Wednesday, May 29, 2013

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குக... தடைக்காக அரசாணையில் கூறப்பட்ட காரணங்கள் நொறுங்கிப் போயின!-பகுதி 1

தீர்ப்பாயம் முன்பு வைகோ வாதம்

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புத் தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப் பட்ட டெல்லி உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி மாண்புமிகு விக்ரம்ஜித் சென் அவர்கள், டெல்லி உயர் நீதிமன்றத்தில், 2010 நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதி களில் விசாரணை நடத்தினார்.

அந்த விசாரணையின்போது மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இரண்டு நாள்களும் கலந்து கொண்டார். தீர்ப்பாயத்தின் எல்லா விசா ரணை நாள்களிலும் வைகோ கலந்து கொண்டு பங்கேற்றார் என்பது குறிப்பி டத் தக்கது.
நவம்பர் 1-ஆம் தேதி விசாரணை சரியாக பிற்பகல் 2.30 மணியளவில் தொடங் கியது. மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திரு. சந்தியோக் விடு தலைப்புலிகளின் மீதான தடையை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை எடுத்துச் சொல்லி, தனது வாதத்தை
எடுத்துரைத்தார்.

நவம்பர் 2-ஆம் தேதி மாலை 3.00 மணியளவில் விசாரணை தொடங்கியபோது மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சந்தியோக் 25 நிமிடங்களுக் குத் தனது தரப்பு வாதத்தை எடுத்துரைத்தார்.தீர்ப்பாயத்தின் முன்பாக சில ஆவ ணங்களைச் சமர்ப்பித்தார். அதில் ரகசியம் மற்றும் வகைப்படுத்தப்பட்ட ஆவ ணங்களை (அதாவது அரசாங்கத்திற்கு மட்டுமே தெரிய வேண்டிய செய்திகள், வெளியே சொல்லக் கூடாத செய்திகள் என்று பொருள்)த் தீர்ப்பாயத்தின் நீதி பதி விக்ரம்ஜித் சென் அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தார்.

ஆவணங்களின் உண்மைத் தன்மை, அதைச்சமர்ப்பித்தவரின் விவரம் ஏது மில்லை. இதுபோன்ற செய்திகளை இணையத்தளத்திலிருந்து (இன்டர்நெட்)
பெற்று யார் வேண்டுமானாலும் தாக்கல் செய்துவிட முடியும். எனவே, விக்கி பீடியாவிலிருந்து பதிவிறக்கம் செய்த தகவல்களை எந்தவித முகாந்திரமும் இன்றி இந்தத் தீர்ப்பாயம் ஏற்றுக் கொள்ளாது என்று தெரிவித்தார். மத்திய அர சின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தனது வாதத்தை முடித்தவுடன் வைகோ அவர்கள் தனது வாதத்தை எடுத்துரைக்கத் தீர்ப்பாயத்தின் நீதிபதி வாய்ப்பளித்தார்.

வைகோவின் வாதம் பின்வருமாறு:

மாண்புமிகு நீதிபதி அவர்களே!

சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்புச்) சட்டம் பிரிவு 3-இன்படி விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சட்டவிரோத இயக்கமாக அறிவித்து அரசு ஆணை பிறப் பித்துள்ளது. அதில் சொல்லப்பட்டுள்ள காரணங்களையும் விளக்கங்களையும் ஒட்டி எனது வாதத்தை எடுத்துரைக்க உள்ளேன்.

பிரிவு 4-இன்படி மேற்படி அரசு ஆணை மாண்புமிகு தீர்ப்பாயத்தின் ஆய்வுக்குச்
சமர்ப்பிக்கப்பட்டு, விசாரணை மேற்கொண்டு விடுதலைப்புலிகள் இயக்கம்
சட்டவிரோத இயக்கமா? இல்லையா என்பதை உறுதி செய்ய வேண்டும். அரசு ஆணையில், தடை செய்வதற்குச் சொல்லப்பட்டுள்ள முதல் காரணம் என்ன வென்றால் தமிழர்கள் அனைவருக்கும் ஒரு தாய்நாட்டை (தமிழ் ஈழம்) உரு வாக்குவது என்ற எல்.டி.டி.இ.-யின் (விடுதலைப்புலிகளின்) நோக்கம் இந்திய நாட்டின் இறையாண்மைக்கும் ஒருமைப் பாட்டுக்கும் அச்சுறுத்தலாக இருக் கின்றது; இந்திய நாட்டின் ஒரு பகுதியைப் பிரித்து துண்டாடுகின்ற வகையில் உள்ளது என்பதாகும். இந்தக் குற்றச்சாட்டில் ஒரு துளி அளவுகூட உண்மை யில்லை. மத்திய அரசு இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக ஏதேனும் ஓர் ஆவ ணத் தையாவது,சான்று பொருளையாவது தாக்கல் செய்யுமானால் இந்த அரசு ஆணையை எதிர்த்து ஒரு வார்த்தை கூட நான் பேச மாட்டேன் என்பதைத்தெரி வித்துக் கொள்கிறேன்.

அறிவார்ந்த அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அவர்கள் அக்டோபர் 5-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற விசாரணையின்போது, தமிழ் ஈழத்தின் வரை படம் தாக்கல் செய்துள்ளேன். அதில் இந்தியாவின் ஒரு பகுதியை (தமிழ் நாட் டை) இணைத்து தமிழ் ஈழம் அமைந்துள்ளது என்று தெரிவித்தார். நீதிமன்றத் தின் முன்பாக உண்மைக்குப் புறம்பான செய்தியை அளித்ததாக அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மீது நான் குற்றம் சொல்ல விரும்பவில்லை. மத்திய அரசு அவரிடம் பொய்யான - ஜோடிக்கப்பட்ட ஆவணத்தைக் கொடுத்துள்ளார் கள்.

மாண்புமிகு நீதிபதி அவர்களே!

ஏன் சுதந்திரமான இறையாண்மையுள்ள தமிழ் ஈழம் வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது என்பதற்கான காரணங்களையும் விவரங்களையும் விரிவாக ஆய்வு செய்ய வேண்டும். அப்போதுதான் தமிழர்களுடைய உண்மையான பிரச் சினையைப் புரிந்து கொள்ள முடியும்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத்தமிழர்கள் தங்களுக்கென்று தனி அரசமைப் பைப் பெற்றிருந்தார்கள்.போர்ச்சுகீசியர், டச்சு மற்றும் ஆங்கிலேயருடைய காலனி ஆதிக்கத்தால் தமிழர்கள் தங்களுடைய அரசாட்சியை இழந்தார்கள். தமிழர்கள் ஆண்ட பகுதியை ஐரோப்பியர் ஆண்டனர். பின்னர், ஆங்கிலேயரு டைய ஆதிக்கம் தொடர்ந்தது. ஆங்கிலேயர் தம் ஆட்சிக்காலத்தில் தமிழர் களை யும், சிங்களவர்களையும் ஒரே ஆட்சியின்கீழ் கொண்டு வந்தார்கள்.

1948-ஆம் ஆண்டு, பிப்ரவரி 4-ஆம் நாள் ஆங்கிலேயர் இலங்கையை விட்டு வெளியேறியபோது, நாட்டின் மொத்த ஆட்சி அதிகாரத்தையும் சிங்களவரிடம்
ஒப்படைத்தனர். அன்று முதல் இன்று வரை துன்பமும் துயரமும் தமிழர்களுக் குத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழர்களுடைய அடிப்படை உரிமைகள்
மறுக்கப்பட்டன. புத்த மதம் அரசின் அங்கீகாரம் பெற்ற மதமாக அறிவிக்கப் பட்டது. தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களான ஆலயங்களும், சர்ச்சுகளும்
அசிங்கப்படுத்தப்பட்டு முற்றிலுமாக இடிக்கப்பட்டன.சிங்கள மொழி மட்டுமே ஆட்சிமொழியாக அறிவிக்கப்பட்டது.

இலங்கை நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சகிக்க முடியாத சட்டத்தால், ஒரு கோடி தமிழர்கள் நாடற்ற மக்களாக, வாக்களிக்கும் உரிமை இல்லாதவர் களாக ஆக்கப்பட்டனர். தமிழர்கள் அமைதியான முறையில் நீதியைப் பெறுவ தற்காக ஆர்ப்பாட்டம் செய்து கிளர்ந்தெழுந்துப் போராடினார்கள். அமைதி யாகப் போராடியவர்களுக்குத் தடியடியும், குண்டடியும்தான் பரிசாகக் கிடைத்தது.

ஈழத்தின் காந்தியாகப் போற்றப்பட்ட ஈழத் தமிழர்களின் தலைவர் செல்வ நாய கம் அவர்கள் தமிழர்களின் உரிமைக்காகப் போராடினார். 1957 மற்றும் 1965-இல்
சிங்கள அரசாங்கத்துடன் இரண்டு ஒப்பந்தங்களைச் செய்தார். ஆனால், அந்த ஒப்பந்தங்கள் சிங்களவர்களால் ரத்து செய்யப்பட்டு குப்பைத் தொட்டியில் தூக்கி எறியப்பட்டது.

கற்பழிப்பு, சூறையாடுதல், தடுப்புக்காவல், கொலை மற்றும் சிறைக் கொட்டடி யில் கொலை என்று சிங்கள இனவெறி அரசு தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட் ட அராஜகம் அன்றாட நிகழ்வாகி விட்டது. 

எனவே, தமிழர்களின் தலைவர் செல்வநாயகம் அவர்கள் 1976-ஆம் ஆண்டு மே 14-ஆம் நாள் வட்டுக்கோட்டையில் உள்ள பண்ணாகத்தில் அனைத்துத் தமிழ்
அமைப்புகளையும் ஒன்றுதிரட்டி வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டத்தைக் கூட்டி னார். அந்தச் சிறப்புக் கூட்டத்தில்தான் தமிழ் ஈழப் போராட்ட வரலாற்றில் மாக் ன கார்ட்டாவாகக் (பேருரிமைச் சாசனமாகக்) கருதப்பட்ட ‘ஈழத் தீர்மானம்’ நிறைவேற்றப்பட்டது.

மாண்புமிகு நீதிபதி அவர்களே!

இந்தத் தீர்ப்பாயத்தின் முன்பாக இரண்டாவது உறுதிமொழி (Affidavit) ஆவணத் தையும், சான்றாவணங்களையும் இணைப்பாகச் சமர்ப்பித்து உள்ளேன். இரண்டாவது உறுதிமொழி ஆவணத்தின் பக்கம் 4-இல் முதல் மற்றும் மூன்றா வது பத்தியில் வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைக்
குறிப்பிட்டுள்ளேன். அதை இந்தத் தீர்ப்பாயத்தின் முன் வைக்க உங்கள் அனு மதி யைக் கோருகிறேன்.

1976-ஆம் ஆண்டு மே 14-ஆந் திகதி பண்ணாகத்தில் கூடிய தமிழர் கூட்டணி யின் முதலாவது மாநில மாநாடு தமது உன்னதமான தாய்மொழியாலும், தம் மதங்களினாலும், தமது சிறப்புப் பெற்ற கலாச்சார பாரம்பரியங்களாலும், ஐரோப்பியப் படையெடுப்பாளரின் ஆயுத பலத்தினாலும் வெற்றி கொள்ளப் படும் வரை பல நூற்றாண்டுகளாக ஓர் பிரத்தியேகமான பிரதேசத்தில் தனி அரசாகச் சுதந்திர வாழ்வு நடாத்திய வரலாற்றாலும், தமது பிரதேசத்தில் ஓர்
தனி இனமாக வாழ்ந்து தம்மைத் தாமே ஆளும் உள்ள உறுதியாலும் இலங்கை வாழ் தமிழ் மக்கள் சிங்களவரிலிருந்து வேறுபட்ட ஓர் தனித் தேசிய இன மென் று இத்தீர்மானத்தால் பிரகடனப்படுத்துகின்றது.

1972-ஆம் ஆண்டுக் குடியரசு அரசியலமைப்பு தமிழ் மக்களைப் புதிய ஏகாதிபத் திய எஜமானர்களான சிங்கள மக்களால் ஆளப்படும் அடிமைத்தேசிய இனமாக மாற்றித் தாம் தவறாக அபகரித்துக் கொண்ட அதிகாரத்தைத் தமிழ் தேசிய இனத்தின் தனிப் பிரதேசம், மொழி, குடியுரிமை, பொருளாதார வாழ்வு, வேலை வாய்ப்பு ஆகியவற்றைப் பறித்துத் தமிழ் மக்கள் ஓர் தேசிய இனமென்று கூறுவ தற்கான தகுதிகள் அத்தனையையும் அழிக்கின்றார்கள் என்றும் இம்மாநாடு இத்தீர்மானத்தால் உலகுக்கு அறிவிக்கின்றது.

இம்மாநாடு மேலும் கீழ்க்கண்டவாறு பிரகடனப் படுத்துகின்றது.

1. தமிழீழ அரசு வடக்கு கிழக்கு மாகாண மக்களைக் கொண்டதாகவும், தமிழீழக் குடியுரிமையை நாடும் இலங்கையின் எப்பாகத்திலும் வசிக்கும் தமிழ் பேசும் மக்கள் எல்லோருக்கும் உலகின் எப்பாகத்திலும் வசிக்கும் ஈழ வம்சா வழி யைக் கொண்ட தமிழ் பேசும் மக்களுக்கும் பூரண சமத்துவ குடியுரிமைக்கு உத்தரவாதம் அளிக்கும்.

1977-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில்,தமிழ் ஈழத்தை மையப்பொரு ளாக வைத்து நடைபெற்ற பொதுத் தேர்தலில், இலங்கையின் வடக்கு, கிழக் கில் வசிக்கும் மக்கள் தமிழ் ஈழத்தை ஆதரிக்கின்ற வேட்பாளர்களுக்குத் தங் கள் ஆதரவைத் தெரிவித்து வெற்றிபெறச் செய்தனர். அதுதான் தமிழர்கள் மத்தி யில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பு; தமிழர்களின் பொதுவான தீர்ப்பு.ஆனால் சிங்கள இனவெறி அரசு தமிழர்களின்மீது பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது. தீவிரவாதத் தடுப்புச் சட்டம் 1979 (Prevention of Terrorism Act of 1979)படி தமிழ் ஈழத்தை ஆதரித்த தலைவர்கள் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

1981-இல் யாழ்ப்பாணம் (Jaffna ) நூலகம் தீயிட்டு எரிக்கப்பட்டது.1983-ல் வெளிக் கடைச் சிறையில் கொடூரமான முறையில் தமிழர்கள் படுகொலைக்கு ஆளா னார்கள். அப்பொழுதுதான் இந்திய நாடாளுமன்றத்தில் இந்தியப் பிரதமர் திரு மதி இந்திரா காந்தி அவர்கள் இலங்கையில் நடைபெறுவது இனப்படுகொலை என்று குறிப்பிட்டார். அவர் நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய தனது கடைசி உரை யில் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதியில் வாழும் தமிழர்கள் இலங்கை யின் பூர்வீகக் குடிமக்கள் என்பதை உறுதியாகத் தெரிவித்தார்.

தமிழர்களின் அமைதியான போராட்டம், இலங்கை இராணுவத்தாலும், காவல் துறையாலும் கொடூரத் தாக்குதலால் சின்னாபின்னப்படுத்தப்பட்டபோது தான்,
தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலைக் கு ஆளானார்கள். இந்த நிகழ்வு தவிர்க்க முடியாதது. பல நாடுகளின் வரலா று களும் இதைத்தான் சுட்டிக்காட்டுகின்றன.

விடுதலைப்புலிகள் தமிழ் ஈழப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றார்கள். இந்திய அரசாங்கம் மோசமான பழியை விடுதலைப்புலிகள் மீது சுமத்தியுள் ளது. விடுதலைப்புலிகள், தமிழ் ஈழத்துடன் இந்தியாவின் ஒரு பகுதியான தமிழ கத்தை இணைக்கத் திட்டமிட்டு உள்ளனர் என்று வஞ்சக எண்ணத்தோடு குற் றம் சாட்டியுள்ளது.

கனம் பொருந்திய நீதிபதி அவர்களே!

16.10.2010 அன்று நான் தாக்கல் செய்த இரண்டாவது உறுதிமொழி ஆவணத்தி லும் இணைத்துச் சமர்ப்பித்த சான்றாவணங்களின் பக்கங்கள் 7, 8, 26, 46 மற் றும் 59- ஆவது பக்கங்களையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகின் றேன். மேற் சொன்ன பக்கங்களில், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா கரன் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27-ஆம் தேதி வரலாற்றுச்சிறப்புமிக்க சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் ஈழத்தை அடைவதற்காகத் தங்கள் இரத்தம்
சிந்தி உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும்போது ஆற்றிய உணர்ச்சி மிக்க மாவீரர் உரை இடம் பெற்றுள்ளது.

2008-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதியன்று பிரபாகரன் ஆற்றிய உரையை இந்த நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

இந்த மண்ணி லே தான் எமது இனம் காலாதி காலமாக, முப்பாட்டன், பாட்டன் என தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர். எமது இனச் சரித் திரம் நிலைபெற்ற இந்த மண்ணை ஆழமாகக் காதலித்து, இந்த மண்ணிற்காக வே மடிந்து, இந்த மண்ணின் மடியிலேயே எமது மாவீரர்கள் படுத்துறங்கு கிறார்கள். அவர்கள் பள்ளி கொள்ளும் இந்த மண் எமக்கேயுரித் தான மண். எமக்கே சொந்தமான மண். 

சிங்கள தேசம் ஆக்கிரமித்து அடிமை கொள்ளத் துடிக்கும் இந்த மண் அதற்கு என்றுமே சொந்த மானதன்று. இந்த மண் எமக்குச் சொந்தமான மண்; பழந்தமி ழர் நாகரீகம் நீடித்து நிலைபெற்ற மண்; வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட
காலத்திலிருந்தே எமது மூதாதையர் வாழ்ந்து வளர்ந்த மண். இந்த மண்ணிலே தான் எமது ஆதிமன்னர்கள் இராச்சியங்களும் இராச தானிகளும் அமைத்து அரசாண்டார்கள். எமது இன வேர் ஆழ வேரோடியுள்ள இந்த மண்ணிலே, நாம் நிம்மதியாக, கெளரவமாக, அந்நியரின் அதிகார ஆதிக்கமோ தலையீடுகளோ இன்றி, எமது வாழ்வை நாமே அமைத்து வாழ விரும்புகிறோம்.
.............................................

எம் மக்களுக்காக ஆதரவுக் குரல் எழுப்பி,அன்புக்கரம் நீட்டும் தமிழக மக்களுக் கும் தமிழகத் தலைவர்களுக்கும் இந்தியத் தலைவர்களுக்கும் இந்தச் சந்தர்ப் பத்திலே எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். இதே நேரம், எமது தமிழீழத் தனியரசுப் போராட்டத்திற்கு ஆதரவாக வலுவாகக் குர லெழுப்புவதோடு, இந்தியா விற்கும் எமது இயக்கத்திற்கும் இடையிலான நல் லுறவிற்குப் பெரும் இடைஞ்சலாக எழுந்து நிற்கும் எம்மீதான தடையை நீக்கு வதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்போடு வேண் டிக் கொள்கிறேன்.

2005-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி ஆற்றிய மாவீரர் உரையில் பிரபாகரன் குறிப்பிட்டு இருப்பதாவது:

இலங்கைத் தீவின் வடகிழக்கு மாநிலத்தைத்தாயகத் தேசமாகக் கொண்டு, தமி ழீழ மக்கள் என்ற வரலாற்றுத் தொன்மை மிக்க ஓர் இனம் இருப்பதையும் அவர் கள் ஒரு தனித்துவத்தேசமாக வாழ்ந்து வருவதையும் அவர்களுக்கு அடிப் படை யான அரசியல் உரிமைகள்,சுதந்திரங்கள் உள்ளன என்பதையும் சிங்கள வரால் புரிந்து கொள்ளவோ ஏற்றுக் கொள்ளவோ முடியவில்லை.

மேற்சொன்ன உரையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழ் ஈழம் என்பது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியைத்தான் குறிக் கும் என்று தெளிவாகக் கூறியுள்ளார்.

2002-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27-ஆம் தேதி ஆற்றிய மாவீரர் உரையில் பிர பாகரன் தெரிவித்திருப்பதாவது:

ஐ.நா. சாசனத்திலும்,பிரகடனங்களிலும் குறிப்பிடப்படும் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை மையப் பொருளாகக் கொண்டே எமது போராட்ட இலட்சியம் நெறிப்படுத்தப்பட்டு இருக்கிறது. அன்றும் சரி, இன்றும் சரி.சுயநிர்ணய உரி மைக் கான எமது போராட்ட இலட்சியத்தில் நாம் உறுதி பூண்டு நிற்கின்றோம்.
தமிழர் தாயகம், தமிழர் தேசியம், தமிழரின் சுயநிர்ணய உரிமை ஆகியவையே எமது அரசியல் இலட்சியத்தின் அடிப்படைகள்.திம்புவிலிருந்து தாய்லாந்து வரை இந்த அடிப்படை களையே நாம் வலியுறுத்தி வருகின்றோம்.
                                                                                                                      தொடரும் ................

No comments:

Post a Comment