இந்தியாவில் மதவெறியை வளர்க்க பாரதிய ஜன தா கட்சி செயல்படுவதைப் போலத்தான் இந்திரா காங்கிரசும் மதவெறியைத் தனது அரசியல் லாபத்திற்கு பயன்படுத்த முயன்றதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன
இந்து-இந்தி-இந்து ராஷ்டிரம் என ஒலிக்கும் ஓங்காரக் குரல்களால்

இந்தியா பல துண்டுகளாகும்!
இந்தியாவின் கோடானகோடி பிற்பட்ட சமூக மக்களுக்கு சமூகநீதி கிடைக்கும்
வகையில்,மண்டல் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வி.பி.சிங் தலை மையிலான தேசிய முன்னணி அரசு உத்தரவு பிறப்பித்தவுடனேயே, அவ்வர சுக்கு பாரதிய ஜனதா கட்சி கொடுத்துவந்த ஆதரவைத் திரும்பப் பெற முடிவு செய்தது. நேரிடையாக சமூகநீதிக்கு எதிராக கருத்து கூறாமல் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம் என்று பிரச்சார இயக்கத்தை தீவிரமாக்கியது.
பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமர்கோவில் எழுப்புவோம் என்று பாரதிய ஜன தா கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி வரிந்துகட்டிக் கொண்டு ரத யாத்திரை மூலம் ரத்தக்களறி நடத்துவதற்கு ஆயத்தமானார்.
அந்தக் காலகட்டத்தில் நாடாளுமன்றத்தில் தலைவர் வைகோ, மதச்சார்பின் மைக் கொள்கையை வலியுறுத்தி எழுப்பிய வரலாற்று முழக்கங்கள் சாதாரண மானவை அல்ல.திராவிட இயக்க அரசியல் வரலாற்றில், இந்திய நாடாளுமன் றத் தில் தலைவர் வைகோ ஆற்றிய உரைகள், திராவிட இயக்கத்தின் அடிப்

ப டைக் கொள்கைகளைப் பிரதிபலித்தவை.காலா காலத்திற்கும் நிலைத்து நிற்பவை.
1990 அக்டோபர் 5 ஆம் நாள் தலைவர் வைகோ அவர்கள் தந்தை பெரியார், அறி ஞர் அண்ணா இலட்சிய அடிச்சுவட்டில் நின்று ஆற்றிய உரை:-
“இராமஜென்ம பூமியா அல்லது பாபர் மசூதியா என்ற சர்ச்சைக்குரிய பிரச்சி னை பூதாகரமாக வளர்நது நாடெங்கும் கோடிக்கணக்கான மக்களை அச்சத் திற்கும், பீதிக்கும் ஆட்படுத்துகின்ற பயங்கரமான ஒரு விபரதப் பிரச்சினை யாக உருவெடுத்துள்ளது. ஒரு எரிமலையின் மீது நாம் அமர்ந்திருக்கின்றோம். ஆம்!மதக்கலவரம் மூண்டுவிடுமானால் பயங்கரமான இரத்தக் களறிகள் உத் திரபிரதேசத்தில் மட்டுமல்ல,இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலே வெடிக்கக் கூடிய பேராபத்து நம்மை எதிர்நோக்கி உள்ளது. எரிமலை எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடும்.மதவெறியைத் தூண்டிவிடும் போக்கு கட்டுக்கு அடங்காமல் வளர்ந்துவிட்டதால், உலர்த்தப்பட்ட வெடிமருந்து எங்கும் கொட்டிக்கிடப் பதைப்போன்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஒரு நெருப்புப் பொறியைப் போன்ற சம்பவம் நடக்குமானால் அதன்பின்னர் மூண்டு விழுகின்ற அராஜக நெருப்பின் ஜூவாலைகளை அணைக்க முடியா மல் போகலாம்.
உலகின் எந்த நாட்டுத்தலைநகரத்துவீதிகளில் நாம் நடந்தாலும்தலை நிமிர்ந்து கம்பீரமாக இன்று உலவ முடியும் என்றால் அதற்கு ஒரே காரணம் நான் மதச் சார்பற்ற நாட்டைச் சார்ந்தவன். நான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட் டைச் சார்ந்தவன் என்ற பெருமித உணர்வுதான். உலக வரலாற்றில் மதத்தின் பெயரால்தான் மனிதகுலம் அதிக இரத்தத்தைச் சிந்தியுள்ளது. சிலுவைப்போர் களைப் போன்ற கோர யுத்தங்கள் இந்திய மண்ணிலே நடைபெற நாம் அனும திக் கவே கூடாது. இராமர் கோவிலைக் கட்டப்போகின்றோம் என்று பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நடத்தும் ரதயாத்திரை ஒரு பெரும் ரத்தக்களறியை நடத்துவதற்கான ஆயத்த யாத்திரையாகவே தெரிகின்றது.எது நடந்தாலும் சரி, இராமர் கோவிலைக் கட்டியே தீருவோம் என்று ஆர்ப்பரிப்பது எதைக் காட்டு கின்றது என்றால், ‘முடிவுகள் வழிகளை நியாயப்படுத்தும்’என்ற மாக்கிய வல் லியின் கோட்பாட்டைப் பின்பற்றும் ஆணவப்போக்கைத்தான் காட்டுகின்றது.
விளையப்போகின்ற முடிவு எதுவாகஇருந்தாலும் அதை அடைவதற்கான வழி முறைகளும் நியாயமானதாக இருக்க வேண்டும் என்ற கோட்பாடுதான் மகாத் மாவின் கோட்பாடு. இந்த மண்ணுக்கு உகந்த கோட்பாடு. அரசியலில் நீண்ட அனுபவம் பெற்ற தலைவரான அத்வானி அவர்களை இந்த மன்றத்தின் மூலம் நான் அடக்கத்தோடு வேண்டிக்கொள்வதெல்லாம் ரதயாத்திரையை நிறுத்த வேண்டும் என்பதுதான். நாட்டில் எத்தனை இராமர்கோவில் வேண்டுமானா லும் நீங்கள் கட்டிக்கொள்ளுங்கள். ஆனால், சர்ச்சைக்குரிய இடத்தில் பிரவே சிக்காதீர்கள். பாபர் மசூதியில் யாரும் கை வைக்கக்கூடாது.
இதுகாறும் இருந்துவருகின்ற கட்டிட அமைப்புகள் அப்படியே இருக்கட்டும். அத்வானியின் ரதயாத்திரை போகும் வழியெல்லாம் மதவெறியர்கள் ஆயுதங் களோடு திரளுகிறார்களாம்.இரத்தத்தை தாரை வார்த்துக்கொடுக்கும் மதவெறி யும் தாண்டவமாடுகின்றதாம். தற்போது இரு தரப்பினரும் - இந்துகளும், முஸ் லிம்களும் - தங்கள் ஆயுதங்களைத் தீட்டிக்கொண்டு இருக்கின்றார்கள். சமீப காலம்வரை இருந்து வந்த இந்துமுஸ்லிம் ஒற்றுமையும், நேச மனப்பான்மை யும் இன்று கருகிப்போய் விட்டன. நேற்றுவரை நண்பர்களாக இருந்தவர்கள் இன்று பகைவர்கள் ஆகிவிட்டார்கள். அன்பும், பரிவும் பளிச்சிட்ட கண்களில் இன்று கொலைவெறி தாண்டவமாடுகின்றது. இந்துகளின் பண்டிகைகளுக்கு
இஸ்லாமியர்களும், இஸ்லாமியர்களின் பண்டிகைக்கு இந்துகளும் கலந்து
கொள்கின்ற சகவாழ்வு மனப்பான்மை இன்று சாகடிக்கப்படுகின்றது.
இந்தியா என்பது அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களும், பல்வேறுமொழி பேசும் மக்களும் வாழுகின்ற நாடு. அதை மாற்றும் வகையில் இந்து-இந்தி- இந்துராஷ்டிரம் என்ற ஓங்காரக் குரல் ஒலிக்குமானால் இந்தியா பல்வேறு
துண்டுகளாக உடைந்துபோகும் என்ற அபாய அறிவிப்பின் சத்தமும் ஓங்கி
ஒலிக்கும் என்று எச்சரிக்கிறேன்.
தலைவர் வைகோ, மாநிலங்களவையில் எச்சரித்ததைப் பொருட்படுத்தாமல்
பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி, ரதயாத்திரையைத் தொடர் ந்தார். 1990 செப்டம்பர் 25 இல் குஜராத் மாநிலத்தில் உள்ள சோமநாதபுரத்தி லி ருந்து புறப்பட்ட ரதயாத்திரை அக்டோபர் 30இல் அயோத்தியைச்சென்று அடை வது என்று திட்டமிட்டார் அத்வானி. எட்டு மாநிலங்கள் வழியாகச் சென்ற அத் வானி ரதயாத்திரை போகும் பாதை எங்கும் மதவெறிக்கான விஷவிதைகள்
ஊன்றப்பட்டன. மதவெறியர்களின் வன்முறை கோர தாண்டவம் ஆடியது. ரத யாத்திரையைத் தடைசெய்தால் வி.பி.சிங் அரசுக்கு அளித்துவரும் ஆதரவைத் திரும்பப் பெறுவோம் என்று அத்வானி அறிவித்தார். ஆனால், அடிபணியாத பிரதமர் வி.பி.சிங் ரதயாத்திரையைத் தடுக்க உறுதியாக இருந்தார்.பீகார் முதல மைச்சர் லல்லுபிரசாத் யாதவுக்கு அதற்கான உத்தரவைப்பிறப்பித்தார்.எனவே பீகாருக்குள் நுழைந்த ரதயாத்திரையை லல்லுபிரசாத் யாதவ் தடுத்துநிறுத்தி னார். அத்வானியும் கைது செய்யப்பட்டார். வி.பி.சிங் அரசுக்கு கொடுத்துவந்த ஆதரவையும் பாரதிய ஜனதா கட்சி திரும்பப் பெற்றது.
அத்வானி யாத்திரை தடை செய்யப்பட்டதால் ஆத்திரம் கொண்ட மதவெறியர் கள் நாடெங்கும் கலவரங்களில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கானோர் கொல் லப் பட்டனர். இந்தியாவின் வரலாற்றில் இரத்தம் தோய்ந்த அந்தக் காலகட்டத் தில் தலைவர் வைகோ அவர்கள் 1991 ஜனவரி 2ஆம் நாள் நாடாளுமன்றத்தில்
மதக்கலவரங்கள் பற்றிய விவாதத்தில் பங்கேற்று ஆற்றிய உரை முக்கிய மான தாகும்.
“மதக்கலவரங்களைக் குறித்து இம்மன்றத்தில் கணக்கற்ற முறைகள் விவா தித்திருக்கின்றோம். கொடுமுடியின் விளிம்பில் இந்தியா அமர்ந்திருக்கின்றது.

நெருப்பை அணைக்க முடியாது

அத்வானி ரதயாத்திரையை நிறுத்த வேண்டும்

ரதயாத்திரையில் இரத்தக் களறி

மதவெறி எனும் புற்றுநோய்
எரிமலைகளின் சீற்றத்தை நாம் சந்திக்க நேரிடலாம்.மதத்தின் பெயரால் வெறி யர்களின் கூட்டம், நாட்டின் பல பகுதிகளில் ரத்தக்களறிகளை நடத்துகின்றது. ஆந்திரத்திலும், உத்திரபிரதேசத்திலும், குஜராத்திலும் -ஏன் -தலைநகர் டெல்லி யிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களில் நடந்த மதக் கலவரங்களும், மரண பயங்கரங்களும் 1947இல் நடைபெற்ற கலவரங்க ளைவிட கொடூரமானவை ஆகும். மதவெறி எனும் புற்றுநோய் இந்த நாட் டின் அரசியலிலும், சமூக அமைப்பிலும் ஊடுருவத் தொடங்கி விட்டதால், இந்தியா
என்கின்ற அமைப்பே நிலைத்திருக்குமா? என்ற அபாயமும், கேள்வியும் எழுந் துள்ளன.
பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் பிரமோத் மகாஜனின் பேச்சை மிகக் கவன மாகக் கேட்டேன். கடந்த கால சரித்திரத்தை மேற்கோள்காட்டிப்பேசினார். பாப ரும் அவரது முன்னோர்களும் ஆப்கானிஸ்தானில் இருந்தும், பெர்சியாவி லி ருந்தும் இந்தியாவுக்குள் படையெடுத்து வந்தார்கள் என்றும், இந்தியா என்பது
இந்துகளின் நாடென்றும், இந்து ராஜ்யமென்னும் தத்துவத்தை வலியுறுத்தியும் பாரதிய ஜனதா கட்சியினர் பேசி வருகின்றனர்.அயோத்தியிலே கோயில்இருந் தது என்றும், அந்த இடத்திலே பின்னர் மசூதி கட்டப்பட்டதென்றும், எனவே,
மசூதியை இடித்துத் தள்ளிவிட்டு புதிதாகக் கோயில் கட்டவேண்டுமென்றும் வாதத்தை முன்வைக்கின்றனர்.
கடந்த காலத்திலே நடந்து முடிந்துவிட்ட சரித்திரம் எதுவாயினும் அதனை சிலரின் விருப்பத்திற்கேற்ப மாற்றியெழுதிவிட முடியாது. கடந்தகால சரித்தி ரத்தை அழித்துவிட்டு சிலரின் நோக்கத்திற்கேற்ப புதிய சரித்திரத்தை உருவாக் க முடியாது. மொகலாயர்கள் எல்லாம் அந்நியர்கள் என்ற வாதம் எழுப்புபவர் களைப் பார்த்து அடக்கத்தோடு நான் கேட்பதெல்லாம் அயோத்தியை ஆண்ட தாகச் சொல்கின்ற இந்துகள் எங்கேயிருந்து வந்தவர்கள் என்று அறிய விரும்பு கிறேன்.
திருமதி மார்க்ரெட் ஆல்வா(இ.காங்): ஆரியர்கள் வந்தனர்
வைகோ: உண்மைதான் கைபர் கணவாய்,போலன் கணவாய்களின் வழியாக
மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்கள் இந்த நிலப்பகுதிக்குள் வந்தனர்.
(பி.ஜே.பி.யினர் கூச்சல், குறுக்கீடுகள்)
நடந்த சரித்திரத்தைச் சொல்கிறேன்.பிரித்தாளும் சூழ்ச்சியினைக் கையாண்ட
பிரிட்டிஷ்காரர்கள்தான் இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் உருவாக்கினர்.
பிரிட்டிஷ்காரர்கள் வருவதற்கு முன்பு இந்தியா என்ற ஒரு நாடே கிடையாது.
(குறுக்கீடுகள், கூச்சல்)
வெள்ளைக்காரனால் உருவாக்கப்பட்டது தான் இந்தியா. இதுதான் சரித்திரம்.
பல்வேறு மொழிகள், பல்வேறு இனங்கள், பல்வேறு கலாச்சாரங்கள்,பல்வேறு மதங்களை உள்ளடக்கியதுதான் இந்தியா.
மொகலாய சாம்ராஜ்யத்தின் புகழ்மிக்க சக்கரவர்த்தியாக இருந்த அக்பர், ஒரு
உண்மையை மிகத் தெளிவாக உணர்ந்திருந்தார். இஸ்லாமிய மார்க்கத்தை மட்டும் வைத்து தனது சாம்ராஜ்யத்தைப் பாதுகாக்க முடியாது என்று கருதி - இந்துகளும், முஸ்லிம்களும் பிற மதத்தினரும் இணைந்து வாழ்வதற்காக “தீன்
இலாஹி” (தெய்வீக மதம்) என்றமதத்தைத் தொடங்கினார். ஆனால்,அந்த மதம் வெற்றி பெறவில்லையென்றாலுங்கூட, ஒரு மத ஆதிக்கம் இந்தியாவின் ஒரு மைப்பாட்டை உருக்குலைத்துவிடும் என்பதை படிப்பினையாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.
அக்பர் பலம்வாய்ந்த பேரரசர்.சக்திவாய்ந்த அவரது சைனியங்கள் எங்கும் வெற்றிக் கொடி நாட்டின. ராணா பிரதாப் சிங் ஒருவரைத் தவிர மற்ற ராஜபுத் திர மன்னர்கள் அக்பரை ஏற்றுக்கொண்டார்கள்.
ரத்னாகர் பாண்டே (இ.காங்): ராணா பிரதாப் சிங் என்று கூறாதீர்கள். ராணா
பிரதாப் தான்.
வைகோ: பிரதாப் சிங் என்று பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே ஏன் காங்கி ரஸ்காரர்கள் இவ்வளவு பதட்டமடைகின்றீர்கள்? (சபையில் சிரிப்பு)
(விஸ்வநாத் பிரதாப் சிங் என்ற வி.பி.சிங் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப் பட்டு, பின்னர் தேர்தலில் அவரே ராஜீவ்காந்தியை வீழ்த்தி, தேசிய முன்னணி சார்பில் பிரதமர் ஆனார். இதைத்தான் தலைவர் வைகோ சுட்டிக்காட்டினார்-
கட்டுரையாளர்)
இந்தியா மதச்சார்ப்பற்ற நாடு. இந்துகளும், முஸ்லிம்களும், கிறித்துவர்களும், சீக்கியர்களும்,சமணர்களும்,பெளத்தர்களும்,பகுத்தறிவுவாதிகளும் இணைந்து
வாழவும், எல்லோரும் சமமாக கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடத் தப்படுகின்ற உத்திரவாதம் அளிப்பதுதான் மதச்சார்பின்மை. இதை மறந்து விட்டு இந்து ராஜ்யம் என்ற தத்துவத்தைத் திணிக்க முயற்சிப்போருக்கு நான் தரும் எச்சரிக்கையெல்லாம் உங்கள் தலைக்கு மேல் தொங்கும் அபாய அறி விப்பைக் காண மறந்துவிடாதீர்கள். இந்து ராஜ்யம் என்பீர்களானால், வட கிழக்கு மாகாணங்கள் இந்தியாவில் இருக்காது. காஷ்மீர் இந்தியாவில் இருக் காது. பஞ்சாப் இந்தியாவில் இருக்காது. இந்தியாவின் ஒருமைப்பாடே உடைந் து நொறுங்கிப்போகும்.
என்னுடைய ஆரிய இனம்தான் உலகத்தில் உயர்ந்த இனம் என்று ஜெர்மனி யில் இட்லர் கொக்கரித்தான். இங்கு யூதர்களுக்கு இடம் இல்லை.பிற இனத்த வருக்கு இடமில்லை என்று வெறியாட்டம் நடத்தினான்.விபரீதங்களையே ஜெர் மனி சந்தித்தது.அதைப்போல இந்தியாவிலும் சிலர் மதத்தின் பெயரால் புதிய பாசிஸ்டுகளாக கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றனர்.இந்தப் பெரிய நாட் டில் நாதுராம் வினாயக் கோட்சேயின் ரிவால்வரிலிருந்து குண்டுகள் பாய்ந்த போது, இந்நாட்டின் தந்தை, ராம் ராம் என்று உச்சரித்தார்.ஆனால் வேதனை யான வேடிக்கை என்னவெனில் மதவெறியை வளர்த்து சிறுபான்மை மதத் தினரை நசுக்குவதற்கு அதே ராம் என்ற பெயரை சில பிரிவினர் உச்சரிப்பது தான்.
இந்துகளின் இதிகாசமான இராமாயணத்தில் கூட இராமன் அனைவரையும்
அரவணைக்கின்ற அன்பை அணுகுமுறையாகக் கொண்டிருந்தான். வேடர் கு லத்தில் பிறந்த குகனை சகோதரனாக ஏற்றுக்கொண்டான். குரங்கு இனத்திலே பிறந்த அனுமனையும், சுக்ரவனையும் சகோதரனாக ஏற்றுக்கொண்டான்.அரக் கர் குலத்திலே பிறந்ததாக சொல்லப்பட்ட விபீடணனை சகோதரனாக ஏற்றுக் கொண்டான்.எங்களுடைய பார்வையில் விபீடணன் ஒரு துரோகி. அந்த சர்ச் சையை இப்போது நான் வளர்க்க விரும்பவில்லை.
உங்கள் புராணப்படி இவர்களை எல்லாம் இராமன் சகோதரனாக ஏற்றுக் கொண்டான் என்றால், அந்த இராமனின் பெயரால் வெறுப்பையும், விரோதத் தையும், கசப்பையும், குரோதத்தையும் நாட்டு மக்களிடையே பரப்ப முற்படு வது நியாயம்தானா?
அத்வானியின் ரத யாத்திரை நடைபெற்றதற்குக் காரணம் என்ன? மண்டல் கமி ஷன்தான் காரணம். பலநூறு வருடங்களாக மேல்சாதிக்காரர்கள் அனுபவித் துக் கொண்டிருந்த சலுகைகள், வசதிகள், அந்தஸ்து,அதிகாரம் அனைத்தையும் இழக்க விரும்பாததால் ஒடுக்கப்பட்டுக் கிடந்தவர்களுக்கு சமூக நீதி கிடைப் பதை சகிக்க முடியாததால் ஆத்திரப்பட்ட கூட்டம்,பிற்பட்ட சாதிக்காரர்களுக் கு எதிராக வெளிப்படையாக பேசப் பயந்து இராமர்கோவில் பிரச்சினைக்குள்
மறைந்துகொண்டு ரத யாத்திரை நடத்தினார்கள்.
இப்போது ஏன் அத்வானி ரதயாத்திரை நடத்தவில்லை? ரதம் ரிப்பேராகி விட்ட தா? அல்லது மகாபாரதத்திலே யுத்த களத்தில் போரின் உச்சகட்டத்தில் கர்ண னின் ரதத்தின் சக்கரங்கள் சுழலாது என்று பரசுராமன் சாபம் விட்டதைப்போல எந்தப் பரசுராமனாவது அத்வானியின் ரதத்திற்கு சாபம் விட்டிருக்கின்றானா?
ரதயாத்திரையின் விளைவுகள் என்ன? ரத்த அபிஷேகம், ரத்தக் களறி, நாடெங் கும் மதக் கலவரம், நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்குச் சட்டம். உத்திரபிரதே சத்தில் மட்டும் ஊரடங்குச்சட்டம் அமல்படுத்தப்பட்ட நகரங்களின் பட்டியலை வாசிக்கிறேன். லட்சுமணபுரி, ஆக்ரா, அலிகார், காசியாபாத், பெரோஸ்ஷாபாத், மதுரா, கான்பூர்,அலகாபாத், வாரணாசி, ஜான்பூர், பஸ்தி,முசாபர்நகர், ஜான்சி, பதுவான், மொராபாத், ராம்பூர், பிஜ்னோர்,அயோத்தியா, பைசாபாத், மொரினா.
இங்கெல்லாம் மக்கள் தெருக்களில் நடமாட முடியாது.
ஆந்திரப் பிரதேசத்தில் பல பகுதிகளில் பிணக்குவியல், ரத்தக் குளியல், செய்தி களைப் பத்திரிகைகளில் படிக்கவே மனம் பதறுகிறது. இந்தக் கலவரங்களால் பாதிக்கப்படுவோர்யார்? படுகாயமடைவோர் யார்? பலியாவோர் யார்? மத வெ றியை ஊட்டும் பேச்சுகளை மேடைகளில் முழக்கமிடுபவர்கள் அல்ல.ஆயுதங் களைத் தீட்டச் சொல்லுகின்றவர்கள் அல்ல. யார் தெரியுமா? பெண்கள், குழந் தைகள், நோயாளிகள், ஓடித் தப்பிக்க உடல் பலமில்லாதவர்கள், அப்பாவிகள்.
மிகுந்த வேதனையோடும் வருத்தத்தோடும் அத்வானியையும்,பாரதிய ஜனதா கட்சியையும் நான் குற்றம் சாட்டுகிறேன். அவர்கள் மதத்தின் பெயரால், ரதத் தின் பெயரால், தங்கள் பிரச்சாரத்தின் மூலம் விதைத்த வெறுப்பும், வெறியு ணர்ச்சியும்தான் நாட்டின் பல பகுதிகளில் ரத்தக்களறிகள் நடக்கக் காரணமா கும். இதற்கான முழுப்பொறுப்பையும் அவர்கள்தான் ஏற்க வேண்டும்.
இந்தியாவின் பல பகுதிகளில் நடக்கும் மதக்கலவரங்கள் பெரும் சஞ்சலத்தை
ஏற்படுத்தும் வேளையில் பாலைவனத்தில் ஒரு சோலைவனம் போல் தமிழ் நாடு திகழ்வதை, இந்தியாவுக்கே வழிகாட்டியாக பெருமை பெற்றிருப்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 1947இல் நாட்டுப் பிரிவினை நடந்தபோது, இந்து-முஸ்லிம் கலவரம் ஏற்பட்டு நாட்டின் பல இடங்களில் படுகொலைகள்
நடந்தபோது, தமிழ்நாட்டில் இந்துகளையும், முஸ்லிம்களையும் சகோதர பாசம் அரவணைத்தது.
அந்த சகோதரபாசம் அன்றுமுதல் இன்றுவரை நீடிக்கின்றது. சமூகநீதியின் மிகப்பெரிய பாதுகாவலரான தந்தை பெரியார்தான் இந்தப் பெருமைக்குக் கார ணமானவர். இந்தப் புகழ் திராவிட இயக்கத்தைச் சேரும்.இத்தகைய பெருமைக் குக் காரணமானவர் பேரறிஞர் அண்ணா.தமிழ்நாட்டில் இன்று நிலைமை என் ன? என்னுடைய மாநிலத்தில் எவரும் எங்கும், எந்த நேரத்திலும் பாதுகாப்பா கச் செல்லலாம்.மதக்கலவரம் கிடையாது. அமைதிப்பூந்தோட்டமாகத் திகழ் கின்றது தமிழ்நாடு. ஆனால், மதவெறியென்னும் நச்சை விதைக்க பாரதிய ஜன தா கட்சியும், இந்து முன்னணியும் முயற்சிக்கின்றன. சதித்திட்டம் தீட்டு கின்றன.
மதத்தின் பெயரால் கலவரம் நடத்தவோ, சிறுபான்மை மக்களை நசுக்கவோ
எங் கள் மண்ணில் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அத்தகைய பயங்கரம் வரா மல் தடுப்பதற்கு எங்கள் உயிர்களையும் தியாகம் செய்யத் தயாராக உள்ளவர் களின் இயக்கம் எங்கள் இயக்கம் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவிக் கின்றேன்.
இந்த நாட்டில் இந்துகள் தங்கள் ஆலயங்களுக்குச் சென்று பூஜை நடத்தட்டும, கிறிஸ்துவ சகோதரன் தேவாலயத்திற்குச் சென்று ஜெபிக்கட்டும், இஸ்லாமி ய சகோதரன் மசூதிக்குச் சென்று தொழுகை நடத்தட்டும். சீக்கியச் சகோதரன்
தன்னுடைய குருத்வாராவிலே வழிபடட்டும்.என்னுடைய பகுத்தறிவுத்தோ ழன் தனது பகுத்தறிவுக் கருத்துகளைப் பிரச்சாரம் செய்யட்டும்.
தமிழ்நாட்டிலே இன்றைய நிலை இதுதான்.இதன் பெயர்தான் மதச்சார்பின்மை. தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரையில் நாகூர் தர்க்கா இருக்கின்றது. முஸ்லிம் கள் மட்டுமல்ல, இந்துகளும், கிறித்துவர்களும் கூட அங்கே வழிபடுகிறார்கள். அதன் பின்னர் வேளாங்கண்ணி மாதா கோயிலுக்குச் செல்கின்றார்கள். அங் கும் வழிபடுகின்றார்கள். அதன்பின்னர் சிக்கல் என்னும் ஊரில் உள்ள முருகன்
கோயிலுக்கும் செல்லுகின்றார்கள்.நாகூர்,வேளாங்கண்ணி, சிக்கல்; முஸ்லிம் -கிறித்துவர்-இந்து - இந்த ஒற்றுமை உணர்வைத் தமிழ்நாட்டிலே நாங்கள் வளர்த்து இருக்கின்றோம்.
சமய ஒற்றுமை குறித்தும், சகோதரத்துவத்தை வளர்ப்பது குறித்தும் (திப்பு சுல் தானின் வாள்) வரலாற்றில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டு மென்ற கருத்தை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்குமென்று கரு துகின்றேன்.தொலைக்காட்சியில் (திப்பு சுல்தானின் வாள் என்னும் தலைப்பில் அந்த மாவீரனின் வரலாறு காண்பிக்கப்படுகின்றது.வெள்ளைக்காரனை எதிர்த் து சுதந்திரத்திற்காகப் போராடிய மன்னன் திப்பு சுல்தான், தனது சீரங்கப் பட்ட ணத்தில் பெருமாளுக்குக் கோயில் கட்டினான்.இந்துகளும் வழிபட்டனர். இஸ் லாமியர்களும் தொழுகை நடத்தினர்.இந்த அணுகுமுறையை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் இந்து கோயில்களிலேயிருந்து ராமர்சிலை உட்பட கருவறை யிலிருந்த சிலைகளை அமெரிக்காவில் நடைபெற்ற இந்தியத்திருவிழாவிற்கு காட்சிப் பொருளாக வைப்பதற்கு எடுத்துச் செல்ல இந்திய அரசு முயன்ற

வரலாற்றை மாற்ற முடியாது

அபாய அறிவிப்பு

இட்லரின் இனவெறி

இராமனின் அணுகுமுறை

ரதயாத்திரையின் விளைவுகள்

தந்தை பெரியார் பிறந்த மண்ணில்...
இந்தியாவின் பல பகுதிகளில் நடக்கும் மதக்கலவரங்கள் பெரும் சஞ்சலத்தை
ஏற்படுத்தும் வேளையில் பாலைவனத்தில் ஒரு சோலைவனம் போல் தமிழ் நாடு திகழ்வதை, இந்தியாவுக்கே வழிகாட்டியாக பெருமை பெற்றிருப்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 1947இல் நாட்டுப் பிரிவினை நடந்தபோது, இந்து-முஸ்லிம் கலவரம் ஏற்பட்டு நாட்டின் பல இடங்களில் படுகொலைகள்
நடந்தபோது, தமிழ்நாட்டில் இந்துகளையும், முஸ்லிம்களையும் சகோதர பாசம் அரவணைத்தது.
அந்த சகோதரபாசம் அன்றுமுதல் இன்றுவரை நீடிக்கின்றது. சமூகநீதியின் மிகப்பெரிய பாதுகாவலரான தந்தை பெரியார்தான் இந்தப் பெருமைக்குக் கார ணமானவர். இந்தப் புகழ் திராவிட இயக்கத்தைச் சேரும்.இத்தகைய பெருமைக் குக் காரணமானவர் பேரறிஞர் அண்ணா.தமிழ்நாட்டில் இன்று நிலைமை என் ன? என்னுடைய மாநிலத்தில் எவரும் எங்கும், எந்த நேரத்திலும் பாதுகாப்பா கச் செல்லலாம்.மதக்கலவரம் கிடையாது. அமைதிப்பூந்தோட்டமாகத் திகழ் கின்றது தமிழ்நாடு. ஆனால், மதவெறியென்னும் நச்சை விதைக்க பாரதிய ஜன தா கட்சியும், இந்து முன்னணியும் முயற்சிக்கின்றன. சதித்திட்டம் தீட்டு கின்றன.
தமிழ்நாடும், மதச்சார்பின்மையும்!
மதத்தின் பெயரால் கலவரம் நடத்தவோ, சிறுபான்மை மக்களை நசுக்கவோ
எங் கள் மண்ணில் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அத்தகைய பயங்கரம் வரா மல் தடுப்பதற்கு எங்கள் உயிர்களையும் தியாகம் செய்யத் தயாராக உள்ளவர் களின் இயக்கம் எங்கள் இயக்கம் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவிக் கின்றேன்.
இந்த நாட்டில் இந்துகள் தங்கள் ஆலயங்களுக்குச் சென்று பூஜை நடத்தட்டும, கிறிஸ்துவ சகோதரன் தேவாலயத்திற்குச் சென்று ஜெபிக்கட்டும், இஸ்லாமி ய சகோதரன் மசூதிக்குச் சென்று தொழுகை நடத்தட்டும். சீக்கியச் சகோதரன்
தன்னுடைய குருத்வாராவிலே வழிபடட்டும்.என்னுடைய பகுத்தறிவுத்தோ ழன் தனது பகுத்தறிவுக் கருத்துகளைப் பிரச்சாரம் செய்யட்டும்.
தமிழ்நாட்டிலே இன்றைய நிலை இதுதான்.இதன் பெயர்தான் மதச்சார்பின்மை. தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரையில் நாகூர் தர்க்கா இருக்கின்றது. முஸ்லிம் கள் மட்டுமல்ல, இந்துகளும், கிறித்துவர்களும் கூட அங்கே வழிபடுகிறார்கள். அதன் பின்னர் வேளாங்கண்ணி மாதா கோயிலுக்குச் செல்கின்றார்கள். அங் கும் வழிபடுகின்றார்கள். அதன்பின்னர் சிக்கல் என்னும் ஊரில் உள்ள முருகன்
கோயிலுக்கும் செல்லுகின்றார்கள்.நாகூர்,வேளாங்கண்ணி, சிக்கல்; முஸ்லிம் -கிறித்துவர்-இந்து - இந்த ஒற்றுமை உணர்வைத் தமிழ்நாட்டிலே நாங்கள் வளர்த்து இருக்கின்றோம்.
சீரங்கபட்டணம் கோயிலும்,மசூதியும்
சமய ஒற்றுமை குறித்தும், சகோதரத்துவத்தை வளர்ப்பது குறித்தும் (திப்பு சுல் தானின் வாள்) வரலாற்றில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டு மென்ற கருத்தை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்குமென்று கரு துகின்றேன்.தொலைக்காட்சியில் (திப்பு சுல்தானின் வாள் என்னும் தலைப்பில் அந்த மாவீரனின் வரலாறு காண்பிக்கப்படுகின்றது.வெள்ளைக்காரனை எதிர்த் து சுதந்திரத்திற்காகப் போராடிய மன்னன் திப்பு சுல்தான், தனது சீரங்கப் பட்ட ணத்தில் பெருமாளுக்குக் கோயில் கட்டினான்.இந்துகளும் வழிபட்டனர். இஸ் லாமியர்களும் தொழுகை நடத்தினர்.இந்த அணுகுமுறையை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் இந்து கோயில்களிலேயிருந்து ராமர்சிலை உட்பட கருவறை யிலிருந்த சிலைகளை அமெரிக்காவில் நடைபெற்ற இந்தியத்திருவிழாவிற்கு காட்சிப் பொருளாக வைப்பதற்கு எடுத்துச் செல்ல இந்திய அரசு முயன்ற
போது,அதைத் தடுப்பதற்காக கவன ஈர்ப்புத்தீர்மானம் கொண்டுவந்து விவாதத் தைத் தொடங்கி வைத்தவன் நான். எல்லா மதத்தினரின் உணர்வுகளையும் தி.மு.க. மதிக்கின்றது என்பதற்கு சாட்சியாகவே இதைக் குறிப்பிடுகின்றேன்
ஆந்திராவில் இரத்தக் களறி
இந்தியாவில் மதவெறியை வளர்க்க பாரதிய ஜன தா கட்சி செயல்படுவதைப் போலத்தான் இந்திரா காங்கிரசும் மதவெறியைத் தனது அரசியல் லாபத்திற்கு பயன்படுத்த முயன்றதற்கு ஏராளமான ஆதாரங் கள் உள்ளன. தொலைக் காட் சியில் இராமாயணத் தொடரில் இராமனாக நடித்த அருண்கோபில் என்ற நப ரை தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திய கட்சி இந்திரா காங்கிரஸ் ஆகும்.
காஷ்மீரத்தில் ஷேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியைத் தேர்தலில்
தோற்கடிக்க முடியாததால் இந்திரா காங்கிரஸ் அங்கே இந்துகள் என்கிற துருப்புச்சீட்டைப் பயன்படுத்தியதை யாரும் மறக்க முடியாது. ஆந்திரப் பிரசே தத்திலே ஆட்சி நடத்துவது இந்திரா காங்கிரஸ். இங்குதான் அதிக அளவில் மதக்கலவரங்களும் இரத்தக்களறியும் அண்மையில் நடந்துள்ளது.
அரசியல் ரீதியாக இன்னொரு கோணத்திலே நான் ஒரு கருத்தை முன்வைக்க விரும்புகிறேன்.கர்நாடகத்தில் காங்கிரஸ் முதல்வராக வீரேந்திர பாட்டீல் இருந்தார். ராஜீவ் காந்தியின் ஆதிக்கத்திற்கு கட்டுப்பட மறுத்து சுதந்திரமாக செயல்பட்டார்.திடீரென்று கர்நாடகத்திலே மதக்கலவரம் நடந்தது. வீரேந்திர பாட்டீல் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டார்.
அதேபோல் ஆந்திரபிரதேசத்திலும் காங்கிரஸ் முதலமைச்சராக இருந்த சென் னாரெட்டி ராஜீவ்காந்தியின் எதேச்சதிகாரத்திற்குக் கட்டுப்பட மறுத்தார். ஆந்தி ராவிலும் மதக்கலவரம் நடந்தது. சென்னா ரெட்டி தூக்கியெறியப்பட்டார். மராட்டியத்தில் முதலமைச்சர் சரத்பவார் தன் சொந்தக் காலில் நிற்கின்றார். ராஜீவ்காந்தியின் ஆதிக்கம் அவரிடம் எடுபடவில்லை.இப்பொழுது மராட்டியத் திலும் மதக்கலவரம் நடக்கின்றது. இந்த ஆட்டத்தில் சரத்பவார் ஜெயிப்பாரா
என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
எனவே, இங்கு நடைபெற்ற மதக் கலவரங்களுக்கெல்லாம் பின்னணியில் இந் திரா காங்கிரஸ் இருக்கக்கூடும் என்ற சந்தேகம் நியாயமாக ஏற்படுகிறது.

(இ.காங் கூச்சல்)
பாரதிய ஜனதா கட்சியைத் தாக்கும்போது மட்டும இந்திரா காங்கிரஸ்காரர்கள்
எவ்வளவு ரசனையோடு கேட்டீர்கள். உங்களைப் பற்றிய உண்மைகளைப் பேசும்பொழுது ஏன் கோபம் வருகின்றது?
இந்தியாவில் மதக்கலவரங்களைத் தடுக்கவும், மதச்சார்ப்பின்மையைப் பாது காக்கவும் எடுக்கப்படும் எல்லா நடவடிக்கைகளுக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் தனது பரிபூரண ஒத்துழைப்பைத் தரும் என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

சகோதர பாசமும், அன்பும், நாடெங்கும் பரவட்டும். மதவெறி என்னும் விஷ
விருட்சத்தை வேருடன் பிடுங்கி எறிய முற்போக்கு ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து போராட முன்வரவேண்டும் என்ற செய்தியை இந்த மன்றம் நாட்டுக்கு அறிவிக்கட்டும்.

தொடரும்....
No comments:
Post a Comment