Thursday, May 16, 2013

விடியலுக்குப் பெயர்தான் பிரபாகரன்! பகுதி 1

இந்த மண்ணில் இருக்கின்ற ஆயிரமாயிரம் வீர வாலிபர்கள் ஈழத்துக்குச் செல்வார்கள். அப்படி ஒரு நாள்வரும்.சிங்களக் கொடி யோரை வீழ்த்தி, தமிழ் ஈழச் சகோதர, சகோதரிகளுக்குத் தோள் கொடுத்து, களமாடு கின்ற கட்டத்துக்கு வருவார்கள். -வைகோ (27.11.2009)

தென்சென்னை மாவட்ட மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில், 27.11.2009 அன்று 
சென்னை -தியாகராய நகரில் மாபெரும்பொதுக்கூட்டம் நடைபெற்றது.மாவீரர் களைப் போற்றி நடைபெற்ற இக்கூட்டத்தில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், கழகப் பொருளாளர் டாக்டர் இரா.மாசிலாமணி, துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா மற்றும் தலை மைக் கழக நிர்வாகிகளும் முன்னணியினரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி யில் பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய உரையில் இருந்து....
இப்புவியில் கண்டங்கள் பலவற்றிலும், நாடுகள் பலவற்றிலும் ‘அந்தக் குரல்
ஒலிக்காதா?’ என்று கோடிக்கணக்கான தமிழ் நெஞ்சங்கள் எந்தக் குரல் கேட்க
ஏங்கிக் கிடக்கின்றனவோ, எந்த உரையை இன்று நம் செவிப்பறையில் பெற
மாட்டோமா என்று கோடானுகோடித் தமிழர்கள் தவிக்கின்றார்களோ, அந்தக்
குரலுக்கு உரிய தலைவன், எந்தப் பெயரை உச்சரித்தால் தன்மான உணர்ச்சி
உள்ள வாலிபக் கூட்டத்தின் நாடி நரம்புகளில் மின்சாரம் பாயுமோ, எந்தப் பெய ரை உச்சரிக்கின்ற வேளையிலேயே தமிழனுக்குத் தரணியிலே ஒரு அடையா ளம் கிடைத்தது என்ற பெருமிதம் ஏற்படுமோ, அந்த மாவீரர் திலகம் பிரபாகரன்
அவர்களுடைய பிரகடனத்தை நினைவுபடுத்துகின்ற நாள்தான் இந்த மாவீரர் நாள் ஆகும்

.

இந்த மேடையில் அமைக்கப்பட்ட சின்னத்திரையில், நம் இருதயத்தை வாள் கொண்டு பிளக்கின்ற காட்சிகளைக் கண்ணுற்றீர்கள். ஈழவிடுதலைப் போர்க் களக் காட்சிகளைக் கண்டீர்கள். வரலாற்றின் வைகறைக் காலத்தில் இருந்து,
சுதந்திர இறையாண்மை உள்ள தமிழ் ஈழ அரசு அமைத்து, கொடி உயர்த்தி, கொற்றம் அமைத்து வாழ்ந்தவர்கள் தமிழ் ஈழ மக்கள். இன்று,அவர்களது தாயக மண்ணிலேயே வதைக்கப்பட்ட கொடுமைகள், நமது சின்னஞ்சிறு பிஞ்சுகள்
சின்னாபின்னமாக்கப் பட்ட துயரம் நம் அருமைச் சகோதரிகள் நாசமாக்கப் பட்ட கொடூரம், மண்ணின் மானம் காப்பதற்காகத் தமிழ் ஈழ விடுதலைப் புலி கள் எதிரிகளின் ஆயிரம் மடங்கு ஆயுதபலத்தை எதிர்த்துக் களத்தில் நின்று போராடிய சமர்க்களக் காட்சிகள், இந்த உலகில் மானத்தோடு மனித குலத்தில் வாழ்வதற்கு ஆடை அணிகின்ற கலையைக் கற்றுத்தந்த தமிழனை, பட்டுத் துணி களை ரோமாபுரிக்கு அனுப்பி வைத்த பெருமைக்கு உரிய இனத்தில் பிறந்த தமிழனை, கண்களைக் கட்டி கைகளுக்கு விலங்கிட்டு, ஆடைகளைக் களைந்து அம்மணமாக்கி, இழுத்துக் கொண்டு வந்து காலால் எட்டி மிதித்து சிங்களக் கொடியவன் துப்பாக்கியால் சுட்டு, இரத்தம் பீறிட அந்த வீரச்சகோத ரர் கள் அநாதைப் பிணங்களாகச் சுருண்டு விழுகின்ற அந்தக் கொடூரத்தையும்,

யுத்த களத்திலே எதிரிகளின் கொடூரமான ஆயுதபலத்தால் வீழ்த்தப்பட்ட நமது
வீராங்கனைகளை நமது தங்கைகளை குலக்கொடிகளை ஆடைகளை அப்புறப்
படுத்தி, ஹிட்லரின் நாஜிகள்கூட செய்யாத, மிருகங்கள் செய்யத் துணியாத
வன்புணர்ச்சி நடத்திய அந்தக் கொடூரக்காட்சி உள்ளிட்ட காட்சிகளைக் காணச்
சகிக்கவில்லையே நம் நெஞ்சம்; இரத்தம் கொதிக்கிறதே. இருதயம் இரத்தக்
கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்கிறதே. ஆனால், இந்த இருள் நிரந்தரமாக நீடிக்காது. ஒரு வெளிச்சம் வந்துதான் தீரும். அந்த விடியலுக்குப் பெயர்தான் பிரபாகரன். அந்த விடியல் உதிக்கும்.

வா மகனே! எழுந்து வா மகனே! களமாட எழுந்து வா மகனே!

என்ற நம் உதிரத்து அணுக்களில் எல்லாம் வீரத்தைப் பாய்ச்சியதே அந்தப் பாடல் உள்ளிட்ட ஒளிப்படங்களைக் கண்டீர்கள். காவல்துறையினர் மூளை
யைக் கசக்கிக் கொள்ளவேண்டாம். ‘விழ விழ எழுவோம்’ என்று, ‘மறுமலர்ச் சிப் பாசறை’ பெயரில் வெளியாகி இருக்கின்ற ஒளிப்படக் குறுவட்டுகளை
நீங்களும் பெறுங்கள்.

உங்கள் இல்லங்களுக்கு எடுத்துச்சென்று,உங்கள் குடும்பத்தினரோடு பாருங் கள்; அவர்கள் கண்ணீர் விட்டுக் கதறாமல் இருக்க முடியாது.

‘ஈழத்தில் நடப்பது என்ன?’ என்று குரலை எழுப்பிய,அண்ணாமலை மன்றத்தில் பேசிய பேச்சுக்காக, இந்திய அரசு ஆயுதங்களைக் கொடுத்து,ரேடார்களைக் கொடுத்து, ஆயிரம் கோடி பணத்தைக் கொடுத்து, வல்லரசு நாடுகளில் ஆயுதங் களைப் பெற்று எங்கள் இனத்தை அழிப்பதற்குக் கொடுஞ்செயல் புரியுமானால், எங்கள் தமிழ் ஈழ உரிமையின் குரல்வளையை அறுக்குமானால், எங்கள் மக்க ளைக் கொன்று குவிக்குமானால், நீ அரசாங்கத்தின் சார்பில் ஆயுதம் கொடுத்து சிங்களவனுக்குத் துணையாக ஈழத் தமிழ் மக்களை அழிப்பாயானால், இது தொடருமேயானால் நிலைமைகள் மாறும்; காலம் மாறும்; இந்த மண்ணில்
இருக்கின்ற ஆயிரமாயிரம் வீர வாலிபர்கள் ஈழத்துக்குச் செல்வார்கள். அப்படி ஒரு நாள்வரும்.

சிங்களக் கொடியோரை வீழ்த்தி, தமிழ் ஈழச் சகோதர, சகோதரிகளுக்குத் தோள்
கொடுத்து, களமாடு கின்ற கட்டத்துக்கு வருவார்கள். அர்ஜெண்டைனாவில் பிறந்த சேகுவேரா, கியூபாவுக்குச் செல்ல உலகம் உறுதி அளித்தது என்றால், இந்தத் தாயக மண்ணில் பிறந்த தமிழர்கள் ஏன் போகக்கூடாது? என்று நான் அண்ணாமலை மன்றத்தில் கேட்டேன்.

இங்கே ஆயுதம் திரட்டி, ஆயுதப் பயிற்சி நடத்துவதாக நான் சொல்லவில்லை. பேசியதை மறுக்கின்ற வழக்கம் வைகோவுக்கு என்றைக்கும் இல்லை. விளை வுகளைப் பற்றி கவலைப்பட்டதும் இல்லை. பதவிக்காக, பிழைப்பு நடத்த அரசி யலுக்கு நான் வரவில்லை. அண்ணாவின் எண்ணங்களுக்காக,அவர்தம் கொள் கைக்கு என் வாழ்க்கையை ஒப்படைத்தவன் நான். நான் பிறந்த பொன்னாடு, புண்ணிய பூமி இந்தத்தமிழ்நாடு.கரிகாலன் வாழ்ந்த நாடு,இளங்கோவன் வாழ்ந் த நாடு, வள்ளுவரைத் தந்த நாடு, ராஜராஜனை, ராஜேந்திரனைத்தந்த நாடு, வீரர் கள் உலவிய நாடு. இந்த மண்ணில் பிறந்தேன். ஈழத்தில் தங்கள் தாயக மண்ணைக் காப்பதற்காக அவர்கள் நடத்துகின்ற உரிமைப் போருக்கு தோள் கொடுக்க நாங்கள் சித்தமாக இருக்கிறோம் என்று சொன்னேன்.

இங்கே ஆயுதப் போராட்டம் நடத்துவதாகவோ இங்கே ஆயுதம் ஏந்துவதாக வோ நான் பேசவில்லை. அங்கு நடக்கின்ற போருக்கு நீ ஆயுதம் கொடுத்துக் கொண்டு இருந்தால் நாங்கள் செல்வோம். அப்படி ஒரு வாய்ப்பு வருமானால் இந்த வைகோவே அதற்குப் போவான் என்று நான் பேசினேன். அதைத் திரும்ப வும் இங்கே பதிவுசெய்கிறேன். 

அன்று அதே மேடையில் என்னோடு உரையாற்றிய மரியாதைக்குரிய திருவா ளர் மு.கண்ணப்பன் அவர்கள்,ஆளுகிற கட்சி யில் அடைக்கலமாகிவிட்டதால், அவரை வழக்கில் இருந்து விடுவித்தீர்கள். அவர் பேசியது சரியென்று அன்றும் சொன்னேன். நீதிமன்ற வாயிலிலும் சொன்னேன். இன்றும் சொல்கிறேன். இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் எனில், இன்று இங்கே சில காட்சிகள் திரை யிடப்பட்டது அல்லவா, அதற்கான முழுப்பொறுப்பையும் வைகோ ஏற்றுக் கொள்கிறான். இந்த இயக்கத்தில் எந்தத் துன்பம் வந்தாலும் எனக்கு வரட்டும் என்று கருதுகிறவன் நான். எனவே, நான் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன். இந் தக் காட்சிகள், தமிழர்கள் இல்லங்களுக்கு எல்லாம் செல்ல வேண்டும்.

இன்றைக்குச் சரியாக 27 ஆண்டுகளுக்கு முன்னால், 1982 ஆம் ஆண்டு அண் ணன் மாவீரன் நெடுமாறன் குறிப்பிட்டாரே, நான்மாடக்கூடலில் தெற்குச்சீமை யின் தலை நகரத்தில். அலைகடல் தாண்டி மரண காயத்தோடு வந்துவிழுந்த சங்கர் என்கிற சத்தியராஜ், தமிழ் ஈழ விடுதலைப்போராளி, புலிப்படை வீரன். தாயைத் தேடாமல் தந்தையைத் தேடாமல் அந்த உயிர் சிறிதுசிறிதாக உடல் கூட்டில் இருந்து விலகிக்கொண்டு இருந்த நேரத்திலும் அந்த உதடுகள் உச்ச ரித்துக் கொண்டு இருந்த பெயர், ‘தம்பி... தம்பி... தமிழ் ஈழம்... தமிழ் ஈழம்.’ என்று அவன் ஆவி அடங்கியதே, அது பிரபாகரனின் இருதயத்தை ஆழமாகப் பாதித்த தால், சரியாக இன்றைக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னால் அடவிகளில்,
அரண்யங்களில், வல்லரசு நாட்டின் இலட்சக்கணக்கான படையை எதிர்த்துக்
கானகத்தில் பாசறையை அமைத்துக் கொண்டு போர்க்களம் நடத்திய அந்தக்
காலகட்டத்தில், 1989 ஆம் ஆண்டு இதே நாள் நவம்பர் 27 ஆம் தேதி நாளை,
‘மாவீரர் நாளாக’ பிரகடனம் செய்கிறேன் என்று அறிவித்தார் பிரபாகரன்.

அன்று அந்த உரையில் சொன்னார்:‘இதுவரை களத்தில் 1307 புலிகளை நாங்கள் இழந்து இருக்கிறோம்; இது 1989 ஆம் ஆண்டு பிரபாகரன் சொன்னது. கடந்த ஆண்டு, இதேநாள் எக்செல் அரங்கத்தில் இலண்டன் மாநகரில் தேம்ஸ் நதிக் கரையில் 60,000 பேர் திரண்டு இருந்த அந்தக் கடலனைய மக்கள் கூட்டத்தில் நான் உரையாற்றுகிற போது சொன்னேன் ‘இதுவரை விடுதலைப் புலிகள் அமைப்பில் 22,355 பேர் களத்தில் மடிந்து இருக்கிறார்கள். களமாடி வீழ்ந்து இருக்கிறார்கள். அவர்களுக்காகவே இந்தத் தீபங்களை ஏற்று கிறோம். அவர் களை நினைத்தே இந்தக் கார்த்திகைப் பூக்களைத் தூவுகிறோம்.அவர்கள் மடிய வில்லை. அவர்கள் மரணிக்கவில்லை. உடலால் சாய்ந்தார்கள். ஆனால், மர ணத்தை வென்று வாழ்கிறார்கள். எந்த இலட்சியத்துக்காகத் தங்கள் உயிர் களைத் தந்தார்களோ, இரத்தம் சிந்தினார்களோ, அந்த இலட்சியத்துக்காக அடுத் தடுத்து வருகின்ற களங்களுக்கு நாம் நம்மை அர்ப்பணிப்போம் என்று உறுதி எடுக்கின்ற நாள்தான் இந்த நாள் ஆகும்.வாழ்க்கையின் வசந்தங்கள் எதை யுமே நாடவில்லையே இந்த மாவீரர்கள். சுகம் தேடவில்லையே. பசி, தாகத்தை அவர்கள் ஒரு பொழுதும் பொருட்படுத்தவில்லையே, இப்படிப்பட்ட
வீரத்தை, தியாகத்தை, ஈகத்தை எவருமே ஆற்றியது இல்லையே?

அந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகின்ற நேரத்தில், எந்தக் காலத் தை யும் விட இந்த ஆண்டில் தமிழ் இனத்துக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமை என்ன என்பதை அண்ணன் நெடுமாறன் அவர்கள் இங்கே திட்டவட்டமாகச் சொல்லி விட்டார். நான் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டேன். தமிழர்களின் நெடிய வரலாற்றில் இதுபோன்ற அழிவும் இழிவும் என்றும் ஏற்பட்டது இல்லை என்று. அண்ணா சொன்னார், வடக்கே வந்த தைமூரின் படையோ, செங்கிஸ் கான் சைன்யமோ இங்கே எட்டிப் பார்த்தது இல்லை. சமுத்திரகுப்தரின் சேனை கள் இங்கே நடமாடியது இல்லை.இந்தத் தென்திசையை எவனும் திரும்பிப் பார்த்தது இல்லை’ என்று அன்றைக்குச் சொன்னார்.

இந்த இனத்தை இன்னொரு இனத்துக்காரன் இப்படிக்குற்றுயிரும் குலை உயி ருமாக வதைக்கின்ற அளவுக்கு, பல நாடுகளின் ஆயுதபலத்தைப் பெற்று அழித் த கொடுமை இதுவரை நடக்கவில்லை. நாம் வாழும் காலத்திலேதான் நடந்து விட்டது. இந்த இனத்தின் உரிமைக் குரலை அழிப்பதற்காகச் சிங்களவன் கொட் டமடிக்கிறான். என் தமிழ் மக்களே, கொஞ்சம் எண்ணுங்கள். தொலை வில் இருந் து உரை கேட்கின்ற நடுநிலையாளர்களே, உங்கள் இதயத்தில் ஈர உணர்ச்சியோடு எண்ணுங்கள்.

எத்தனைப் பிஞ்சுகள் கொல்லப்பட்டார்கள்? எத்தனைப்பெண்கள் நாசமாக்கப் பட்டார்கள்? கர்ப்பிணித் தாய்மாரின் வயிற்றைக் கிழித்து சிசுவை வெட்டி எடுத் துப்போட்டது உலகில் எங்காவது நடந்தது உண்டா? ஏ,  தமிழா! உன் தாய்க்கு, உன் தங்கைக்கு, உன் அக்காவுக்கு நடந்த கொடுமை உலகில் எந்த இனத்துக் காவது நடந்தது உண்டா? இந்தக் கொடுமை செய்த கொலைகாரப் பாவி, இத்த னை மக்களைக் கொன்றவன், இத்தனை பிணங்களின்மீது கோரநர்த்தனம் ஆடி யவன், தமிழர்களின் இரத்த ஆற்றிலே நீச்சலடித்த கொடியவன், அவனுக்கா திருவேங்கடத்தில் ஏழுமலையான் கோவில் வாசலில் பூரண கும்ப வரவேற்பு?

நான் பகுத்தறிவு இயக்கத்தைச் சேர்ந்தவன்தான்.ஆனால், இந்த நாட்டில் இருக் கிற ஆலயங்களின் மூலவிக்கிரகங்களுக்கு ஒருசிறு பழுதும் ஏற்படக்கூடாது
என்று நாடாளுமன்றத்தில் போராடியவன்.ஏழுமலையான் கோவில் வாசலில் அவனுக்கு ராஜ வரவேற்பு கொடுத்தார்களே, இந்திய அரசு கொடுத்ததே. நான் திருப்பதி கோவில் நிர்வாகத்தைக் குறை சொல்லவில்லை. திட்டமிட்டு அழைத்துக் கொண்டுவந்து, இந்த வரவேற்புக்கு ஏற்பாடு செய்தது, தமிழ் இனத் துக்கு மன்னிக்க முடியாத துரோகம் செய்தது மன்மோகன் சிங் அரசு. இந்திய அரசு.

அவன் கொழும்புக்குச் சென்று கொட்டமடிக்கிறான். 7 கோடி தமிழர்கள் இருக்கி றார்கள். அங்கே கொந்தளிப்பு நேர்ந்துவிட்டது, ஏன் பலர் தீக்குளித்தே செத்துப்
போனார்கள் என்றீர்களே, இன்று அவர்கள் உச்சந்தலையில் நின்று, நான் பூர ணகும்ப வரவேற்புப்பெற்று கொட்டமடித்துவிட்டு வந்து இருக்கிறேன் என் று கொக்கரிக்கிறான். திருப்பதி கோவில் வாசலில் வரவேற்பா? இத்தனைத் தமி ழர்களைக் கொன்றதற்கு? ஏ, இந்திய அரசே! நீ வெந்தபுண்ணிலே சூட்டுக் கோ லை நுழைத்து இருக்கிறாய், நாங்கள் உணர்ச்சியற்ற சோற்றால் அடித்த பிண் டங்கள் என்று நினைத்துக்கொண்டு இந்தக் கொடுமையைச் செய்து இருக்கிறாய்.

இதே அக்கிரமத்தை, இந்த நாட்டில், இந்திய பூபாகத்தில் இருக்கின்ற இன்னொ ரு மாநிலத்துக் காரனுக்கு நீ செய்யத் துணிவாயா? செய்கின்ற தைரியம் உண் டா? இதோ பக்கத்தில் இருக்கிறது கேரளா, அந்த மலையாளிகள் இனத்தைச் சேர்ந்த பல்லாயிரவர்களைக் கொன்று குவித்துவிட்டு, அப்படிப்பட்ட படு கொ லைகளைச் செய்த அக்கிரமக்காரனை நீ ஐயப்பன் கோவில் வாசலுக்கு அழைத் து வந்து விடுவாயா? அதற்குப்பிறகு நீ அரசாங்கத்தை நடத்திக் கொண்டு இருப் பாயா? வங்காளிகளின் சொந்தக்காரனைக் கொன்றுவிட்டு, நீ கல்கத்தா காளி கோவில் வாசலில் பட்டு பீதாம்பரத்தோடு வரவேற்பாயா?

ஏன் இந்திய நாட்டுப் பிரதமரைக் கேட்கிறேன். சீக்கிய இனத்துக்காரர்களைக் கொன்று குவித்துவிட்டு அப்படிப்பட்ட கொடுமைக்குள்ளானவனை நீ அமிர்த சரஸ் பொற்கோவில் வாசல்வரை கொண்டுவர முடியுமா? இங்கே சொரணை கெட்டவன் வாழ்கிறான் என்று நினைத்தாயா? நீ திருப்பதி கோவில் வாசலில்
கொண்டுவந்து அவனோடு எண்பது பேர் கொட்டமடித்துவிட்டுப் போனார்கள். ஜனாதிபதியும் இந்தியப் பிரதமரும் செல்கின்ற பிரதான வாயில் வழியாக
அழைத்துக்கொண்டுபோய் ஆறு மணிநேரம் காண்பீத்தீர்களே? அவன் என்ன ஏழுமலையான் பக்தனா? திருமாலின் பக்தனா? நான் கேட்கிறேன்.

எத்தனை கோவில்களை இடித்த கொடியவன் அவன்.எத்தனைக் கோவில் களில் வைக்கப்பட்டு இருந்த தேர்களுக்குத் தீ வைக்கச் சொன்னவன் அவன். தேர் செய்ய வந்த தச்சர்களை, துண்டு துண்டாக வெட்டிப்போட ஏவிவிட்ட சிங் களக் கொடியோரின் கூட்டத்தைச் சேர்ந்தவன் அவன். இப்படிப்பட்ட அக்கிர மத் தையும் நடத்திவிட்டு, போரில் பின்னடைவு, போரில் தோற்கடிக்கப்பட்டு விட் டார்கள், முள்ளி வாய்க்காலோடு முடிந்துவிட்டது என்று கொக்கரித்துக் கொண் டு இருக்கின்ற சிங்களக் கொடியவன் ராஜபக்சே, மனித உரிமைகளை அழித்துவிட்டான் என்று அகிலத்து நாடுகளில் சில மனசாட்சியோடு குரல் கொடுத்தன.ஐ.நா.மன்றத்தில் குரல் கொடுத்தன.

அதை எதிர்த்தது யார்? இந்திய அரசு. தமிழர்கள் கொல்லப்பட்டனர், பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்டனர், போராளிகள் மட்டுமல்ல, இலட்சக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இப்படி மனித உரிமைகள் நாசமாக்கப்பட்டதற்கு விசாரணை வேண்டும், விவாதிக்க வேண்டும் என்ற குரல் எழுந்தபோது, விவா திப்பதற்குக்கூட அனுமதி மறுப்பதற்கு முதல் ஆளாக நின்றுகுரல் கொடுத் தா யே! ஏ, இந்திய அரசே! நாங்கள் இங்கே ஏழுகோடி பேர் குடிமக்களாக இருக்கி றோம்.

நீ ஐக்கிய நாடுகள் மன்றத்தில், பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் சுவிட்சர் லாந்துக்கும் நியூசிலாந்துக்கும் எதிராக சிங்களவனுக்கு ஆதரவாக வாக்க ளித் தாய். ஐரோப்பிய மண்டலம் முடிவெடுத்தது சிங்களவர்கள் தயாரிக்கின்ற ஆயத்த ஆடைகளுக்கு வரிச்சலுகை கிடையாது; சிங்களவனுக்கு பொருளாதா ர முற்றுகை போடுவதற்கு திட்டமிட்டுவிட்டோம்.ஏனெனில், இலங்கையில் மனித உரிமைகள் அழிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு வந்ததற்காகவே, ராஜபக்சேவும் மன்மோகன் சிங்கும் திட்டமிட்டு, பத்துப் பேரை இங்கிருந்து அனுப்புவது என்றும், அவர்கள் முள்வேலி முகாம்களில் பார்வை யிடுவது என்றும், அந்த அறிக்கையை அகிலத்துக்குத் தருவது என்றும், ஸ்ரீலங்கா இந்தி ய அரசுகள் வகுத்த கூட்டுச் சதிக்கு உடந்தையாகப்போனவர்தான் தமிழ் நாட் டின் முதலமைச்சர் கருணாநிதி என்று நான் குற்றம் சாட்டுகிறேன். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் முள்வேலி முகாம்களைப் பார்வையிட்டு, உல கத் தரத்துக்கு ஏற்ப முகாம்களில் வசதிகள் உள்ளன; இங்கே எந்த அக்கி ரமும் நடக்கவில்லை என்று அறிக்கை தருகிறார்கள்.

இங்கிலாந்து நாட்டில், பிரித்தானியத்தில் நாங்கள் குடிமக்களாக இல்லை.நாங் கள் ஏழுகோடிபேர் இங்கேதான் இருக்கிறோம். ஆனால், இங்கிலாந்து அரசின் பிரதம அமைச்சர் கார்டன் பிரெளன் நேற்றைக்குச் சொல்லி விட்டார். ‘தமிழர் களைக் கொன்றுகுவித்த கொலைபாதகம் செய்த சிங்களவர்கள் கொட்ட மடிக் கும் கொழும்பில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது’ என்று நேற்றைக் கு கார்டன் பிரெளன் சொல்லி இருக்கிறாரே? விடுதலைப்புலிகளைத் தடை
செய்திருக்கிற இங்கிலாந்தின் பிரதமர் கொழும்பில் காமன்வெல்த் நடத்தக் கூடாது என்று சொல்கிறார்.

காமன்வெல்த் என்ற அமைப்பினுடைய நாயகனே இங்கிலாந்து நாடுதான். அத னுடைய ஆட்சிப் பீடத்துக்குள் இருந்த நாடுகள்தான் காமன்வெல்த் நாடுகள் ஆயின. அந்தக் காமன்வெல்த் நாடுகளின் அடுத்த இடத்தில் முக்கிய அங்கம் வகித்து வருவது இந்திய நாடு. இவ்வளவு அக்கிரமங்களையும் கொடுமை களை யும் செய்து, தமிழ் ஈழ மக்களின் உரிமைப்போராட்டத்தை அழிப்பதற்காக வே கடந்த ஆறாண்டுக் காலத்தில் ஆயுதங்களையும், ரேடார்களையும் அள்ளி
வழங்கி விடுதலைப் புலிகளுக்குப் போர்க்களத்தில்பின்னடைவு ஏற்பட்டதற்கு முழுக்கக் காரணம் இந்திய அரசுதான்.

தொடர்ச்சி அடுத்த பகுதியில் .....

No comments:

Post a Comment