக்கக் காரணமான அரசு.

இதைச் சொன்னதற்காக, என் மீது தேசத்துரோக வழக்கு.இதைத் திரும்பத் திரும்பச் சொல்வேன். எனது நாவுக்குப் பேசுகின்ற சக்தி இருக்கிறவரையிலும் சொல்வேன். ஊர் ஊராக, தெருத்தெருவாகப் போய்ச் சொல்லுவேன். நான்
பட்டம், பதவியைக் கனவு கண்டு பொதுவாழ்வுக்கு வந்தவன் அல்ல. பிழைப்பு நடத்தவில்லை. நான் பிறந்த பொன்னாடாம் புண்ணியபூமி இந்தத் தமிழகம். இந்தப்பொன்னாட்டின் பெருமைக்காக, தமிழ் இனத்தின் பெருமைக்காக, தமிழர் களின் வாழ்வுக்காக, தரணி வாழ் தமிழர்களின் கண்ணீரைத் துடைப்பதற்காக நாங்கள் போராடுவோம்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரைஆற்றினார்.

No comments:

Post a Comment