Tuesday, May 14, 2013

பொதுமக்கள் நலனுக்காக, சுற்றுச் சூழலைக் காக்க ஸ்டெர்லைட்டை எதிர்த்துப் போராடுகிறேன்-தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வைகோ

தூத்துக்குடி நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலை வழக்கு, டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை இந்த அமர்வில் விசாரிக்கக் கூடாது. தமிழ்நாடு அரசு அமைத்துள்ள மேல்முறையீட்டு ஆணையத்தில்தான் ஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீடு செய்திருக்க வேண்டும் என்ற வாதத்தை வைகோ முன் வைத்தார்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் அந்தக் கருத்தை வலியுறுத்தியது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் வழக்கறிஞர் பசுமைத் தீர்ப்பா யத்தின் முதன்மை அமர்வில்தான் விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டார்.



ஆலை மூடப்பட்டிருப்பதால் ஒவ்வொரு நாளும் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டிருக் கிறது என்று கூறினார். அதனை மறுத்து வைகோ வாதிட்டதாவது,

“மார்ச் 23 ஆம் தேதி அதிகாலையில் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளி யேறிய நச்சுப் புகையால், தூத்துக்குடி மக்கள் பெருமளவில் துன்பப்பட்டனர். மூச்சு விட முடியாமல், மூச்சுத் திணறல் ஏற்பட்டு, கண் எரிச்சல், தொண்டை அடைப்பால் மிகுந்த அச்சத்துக்கு ஆளானார்கள். ஏராளமானவர்கள் மருத்து வமனைகளுக்குச் சென்றார்கள். புகழ்மிக்க மருத்துவர்கள் இதுகுறித்து கொடுத்த பிரமாண வாக்குமூலங்களை நான் தாக்கல் செய்து இருக்கிறேன்.

மரம், செடிகளில் உள்ள இலைகள் உதிர்ந்தன. பூக்கள் நிறம் மாறிக் கருகின. தூத்துக்குடி வாழ் மக்களின் உயிருக்கும், உடல் நலனுக்கும் பேராபத்து ஏற்படுத்தக்கூடிய Þடெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதுதான் அப்பகுதி வாழ் மக்களைப் பாதுகாக்கும் ஒரே வழி ஆகும்.

எனவே, ஸ்டெர்லைட் ஆலையினுடைய மனுவை இங்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்ய வேண்டும்.

இதற்காக கடந்த 17 ஆண்டுகளாக நான் போராடி வருகிறேன்” என்று வைகோ கூறியபோது, நீதியரசர் சுதந்திரக்குமார், நீங்கள் எதற்காக இதில் போராடு கிறீர் கள் என்று கேட்டார். பொதுமக்கள் நலனைப் பாதுகாக்கவும், சுற்றுச் சூழலைக் காக்கவும் நான் போராடுகிறேன் என வைகோ சொன்னார்.

இதன்பிறகு இந்த வழக்கு தீர்ப்பாயத்தில் விசாரிப்பதா? இல்லையா? என்பது குறித்தும், ஆலையின் மேல் முறையீடு ஏற்கத்தக்கதா? இல்லையா? என்பது குறித்தும் விசாரணை நடைபெறும் என்று கூறி, தீர்ப்பாயம் வழக்கை (16.05.2013) வியாழக்கிழமைக்கு ஒத்தி வைத்தது.

கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுடன் வழக்கறிஞர்கள் ஜி. தேவ தாஸ் , ஆனந்த செல்வம் ஆகியோரும் பங்கேற்றனர்.

‘தாயகம்’                                                                                   தலைமை நிலையம்
சென்னை - 8                                                                            மறுமலர்ச்சி தி.மு.க.
14.05.2013

No comments:

Post a Comment