Wednesday, May 22, 2013

ஈழத்தமிழர்கள் அநாதைகளா ? நீதியின் கதவை தட்டுகிறேன் ! பகுதி 1

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர் கள், கடந்த 24.09.2010 அன்று, டெல்லியில், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப் புச் சட்டம்) தீர்ப்பு ஆயம் முன்பாக ஆஜராகி, விடுதலைப்புலிகள் அமைப்பின்
மீதான தடை நீட்டிப்பு தொடர்பாக, நடுவண் அரசு வெளியிட்ட அரசு ஆணை மீதான விசாரணையில், தன்னையும் ஒரு தரப்பாகச் சேர்த்து விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்தார்.

டெல்லி உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி மாண்புமிகு விக்ரம்ஜித் சென் அவர்கள் இந்தத் தீர்ப்பு ஆயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

வைகோ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை,24.9.2010 அன்று பிற்பகல் 3.30 மணி அளவில் தொடங்கியது. இந்த விசாரணை,டெல்லி உயர் நீதிமன்ற அறை எண். 2-இல் நடைபெற்றது.


இந்த வழக்கில்,மத்திய அரசின் தரப்பில், இணை சொலிசிட்டர்-ஜெனரல் ஏ.எஸ் சாண்டியா, வழக்கறிஞர் சட்டன் சிங், மத்திய அரசின் நிலை வழக்கறிஞர் (Stand ing Counsel) நிராஜ் செளத்ரி, உள்துறை அமைச்சகத்தின் இயக்குநர் பி.கே. மிஸ்ரா,
உள்துறை அமைச்சகத்தின் துணைச்செயலாளர் வீரேந்திரகுமார், மத்திய அரசு வழக்கறிஞர் (பிளீடர்) சைலேந்திர சர்மா, தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் தனஞ் செயன் (என ஒரு பெரிய பட்டாளம்) அரசுத்தரப்பில் கலந்து கொண்டனர்.

மாண்புமிகு நீதிபதி மேற்படி வழக்கில் வைகோ தன்னையும் ஒரு தரப்பாகச் சேர்த்துக் கொள்ளக் கோரி தாக்கல் செய்த மனு தொடர்பான வாதங்களை நீதி மன்றத்தில் முன்வைக்க வைகோவுக்கு அனுமதி வழங்கினார்.

வைகோ : நீதிபதி அவர்களே! இந்தத்தீர்ப்பு ஆயத்தில் நடைபெறும் விசாரணை
யில் என்னையும் ஒரு தரப்பாக இணைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். நடுவண் அரசு வழக்கறிஞர் அவர்கள், நான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின்
நிர்வாகி இல்லை;விடுதலைப்புலிகள் சார்பாக ஆஜராவதற்கு எனக்கு அதிகா ரம் வழங்கப்பட வில்லை; எனவே, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்புச் சட் டம்) சட்டம் 1967-இன்படி, இந்த வழக்கில் நான் பங்கு ஏற்பதற்கு உரிமை இல் லை என்று எதிர்ப்புத் தெரிவித்தார்.

ஆனால், என்னுடைய உரைகளும், எங்களுடைய மறுமலர்ச்சி திராவிட முன் னேற்றக் கழகத்தின் நடவடிக்கைகளும் விடுதலைப்புலிகள் மீதான தடை நீட் டிப் புக்கான காரணங்களுள் ஒன்றாக இடம் பெற்று உள்ளது.

சட்டவிரோத நடவடிக்கை (தடுப்புச் சட்டம்), பிரிவு 35-இன்படி, நடுவண் அரசின் அரசு இதழில் (Government Gazette) ஆணை பிறப்பிப்பதன் மூலமாக

அ) ஓர் இயக்கத்தைத் தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்க்கலாம்;

ஆ) பட்டியலில் சேர்க்கப்பட்ட ஓர் இயக்கத்தின் மீதான தடையை நீக்கி, பட்டிய லில் இருந்து நீக்கலாம்.

பிரிவு 35 (1) (C ) -இன்படி, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலில் இருந்து நீக்க, பிரிவு 36- இன்படி மனு தாக்கல் செய்யலாம்.பிரிவு 36 (2)(b) -இன் படி தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்ட தால் பாதிக்கப்பட்ட எந்த நபரும் மனு தாக்கல் செய்யலாம்.

விடுதலைப்புலிகள் இயக்கம் 24.05.1992-இல் வெளியிடப்பட்ட அரசு ஆணை யின் படி சட்டவிரோத இயக்கமாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு  தொடர்ச்சி யாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசு ஆணை வெளியிடப்பட்டு தடை நீட்டிக்கப்படுகிறது. அவ்வாறு வெளியிடும் அரசு ஆணைகளை ஒவ் வொரு முறையும் தீர்ப்பு ஆயம் உறுதி செய்ய வேண்டும்.

தீர்ப்பு ஆயம் முன்பாக, நடுவண் அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், என்னுடைய செயல்பாடுகள் மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக
உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்புச் சட்டம்) தீர்ப்பு ஆயம் 13.11.1998 அன்று வெளி யிட்ட தீர்ப்பில், 24.12.1996 அன்று பெங்களுருவில் நடைபெற்ற மாநாட்டில் நான் பங்கு ஏற்றதையும்,விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகர னின் 42-ஆவது பிறந்தநாளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உறுப் பினர் ரத்தினம் என்பவர் கொண்டாடியதைப் பற்றியும், 09.03.1997 அன்று மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஓ.கே, முத்துசாமி அவர்கள் கருத்து அரங்கில் பங்கு ஏற்றதைப் பற்றியும் குறிப்பிட்டு, விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சட்டவிரோத இயக்கமாக அறிவிப்பதற்கான காரணங்களுள் இந்தச் சம்பவங்களையும் காரணமாகத் தெரிவித்து உள்ளது.

எனவே, இத்தீர்ப்பு ஆயம் வெளியிட்ட விசாரணை அறிக்கையின் தொடர்ச்சி யாக, மத்திய அரசாங்கம் தாக்கல் செய்து உள்ள பிரமாணப்பத்திரத்தில்,பொதுக் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் நான் ஆற்றிய உரைகளையும், விடு தலைப்புலிகள் மீதான தடையை நீட்டிப்பதற்கான காரணமாகச்சொல்லி இருக் கலாம். எனவே, என்னைப் பற்றியும் சொல்லப்பட்டு இருப்பதால் தீர்ப்பு ஆயம் நடத்தும் விசாரணையில் என்னையும் இணைத்துக் கொள்வது அவசியமானது ஆகும்.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், பிரிவு 4 மற்றும் உட்பிரிவு 2 இன் படி, தடை செய்யப்பட்ட அறிவிக்கையைத் தீர்ப்பு ஆயம் பெற்றவுடன், தடை செய் யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு, பிரிவு 6-இன்படி அறிவிக்கை அனுப்ப வேண்டும்.நடுவண் அரசு வெளியிட்டு உள்ள தடை ஆணையில், இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கம் அழித்து ஒழிக்கப்பட்டு விட்டது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. விடுதலைப்புலிகள் இயக்கம் செயல் இழந்து விட்டது என்று நடுவண் அரசே கூறும்போது, சட்டவிரோத தடுப்புச் சட்டம்
பிரிவு 4 மற்றும் பிரிவு 6-இன்கீழ் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு, தடைசெய் யப்பட்ட அறிவிப்பை வழங்குவது என்பது சாத்தியமாகாது.

அப்படி, அறிவிப்பு வழங்கப்படாத நிலையில்,அழித்து ஒழிக்கப்பட்டதாகவும், செயல் இழந்து விட்டதாகவும் நடுவண் அரசால் சொல்லப்படுகின்ற விடு த லைப் புலிகள் இயக்கம், நடுவண் அரசு வெளியிட்டு உள்ள தடை ஆணைக் குத் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க இயலாது. எனவே, என்னை இந்த விசாரணை யில் பங்கு ஏற்க அனுமதிக்கக் கோரி இம்மனு தாக்கல் செய்யப்படுகிறது. சட்ட விரோத தடைச்சட்டம் பிரிவு 4, உட்பிரிவு 3 விடுதலைப்புலிகள் இயக்கம் மற் றும் பொறுப்பாளர்கள் தவிர மற்றவர்கள் தாக்கல் செய்யக்கூடிய ஆட்சே பணை மனுவை ஏற்கக் கூடாது என்று சொல்லவில்லை.

இயற்கை நீதியின் அடிப்படையில் தீர்ப்பு ஆயங்கள் செயல்படும்போது, போதி ய வாய்ப்பு வழங்கப்படாமல் எவருமே பாதிப்புக்கு ஆளாகக் கூடாது. ஒருவரு டைய நியாயத்தை, அவர் தரப்பு வாதத்தைக் கேட்காமல், நீதி வழங்கப்படக் கூ டாது. நடுவண் அரசு தீர்ப்பு ஆயத்திற்கு அனுப்பி உள்ள அறிவிக்கையில் சொல் லப்பட்ட தகவல்களில், எந்த ஆதாரங்களின் அடிப்படையில் தடை ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதை விவரித்து உள்ளது. அந்த ஆதாரங்களில், பொதுக் கூட்டங்களில் பேசிய உரைகள், ஆர்ப்பாட்டங்கள், அரசியல் இயக்கங் களின் நடவடிக்கைகள், மற்ற இயக்கங்களின் நடவடிக்கைகள் குறிப்பிடப் பட்டு உள்ளன.

மனுதாரர் இந்த வழக்கிற்குத் தேவை இல்லாதவராக இருக்கலாம். பிரிவு 4 (4)-இன்படி தீர்ப்பு ஆயத்தின் தீர்ப்பு அரசு இதழில் வெளியிடப்படும். சட்டவிரோத
நடவடிக்கைகளாக அரசு அறிவிக்கைகளில் குறிப்பிடப்பட்டவர்களின் செயல் கள், அவர்களுடைய தனி வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும். எனவே, மனுதாரர் இந்த வழக்கில் தாக்கல் செய்து உள்ள மனு அவசியமானது. மேலும், தீர்ப்பு ஆயம் முழுமையான இறுதித் தீர்ப்பு வழங்குவதற்கு, மனுதாரரும் இந்த வழக் கில் பங்கு ஏற்று வாதங்களை எடுத்து உரைப்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு
நியாயம் கிடைக்க வழி வகுக்கும்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீடிக்க, நீதிமன்றத்தில்
இந்திய அரசு கூறி உள்ள காரணங்கள், உண்மைக்குப் புறம்பானவை

மாண்புமிகு நீதிபதி அவர்களே!

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிப்ப தற்காகச் சொல்லப்பட்ட கார ணங்கள் உண்மைக்குப் புறம்பானது; ஜோடிக்கப் பட்டது; இம்மி அளவும் கூட உண்மை இல்லை.

மே 2010-இல் வெளியிட்டு உள்ள அரசு ஆணையில், விடுதலைப் புலிகள் இயக் கத்தைத் தடை செய்வதற்கான முதல் காரணமாகச் சொல்லி இருப்பது என்ன வென்றால், தமிழர்கள் அனைவருக்கும் ஒரு தாய்நாட்டை (தமிழ் ஈழம்) உரு வாக்குவது என்ற எல்.டி.டி.இ.யின் நோக்கம், இந்திய நாட்டின் இறையாண் மைக் கும் ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலாக இருக்கின்றது; இந்திய நாட் டின் ஒரு பகுதியைப் பிரித்துத் துண்டாடுகின்ற வகையில் உள்ளது. எனவே, அது சட்டவிரோத நடவடிக்கையின் வரம்பிற்கு உட்பட்டது என்பதாகும் என்று கூறப்பட்டு உள்ளது.விடுதலைப்புலிகள் தமிழ் ஈழத்தை அடைவதற்காகப்
போராடுகின்றனர்.

மாண்புமிகு நீதிபதி விக்ரம்ஜித்சென்: திரு வைகோ அவர்களே, விடுதலைப் புலிகள் தமிழ் ஈழத்தோடு தமிழகத்தையோ அல்லது இந்தியாவின் ஒரு பகுதி யையோ இணைக்க விரும்பவில்லையா?

வைகோ : மாண்புமிகு நீதிபதி அவர்களே! இந்தக் கருத்தை விளக்குவதற்குக் கிடைத்த வாய்ப்பிற்காக நான் மகிழ்ச்சி அடைகின்றேன். விடுதலைப்புலிகள்,
தமிழ்நாட்டில் ஒரு அங்குலத்தைக் கூட தமிழ் ஈழத்தோடு இணைக்க வேண் டும் என்று விரும்பவில்லை. நடுவண் அரசு, விடுதலைப்புலிகள் தங்களுடைய இதழ்களிலோ அல்லது அறிக்கையிலோ அல்லது பிரசுரங்களிலோ தமிழ் நாட் டையோ அல்லது இந்தியாவின் எந்த ஒரு பகுதியையோ தமிழ் ஈழத்தோடு இ ணைக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள் என்று நிரூபிக்கமுடியுமா?

முடியாது. ஈழத் தமிழர்களின் கற்பனையில்கூட, அப்படிப்பட்ட எண்ணம் இல் லை. இது, விடுதலைப் புலிகள் மீது களங்கம் ஏற்படுத்துவதற்காக, இந்திய அர சாங்கத்தால் நடத்தப்படுகின்ற வன்மம் மற்றும் நச்சுப் பிரச்சாரம் ஆகும். இந்த வேளையில், வங்கதேசம் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன்.

பாகிஸ்தானின் ஆதிக்கத்தில் இருந்து, கிழக்கு பாகிஸ்தானைப் பிரித்து, ‘வங்க தேசம்’ என்று ஒரு தனிநாடு அமைக்க, அந்த மக்கள் போராடியபோது, மேற்கு வங்காளத்தில் உள்ள வங்காளிகளும், அதே வங்கமொழி பேசுகிறவர்கள்தான், பழக்கவழக்கங்கள் எல்லாம் ஏறத்தாழ ஒன்றுதான், ஆனால், மேற்கு வங்காளத் தையும் சேர்த்து, அகன்ற வங்கதேசம் கேட்கிறார்கள் என்று யாரும் கூறவில் லையே?

நீதிபதி விக்ரம்ஜித் சென் (சிரித்துக்கொண்டே),‘அப்படிக்கூட ஒரு பேச்சு வந் தது உண்டு’ என்றார்.

வைகோ: ஆனால், அப்படி நடக்கவில்லையே? வங்கதேசத்தைச் சேர்ந்தவர் களோ அல்லது மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்களோ இணைந்து ஒரு நாடு
அமைய வேண்டும் என்று விரும்பவில்லை.

மேலும், கொசோவா என்ற தனிநாடு அமைவதற்கும், கிழக்குத் தைமூர் என்ற தனிநாடு அமைவதற்கும், பாலஸ்தீன விடுதலைக்கும் உலகில் உள்ள எல்லா
மக்களும் ஆதரவு கொடுத்தார்கள். ஆனால், தமிழ் ஈழம் அமைவதை இந்தியா எதிர்க்கின்றது. இந்திய இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் விடு தலைப் புலிகளால் எந்த அச்சுறுத்தலும் இல்லை.

தமிழ் ஈழம் அமைக்க வேண்டும் என்ற விடுதலைப்புலிகளின் நோக்கம் சட்ட விரோத நடவடிக்கை (தடுப்புச்) சட்டம் பரிந்துரைக்கும் எந்த சட்டப் பிரிவு களுக்கும் உட்படாது. எனவே, இந்திய அரசாங்கத்தின் அரசு ஆணையில் தெரி வித்து உள்ள முதல் காரணம் தவிடு பொடியாகி விட்டது.

தொடரும் .... 

No comments:

Post a Comment