Monday, May 20, 2013

இயற்கையைக் காப்போம்!



அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் நீண்ட ஆராய்ச்சிகள் செய்து ஒரு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.இன்னும் எட்டு முதல் பத்து ஆண்டுகளுக்குள், இந்த உலகம் பெரும் வறட்சியை, பஞ்சத்தைச் சந்திக் கப் போகிறது.அதனால், ஏராளமான உயிர்ச்சேதம் ஏற்படப் போகிறது என் கிறார்.


அறிவியல் வளர்ந்து விட்டது. மனிதன் விண்வெளியில் சுற்றித் திரிகிறான். சின்னஞ்சிறு குழந்தைகளும் அலைபேசி வழியாக உலகத்தை அறிந்து கொள் கின்ற அளவுக்கு அறிவியல் விந்தைகளைப் படைத்து இருக்கின்றது. ஆனால் சுற்றுச் சுழல் நாசமாக்கப்பட்டு விட்டது. இயற்கையோடு நாம் நடத்திய சமர் களால்,செய்த நாச வேலைகளால், இயற்கை சீற்றம் கொண்டு விட்டது. ஆனால் , ஆழிப்பேரலைகள் பொங்கி எழலாம்; கொடூர நில நடுக்கங்கள் நேர லாம்; அதிலும் குறிப்பாக, ஆசியக் கண்டத்தில், இமயமலைச் சரிவுகளில் ஒரு பெரும் நிலநடுக்கம் வரக்கூடும். இன்று கூட இந்து ஆங்கில ஏட்டில் ஒரு செய் தி இருக்கின்றது. அது இந்தியாவின் பல பகுதிகளை அடியோடு அழித்து விடும் என்கிறார்.

நான் இந்தப் புண்ணிய பூமியைத் தொட்டு வணங்கிக் கொண்டே இதுவரை 5000 கிலோமீட்டர்கள், நடந்து இருக்கின்றேன். இப்போது மனம் உடைந்தவனாக உங்கள் முன்னால் நிற்கின்றேன். இந்தத் தாமிரபரணியின் பெருமையை எத்த னையோ முறை பேசி இருக்கிறேன். ஞாயிற்று கிழமைகளில், சவேரியர் கல் லூரி விடுதியில் இருந்து தோழர்களோடு புறப்பட்டு வந்து, எத்தனையோ முறை இந்தத் தாமிரபரணியில் நீராடி மகிழ்ந்து இருக்கிறேன்.

இன்றைக்கு, அங்கே மணல் படுகைகள் இல்லை. நீர் வரத்து குறைந்து விட் டது. பாளம் பாளமாக வயல்கள் வெடித்துக் கிடக்கின்றன. இதுவா தமிழகம்? இந்தக் கொடூரமான சூழ்நிலையை நாமே ஏற்படுத்திக் கொண்டோம். இயற் கைச் சீற்றங்கள் என்பது வேறு. பக்கத்து மாநிலங்கள் வஞ்சிப்பது வேறு. நமக் கு நாமே குழிதோண்டிக் கொண்டோமே?

நமது முன்னோர்கள் எப்படி இருந்தார்கள்? நமது மன்னவர்கள் எப்படி இருந் தார் கள்?

மன்பதை காக்கும் தென்புலம் காவல்; துன்பம் அல்லது தொழுதகவில் என் றான் பாண்டிய மன்னன். அவன் வேப்பம்பூ மாலை அணிந்துதான் களங்களுக் குச் சென்றான். அவர்கள் வாழ்ந்த காலங்களில் நீர்த்தேக்கங்களைக் கட்டி னார் கள். கரிகாலன் கட்டிய கல்லணையைக் கண்டு பொறியாளர்கள் வியக்கிறார் கள். இத்தனையும் ஏற்படுத்தினார்கள். ஏரிகள், குளங்களை அமைத்தார்கள். எங்கும் செழித்தது, செந்நெல் விளைந்தது. கன்னல் விளைந்தது. வாழைத் தோட் டங்கள் செழித்தன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று நிலத்தை வகையாகப் பிரித்தார்கள்.

வான் ஓங்கி வளர்ந்த சந்தன மரங்கள், தேக்கு மரங்கள், அங்கே பிளிறும் களிறு கள், ஓடும் விலங்குகள், அங்கே கிடைக்கின்ற பொருள்கள்,அது குறிஞ்சி நிலம் அங்கே கிடைக்கின்ற கனிகளின் சுவை வேறு எங்கும் கிடைப்பது இல்லை. காடுகள் செழித்துக் கிடக்கின்றன. அங்கே துள்ளி ஓடுகின்ற மான்கள். அது முல்லை நிலம்.எங்கு பார்த்தாலும், பச்சைப்பசேல் என விளைந்து கிடக்கின்ற
வயல்வெளிகள் நிறைந்தது மருத நிலம். அதைப்போல வேறு எங்கும் கண்டது இல்லை. அதன் சிறப்பைக் கவுந்தி அடிகள் கூறுவதாக சிலப்பதிகாரத்தில் விவ ரிக் கின்றார் இளங்கோ.

நெய்தல் நிலத்தில் பரதவர்கள் முத்துக் குளிப்பார்கள். கடலோடு போய் மீன் களை அள்ளிக் கொண்டு வருவார்கள். உப்பு விளைந்ததே? தொலைதூர நாடு களுக்குப் பண்ட மாற்று செய்தார்களே?

ஐந்து திணைகளாகப் பகுத்தார்களே, இன்றைக்கு அந்தத் திணைகள் உண்டா இந்தத் தமிழகத்தில்? எல்லாம் பாழாகி விட்டதே? ஆற்றுப் படுகைகளை அள் ளிச் சுரண்டுகிறார்களே? பாவிகளே, இதைவிடக் கன்னம் வைத்துக் கொள்ளை அடிக்கலாமே? அது ஒரு குற்ற வழக்காகத்தான் போகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இயற்கை சேகரித்துத் தந்த மணலை எல்லாம் அள்ளிக் கொண் டு போய் விட்டீர்களே? இது பாவம் அல்லவா? நமது பிள்ளைகள், பேரப் பிள் ளைகள், வருங்காலத் தலைமுறை வாழ்வது எப்படி? இனி நிலத்தடி நீர் இருக் குமா? நீர் இருந்தாலும்கூட விவசாயி வாழ முடியாத வேதனை இன்று. 

கொங்கு மண்டலத்தில் நடந்தபோது காளிங்கராயன் கால்வாயைப் பார்த்தேன். பவானி ஆற்றைப் பார்த்தேன். காவிரியைப் பார்த்தேன் ஈரோட்டிலே. எல்லாம் பாறைகளாக இருக்கின்றன. இந்த நிலையில் நம் தலையில் கல்லைப் போடு வதற்குப் பக்கத்து மாநிலங்கள் திட்டங்களை வகுக்கின்றன. எத்தகைய ஆபத் துகள் சூழ்ந்தாலும் அதை எதிர்த்துப் போராடுவோம்; தமிழகத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாப்போம்.

- பாளையங்கோட்டை மே தின விழா பொதுக்கூட்டத்தில் வைகோ

No comments:

Post a Comment