Tuesday, May 7, 2013

பரசலூரில் நிழற்குடை அமைக்க வேண்டும் - மதிமுக

நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே பரசலூரில் பயணிகள் நிழற்குடை அமைக்க மதிமுக வலியுறுத்தியுள்ளது.

மதிமுக ஒன்றிய செயலாளர் கொளஞ்சி கூறியதாவது:

நாகை மாவட்டத்தில் செம்பனார்கோவில் ஒன்றியம் 57 ஊராட்சிகளை கொண்ட பெரிய ஒன்றியமாகும். 57 ஊராட்சிகளில் அருகாமையில் உள்ள கிராமங்களான மேமாத்தூர், கீழ்மாத்தூர், சாத்தனூர், மேலப்பாதி, செம்பனார் கோவில், மேலக்கட்டளை ஆகிய கிராம மக்கள் அரசு அலுவ லர்கள், மாணவ, மாணவிகள், அருகில் உள்ள மயிலாடுதுறை நாகப் பட் டினம், பொறையார், பூம்புகார் ஆகிய ஊர்களுக்கு செல்ல வேண்டு மென்றால் பரசலூரிலிருந்து தான் செல்ல வேண்டும்.


ஆனால் பரசலூரில் பயணிகள் நின்று ஏறுவதற்கு நிழற்குடை இல்லை. இதனால் கடைதெருவில் மக்கள் கடைகளின் ஓரங்களில் நின்று பேருந்து ஏறும் அவல நிலை உள்ளது. கடைகளை மறைத்து நிற்பதால் வியாபா ரம் பாதிக்கப்படுவதாக வணிகர்களிடையே குற்றச்சாட்டு எழுகிறது.

அதோடு மட்டுமல்லாமல் மழைக் காலத்திலும், வெயில் காலத்திலும் மக்கள் நிற்க இடமில்லாமல் பாதிக்கப்படுகின்றனர். பரசலூரை சுற்றி யுள்ள கிராம மக்களாக இருப்பதால் பண்டிகை மற்றம் விழாக் காலங் களில் பரசலூர் கடைவீதியில் ஒன்று கூடுவதால் போக்குவரத்து நெரி சலும் ஏற்படுகிறது. அதனால் பரசலூரில் பயணிகள் நின்று செல்வதற்கு வசதியாக பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட வேண்டும்.

இதுகுறித்து நாகை கலெக்டருக்கு மனு அனுப்பி உள்ளதாகவும் ஒன்றிய செயலாளர் கொளஞ்சி தெரிவித்தார்.

No comments:

Post a Comment