Tuesday, May 7, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 22

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே.


ஈழத்தமிழர் படுகொலையைத் தடுக்க
பிரதமர் வி.பி.சிங் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இந்தியாவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, தேசிய முன்னணி சார்பில் வி.பி.சிங் பிரதமர் பதவி ஏற்றதும், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அரசின் அணுகு முறை யில் மாற்றம் ஏற்பட்டது.

பிரதமர் வி.பி.சிங் 1990, மார்ச்சு 31க்குள் ‘இந்திய அமைதிப்படையின் கடைசி சிப்பாய் இந்தியா திரும்புவார்’என்று தேதி நிர்ணயம் செய்தார்.அதன்படி இந் திய அமைதிப்படை இந்தியா திரும்பத் தொடங்கியது.ராஜீவ்காந்தியின் அரசி யல் முதிர்ச்சியற்ற நடவடிக்கையால், இலங்கைப் பிரச்சினையில் சிங்கள
அரசோடு ஒப்பந்தம் போட்டு, இந்திய இராணுவத்தையும் அனுப்பி, தமிழ் மக் களைக் கொன்று குவித்து அவமானகரமான தோல்வியைச் சந்தித்து, இந்தியா சர்வதேச அரங்கில் தலைகுனிந்து நின்றது.



வி.பி.சிங் அரசு,இந்திய அமைதிப் படை நாடு திரும்ப உத்தரவிட்டு,ராஜீவ்காந்தி அரசின் தவறுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

அமைதிப்படைத் தளபதிகள் கருத்து

இலங்கையில் 31 மாதங்கள் இந்திய அமைதிப்படை தங்கியிருந்து புலிகளுடன் போரிட்டு தோல்வி முகத்துடன் திரும்பியது. இந்திய அமைதிப்படையின் இரா ணுவத்தளபதிகள் ஈழத்தில் புலிகள் இயக்கம் எவ்வாறு மக்கள் இயக்கமாக கட்டி அமைக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படையாகவே தெரிவித்தனர்.

‘லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர்சிங்’தான் எழுதிய நூலில், “பிரபாகரனை உயி ருடனோ, உயிரற்ற நிலையிலோ பிடிக்காதது ஏன்? என்று கேட்கிறார்கள். ஒரு தனிமனிதரை மட்டும் தனிமைப்படுத்திப் பாதுகாப்பதோ அழிப்பதோ, இது போன்ற சூழ்நிலையில் இயலாத செயலாகும். ஆனால், ஒன்றை நாம் மறந்து விடக்கூடாது. விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இளையதலைமுறைத் தலை மை சிறப்பாக உருவாகி உள்ளது என்பதுதான். பிரபாகரனின் இளைய தலை வர் கள் வரிசையாக முன்வந்து, போரைத் தீவிரமாக நடத்துவார்கள்.புலிகள் இயக்கம் ஒரு போதும் கலைந்து விடாது” என்று குறிப்பிட்டார்.

பிரிகேடியர் சிவாஜி பட்டேல் மட்டக் களப்பில் பணியாற்றியவர். அவர், “பிரபா கரன் ஒரு மாவீரர், அவரின் இராணுவத் தந்திரங்கள் திகைக்க வைக்கின்றன. அவர் தனது போராளிகளுக்கு இத்தகைய பயிற்சியை எப்படி அளித்தார் என்பது புரியாத புதிராக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைதிப்படைத் தளபதியாக பணிபுரிந்த அர்ஜூன் காத் தோஜ், “ மக்களின் முழுமையான ஆதரவைப் பெற்றிருக்கும் விடுதலைப் புலி கள் போன்ற கட்டுக்கோப்பான இயக்கங்களை எந்த இராணுவமும் எளிதில் வெற்றி கொள்ள முடியாது.கல்வியில் நூறு சதம் பெற்றுள்ள யாழ்ப்பாண
இளைஞர்களை மூளைச்சலவை செய்து புலிகளின் இயக்கத்தில் சேர்க்க முடி யாது. இளைஞர்கள் விரும்பியே அந்த இயக்கத்தில் சேர்ந்து இருக்கிறார்கள்.
யாழ் பல்கலைக்கழகம் அவர்களுக்கு நாற்றங்கால் மாதிரி. அங்கு படித்து புலி கள் இயக்கத்தில் சேர்ந்தவர்கள் வெடிகுண்டுகள், கண்ணிவெடிகள் தயாரிப் பில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர்களாகத் திகழ்கிறார்கள்” என்று தெரிவித்துள் ளார்.

பிரேமதாசா நயவஞ்சகம்

இந்திய அமைதிப்படை வெளியேற்றப் பட வேண்டும் என்ற நோக்கத்துடன் விடுதலைப்புலிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திய இலங்கை அதிபர் பிரேம தாசா, அந்த குறிக்கோள் நிறைவேறியதும், புலிகளை முற்றாக ஒழித்துக்கட்ட முயன்றார். யாழ் தீபகற்பத்தில் புலிகளின் பாசறையை அழிக்க இலங்கையின் முப்படைகளும் ஏவப்பட்டன. இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சர் ரஞ்சன் விஜயரத்னா, புலிகள் மீது தாக்குதல் தொடுத்து, அழிப்போம், என்று இலங்கைப்
பாராளுமன்றத்தில் கொக்கரித்தார்.

பிரேமதாசாவின் நயவஞ்சகத் திட்டத்தின்படி, யாழ்ப்பாணத்தில் மின் இணைப் புத் துண்டிக்கப்பட்டு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. தமிழ் மக்களின்
வாழ்க்கை முடங்கியது. புலிகள் முகாம்களை அழிக்கிறோம் என்று இலங்கை விமானப்படை குண்டுவீச்சு நடத்தியது. சிங்கள இனவெறி அரசின் இனப்படு கொலை நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியது. புலிகள், சிங்கள இராணுவத் தை எதிர்த்து வீரச்சமர் நடத்திட களத்தில் இறங்கினர்.

இந்தச் சூழலில் மாநிலங்களவையில்,1990, ஆகஸ்டு 29இல் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து விவாதத்தைத் தொடங்கி வைத்து,தலைவர் வைகோ உரை யாற்றியபோது, இலங்கைத்தமிழர் படுகொலையைத் தடுக்க இந்தியா உடனடி யாகச் செயலில் இறங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தொடரும் துயரம்

‘இலங்கைத் தமிழர்களின் துயரமும், சோகமும் முடிவில்லாமல் தொடர்ந்து
கொண்டே இருக்கிறது. நான் பேசுகின்ற இந்த நேரத்தில் தமிழ் ஈழம் எங்கும் மரணம் கோர உலா நடத்தி வருகின்றது. சிங்கள அரசின் இராணுவ ஹெலி காப்டர்களும் போர் விமானங்களும், யாழ்ப்பாணத்திலும் தமிழர்கள் வாழு கின் ற பகுதி எங்கும் தமிழினத்தையே கருவறுக்கும் விதத்தில் குண்டு வீசி வரு கின்றன.தமிழர்களின் இரத்தம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. அப்பாவித்
தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுகின்றனர்.

விடுதலைப் புலிகளுடன் யுத்தம் நடத்துவதாகச் சொல்லிக்கொண்டு இலங் கை அரசு தரைப்படை, கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளையும் ஏவிவிட்டு தமிழ் மக்களின் மீது மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்திக்கொண் டு இருக்கிறது.

12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களை இராணுவ முகாம்களுக்கு இழுத்துச் சென் று அவர்களின் கரங்கள் துண்டிக்கப்படுகின்றன. அவர்கள் இரத்தப் பெருக்கெ டுத்துச் சாகின்றனர். தப்பித் தவறி உயிர் பிழைத்தாலும் தங்கள் உரிமைக்காக
யுத்த களத்தில் போராட ஆயுதம் ஏந்த அவர்களால் இயலாது.

நெஞ்சை நடுங்க வைக்கும் செய்திகள் பத்திரிக்கைகளில் வருகின்றன. தமிழ்
இனத்தையே பூண்டோடு அழிக்கும் கொலைவெறி நோக்கத்தோடு சிங்கள இராணுவம் சின்னஞ்சிறு குழந்தைகளையும் பலியிடுகின்றது. கர்ப்பிணித் தாய் மார்களை இயந்திரத் துப்பாக்கிகளால் சுட்ட இராணுவத்தினர் அவர்களின் கர்ப் பத்தின் மீது குறிபார்த்துச் சுட்டு ‘புலிக்குட்டிகளைச் சுமக்கின்ற வயிறுகள் இவை. 

எனவே நாசமாகட்டும்’ என்று வெறிக் கூச்சலிட்டனராம். இரத்தத்தை உறைய வைக்கும் இந்தக் கொடுமை உலகில் வேறு எங்காவது நடந்தது உண்டா?தமி ழர் களின் பிரேதங்களை காக்கை கழுகுகளும், நாய்களும் நரிகளும் தின்கின் றன என்று ‘இந்து’ ஏட்டிலே செய்தி வந்துள்ளது.உலகெங்கும் உள்ள தமிழர்கள்
இரத்தக் கண்ணீர் வடிக்கின்றனர்.



இந்தியா மீது நடத்தப்படும் ஆக்கிரமிப்பு
தமிழ் ஈழத்தில் போர் மூண்ட பின்பு தமிழ்நாட்டுக்கு வந்த அகதிகள் எண்ணிக் கை 80 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இந்த வாரத்துக்குள் ஒரு இலட்சத்தைக் கடந்துவிடும். இன்னும் சில நாட்களில் இரண்டு இலட்சத்தை ஏன் மூன்று
இலட்சத்தைத் தாண்டக்கூடும். இலங்கைத் தீவில் 5 இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் தங்கள் சொந்தத் தாயகத்திலேயே அகதிகளாகி விட்டார்கள். தமிழர் கள் தமிழ்நாட்டிற்கு அகதிகளாகச் செல்லும் நிலையை ஏற்படுத்துவதால்
இலங்கை அரசு இந்தியாவின் மீது மறைமுகமாக ஆக்கிரமிப்பு நடத்துகின்றது என்று குற்றம் சாட்டுகிறேன். அகதிகள் மேலும் மேலும் வந்து குவிவதால் ஏற் படும் பிரச்சினை இலங்கையின் உள்நாட்டுப்பிரச்சினை அல்ல.

இந்திராகாந்தி கூற்று

கிழக்கு பாகிஸ்தானிலிருந்து பல்லாயிரக்கணக்கான அக திகள் மேற்கு வங்கா ளத்துக்குள் நுழைந்த போது, அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் இதே நாடாளுமன்றத்திலே கூறிய சொற்களை நினைவூட்டுகிறேன்.
“தற்போதைய நிலைமை பாகிஸ்தானின் உள்நாட்டுப் பிரச்சினை அல்ல.

மனித உரிமைகள் பிரச்சினை.உலகளாவிய மனிதாபிமானப் பிரச்சினை” என் றார். அன்று வங்கதேச மக்களின் உரிமையைக் காக்க இந்திய இராணுவம் சென்றது. ஆனால், ஈழத்துக்குச் சென்ற இந்திய இராணுவம் தமிழர்களைக் காக் கவில்லை. தமிழர்களின்மீதே தாக்குதல் நடத்தியது துரதிருஷ்டவசமானது.
கடந்த காலத்தில் நடைபெற்ற கசப்பான செய்திகளை இப்போது விவரித்துக் கொண்டிருக்க நான் விரும்பவில்லை.

தமிழ் இனப்படுகொலை

இலங்கைத் தீவில் இப்போது நடைபெற்றுக்கொண்டிருப்பது தமிழினப் படு கொலை. தமிழ்ப் பெண்களுக்கு இழைக்கப்படும் கோரமான கொடுமைகள் சகிக்க முடியாத பயங்கரம் ஆகும். அவர்களின் கற்பும் உயிரும் சூறையாடப் படு கின்றது. அழிவின் பிடியிலிருந்து தப்புவதற்காக தமிழ் நாட்டை நோக்கி
வங்கக் கடலைப் படகுகள் மூலம் கடந்து வரும் வழியிலும் இலங்கைக் கடற் படை வழி மறித்துத் தாக்கி கொல்கின்றது.

கடல்மேல் வரும் தமிழர்களைக் கொல்ல கடலில் கண்ணி வெடிகளை வெடிக் கச் செய்கின்றது இலங்கைக் கடற்படை. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் குறிப்பிடுகையில், “ஆறாவது சட்டத்திருத்தம் தமிழர் களின் கழுத்தைச் சுற்றியுள்ள தூக்குக் கயிறாகும்” எனப் பொருத்தமாகச் சொன்னார்.

இலங்கையில் ஜே.வி.பி.தீவிரவாதிகளையும் ஆதரவாளர்களையும் ஏறத்தாழ 35 ஆயிரம் பேர்களை சிங்கள பிரேமதாசா அரசு கொன்று குவித்து ஒழித்துக் கட்டிவிட்ட வெறியோடு, தமிழ்ப்புலிகள் மீதும் தமிழர்கள் மீதும் தாக்குதலைத்
தொடங்கியுள்ளது. கடந்த ஏப்ரல், மே மாதங்களிலேயே யாழ்ப்பாணத்துக்கும்
வடக்கு கிழக்கு மாநிலங்களுக்கும் மருந்துகள் அனுப்பப்படுவது நிறுத்தப் பட்டு விட்டது. உணவுப்பண்டங்களும் நிறுத்தப்பட்டது. சிங்கள இராணுவம் யுத்தத் துக்கான ஆயத்தத்தில் தீவிரமாக ஈடுபட்டது.சிங்கள வேவு விமானங்கள் தமி ழர் பகுதிகளில் பறக்கத் தொடங்கின.

ஜூன் 11 இல் சண்டை தொடங்கியது

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தைப் பற்றிக்குறிப்பிட வேண்டியது எனது கடமை. ஒப்பந்தம் ஏற்பட்டதும் அதன்பின் இராணுவம் அங்கு சென்றதும் புலிகள் மீது தாக்குதல் நடத்தியதும் எந்தப் பின்னணியில்? எங்கே தவறு நடந்தது? ஏன் நடந்தது? இவற்றுக்கெல்லாம் பதிலை நான்கு நாட்களுக்கு முன்பு ஜெயவர்த் தனாவின் பேட்டியிலிருந்து தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

ஜெயவர்த்தனா பேட்டியில் வெளிவந்த உண்மைகள்

முன்னாள் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா குறிப்பிடுகையில், “1986 ஆம் ஆண்டின் இறுதியிலும் 1987 ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் இலங்கை இரா ணுவம் வடக்கு மாகாணத்துக்குள் நுழைய முடியவில்லை. விமானத் தாக்கு தல் நடத்தப் போதுமான விமானங்கள் இல்லை. புலிகளை அழிக்கும் அளவுக்கு ஆயுத பலமும் இல்லை.இந்தச் சிக்கலான சூழ்நிலையில் இராஜீவ்காந்தியின் அரசாங்கம் ஒப்பந்தம் போட முன்வந்தது எங்களுக்கு சாதகமாகவும், சமய
சஞ்சீவியாகவும் அமைந்தது” என்று கூறியிருக்கிறார். தமிழர்களை அழிக்க
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை சாதகமாக்கிக் கொண்டது இலங்கை அரசு. ஜெயவர்த்தனேவின் வஞ்சக சூழ்ச்சி வலையில் இந்தியா சிக்கிக் கொண்டது. விடுதலைப்புலிகள் பிரேமதாசாவோடு ஏன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்? என்ற கேள்வி எழுகின்றது. பேச்சு வார்த்தை நடத்துவதற்காக போர் நிறுத்தம்
வேண்டி இந்திய அரசாங்கத்தின் கதவுகளை விடுதலைப்புலிகள் பலமுறை தட்டினார்கள். இந்திய அரசாங்கத்துக்கு புலிகள் இதற்காக பல கடிதங்களை அனுப்பினார்கள்.

ஆனால், அந்தக் கடிதங்கள் எல்லாம் குப்பைத் தொட்டியிலே போடப்பட்டன. விடுதலைப்புலிகள் பிரேமதாசாவோடு பேசும் நிலைக்கு வேறு வழியின்றித் தள்ளப்பட்டனர்.

சிங்கள மந்திரி கொக்கரிப்பு

இலங்கைப் பாராளுமன்றத்தில் சிங்கள இராணுவ மந்திரி ரஞ்சன் விஜயரத்னா
கோட்டானைப் போல் கொக்கரிக்கின்றார்.

தமிழர்களைத்தங்கள் கால் சட்டைகளில் மூத்திரம் பெய்ய வைப்பேன் என்றும், பிரபாகரனின் தலையைப் பாராளுமன்றத்துக்குள் தூக்கிக்கொண்டு வருவேன் என்றும், தமிழ்நாடு முதலமைச்சர் ஈழத்தமிழர்களைப் பற்றி பேசக்கூடாது என் றும் கூச்சலிடுகின்றார்.

இலங்கை அதிபர் பிரேமதாசா ஆகஸ்டு 15ஆம் தேதி பேசுகையில், இலங்கைப்
பிரச்சினையில் இந்தியா தலையிடாது என்றும், ஆசியக் கண்டத்தில் இந்தியா
முதன்மை பெறலாம் என்று கருதுவதாகவும் குத்தலாகக் கூறினார்.

இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டாலும் இந்தியா எதுவும் செய் யாது என்றும், கையாலாகாதப் பொம்மையைப் போன்று பார்த்துக் கொண்டி ருக்கும் என்றும் கருத்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணம் போக்கப்பட வேண்டும்.

ஈழத்தமிழர்கள் படுகொலையை இந்தியா வேடிக்கைப் பார்க்காது,எல்லா நடவ டிக்கை களிலும் ஈடுபடும் என்று இந்திய அரசு இலங்கைக்குத் திட்டவட்ட மாகத் தெரிவிக்க வேண்டும்.

இலங்கையின் கொட்டம் அடக்குக

இந்தியாவை மிகவும் துச்சமாகசுண்டைக்காய் நாடான இலங்கை அரசு கருது கின்ற நிலையை அனுமதிக்கக்கூடாது. இந்துமகா சமுத்திரத்தில் இந்தியாவின் பிராந்திய நலன்களைப் பாதுகாக்க வேண்டுமெனில் சிங்கள அரசின் கொட் டத் தை அடக்கியாக வேண்டும். ஈழத்தமிழர்கள் வலுவாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதுதான் இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு உகந்ததாக அமையும்.

இலங்கை அரசு பாகிஸ்தானிடமிருந்து ஆயுதங்களை வாங்கிக்குவிக்கிறது.
செஞ்சீனத்திடமிருந்து ஆயுதங்களை வாங்குகின்றது. இஸ்லாமிய நாடுகளி லிருந்து பெருமளவில் ஆயுதம் வாங்கும் நோக்கத்துடன்தான் இலங்கையில் முஸ்லிம்களையும், இந்துக்களையும்பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இந்தச் சூழ்ச்சியில் வெற்றியும் பெற்றுவிட்டது.

கடந்த ஜூன் 22ஆம் தேதியன்று கிழக்கு மாகாணத்தில் 62 முஸ்லிம்களை புலி கள் கொன்றதாக இலங்கை அரசு அறிவித்த செய்தி மிகப்பெரிய அளவில் பத்தி ரிக்கை களில் இடம்பெற்றது. ஆனால், இது தவறான செய்தியென்று அறிவிக்க
நேர்ந்ததைப் பத்திரிக்கைகளில் மறுநாள் பார்த்தோம்.

சிங்கள இராணுவத்தையும் சிங்கள வெறியர் கூட்டத்தையும் அம்பாறை மாவட்டத்திலும், கிழக்கு மாகாணத்தின் பிற பகுதிகளிலும் பயன்படுத்தி இந்து-முஸ்லிம் படுகொலைகளை ஏற்படுத்தி அதன் விளைவாக அம்பாறை மாவட் டத் தில் இருந்து மொத்தத் தமிழர்களும் குடிபெயர்ந்து செல்ல வேண்டிய நிலை மை உருவாக்கப்பட்டுள்ளது.தமிழர்கள் குடிபெயரும் இடங்களில் எல்லாம் சிங்களவர்கள் வந்து குடியமர்த்தப்படுகின்றார்கள்.தமிழர்கள் தங்கள் பூர்வீக பூமியை இழக்கின்றார்கள். இந்த அராஜகத்தைத்தான் பல்லாண்டு காலமாக சிங்கள அரசு செய்து வருகின்றது.

வஞ்சகமான தந்திரம்

இந்தப் பின்னணியில் நடைபெறுகின்ற ஒரு நிகழ்ச்சியை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 1984 இல் இலங்கையில் திறக்கப்பட்ட இஸ்ரேலியத் தூதர கத்தை திடீரென்று 2 மாதங்களுக்கு முன்பு அமெரிக்க நாட்டின் எதிர்ப்பையும் மீறி இலங்கை அரசு மூடிவிட்டது. இது ஒரு வஞ்சகமான தந்திரமாகும்.

இராணுவ அமைச்சர் விஜயரத்தினா அண்மையில் முஸ்லிம் நாடுகளுக்கு எல் லாம் சென்று ஆயுத பேரம் நடத்தியிருப்பதையும் இந்தியா கவனத்தில்கொள்ள வேண்டும்.தமிழீழத்தில் காயம்பட்டவர்களுக்கு மருந்துகள் இல்லை. மருந்து கள் இல்லாததால் குண்டு வீச்சினாலும், இராணுவத் தாக்குதலாலும் காயமுறு வோர் சிறுகச் சிறுக இரண வேதனையால் சாகின்ற கொடுமை உலகில் வேறு எங்கும் இல்லையே!

உலக வல்லரசுகளுக்கு அறைகூவல் விடுகின்ற ஈராக் நாட்டினை எதிர்த்து ஐ.நா.மன்றம் பொருளாதார முற்றுகைப் பிரகடனம் செய்திருந்தாலும் உணவுப்
பொருட்களும், மருந்துகளும் ஈராக்குக்குச் செல்லத் தடையேதும் இல்லை என்று அறிவித்து இருக்கிறார்கள்.ஆனால்,ஈழத்தமிழர்கள் உண்ண உணவின்றி
பட்டினியால் பலர் மடிகின்றனர் என்ற துன்பச் செய்திகள் வந்துகொண்டு
இருக்கின்றன.

பிரதமர் தலையிட வேண்டும்

இன்று ஈழத்தில் நடப்பது பயங்கரமான இனப்படுகொலை. யாழ்ப்பாணத்தை
விட்டு எட்டு இலட்சம் தமிழர்களையும் வெளியேற்றுவோம் என்று ரஞ்சன்
விஜயரத்னா மிரட்டுவதன் நோக்கம் என்ன? எட்டு இலட்சம் தமிழர்களையும் வெளியேற்றுவது என்பது இயலாது. பட்டினியாலும், குண்டு வீச்சாலும் தமிழர் களை சாகடிப்பதுதான் நோக்கம்.

தமிழீழத்தில் மூன்று பெரிய மருத்துவமனைகள், யாழ்ப்பாணத்திலும்,பருத்தித் துறையிலும், மணிப்பாயிலும் இயங்கி வந்தன. ஆனால், தற்போது இந்த மூன் று மருத்துவமனைகளும் நாசமாக்கப்பட்டுவிட்டன.தமிழர்களை மரண இருள் சூழ்ந்துள்ள வேளையில் அவர்களைக் காப்பாற்ற மத்திய அரசு தக்க நடவடிக் கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் நேற்று இந்தியப் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தை இதோ மேற்கோள் காட்டுகிறேன்.

“இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் நிலைமை நாளுக்கு நாள் படு மோசமாகிக்கொண்டிருக்கிறது. அப்பாவித் தமிழர்களை குண்டு வீசிக் கொன்று விட்டு விடுதலைப் புலிகளைக் கொன்றதாக இலங்கை அரசு பொய்பிரச்சாரம் நடத்துகின்றது.இப்போது இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தவும், ஈழத்தமிழர்களின் துன்ப துயரத்தைப் போக்கவும் இந்திய
அரசாங்கம் தக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று நான் வற் புறுத்துகிறேன்.”

இலங்கையில் இருதரப்பினரும் போர் நிறுத்தம் செய்யும் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தை நடத்தவும் இந்திய அரசு பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்.
ஈழத்தமிழர்களைப் பாதுகாக்கத் தவறினால், இலங்கைத் தமிழர்கள் ஆதரவற்ற அநாதைகளாகக் கைவிடப்பட்டுவிட்டார்கள் என்று உலகெங்கும் வாழும் தமி ழர் கள் வேதனைக்குள்ளாகிறார்கள். உலகில் பல்வேறு நாடுகளில் வாழும்
தமிழர்கள் வெகுவிரைவில் திருப்திகரமான தீர்வு காணப்பட வேண்டும் என்ற தங்கள் வேதனையை நாள் தவறாமல் தொலைபேசி மூலம் எனக்குத் தெரிவித் துக்கொண்டிருக்கிறார்கள்.நீங்கள் உடனடியாகத் தலையிட்டுதக்க நடவடிக் கை மேற்கொள்வதற்காக தற்போதைய பயங்கரமான நிலைமையை உங்கள் கவனத்துக்கு நான் கொண்டுவராவிடில் எனது கடமையில் நான் தவறியவன் ஆவேன் என்ற அளவுக்கு நிலைமை இலங்கையில் மோசமாக இருக்கிறது.
அமைச்சர் குஜ்ரால் இலங்கை செல்ல வேண்டும்

நமது வெளிவிவகார அமைச்சர் குஜ்ரால் அவர்கள் அரபு நாடுகளுக்குச் சென்று திரும்பி உள்ளார். இந்தியர்களின் நலன் காக்க தக்கநடவடிக்கை எடுத்துள்ளார். அதைப் போல் ஈழத்தமிழர்கள் படுகொலையைத் தடுத்து நிறுத்த குஜ்ரால் இலங்கைக்குச் செல்ல வேண்டும். இலங்கைத் தமிழர்கள் மீது நடத்தப்படும் கொலைவெறித் தாக்குதலைத் தடுத்து நிறுத்துவதற்கு அனைத்து வழிகளை யும் நாடவேண்டும்.

தமிழ் ஈழத்தில் தமிழர்கள் மானத்துக்காக, நீதிக்காக போராட ஆயுதம் ஏந்தி உள் ளனர். 30 ஆண்டு காலம் அறவழியில் போராடினார்கள். உண்ணாவிரதங் கள், ஊர்வலங்கள், பாராளுமன்றப் பேச்சுக்கள், அடுத்தடுத்துப் பல ஒப்பந்தங் கள். 

ஆனால், சிங்கள இனவாத அரசு தமிழர்களுக்கு அடிப்படை உரிமைகளை வழங்கவில்லை.சமத்துவம் தரவில்லை. கொத்தடிமை களாக வாழ்வதைவிட செத்துமடிவது மேல் என்று அவர்கள் ஆயுதப்போராட்டம் தொடங்கினர்.

இலங்கைக் கடற்படை இந்தியக் கடலாதிக்கப் பகுதிகளுக்குள்ளும் நுழைந்து தமிழ்நாட்டு மீனவர்களையும் கடுமையாகத் தாக்கி காயப்படுத்தும் அளவுக்கு ஆணவம் தலைக்கேறியிருக்கின்றது.இதற்கெல்லாம் பாடம் புகட்டும் வகை யில் இந்தியா கடுமையான எச்சரிக்கையை விடுக்க வேண்டும்.

இந்தியா இனியும் இந்நிலை நீடிப்பதைப் பொறுத்துக்கொள்ளவோ, சகித்துக் கொள்ளவோ அனுமதிக்கவே முடியாது என்ற வகையில் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.

ஈழத்தமிழர்கள் மேலும் அகதிகளாகும் நிலையைத் தடுக்கவும்,தமிழ்நாட்டுக்கு வந்துள்ள அகதிகள் திரும்பத் தங்கள் தாயகம் செல்லவும் ஏற்ற சூழ்நிலை, அர சியல் தீர்வு இலங்கையில் உருவாக்கப்பட வேண்டும்.

மொழியால், இனத்தால் கலாச்சாரத்தால் தமிழ்நாட்டிலுள்ள ஐந்து கோடித் தமிழர்களும் 2,000 ஆண்டு களுக்கு முன்பே பிணைக்கப்பட்டவர்கள். எனவே ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை தமிழ் நாட்டுக்கு உண்டு. தமிழகம் உள்ளிட்ட இந்தியாவுக்கு உண்டு.

புதுவை நாராயணசாமி (இ.காங்): தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் முகாம் களே இல்லையென்று முதலமைச்சர் சொன்னார். ஆனால்,புலிகளின் நடமாட் டம் தமிழகத்தில் அதிகமாக இருக்கின்றது.

வைகோ: புலிகளுக்கு முகாம்கள் அமைத்ததே அம்மையார் இந்திராகாந்தி அவர்கள்தான். தற்போது தமிழ்நாட்டில் எந்த முகாமும் இல்லை. இலங்கை யின் முப்படைகளையும் எதிர்த்து இன்று களத்திலே நிற்பவர்கள் புலிகள்தாம் என்பதை காங்கிரஸ் மறுக்க முடியுமா?

இ.காங்கிரஸ் எம்.பி., புதுவை நாராயணசாமி, தி.மு.க. அரசின் மீது புகார் கூற முனைந்தபோது தி.மு.க.உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சிவசங்கர் (இ.காங்) அவர்களும் ஜனதா கட்சித் தலை வர் களில் ஒருவரான யஷ்வந்த் சின்ஹா அவர்களும் எழுந்து அனைவருக்கும் கவலை தருகின்ற இந்த முக்கியமான பிரச்சினையில் கட்சி அரசியலுக்காக யாரும் பேச வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.

தொடரும்...
நன்றிகள் 

கட்டுரையாளர் :- மு.செந்திலதிபன்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment