Wednesday, May 1, 2013

''என் பையனைப் பத்திரமாக் கூட்டிட்டுப் போங்கய்யா!''

''என் வீட்டுக்காரர் தினமும் குடிச்சிட்டுத்தான் வீட்டுக்கு வருவார். ஒருநாள் குடிபோதையில் வீட்டுல இருந்த சிம்னி விளக்கைத் தட்டிவிட்டுட்டார். கூரை வீடுங்கிறதால் தீ பிடிச்சிருச்சு. என் பையனை ஒரு கையிலும், புருஷனை ஒரு கையிலும் இழுத்துட்டு வெளியில ஓடி வந்துட்டேன். என் புருஷன், சாராய பாட்டில் இருக்கிறதா சொல்லி, அதை எடுக்க வீட்டுக்குள்ள ஓடினார். நான் தடுத்தும் நிற்கலை. உள்ளே போனவர் நெருப்புல மாட்டி செத்துட்டார். எதுவும் செய்ய முடியாம நானும் என் பையனும் பார்த்துட்டு நின்னோம்.

இன்னைக்கு காலையில என் பையன் என்கிட்ட, 'அப்பா சாவுக்குக் காரணமா இருந்த சாராயத்தை ஒழிக்க வைகோ நம்ம ஊருக்கு நடைபயணம் வர்றாராம். நானும் அவருகூட போறேம்மா’னு கேட்டான். நானும் அவனைக் கூட்டிட்டு நேரா, வைகோ வரும்போது போனேன். 'என் பையனைப் பத்திரமாக் கூட்டிட் டுப் போங்க...’னு சொல்லி அவர்கிட்ட ஒப்படைச்சிட்டு வந்துட்டேன்'' என்று பெருமிதத்தோடு சொல்கிறார் அமராவதி. கல்வராயன் என்ற அந்தச் சிறுவ னுக்கு ஷூ வாங்கிக் கொடுத்து தன்னுடன் சேர்த்துக்கொண்டு நடக்கிறார் வைகோ.



கொளுத்தும் வெயிலில் கொங்கு மண்டலத்தில் மதுவுக்கு எதிரான நடைபய ணத்தைத் தொடர்கிறார் வைகோ. பொள்ளாச்சியில் கடந்த 16-ம் தேதி தொடங் கிய நடைபயணம் உடுமலை, வெள்ளக்கோவில், சித்தோடு, குமாரபாளையம் வழியாக ஈரோட்டில் நிறைவுபெற்றது. 13 நாட்களில் 310 கி.மீ. நடந்திருக்கிறார் வைகோ.

நசியனூரில் ஒரு பெண், ''எங்க வீட்டுக்காரர் தினமும் குடித்துவிட்டு வந்து என்னை அடிக்கிறார். கோபத்துல என் அம்மா வீட்டுக்குப் போனேன். அங்கே யும் என் அண்ணனும் தம்பியும் குடித்துவிட்டு அவங்க மனைவிகளை அடிக்கி றார்கள். யாரிடம் முறையிடுவது என்று தெரியவில்லை. எப்படியாவது இந்தச் சாராயத்தை ஒழிச்சிடுங்க. நாங்க உங்களை மறக்கவே மாட்டோம்'' என்று வைகோவிடம் கதறினார். அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டுக் பயணத்தைத் தொடர்ந்தார் வைகோ.

விஜயமங்கலத்தில் கல்லூரி மாணவர்கள் வைகோவை வழிமறித்து, ''நாங்க ளும் உங்களோடு வர்றோம்'' என்று கிளம்பினர். வைகோவோ, ''உங்கள் அன்புக்கு நன்றி. நீங்கள் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு. உங்களால் முடிந்தவரை மதுவுக்கு எதிராகப் போராடுங்கள். அதேநேரத்தில் படிப்பை மறந்துவிடாதீர்கள்'' என்று அறிவுரை சொன்னார்.

ஈரோடு பழையபாளையத்தில் கூட்டமாக நின்றிருந்த பெண்கள், ''இந்தச் சாரா யத்தால எங்கள் வாழ்க்கையை இழந்தும், குழந்தைகளின் படிப்பை இழந்தும் தவிக்கிறோம். எப்படியாவது டாஸ்மாக் கடைகளை மூடவெச்சிடுங்க. உங்க ளுக்குப் புண்ணியமாப் போகும்'' என்று கையெடுத்துக் கும்பிட்டனர். அவர் களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டுக் கிளம்பியவரிடம் நாம் பேசினோம்.



''ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளைப் பற்றிப் பேசவே தயக்கம் இருந்த போது, நான் உலக அரங்கில் சுதந்திரத் தமிழ் ஈழம் அமையவேண்டும் என்று குரல் கொடுத்தேன். அப்போது, இது எப்படிச் சாத்தியம் என்று பலரும் விமர் சித்தனர். இப்போது, அனைத்துக் கட்சிகளும் அதை முன்னெடுத்திருக்கிறார் கள். அதுபோல, மதுவை ஒழிப்பது சாத்தியமா என்று சிலர் நினைக்கிறார்கள். அது தவறு. கட்டாயம் ஒழிக்க முடியும். மதுவை ஒழித்தால் கள்ளச் சாராயம் வரும் என்பது முட்டாள்தனமான வாதம். குற்றவியல் தண்டனைச் சட்டம் இருக்கும்போதே குற்றங்கள் நடக்கிறதே. அதற்காக சட்டத்தை நீக்க முடியுமா?

கூடிய சீக்கிரமே மக்கள் கிளர்ச்சி ஏற்படும். அப்போது நிச்சயம் மது ஒழிக்கப் படும். உயர் நீதிமன்றம் சொல்லியும், நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக் கடை களை இந்த அரசு அகற்றாமல் இருக்கிறது. 'மானமும் அறிவும் மனிதருக்கு அழகு’ என்றார் பெரியார். அந்த மானத்தையும் அறிவையும் அழிக்கும் மதுவை அகற்றாமல் என் பயணம் ஓயாது'' என்று வெடித்தார் வைகோ!

நன்றி:-  ஜூனியர் விகடன் 

No comments:

Post a Comment