Wednesday, December 18, 2013

‘சிவகாமியின் சபதம்’ வைகோவின் இலக்கியச் சொற்பொழிவு-பாகம் 4

‘சிவகாமியின் சபதம்’ #வைகோ வின் இலக்கியச் சொற்பொழிவு

பரஞ்சோதி

நான் இதைக் குறிப்பிடக் காரணம் உண்டு. பார்த்திபன் கனவும் - சிவகாமியின் சபதமும் - பொன்னியின் செல்வனும் எழுதிக் குவித்த கல்கி ஆசிரியர் அவர் கள், சிவகாமியின் சபதத்தில் நான்கு பாகங்கள் வைக்கிறார் . முதல் பாகம், ‘பரஞ் சோதி யாத்திரை’; இரண்டாவது பாகம்,‘காஞ்சி முற்றுகை’; மூன்றாம் பாகம், ‘பிட்சுவின் காதல்’; கடைசி நான்காவது பாகம்,‘சிதைந்த கனவு’.

இந்த நான்கு பாகங்களை முன்வைக்கின்ற இந்தக் காப்பியத்தில், தொடக்கக் காட்சி ,எடுத்த எடுப்பில் காஞ்சிபுரத்தை நோக்கி வருகின்ற ராஜபாட்டையில் பரஞ்சோதி வருகிறான். கீழச் சோழ நாட்டில், திருச்செங்காட்டாங்குடியில் மாமாத்தியார் என்கின்ற வீரம்மிக்க குலத்தில் பிறந்து, தமிழ் படிக்கவும், சிற்பக் கலை பயிலவும் பரஞ்சோதி வருகிறான்.1 8 வயது துடிப்புள்ள வாலிபன்.அவன் முரட்டுப்பிள்ளை. காஞ்சிபுரத்திற்குச் சென்று, அப்பர் அடிகள் - நாவுக்கரசர் மடத்திற்குச் சென்று, அவரிடத்திலே தமிழ் படிக்க வேண்டும் என்று பரஞ்சோதி யை அனுப்பி வைக்கிறார்கள்.

“நீந்திக் கடந்த நெறுப்பாறு” நூல் வெளியீடு -வைகோ உரை -பாகம் 2

“நீந்திக் கடந்த நெறுப்பாறு” நூல் வெளியீட்டு விழாவில் #மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ உரை ஆற்றினார். அவரது உரை பாகம் 1 யின் தொடர்ச்சி வருமாறு:

குழந்தைகள் படுகொலை

தமிழ் தின விழா நடக்கிறது.மாணவ, மாணவியருக்கு நாடகப்போட்டி நடக்கி றது. அதில் காத்தவராயன் நாடகத்தை ஒரு பள்ளி நடத்துகிறது. ஞானசெளந் தரி நாடகத்தை மற்றொரு பள்ளி நடத்துகிறது. ஞானசெளந்தரி நாடகத்துக்கு முதல் பரிசு. ஆனால் நடிப்பில், காத்தவராயனில் நடித்த ராமுவுக்கு முதல் பரிசு; ஞான செளந்தரியில் நடித்த பாத்திமா என்ற கிறித்துவக் குழந்தைக்கு
இரண்டாவது பரிசு. விழா முடிந்தது. மாணவ, மாணவியரும்,ஆசிரியர்களும், மகிழ்ச்சியோடு பேருந்தில் ஊருக்குத் திரும்பிக் கொண்டு இருக்கின்றார்கள்.
மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டு வருகிறார்கள். கிளைமோர் குண்டு வந்து தாக் குகிறது. பேருந்து துண்டுதுண்டாகச் சிதறுகிறது.அடுத்த கணத்தில், எல்லோ ரும் உடல் சிதறி இறந்து போகிறார்கள்.இது உண்மையாக நடந்த நிகழ்வு.

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 13

இரயில் பாதைக்காகக் கையகப்படுத்தும் நிலங்களுக்குச் சந்தை விலையை நிர்ணயித்திடுக! நாடாளுமன்றத்தில் #மதிமுக  அ.கணேசமூர்த்தி வலியுறுத் தல்

ஈரோடு - பழனி புதிய இரயில் பாதை திட்டம் -விளைநிலம் மற்றும் குடியிருப்பு களை இழக்கும் மக்களுக்கு இழப்பீட்டு தொகை தற்போதுள்ள சந்தை மதிப்பில் கொடுக்க வேண்டி, விதி எண்.377 -இன் கீழ் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச் சனை குறித்து நாடாளுமன்றத்தில் மதிமுக உறுப்பினர் அ.கணேசமூர்த்தி வலி யுறுத்தினார்.07.12.2010 அன்று நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை வரு மாறு:

“ஈரோடு - பழனி புதிய இரயில் பாதை அமைப்பதற்கு விவசாயிகளிடமிருந்து வீடு, விளை நிலங்களை கையகப்படுத்துவது குறித்து மத்திய அரசின் கவனத் திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

Tuesday, December 17, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 36

நாள்:-10.02.2009

சென்னை-அமைந்தகரை,புல்லா நிழற்சாலையில்,ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக் கத்தின் சார்பில் நடைபெற்ற மாபெரும்பொதுக்கூட்டத்தில், #வைகோ ஆற்றிய உரை 

ஈழத்தமிழர் படுகொலை...விடுதலைப் புலிகளை அழித்துவிட காங்கிரஸ் வகுத் த சதித்திட்டம்! சென்னை கண்டனப் பொதுக் கூட்டத்தில் வைகோ பகிரங்கக் குற்றச்சாட்டு!


இந்த மேடையின் வலதுபுறத்தில் உயிராயுதமாக, நம்முடைய நெஞ்சங்களில்
கல்வெட்டாகப் பதிக்கப்பட்டுவிட்ட முத்துக்குமாரின் திரு உருவப்படத்துக்கு,
மலர்களைத் தூவி வீரவணக்கம் செலுத்திவிட்டு, இந்த நிகழ் ச்சியைத்தொடங் கினோம்.

ஜனவரி 31 ஆம் தேதி முன்னிரவு தொடங்கி நள்ளிரவு வரையிலும், கொளத்தூ ரில் இருந்து மூலக்கொத்தளம் சுடுகாடு வரையிலும் சாலையின் இருமருங்கி லும், இலட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் பொங்கத் திரண்டு வந்தார்கள்.

இசைப்பிரியா போர்க்குற்றத்தின் சாட்சி -தீபச்செல்வன்

அண்மையில் பிரித்தானியாவில் உள்ள சேனல்-4 என்ற தொலைக்காட்சி, தமி ழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உத்தியோக பூர்வத்தொலைக்காட்சியான
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த இசைப் பிரியாவின் இறுதி நிமிடக் காட்சி ஒன்றை ஒளி பரப்பியது. மாபெரும் இன அழிப்புப் போர் ஒன்றின் முடிவில் அகப்பட்ட பெண் ஒருத்தி மீது நிகழ்த்தப்பட்ட மாபெரும் போர்க்குற்றங்களின் ஆதாரமாக அந்தக் காட்சி அமைந்துள்து. குறித் த காட்சி ஈழத்தை மாத்திர மின்றி உலகமெங்கும் வசிக்கும் தமிழர்களையும் மனித உரிமை ஆர்வலர்களையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது
சிங்கள அரசு நடத்திய மாபெரும் குற்றங்கள் நிரம்பிய இனப்படு கொலைப் போரின் ஆதாரமாகவும்,அது அமைந்திருந்தமை சிங்கள அரசையும் உலுப்பியி ருக்கின்றது.

ஒரு போரில் குழந்தைகளையும்,பெண்களையும் முதியவர் களையும் கொல் வது மரபல்ல.அவர்கள் மீது இரக்கம் காட்டி அவர்களை பாதுகாப்பான பிரதே சங்களுக்குச் செல்லுமாறு கோருவது பண்டைய கால போர் மரபு. ஆனால், சிங்கள அரசைப் பொறுத்தவரையில் குழந்தைகள் பெண்கள், முதியவர்கள் என்று யாவரையும் ஒரு இடத்தில் வருமாறு அழைத்துவிட்டு அந்த இடத்தில் குண்டுகளைப் போட்டு கொலை செய்வதே போர் மரபு.ஈழப் போர் தொடங்கிய காலம் தொட்டு குழந்தைகளும், பெண்களும் தொடர்ச்சியாக அழிக்கப் பட்டிருக் கிறார்கள். ஏனெனில் பெண்கள் ஒரு இனத்தை உருவாக்குகிறார்கள். குழந்தை கள் ஒரு இனத்தின் புதிய சந்ததி.அதன் காரணமாகவே ஈழத் தமிழ் இனத்தை அழிப்பதற்காக குழந்தைகளையும் பெண் களையும் சிங்கள அரச படைகள்
தேடித் தேடிக் கொலை செய்கின்றன.

அண்ணாவின் ..மதி ! பாகம் 2

மாணவர்களைப் பெருமளவில் தி.மு.கழகத்தில் இணைத்த பெருமை மதியழ கன் அவர்களையே சாரும். திராவிட மாணவர் முன்னேற்றக் கழகம் தமிழகத் தின் கல்லூரிகளில் எல்லாம் தொடங்கப்பட்டு செயல்படவும் - ஆட்சி மாற்றத் திற்கான கிளர்ச்சிகளில் அணிதிரண்டு போராடும் மதியழகனின் மகத்தான பணியே காரணமாய் அமைந்தது.இத்தகைய செயல்திறம் மிகுந்த மதியழகன் அவர்களை கழகத்தின் அடுத்தகட்ட தலைவராக்கிட அறிஞர் அண்ணா செய லில் இறங்கினார். 19.11.1955 அன்று சென்னை கோகலே மண்டபத்தில் திராவிட மாணவர் முன்னேற்றக்கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு எழுச்சியுடன்
நடைபெற்றது. அந்த மாநாட்டில் அறிஞர் அண்ணா அவர்கள் உரையாற்றும் போது, “நண்பர் மதியழகன் எனக்கு நிரம்ப தேவைப்படுகிறார்.மதியழகன் நல்ல வளர்ந்துவிட்ட நாற்று; இதனை எடுத்து வேறொர் இடத்தில் நட்டு நல்ல மணி
களாகப் பெருகி அதை அடைவதற்கு வகை செய்ய வேண்டும் என்று கருதுகி றேன்” என்ற தன் உள்ளக்கிடக்கையை அறிவித்தார்.

மதிமுக மாணவர் அணி நடத்தும் நிறைவுகட்ட மாநிலப் பேச்சுப்போட்டி

#மதிமுக மாணவர் அணி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்திய “நாடாளுமன்றத் தில் #வைகோ ” என்ற தலைப்பிலான பேச்சுப் போட்டியில் மாவட்ட, மண்டல அளவில் வென்றவர்களுக்கு மாநில அளவிலான நிறைவுகட்ட பேச்சுப்போட்டி நடைபெறும்.

நாள்: 22.12.2013 ஞாயிறு காலை 9.30 மணி

இடம்: அரிகாந்த அரங்கம், ஹோட்டல் அசோகா, எழும்பூர், சென்னை -8


பங்கு பெறுவோர்

1. தி.பாலமுருகன் D.F.T..,III -அரசு திரைப்படக் கல்லுரி,சென்னை

2. செ.சரவண சித்தார்த் B.E., III-புனித பீட்டர்ஸ் பல்கலைக் கழகம், சென்னை

3. த.இலக்கியா M.Phil-சென்னை கிறித்துவக் கல்லூரி,தாம்பரம்

Monday, December 16, 2013

‘சிவகாமியின் சபதம்’ வைகோவின் இலக்கியச் சொற்பொழிவு-பாகம் 3

‘சிவகாமியின் சபதம்’ வைகோவின் இலக்கியச் சொற்பொழிவு

ஏன் எழுதினேன்?

அந்தக் கல்கி அவர்கள் சிவகாமியின் சபதத்தை ஏன் படைத்தேன் என்று சொல் கிறார். அலைகள் துள்ளி விளையாடுகின்றன. மாமல்லபுரம் கடற்கரை மண லில் அமர்ந்து இருக்கிறார். அருகில், ரசிகமணி டி.கே.சி. அமர்ந்து இருக்கிறார். அந்த நேரத்தில் கல்கி அவர்கள், ‘விட்டகுறை வந்து தொட்டாச்சு’என்று கோபா லகிருஸ்ண பாரதியார் எழுதி இருக்கிற கவிதையை அழுத்தமாகச் சொன்னார். கல்கியின் மனத்திரையில் பல காட்சிகள் வெளிவருகிறன்றன. பல நிகழ்ச்சி கள் தெரிகின்றன. அவர் காதுகளில் சிற்பிகளின் ஓசை கேட்கிறது. கல்லிலே உளிபடுகிற காரணத்தால், அந்த உளி செதுக்குகின்ற சத்தம் கேட்கிறது. நடனக் கலை கண்ணுக்கு தெரிகிறது. ஆயிரம் ஆயிரம் படகுகளில் வீரர்கள் பவனி வரும் காட்சி தெரிகிறது’ என்று பழம் பெருமைக்கு உரிய தமிழ் மன்னர்கள் வாழ்ந்த நிகழ்ச்சிகள், மாமல்லபுரத்தில் வடிக்கப்பட்ட அந்தச் சிற்பங்கள், அவற் றை எல்லாம் பார்த்துவிட்டு, இவை எல்லாம் என் மனக்கண்ணில் தெரிகின் றன என்று வரிசையாக பாத்திரங்களைச் சொல்கிறார்.

கோவையில் வைகோ

கோவை மாநகர் 5வது பகுதி #மதிமுக செயலாளர் கோட்டை ஹக்கீம் மற்றும் புக் சாகுல் ஹமீது ஆகிய இருவீட்டார் இல்ல திருமண விழாவில் தலைவர் #வைகோ அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

ஷாகுல்அமீது , இல்லத் திருமணவிழா கடந்த வாரம் கோவையில் நடந்தது. இவ்விழாவில் வைகோ பங்கேற்பதாக இருந்தது. கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் மாவட்ட செயலாளர் ரத்தினசாமி மறைவையடுத்து, இறுதிச்சடங் கில் பங்கேற்க சென்றார். 

இந்நிலையில் கோவை வந்த வைகோ, போத்தனூரிலுள்ள ஷாகுல்அமீது இல் லத்துக்கு சென்று, மணமக்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

“நீந்திக் கடந்த நெறுப்பாறு” நூல் வெளியீடு -வைகோ உரை -பாகம் 1

வீர காவியங்களைப் படியுங்கள்: திட்டங்களை வகுத்து செய்து காட்டுங்கள்!
என்று 30.11.2013 அன்று சென்னையில் நடைபெற்ற “நீந்திக் கடந்த நெறுப்பாறு”
நூல் வெளியீட்டு விழாவில் #மதிமுக  பொதுச் செயலாளர் #வைகோ உரை ஆற்றினார்.அவரது உரை வருமாறு:

தாயகக் கனவினில் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளுக்கு வீர வணக் கம். எத்தகைய வீறு கொண்ட புரட்சிக் கதிர்கள் இந்த மண்ணின் இளம் தோழர் களிடம் இள நங்கைகளிடம், மாணவச் செல்வங்களிடம் ஊடுருவ வேண்டும் என்று நான் நெடு நாட்களாக ஏங்கிக் கிடந்தேனோ,அந்த ஏக்கம் நிராசையாகப் போய் விடாது; அது என் வாழ்நாளிலேயே,என் கண்முன்னாலேயே நான் காண் பேன் என்ற நம்பிக்கையை ஊட்டுகின்ற விதத்தில்,இங்கே எனக்குமுன்பு உரை ஆற்றிய தம்பி பிரபாகரனின் பேச்சும், கனல் தெறிக்கும் சவுக்கடிகளும், அதற்கு
நீங்கள் எழுப்பிய கையொலிகளும்,நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய மாண வர் உலகத்துக்கு என்னைக் கொண்டு போய்ச் சேர்க்கின்றது.

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 12

ஐ.நா. குழுவை அனுமதிக்காத இலங்கைக்கு உதவுவதா?

தமிழர் வாழ்விடங்களில் சிங்களக் குடியேற்றம்! இதற்குத்தானா இந்தியாவின்
நிதி உதவி? #மதிமுக அ.கணேசமூர்த்தி கண்டனம்

இடம் பெயர்ந்த இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானத் தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு நாடாளுமன்றத்தில் மதிமுக உறுப் பினர் அ.கணேசமூர்த்தி 25.8.2010 அன்று ஆற்றிய உரை...

சபாநாயகர் அவர்களே! அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு சில விஷயங் களைச் சுட்டிக் காட்ட விழைகிறேன். தங்களது பூர்வீக வாழ்விடங்களிலிருந்து விரட்டப்பட்டு, முட்கம்பி வேலி முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருந்த இலங் கைத் தமிழர்கள் தங்களது பழைய வாழ்விடங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டார் களா? என்பதை அறிய விரும்புகிறேன்.

Sunday, December 15, 2013

கேரள அட்டப்பாடி -5 ஏக்கருக்கு அதிகமாக இடம் வைத்திருந்தவர்கள் தான் வெளியேற்றப்படுகிறார்கள்

மறைந்த #மதிமுக தணிக்கைக்குழு உறுப்பினர் பூங்கொடி சாமிநாதனின் திரு வுருவப்படத்தை, ஈரோட்டில் இன்று (15.12.13 )நடைபெற்ற நிகழ்ச்சியில் திறந்து வைத்து #வைகோ பேசியதாவது:

ஈழத்தில் போர் முடியவில்லை. ஈழப் போராட்டம் புதிய பரிமானத்தை எட்டி யுள்ளது. என் கண் முன்பு ஈழத்தை பார்க்க வேண்டும் என்று எண்ணுகிறேன். உலகில் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய தலைவர்களில் பிரபாகரன் போல யாரும் எதிர்ப்புகளை சந்தித்தது இல்லை.இந்தியா, இங்கிலாந்து, அமெ ரிக்கா,ரஷ்யா,சீனா, இஸ்ரேல்,கியூபா ஆகிய பலமானநாடுகளின் ஆயுத உதவி யுடன் இலங்கை ராணுவம், விடுதலைப் புலிகளுடன் போரிட்டது. 

இலங்கையில் நடந்தது போர் குற்றம் அல்ல. திட்டமிட்ட இனப்படுகொலை என தொடக்கத்தில் இருந்தே சொல்லி வருகிறேன்.ஜெர்மனி, அயர்லாந்து நாடு களில் நடந்த தீர்ப்பாயங்களில் இலங்கையில் இனப்படுகொலை நடந்துள் ளது கூறப்பட்டுள்ளது. அடுத்த அமர்வில் இந்தியாவின் பங்களிப்பு என்ன என்பது குறித்த விவாதம் நடக்கும். இதில் நான் பங்கேற்று பேசுவேன்.

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 35

நாள்:-29.4.2009

ஈழத் தமிழர் பிரச்சனையில், இந்திய அரசின் துரோகங்களுக்கு, கருணா நிதிதான் கூட்டுப் பங்காளி!

இரண்டாம் உலகப் போரின்போது, யூத இனத்தையே பூண்டோடு அழிக்க நாஜி கள் திட்டமிட்டுப் படுகொலைகள் நடத்தியதுபோல், இலங்கையில் சிங்கள இனவாத அரசின் கொலைகார அதிபர் மகிந்த இராஜபக்ஷே, தமிழ் இனத்தையே கரு அறுக்க முனைந்து, இராணுவத்தின் மூலம் தமிழர்களைக் கொன்று குவிக் கிறான். இந்தத் தமிழர் இன அழிப்பு இராணுவத் தாக்குதலுக்கு,முழுக்க முழுக்க ஆயுத உதவி செய் தது இந்திய அரசுதான்.

1998ஆம் ஆண்டில், அன்றையப் பிரதமர் வாஜ்பாய அவர்கள், டெல்லியில் கூட் டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்,‘இலங்கையில் தமிழ்  இனக் கொலை நடத் தும் சிங்கள அரசுக்கு, இந்தியா எவ்விதமான உதவியும் செய்யாது என்றும், ஆயுதங்களைக் கொடுக்காது என்றும், ஆயுதங்களை இலங்கைக்கு விற்பனை செய்வது இல்லை என்றும் ஒரு மனதாக எடுக்கப்பட்ட முடிவை அறிவித்தார். 2004ஆம் ஆண்டுவரை இந்திய அரசு அதைக் கடைப்பிடித்தது.

நிரபராதி தமிழர்களை விடுதலை செய்யக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

இராஜிவ் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் வாக்குமூலம் வாங்கிய அதிகாரியான தியாகராஜன்.அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தை நான் சரியாக பதியவில்லை என்று தான் தவறு செய்துவிட்டேன் என்று சொல் கிறார்.

இவர்களுக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான K.T.தாமஸ் இந்த தீர்ப் பை தவறு என உணர்கிறேன் என்றுசொல்கிறார்.

இந்த வழக்கை தடா சட்டத்தின் படி விசாரித்த போலிஸ் அதிகாரிகளில் ஒருவ ரான ஜெபமணி மோகன்ராஜ் தவறுசெய்தவர்கள் பெரிய பெரிய பதவிகளில் இருப்பவர்கள் ஆனால் அநியாயமாக இவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்என்று தொடர்ந்து சொல்லி வருகிறார். 

ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளிவிளக்கு அணைந்தது!

சங்கொலி தலையங்கம்

“என் வாழ்நாள் முழுவதும் ஆப்பிரிக்க மக்களின் போராட்டத்திற்காகவே என் னை அர்ப்பணித்து இருக்கிறேன். வெள்ளை ஆதிக்கத்துக்கு எதிராக நான் போ ராடி இருக்கிறேன்.கருப்பர் ஆதிக்கத்துக்கு எதிராக நான் போராடியிருக்கிறேன்.
எல்லோரும் ஒற்றுமையாக வாழக்கூடிய,எல்லோருக்கும் சமமாக வாய்ப்பு கள் கிடைக்கக்கூடிய, ஜனநாயகப்பூர்வமான,சுதந்திரமான சமூகம் என்ற இலட் சியத் தையே நான் போற்றி வந்திருக்கிறேன். நான் அடைய நினைப்பது இந்த இலட்சியத்தைத்தான். நான் வாழ நினைப்பது இந்த இலட்சியத்துக் காகத்தான். தேவை என்றால் என் உயிரையும் துறக்க நினைப்பது இந்த இலட்சியத்துக் கா கத்தான்.”

தேசத் துரோகக் குற்றம் சுமத்தப்பட்டு தென்னாப்பிரிக்கா உச்ச நீதிமன்றத்தில்
நிறுத்தப்பட்டபோது, 1964 ஏப்ரல் 23 ஆம் நாள் மேற்கண்டவாறு முழங்கினார் நெல்சன் மண்டேலா.

கோவைக்கு மோனோ ரெயில் திட்டத்தை மறுபரிசீலனை செய்க

கோவைக்கு அறிவிக்கப்பட்ட மோனோ ரெயில் திட்டத்தை மறுபரிசீலனை செய்து மெட்ரோ ரெயில் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனறு தமிழக அரசுக்கு #மதிமுக சார்பாக  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ம.தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் வே.ஈஸ்வரன் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதா வது:-

கோவை மாநகரம் 21 லட்சம் மக்கள் தொகையுடன் தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமாக திகழ்கிறது. கோவைக்கு அடுத்த இடத்தில் உள்ள கொச்சியில் கூட மெட்ரோ ரெயில் திட்டத்தை கேரள அரசு அறிவித்துள்ளது.மேலும் பல நக ரங்களில் இந்த திட்டத்தை ஆரம்பிக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக் கப் பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கோவையிலும் மெட் ரோ ரெயில் திட்டதை தொடங்க வேண்டும் என்று 2 ஆண்டுகளாக அரசை வலி யுறுத்தி வருகிறோம்.

Saturday, December 14, 2013

‘சிவகாமியின் சபதம்’ வைகோவின் இலக்கியச் சொற்பொழிவு-பாகம் 2

‘சிவகாமியின் சபதம்’ #வைகோ வின் இலக்கியச் சொற்பொழிவு

கல்கி நாவல்களின் தொடர்ச்சி

அமரர் கல்கி அவர்கள், பொன்னியின் செல்வனை முடிக்கின்றபோது, பல கேள் விகளை எழுப்பிவிட்டு, இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் வருங்கால எழுத்தா ளர்கள் பல படைப்புகளைத் தருவார்கள் என்று சொன்னாரே, அந்த அடிப்படை யில்,மீண்டும் வந்தியத்தேவனையும் குந்தவைப்பிராட்டியையும் அருள் மொழி வர்மனையும், பார்த்திபேந்திரன் என்கிற பல்லவனையும் கொண்டுவந்து நிறுத் தி, ‘நந்திபுரத்து நாயகி’ என்கின்ற அற்புதமான நவீனத்தையும், ‘குலோத்துங் கன் சபதம்’ என்ற நாவலையும் எழுதிய விக்கிரமன் அவர்கள், இந்த விழாவுக் குத் தலைமை தாங்குகிறார்.

‘சேது பந்தனம்’ ‘ஈழவேந்தன் சங்கிலி’ போன்ற சரித்திர நாவல்கள் எழுதிய கவு தம நீலாம்பரனுக்கு இங்கே விருது வழங்கப்பட்டது. சரித்திர நாவல்களைப் பலரும் எழுதி இருக்கிறார்கள். ‘கயல்விழி’யும், ‘வேங்கையின் மைந்தனும்’ அகிலன் தந்தார். அற்புதமான நாவல்களைப் படைத்து இருக்கக்கூடிய மணி வண்ணன் என்ற பெயரில் ‘குறிஞ்சி மலர்’, ‘பொன்விலங்கு’ நாவல்களை எழு திய நா. பார்த்தசாரதி அவர்கள், ‘பாண்டிமாதேவி’ , மணிபல்லவம்’ என்ற பெயர் களில் அருமையான சரித்திர நாவல்களை எழுதினார்கள்.

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 11

இந்தியாவுடனான ஒப்பந்தங்களை இலங்கை அரசு மீறும்போது,கச்சத் தீவு ஒப் பந்தத்தை இந்தியா ஏன் முறித்துக் கொள்ளக்கூடாது? -#மதிமுக அ.கணேச மூர்த்தி 

தமிழக மீனவர்களைக் காப்பாற்ற நடவடிக்கை என்ன?

இந்தியாவுடன் செய்துகொண்ட அனைத்து ஒப்பந்தங்களையும் இலங்கை அரசு மீறியே வந்திருக்கிறது. அப்படியிருக்கும்போது, இந்திய அரசு கச்சத் தீவு ஒப் பந்தத்தை ஏன் முறித்துக் கொள்ளக் கூடாது என நாடாளுமன்ற மக்கள் அவை யில் 31.8.2010 அன்று கழக உறுப்பினர் அ.கணேசமூர்த்தி வினா எழுப்பினார். அதன் விவரம் வருமாறு:

விவசாயிகளை மீறிய சக்தி எதுவும் கிடையாது -வைகோ

விவசாயிகளை மீறிய சக்தி எதுவும் கிடையாது; கரும்பு விவசாயிகளின் அறப் போர் வெல்லும்! என்று சென்னை மையத் தொடர்வண்டி நிலையத்தில் 09.12. 2013 அன்று டெல்லி செல்லும் விவசாயிகளை வழி அனுப்பி #மதிமுக  பொதுச் செயலாளர் #வைகோ வாழ்த்துரை வழங்கினார். அவரது உரை வருமாறு:

தேனாகத் தித்திக்கின்ற கரும்பை, வியர்வை கொட்டி விளை விக்கின்ற விவ சாயிகளே, இரும்பினும் உறுதியாகப் போராடினால்தான், உங்கள் கவலையும்,
கண்ணீரும் துடைக்கப்படும். எந்த வொரு போராட்டமும், கடைப்பிடிக்கின்ற ஒழுங்கு, நிலை நாட்டப்படுகின்ற உறுதியினால் தான் வெற்றியைத் தேடித் தரும்.விவசாயிகளை மீறிய சக்தி,இந்தியாவில் வேறு எதுவும் கிடையாது.

ஒரு காலகட்டத்தில் விவசாயிகள் பிரளயமாகப் புறப்பட்டபோது,அரசுகள் நடுங்கின; அதன்பின்னர் அடக்குமுறையை ஏவினர்;விவசாயிகளின் கை கால் களை முறித்து, மண்டையை உடைத்து,அவர்கள் மீதே பொய்வழக்கு களைப் போட்டு நசுக்கியதாலும்,அரசியல் கட்சிகள் சுயநலத் திற்காக விவசாயிகளின்
போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டதாலும், விவசாயிகளின் சக்தி சிதறி யது. இனி நாம் போராடிப் பயன் இல்லை என்று நொறுங்கிக் கிடக்கிறார்கள். வாழ வழி இன்றித் தவிக்கிறார்கள்.

வாழும் கலை , தலைவர் பண்டிட் ரவிசங்கருடன் வைகோ சந்திப்பு

வாழும் கலை அமைப்பின் தலைவர் பண்டிட் ரவிசங்கர் குருஜியுடன்

#வைகோ சந்திப்பு

வாழும் கலை அமைப்பு உலகில் 180 நாடுகளில் இருக்கிறது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இந்த அமைப்பு நதிநீர் ஆதாரங்களை வளப்படுத் துதல்,நோயுற்றுவர்களுக்கு சிகிச்சை தருதல்,உடல் நலம் காக்க மூச்சு பயிற்சி கொடுத்தல், பழங்குடி மாணவர்களுக்கு இலவச பள்ளிகள் நடத்துதல் போன்ற மனிதநேய சேவை செய்து வருகிறது.

Friday, December 13, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 35

இந்தியா விடுதலைப் பெற்ற பிறகு நடைபெற்ற பெரும் ஊழல் போபர்ஸ்பீரங்கி பேர ஊழல்; இப்பொழுது 2 ஜி அலைக்கற்றை ஊழலுக்கு நிகராக எதுவுமே நிற்க முடியாது. அது வேறு விவகாரம்; ஆனால், ராஜீவ்காந்தி பிரதமர் பதவி ஏற்ற காலகட்டத்தில்,போபர்ஸ் பீரங்கிகளை சுவீடன் நாட்டிலிருந்து வாங்கியதில் நடைபெற்ற முறைகேடுகள், கைமாறிய கோடிகள்,அதற்கு முன்பு இந்தியா வில் இதுபோன்ற ‘ஊழல் வரலாறு’ எதுவும் இல்லை.

போபர்ஸ் நிறுவனம் இந்தியாவின் அரசுத்தலைவர் குடும்பத்திற்கு 64 கோடி லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரை,சுவீடனில் விசாரித்தவர், அந்நாட்டின் காவல்துறை தலைமை இயக்குநர் ஸ்டென் லின்ட்ஸ்ட்ராம்; இவர்தான் போ பர்ஸ் நிறுவனம் லஞ்சம் கொடுத்து பீரங்கிகளை இந்தியாவுக்கு வழங்க ஒப்பந் தம் பெற்றது என்று கண்டுபிடித்தார்.அவர் சேகரித்த தகவல்கள் ஆவணங்கள் ஊழல் பணம் கைமாறி வெளிநாட்டு வங்கியில் (சுவீஸ்) பதுக்கப் பட்டு இருந் தது, இடைத்தரகர்கள் யார்? பிரதமர் ராஜீவ் குடும்பம் இதில் எப்படி பயன் பெற் றது?போன்ற அனைத்து ரகசிய தகவல்களையும் அப்போது 1987 ஆம் ஆண்டில் ‘இந்து’ நாளேட்டின் செய்தியாளர் சித்ரா சுப்ரமணியனிடம் வழங்கினார். இவற் றைக் கொண்டு ‘இந்து’ ஏடு போபர்ஸ் பீரங்கி பேர ஊழலை இந்தியாவில் அம்ப லப்படுத்தியது. அதற்கு முன்பே சுவீடன் வானொலி அம்பலப்படுத்திவிட்டது.


ஓரினச் சேர்க்கை சட்டப்படி குற்றம்-வரவேற்கிறேன் வைகோ அறிக்கை

ஓரினச் சேர்க்கை சட்டப்படி குற்றம்:

பண்பாட்டை கலாச்சாரத்தை பாதுகாக்கும் அரணாக உச்ச நீதிமன்றம் தந்த தீர்ப்பை வரவேற்கிறேன் #வைகோ அறிக்கை

டெல்லி உயர்நீதிமன்றம் ஓரினச் சேர்க்கை எனும் அருவருக்கத் தக்க பண் பாட்டு விரோதச் செயலை அங்கீகரித்தும், இந்திய தண்டனைச் சட்டத்தின் 377 ஆவது பிரிவு செல்லுபடியாகாது என்றும் வழங்கிய தீர்ப்பை இரத்து செய்து, டிசம்பர் 11 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளான நீதியரசர் சிங்வி அவர் களும், நீதியரசர் முகோபாத்தியாய அவர்களும் தந்த தீர்ப்பு, வரலாற்றுச் சிறப்பு மிக்க மகத்தான தீர்ப்பாகும்.

மனித குலத்தின் மாண்பைக் காக்கவும், இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட புரா தன நாகரிகம் தழைத்த மாநிலங்களிலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த பண்பாட்டையும் நாகரிகத்தையும் கருத்தில் கொண் டு, மேலை நாட்டு கலாச்சாரச் சீரழிவுகள் நமது மக்களின் எதிர்கால வாழ்வை நாசமாக்கும் அபாயத்தை ஆராய்ந்தும் இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள்.

Thursday, December 12, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 34

நாள்:-27.4.2009

ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுங்கள்! ஒபாமாவுக்கு #வைகோ வேண்டு கோள்

அமெரிக்க குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமா அவர்களுக்கு ம.தி.மு.க. பொதுச்
செயலாளர் வைகோ அவர்கள், இன்று (17.5.2009) எழுதி உள்ள மின் அஞ்சல்:

அமெரிக்கக் குடியரசுத் தலைவர், மாண்புமிகு பாரக் ஒபாமா அவர்களுக்கு

வணக்கம்.

இந்தியாவிலும், உலகம் முழுமையும் வாழ் கின்ற பத்து கோடி தமிழர்கள் சார் பிலும், இலங்கையின் சிங்கள இனவெறி அரசின் தலைவர் மகிந்த ராஜபக்சே இலங்கைத்தீவில் வாழ் கின்ற தமிழர்களை இனப்படுகொலை செய்து வருவ தை, இரத்தம் கசியும் இதயத்தோடு தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருவது டன், இலங்கையில் வாழும் தமிழர்களைப் பாதுகாக்கக்கோரி இந்த விண்ணப் பத்தைத் தங்களுக்குச் சமர்ப்பிக்கின்றோம்.

அருளானந்தா கல்லூரி பண்பாட்டுக் கலாச்சார விழாவில் வைகோ

அருளானந்தா கல்லூரி பண்பாட்டுக் கலாச்சார விழாவில் #வைகோ

மதுரை அருளானந்தா கல்லூரியில் நடைபெற்ற துறை சார்பான பண்பாட்டுக் கலாச்சார நிகழ்வில் மதிமுக  பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அந்நிகழ்வில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு மிக அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.


மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 10

இரயில் தண்டவாள நாசவேலைகள் பற்றிய உண்மைகளை மக்கள் அறிந்திட
வெளிப்படையான விசாரணை தேவை!

நாடாளுமன்றத்தில் இரயில்வே துணை நிதி நிலை அறிக்கை மீதான விவாதத் தில் கலந்துகொண்டு #மதிமுக உறுப்பினர்அ.கணேசமூர்த்தி அவர்கள் (ஈரோடு
தொகுதி)19.8.2010 அன்று ஆற்றிய உரை:

தலைவர் அவர்களே, இரயில்வே துணை நிதி நிலை அறிக்கை மீதான விவா தத்தில் கலந்து கொள்ள தந்த வாய்ப்பிற்கு நன்றி.

இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட பல அறிவிப்புகள் இது வரை நடைமுறைக்கு வராமலே அறிவிப்பாகவே உள்ளன.

ஆன்றோர் சான்றோர் போற்றும் தலைவர் வைகோ

ஆன்றோர் சான்றோர் போற்றும் தலைவர் #வைகோ என்று விருதுநகர் #மதிமுக மாநாட்டில் கவிஞர் தமிழ்வென்றி (எ) ராஜா முகமது புகழாரம் சூட்டி னார். அவரது உரை வருமாறு

எந்த மொழிப்போர் இந்த மண்ணில் என்னை தமிழ் வென்றி யாக ஆக்கியதோ, அரைக்கால் டவுசர் பருவத்தில், எந்த மொழிப் போர் ஏற்றி வைத்த கனல் என்
தலைவன் வைகோவைப் பார்த்து அந்த முதல் நொடியிலேயே காந்தம் இரும் பை ஈர்ப்பதைப்போல, அன்றுதொட்டு இன்று வரை அவரது தம்பி என்கிற தகுதி யோடு நிற்கின்ற அந்த வாழ்க்கையைக் கொண்டிருக்கிற தகுதியைக் கொண்டி ருக்கிற காரணத்தினாலே,மொழிப்போர் தியாகிகளின் படத்தைத் திறந்து வைக் கின்ற ஒப்பற்ற வாய்ப்பை வழங்கியிருக்கிற தலைவருக்கு என்னுடைய நன்றி யைத் தெரிவித்தனாக என்னுடைய உரையைத் தொடங்குகின்றேன்.

அண்ணாவின் ..மதி ! பாகம் 1

வட்ட வடிவமான பரந்தமுகம்; அகலமான நெற்றி; காங்கிரசு கட்சியினரால் தாக்கப்பட்ட வெட்டுக் காயத்தின் தழும்பு; அன்பினை விளக்கும் அழகுமிகு விழி கள்; அரும்பு மீசை; கனிவு பேசும் இதழ்கள்; குள்ளமான உருவம்; பருமனான உடல்; காலர் இல்லாமல் வட்ட வடிவ கழுத்துப்பட்டியுடன் கூடிய சில்க் ஜிப்பா;
அதன்மேல் தோளின் ஒரு பக்கத்தில் கம்பீரமாகத் தவழும் கருப்புச்சால்வை, இத்தனையும் இணைந்த எழில்மிகு உருவத்திற்கு உரியவர் தான் கொங்குச் சீமை தந்த திராவிடர் இயக்கக் கொள்கை வீரர் கே.ஏ.மதியழகன்.

“குறுகியதோர் உருவம்; எனிற் பரந்த உள்ளம்!
குறள்போலும் எனக்கூறின் மிகையாகாது!
அறிவினிலே வளங்கொண்டோன்; அன்பில்வளர்ந்து
அடந்தடந்து நம் உள்ளில் இடம் பிடித்தோன்!
இடக்கையில் புகைமணக்கும் வெண்சுருட்டில்
எரிதீயும் சிந்தனையில் பகைசுருங்கும்!
நடக்கையில் பின்னின்று பார்த்தால் ஆகா!
நம் வீட்டுப் பிள்ளை நடைபோலிருக்கும்
நிதியென்னில் குவையென்னில் குறைவே - அண்ணா
நெஞ்சில் மதியே! நிறைவான தம்பி”

என்ற கவியரசர் கண்ணதாசனின் கவிதை வரிகள் மதியழகனின் தோற்றப் பொலிவை எந்நாளும் பேசிக் கொண்டிருக்கும்.

Wednesday, December 11, 2013

‘சிவகாமியின் சபதம்’ வைகோவின் இலக்கியச் சொற்பொழிவு-பாகம் 1

சிவகாமியின் சபதம்’#வைகோ வின் இலக்கியச் சொற்பொழிவு

அனைவருக்கும் வணக்கம். “விதியின் எழுத்தைக் கிழித்தாச்சு, விட்டகுறை வந்து தொட்டாச்சு” என்ற சொற்களால் தூண்டப்பட்டு இந்த சிவகாமியின் சப தத்தை எழுதினேன்’ என்று கூறிய கல்கி ஆசிரியர் அவர்களுக்குப் புகழ் விழா நடத்துகிறோம்; உரையாற்ற வாருங்கள்’ என்று கலைமாமணி விக்ரமன் அவர் கள் அழைத்தவுடன், கிடைத்தற்கு அரிய வாய்ப்பாகக் கருதி இசைவு அளித் தேன். இத்தகைய விழாவில் என்னை உரையாற்றுகின்ற தகுதிக்கு உடையவ னாக, உங்கள் முன்னால் நிறுத்தி இருக்கின்ற தமிழ் எழுத்தாளர்கள் சங்கத் திற்கு, அதன் பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவிப்பது தலையாய கடமை ஆகும்.


நான் பெற்ற பெரும்பேறு


இலக்கிய உலகில் கல்கி அவர்களின் பெருமைகளை எடுத்துசொல்ல, தஞ்சை யில் ஒரு வாய்ப்பு கிடைத்தது. புகழ்மிக்க பூண்டி வாண்டையார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தஞ்சை விழாவில், ‘பொன்னியின் செல்வன்’ பற்றி உரையாற்றுகின்ற பெரும்பேறு பெற்றேன். இன்று தலைநகர் சென்னையில், ‘சிவகாமியின் சபதம்’ குறித்து உரையாற்றுக எனப் பணித்து இருக்கிறீர்கள்.

நாடு நலம் பெற, வாழ்வு வளம் பெற அயராது பாடுபடும் தலைவர் வைகோ!

நாடு நலம் பெற, வாழ்வு வளம் பெற அயராது பாடுபடும் தலைவர் #வைகோ வோடு நாமும் பாடுபடுவோம் என்று விருதுநகர் மாநாட்டில் ஆர்.ஞானதாஸ்
உரை ஆற்றினார். அவரது உரை வருமாறு:

66ஆண்டுகால இந்தியநாடாளுமன்ற வரலாற்றில் நாட்டின் நதிகளை இணைத் து, நாட்டை செழிப்பாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நதிநீர் இணைப்பு என் ப தை தனிநபர் மசோதாவாக முதன் முதலாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய் து சரித்திரம் படைத்து, தமிழர்க்கும், தமிழ் நாட்டிற்கும் பெருமை சேர்த்திட்ட மக்கள் தலைவர் வைகோ உள்ளிட்ட அனைவருக்கும் வணக்கம்.

செய்தித்தாளிலே ஒரு கவிதைப் படித்தேன். அது அனைவரையும் சிந்திக்கத் தூண்டுகிறது.

முற்றங்களும்... முடிவடையா யுத்தங்களும்!

“சாகப் பயந்தவன் தரித்திரன் ஆகிறான்.சாகப் பிறந்தவன் சரித்திரம் ஆகிறான்!”
-வேலுப்பிள்ளை பிரபாகரன்

“இந்த சமூகத்தின் கட்டமைப்பே வீர வழிபாட்டில்தான் அமைந்து கிடக்கிறது” என்றான் இங்கிலாந்து நாட்டின் தாமஸ் கார்லைல். ஆம்! நாட்டினுக்காய் உயி ரை ஈந்தோ ரின் “நடுகல்” வழிபாட்டிலும் - கொற்றம் அமைத்துக் கோலோச்சிய நம் மூதாதை மன்னர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் -முன்னின்று போரா டிகளச் சாவினுக்கும் - கொடுந்தண்டனைக்கும் தன்னுயிர் ஈந்த மாமன்னர்க ளின் வீர வழி பாட்டிலும் தாய்த் தமிழகம் பன்னூறு ஆண்டுக் காலமாய் பற்றி வருகிற வீர வரலாறாகும்.

போரில் வீரம் காட்டி இறந்து நடுகல்லாய் நிற்கும் உண்மை வீரர்களே, தமிழர் களின் தெய்வங்கள் என்று புற நானூறு பேசும்!. அந்த வகையில் - அந்த வழி யில் சாதனைச் சரித்திரம் பேசும் சரித்திர மனிதர்களின் சதுக்கங்களே நினைவு முற்றங்களாக முகிழ்த்து நிற்கின்றன நாடுகள் தோறும். அந்த சதுக்கங்கள் பேசும் சரித்திரம் ஒன்றல்ல - இரண்டல்ல -ஓராயிரம். அந்த ஓராயிரத்தில் ஒரு
சிலவற்றை நினைத்துப் போற்ற -நினைவில் நிறுத்தத் தான் முற்றங்களும்! முடிவடையாயுத்தங்களும்!!.

ஆதார் அட்டையின்றி மாணவர்கள் அவதி -மதிமுக புகார்

ஆதார் அட்டை எண் கேட்டு ஆசிரியர்கள் நெருக்கடி தருவதால் மாணவர்கள் அவதிப்படுவதாக #மதிமுக புகார் 

திருநெல்வேலி மாவட்டம் சங்கர்நகர் பேரூர் மதிமுக கிளைச் செயலர் எம். முருகன் விடுத்துள்ள அறிக்கை:

சங்கர்நகர் பேரூராட்சிக்குள் பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பங் களில் பெரும் பகுதியினர் ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்காமல் உள்ளனர். பலர் வெளியூர்களில் பணிபுரிவதால் குடும்பத் தலைவர்களே புகைப்படம் எடுக்காமல் உள்ளனர். 

ஈழத்தில், இனப்படுகொலை தான் ஜெர்மனி மக்கள் தீர்ப்பாயம்

ஈழத்தில் நடந்தது இனப் படுகொலைதான் ஜெர்மனி மக்கள் தீர்ப்பாயம் அறி விப்பு இனக்கொலை குற்றவாளிகள் தப்பவே முடியாது

#வைகோ அறிக்கை

இரவுக்குப் பின் வைகறை மலர்வதுபோல், துன்ப இருளில் தவித்த ஈழத் தமிழர் களுக்கு விடியலின் வெளிச்சம் தோன்றுகிறது.

இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொடூரமாகப் படு கொலை செய்த சிங்கள பேரினவாத அரசு நடத்தியது ‘இனப்படுகொலைதான் (Genocide)’ என்று ஜெர்மன் நாட்டில் ப்ரமன் நகரில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் 2013 டிசம்பர் 10 ஆம் தேதி அன்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

Tuesday, December 10, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 33

நாள்:-14.05.2009

இலங்கை இராணுவத்தின் கொடூரத் தாக்குதலில் இருந்து ஈழத்தமிழர் களைக் காப்பாற்றுங்கள்!

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு #வைகோ வேண்டு கோள்

இலங்கையில் சாவின் விளிம்பில் உள்ள மூன்று இலட்சம் தமிழர்களையும்
முழுமையாக அழித்து ஒழிப்பதற்கு, முப்படைகளையும் தீவிரமாகப் பயன் படுத்தி வரும் இலங்கை அரசின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தக் கோரி, அமெரிக்கக் குடியரசுத்தலைவர் பாரக் ஒபாமா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன், வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபேன்ட் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்-கி-மூன் ஆகியோருக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், இன்று (14.05.2009) மின் அஞ்சல் மற்றும் தொலை நகல் (ஃபேக்ஸ்) மூலமாக அவசர வேண்டுகோள் விடுத்து உள்ளார். அதன் விவரம் வருமாறு:

வைகோவின் கரத்தை வலுப்படுத்துவோம்!

தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப் பட்டோர் #வைகோ வின் கரத்தை வலுப்படுத்து வோம் என்று விருதுநகர் #மதிமுக  மாநாட்டில் வாகை முத்தழகன் உரை
ஆற்றினார். அவரது உரை வருமாறு

மறுமலர்ச்சி திமுகவில் எங்களுக்கு கிடைத்திருக்கிற ஆசைத் தம்பி என் ஆரு யிர் அண்ணன் இமயம் ஜெபராஜ் அவர்களே,மறுமலர்ச்சி திமுக பொதுச் செய லாளர் இனமானத் தலைவர் அண்ணன் வைகோ அவர்களே,கழகத்தோழர்களே வணக்கம்.

நாட்டிலே சிலருக்கு, அதிகாரத்திலே இருப்பவருக்கும் பிரதமர் பைத்தியம்.அறி வாலயத்திலே இருப்பவருக்கு அதிகாரத்திலே பங்கு கேட்டு ஒரு பைத்தியம்.
கோயம்பேட்டிலே ஒரு குடிகாரப்பைத்தியம். நமக்கோ சமூக நீதியிலே ஏற்பட் டிருக்கிற தாக்கம்.

புராதன இந்திய வரை படத்தில் திராவிட தேசம்

புராதன இந்திய வரை படத்தில் திராவிட தேசம்

இந்தியத் துணைக்கண்டத்தில் திராவிட இயக்கம் நூற்றாண்டு விழா கொண்டா டியிருப்பது நமக்கெல்லாம் பெருமிதம் அளிக்கிறது. இந்த நிலையிலும் கூட, திராவிடம் எங்கே இருக்கிறது? என்கிற கேள்வியை எழுப்பி, ஆரிய அடிவருடி களின் நூல்கள் பல வந்துள்ளன.

தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் வெல்லும் சொல்வலர் வைகோ அவர்களும் போற்றி வருகின்ற திராவிடத்தை அறிவுப் பூர்வமாக மறுப்பதற்கு இயலாது என்பதனை புவியியல் அறிஞர்கள் பலரும் தெளிவுபடுத்தி உள்ளனர்.

எத்தனையோ பிரளயங்கள் தோன்றியும் அழிக்க முடியாத திருவிடம், திராவிட மாக உருப்பெற்று, இந்தியத் துணைக் கண்டத்தில் நிலை பெற்றிருப்பதற்கு அணி சேர்க்கும் விதத்தில் புராதன இந்திய வரைபடத்தில் ஒரு “தனித் திராவிட தேசம்” கண் சிமிட்டிக் கொண்டிருப்பதை நம் கழகத் தோழர்களின் கவனத்திற் குக் கொண்டு வருவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

காஞ்சிபுரம் நாடாளுமன்றத்தொகுதி வெற்றிக்கு கட்சி நிர்வாகிகள் உழைக்க வேண்டும்-மல்லை சத்யா

நாடாளுமன்றத் தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதிக்கு #மதிமுக வேட்பாளர் அறி விக்கப்பட்டவுடன் அவரது வெற்றிக்கு கட்சி நிர்வாகிகள் உழைக்க வேண்டும் என மதிமுக மாநில துணை பொதுச்செயலர் மல்லை சி.ஏ.சத்யா பேசினார்.

உத்தரமேரூர் மற்றும் மதுராந்தகம் ஒன்றிய கழகம் சார்பில் ம.தி.மு.க. கொடி யேற்று விழாவும், பொதுக் கூட்டமும் ஞாயிற்றுக்கிழமை நெல்வாய் கூட் ரோட்டில் நடைபெற்றது.

மல்லை சி.ஏ.சத்யா பேசியது:

காஞ்சி மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான உத்தரமேரூர் வைர மேகன் தடாகம் ஏரி நீரின்றி வறண்டு கிடக்கிறது. இதனால் பல்வேறு கிராமங் களில் உள்ள விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள் ளனர்.

Monday, December 9, 2013

புதுடெல்லி செல்லும் கரும்பு விவசாயிகளை வைகோ வழியனுப்பி வைத்தார்

புதுடெல்லி செல்லும் தமிழக கரும்பு விவசாயிகளை #வைகோ வழியனுப்பி வைத்தார்

12.12. 2013 அன்று டெல்லியில் நடைபெறும் இந்திய கரும்பு விவசாயிகள் சங்க ஆர்ப்பாட்டத்திற்கு தமிழகத்திலிருந்து செல்லும் கரும்பு விவசாயிகள் சிறப்பு இரயிலில் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து புது டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார்கள். மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இரயில் நிலையம் சென்று கரும்பு விவசாயிகளை வழியனுப்பி வைத்தார். அப் போது இரயில் நிலைய நடைமேடையில் அவர்களின் போராட்ட நோக்கம் குறித்து விளக்கி பேசும் காட்சி.....


சிதம்பரத்தின் பகல் கனவு பலிக்காது!

சங்கொலி தலையங்கம் 

ஈழத் தமிழர்களைக் கொன்று குவிப்பதற்கு சிங்கள கொலைவெறியன் ராஜ பக் சேவுக்கு எல்லா வகையிலும் உதவி செய்தது மட்டுமின்றி,ராஜபக்சே நடத்திய இனப்படு கொலை குற்றங்களிலிருந்து அவரைக் காப்பாற்றவும்,இந்த நிமிடம் வரை செயல்பட்டுக்கொண்டு இருக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மூலம் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான மக்கள் மனநிலையை மாற்றிவிட லாம் என்று பகல் கனவு காணு கிறது.

அதனால்தான் நவம்பர் 30ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் கருத்தரங்கம் நடத்தி, அதில்.‘இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமை யும் இந்திய அரசின் நிலையும்’ என்ற தலைப்பில் ப.சிதம்பரம் பேசி இருக்கின் றார்.இந்நிகழ்வில், உரையாற்றிய ப.சிதம்பரம் அப்பட்டமான முறையில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார்.

தேர்தல் வருமுன்னே தெளிவுறுவாய் கண்ணே!

#மதிமுக தேர்தல் பணிச் செயலாளர் கட்டிளங்காளை கழககுமார் அவர்கள் விருதுநகர் தொகுதியில் மின்னல் வேகத்தில் சுற்றுப்பயணம் செய்து ஆற்றி யுள்ள பணிகள் மாற்றாரைமருளச் செய்திருக்கிறது.

திட்டமிட்டுப் பணியாற்றிடத் தொகுதிமுழுதும் தேர்தல் பணிக்குழு அமைத்து
இருப்பது, பொங்கி வரும் புதுவெள்ளம் போல் எழுச்சியுறச் செய்திருக்கிறது
உண்மையிலேயே பாராட்டுக்குரிய செயலாகும்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தின் குறிக்கோளை இளைய சமு தாயத்தினர் ஏந்திச் செல்லும்போது அதற்கு இடையூறாக எந்தச் சக்தியும் குறுக் கிட முடியாது.

தில்லில் கரும்பு விவசாயிகள் போராட்டம்

 #மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்  அ.கணேசமூர்த்தி தலைமையில் கரும்பு விவசாயிகள்போராட்டம் அகில இந்திய அளவில் அனைத்து கட்சித் தலைவர்கள் பங்கேற்ப்பு ..

அகில  இந்திய கரும்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு சார்பில் டெல்லி யில் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை முன் வைத்து 12.12.2013 அன்று  நாடாளுமன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது ...

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து அகில  இந்திய கரும்பு விவசாயிகள் சங்க ஒருங் கிணைப்புக்குழுவின் தமிழ்நாடு செய்தி தொடர்பாளர் திரு.கி.வே பொன்னை யன் அவர்கள் வெளியிட்டுள்ள துண்டு அறிக்கை ...

Sunday, December 8, 2013

தேர்தல் முடிவுகளில், மக்கள் விரோத காங்கிரஸ் கட்சிக்கு படுதோல்வி

காங்கிரஸ் கட்சிக்கு, மீள முடியாத படுதோல்வி; தமிழக மக்களுக்கு ஆறுதல்!
மோடி அலை வீசுகிறது #வைகோ கருத்து

ஐந்து மாநிலச் சட்டமன்றத்தேர்தல் முடிவுகளில்,மக்கள் விரோத காங்கிரஸ் கட்சிக்கு, இதுவரை வரலாறு காணாத படுதோல்வி கிடைத்து உள்ளது.

தமிழக வாழ்வாதாரங்களுக்கு வஞ்சகமும், ஈழத்தமிழர் படுகொலையில் பங் காளியாகச் செயல்பட்ட துரோகமும் எண்ணி, நெஞ்சம் கொதித்த தமிழக மக் களுக்கு, காங்கிரசின் படுதோல்வி ஆறுதல் தந்து உள்ளது. 

கொளத்தூர் மணி ,விடுதலை செய்யக் கோரி பொதுக்கூட்டம்

திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி அவர்களை விடுதலை செய்யக் கோரி சென்னை புரசைவாக்கத்தில் நேற்று (07.12.13 )நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தலைவர் #வைகோ அவர்கள் உரையாற்றிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.


புயலலில் கிராண்ட் தீவில் சிக்கி கொண்ட தமிழர்களை மீட்டெடுத்த வைகோ

திராவிட இயக்கத்தைக் காப்பாற்றும் ஒரே தலைவர் #வைகோ தான்!

விருதுநகர் மாநாட்டில் மயிலாடுதுறை அழகிரி உரை

நமது ஒப்பற்ற ஒரே தலைவர் மதிப்பிற்கும், பாராட்டுதலுக்கும், வணக்கத் திற் கும் உரிய பொதுச் செயலாளர் அவர்களே, இந்த மேடையிலே நிறைந்திருக்கக்
கூடிய சான்றோர் பெருமக்களே,வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை,கடைசி வரை வைகோ என்று வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய
கழகத்தினுடைய வரிப்புலிகளே,உங்கள் அனைவருக்கும் முதற் கண் எனது வணக்கத்தையும்,நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே கூடியிருக்கக்கூடிய கூட்டத்தை பார்க்கின்றபோது, உள்ளபடியே நான் இப்போது அதிர்ந்து போயிருக்கிறேன். மொய் வைக்க வந்தவனுக்கு மாப் பிள் ளையாக வாய்ப்பு கிடைத்தது போல, சாமி கும்பிட வந்தவனுக்கு சங்கராச் சாரியாக வாய்ப்பு கிடைத்தது போல, பசியோடு வந்தவனுக்கு நிறைய உணவு
கிடைத்தது போல, இன்றைக்கு கூடியிருக்கக் கூடிய கூட்டத்தைப் பார்க்கின்ற பொழுது இந்த கூட்டத்திலே எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது
என்று நினைக்கிற போது, என் வாழ் நாளிலேயே மறக்க முடியாத நிகழ்ச்சியாக நான் கருதுகிறேன்.

வைகோ விடம் லால்பேட்டை மக்கள் சார்பாக கோரிக்கை

#மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ அவர்கள் (07.12.13 ) காட்டுமன்னார் குடி யில் திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள முன்னாள் இரவில் லால்பேட் டை அரசினர் பயனியர் ஆய்வு மாளிகையில் ஒய்வு எடுத்தார் அவரை சனிக் கிழமை காலை லால் பேட்டை இஸ்லாமிய சமூக பெரியவர்கள் சந்தித்தனர்

லால்பேட்டை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான அரசு மருத்துவ மனை யும் பெண்கள் அரசு உயர்நிலைப் பள்ளியும் தொடங்க பல ஆண்டுகளாக முயற்சி வருவதையும்,ஆனால் அரசுகள் அலட்சிய போக்கினையும் கையாள் வதாகவும் வைகோ அவர்களிடம் லால்பேட்டை ஐக்கிய ஜமாஅத் செயலாளர் எம்.ஏ.பத்ஹூத்தீன் விளக்கமாக எடுத்து கூரினார்.

Saturday, December 7, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 9

ஈரோடு ,திருப்பூர் , கோவை பகுதிகளை இயற்கை வேளாண்மைப் பகுதிகளாக
அறிவித்திடுக!

நாடாளுமன்றத்தில் மதிமுக (ஈரோடு தொகுதி ) உறுப்பினர் அ.கணேசமூர்த்தி நிதி மசோதா மீது நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு 29.04.2010 அன்று ஆற் றிய உரை

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே ! நிதி மசோதா மீது பேச வாய்ப்பு தந்த தற்கு நான் சார்ந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும் , எனது சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பெட்ரோல் டீசல் மீதான சுங்கவரி 2.4 யில் இருந்து 7.5 சதவிகிதமாக உயர்த்தப் பட்டதாலும், கலால் வரி லிட்டருக்கு 1 ரூபாய் அதிகப்படுத்தப்பட்டு உள்ளதா லும் , வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் கச்சா எண்ணெய் மீது இறக்கு மதி வரி 5 சதவிகிதம் விதிக்கப்பட்டு உள்ளதாலும் பெட்ரோல்-டீசல் விலை மிகவும் உயர்ந்துள்ளது.

பழிக்கு பழி எண்ணம் இளைஞர்களிடம் கூடாது-வைகோ வேண்டுகோள்

மதுரையில் நடந்த வெடிகுண்டு வீச்சில் காயமுற்றோருக்கு ஆறுதல் கூறி னார் #மதிமுக பொது செயலாளர் #வைகோ

மதுரையில் கடந்த 2012ம் ஆண்டு தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்று விட்டு வந்த போது சிந்தாமணி அருகே வெடிகுண்டு வீச்சுக்கு ஆளாகினர். இந்த சம்பவத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் கைதான நபர்கள் ஒரு ஆண்டுக்குப் பிறகு கடந்த வாரம் ஜாமீனில் வெளிவந்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் கையெழுத்துப் போட்டு விட்டு வரும் போது பழிவாங்கும் விதமாக வெடிகுண்டு வீசப்பட்டதில் முத்து விஜயன் என்பவர் கொல்லப்பட்டார். காயமடைந்தவர்கள் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மக்களுக்காக உழைத்த உத்தமர் ரெத்த்தினராஜ்

தன்னை முன்னிறுத்தாமல் இயக்கத்திற்காக, மக்களுக்காக உழைத்த உத்தமர் என்று 30.11.2013 அன்று மறைந்த எஸ்.ரெத்த்தினராஜ் இரங்கல் கூட்டத்தில் (01.12.2013) உரை ஆற்றும்போது #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ குறிப் பிட்டார். அவரது உரை வருமாறு:

நான் வாழ்க்கையில் மிகவும் நேசிக்கிற ஆருயிர்ச்சகோதரர் ரெத்தினராஜ்அவர் களே என்று, ஆயிரக்கணக்கான மேடைகளில் அவரை அமர வைத்துக்கொண் டு பேச்சைத் தொடங்கி இருக்கிறேன். இனிமேல், இந்த இரங்கல் நிகழ்ச்சியில் இருந்து, என் நினைவில் நிறைந்து விட்ட சகோதரனே என்று சொல்ல வேண் டிய நிலைமைக்கு ஆளாகி இருக்கிறேன்.இங்கே பல்வேறு இயக்கங்களின்
தலைவர்கள், முன்னணியினர்,நாடாளுமன்ற, சட்டமன்ற முன்னாள் உறுப்பி னர்கள், எங்கள் இயக்கத்தின் ஒரு மாணிக்கக் கட்டியின் மறைவுக்கு,தங்கள் இரங்கல் உரையைத்தெரிவித்து இருக்கின்றார்கள்.

வாக்காளர்களுக்கு பணம் -ஏற்காடு இடைத் தேர்தலை இரத்து செய்க

வாக்காளர்களுக்கு ஊழல் கொள்ளைப் பணம் அள்ளிக் கொடுக்கப்பட்டதால்,
தேர்தலை இரத்து செய்ய வேண்டும்

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு #வைகோ கோரிக்கைக் கடிதம்

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு இன்று (07.12.2013) மின்னஞ்சல் மூலம் வைகோ பின்வரும் கடிதத்தை அனுப்பி உள்ளார்.

“ஏற்காடு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் டிசம்பர் 04 ஆம் தேதி வாக் குப்பதிவு நடைபெறும் என்றும், டிசம்பர் 08ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக் கும் என்றும், நவம்பர் 09 ஆம் தேதி அன்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

Friday, December 6, 2013

அண்ணல் அம்பேத்கரின் 57 ஆவது நினைவு நாள்

அண்ணல் அம்பேத்கரின் 57 ஆவது நினைவு நாளையொட்டி #மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா மாலை அணிவித்து மாரியாதை செலுத்தி னார்

அண்ணல் அம்பேத்கரின் 57 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, சென்னை-புழ லில் இருக்கும் அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, ம.தி.மு.க உயர்நிலைக்குழு உறுப்பினரும், திரு வள்ளூர் மாவட்டக் கழகச் செயலாளருமான டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் ஆகி யோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

கொளத்தூர் மணி மீது ஏவப்பட்ட தேசப் பாதுகாப்புச் சட்ட ஆணையை இரத்து செய்ய வேண்டும்

கொளத்தூர் மணி மீது ஏவப்பட்ட தேசப் பாதுகாப்புச் சட்ட ஆணையை மத்திய அரசு இரத்து செய்ய வேண்டும் உள்துறைஅமைச்சருக்கு #வைகோ கோரிக்கை

#மதிமுக அ.கணேசமூர்த்தி எம்.பி. உள்துறை அமைச்சரைச் சந்தித்தார்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் மீது, சேலத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக ஒரு அப்பட்டமான பொய்வழக்கு காவல்துறையால் போடப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

மத்திய அரசு அலுவலக வளாகத்தில் உள்ள வெற்று மைதானத்தில், ஒரு கோணிச் சாக்கு பொட்டலத்தை யாரோ ஒரு சிலர் தீ வைத்து எரித்துப் போட் டுள்ளனர். அதில் அங்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை. அச்சம்பவம் நடந்த போது கொளத்தூர் மணி சென்னையில் இருந்தார். அதன் பின்னர் மறுநாள் நள்ளிரவில் கொளத்தூர் மணி அவர்களை அவரது இல்லத்தில் காவல்துறை யினர் கைது செய்து,பொய் வழக்குப்போட்டு சேலம் மத்திய சிறையில் அடைத் தனர். அவர் பிணையில் விடுதலை பெறுவார் என்று அறிந்து, தேசப் பாதுகாப் புச் சட்டத்தை அவர் மீது ஏவி, சிறைவாசத்தை நீட்டித்தனர். இது ஜெயலலிதா அரசு மேற்கொண்ட பாசிச அடக்குமுறை ஆகும். ஜனநாயகத்தின் குரல் வளை யை அறுக்க முயலும் அக்கிரமம் ஆகும்.

காலத்தால் அழியாத கறுப்பு மலர் நெல்சன் மண்டேலா

மனிதகுலத்தின் மணிவிளக்கு; உரிமைப்போரின் விடிவெள்ளி; காலத்தால் அழியாத கறுப்பு மலர் நெல்சன் மண்டேலா

நீண்ட நெடிய மனிதகுல வரலாற்றில் மகத்தான தியாகத்தாலும், மரணத்தை எதிர்கொள்ளும் துணிச்சலாலும் அழியாப் புகழ் படைத்த வரலாற்று நாயகரான நெல்சன் மண்டேலா மறைந்தார் என்ற செய்தியால் அகிலமே துக்கத்திலும், அதிர்ச்சியிலும் உறைந்துவிட்டது. அம்மாமனிதரின் உயிர் ஓய்ந்து உடல் சாய்ந்தாலும் மண்ணும் விண்ணும் இருக்கும் வரை புகழின் சிகரமாக வாழ் கிறார்.

தென்னாப்பிரிக்க நாட்டில் கறுப்பர் இன மக்களுக்கு, வெள்ளைத் நிறத்தினர் பூட்டிய ஆதிக்க அடிமை விலங்குகளை உடைத்தெரிந்த சகாப்தத்தின் பெயர் தான் நெல்சன் மண்டேலா. தென்னாப்பிரிக்காவில், பழங்குடியினரின் அரச குடும்பத்தில், சோசா இனக்குழுவில் 1918 ஜூலை 18 இல் பிறந்தார். சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார். கறுப்பர்களை விடுவிக்க 1912 இல் நிறுவப்பட்ட ஆப்பிரிக்க தேசிய காங்கிரசில் சேர்ந்து, இளைஞர் மன்றத்தில் இணைந்து, படிப்படியாக இயக்கத்தில் வளர்ந்து அதன் தலைவரானார்.

Thursday, December 5, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 32

நாள்:-29.4.2009

உடனடியாகத் தலையிட்டுத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள்!

பாரக் ஒபாமாவுக்கு #வைகோ வேண்டுகோள்

அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமா அவர்களுக்கு, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இன்று (29.4.2009) அனுப்பி உள்ள மின் அஞ்சல் :

அமெரிக்கக் குடியரசுத் தலைவர் மாண்புமிகு பாரக் ஒபாமா அவர்களுக்கு,

வணக்கம்.

இலங்கையில் நடைபெறுகின்ற தமிழ்  இனப்படுகொலைத் தாக்குதல்களை,
கண்ணீருடனும் வேதனையுடனும் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகி றேன்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு வழங்குவதில் தாமதம்

தமிழகத்தில் கடந்தாண்டு கார் பருவத்தில் பயிர் காப்பீடு செய்ததற்கு காப்பீடு இழப்பீடு தொகை வழங்குவதில் தமிழக அரசு மிகவும் காலதாமதம் செய்து வரு வதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 

கடந்த ஆண்டு தமிழகத்தில் போதிய மழை பெய்யாததால் விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருந்த அனைத்து பயிர்களும் கருகியது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகினர். இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் தேசிய வேளாண் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்தனர். 

இதன் அடிப்படையில் கடந்த ஆண்டு ஏக்கர் ஒன்றுக்கு உழுந்து பயிருக்கு ரூ.36 பாசிப்பயறுக்கு ரூ.34ம், கம்பு பயிருக்கு ரூ.65ம், மக்காச்சோளத்திற்கு ரூ.137ம், பருத்திக்கு ரூ.356ம், எண்ணை வித்துக்களுக்கு ரூ.79ம், சோளத்திற்கு ரூ.48ம் என அனைத்து வகை பயிர்களுக்கும் ஏற்ற வகையில் பயிர் காப்பீடு பீரிமியம் தொகை செலுத்தினர். ஆனால் கிராம விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்தற் கான காப்பீட்டு தொகையை வழங்க அரசிற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத் தும் இதுவரை வழங்கப்படவில்லை. 
 

இலவச கட்டாய கல்வி, மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடா ?

கோவையில் உள்ள தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், 25 சதவீத மாணவர்கள் சேர்க்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோவை மாவட்ட கலெக்டருக்கு #மதிமுக கோரிக்கை வைத்துள்ளது.

ம.தி.மு.க மாநில இளைஞர்அணி செயலாளர் வே.ஈஸ்வரன் கோவை மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்கிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:–

கடந்த 2013–ம் ஆண்டில் அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி உரிமை (ஆர்.டி.இ) சட்டத்தின்படி 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் கோவையில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவ–மாணவிகளின் சேர்க்கை விதிகளுக்கு புறம் பாக உள்ளது. ஆகவே இதை மறு ஆய்வு செய்து முறையான சேர்க்கை எண் ணிக்கையை மறு அறிவிப்பு செய்ய வேண்டும். மேலும் மறு ஆய்வு செய்த மாணவர்களின் சேர்க்கைக்கு மட்டும்தான் கட்டாய கல்வி உரிமை சட்ட நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் வைகோ அறிக்கை

மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் #வைகோ அறிக்கை

தமிழ் நாட்டில் மதுக்கடைகளை அகற்றக்கோரி பல்வேறு இடங்களில் பொது மக்கள், குறிப்பாக பெண்கள் போராடிக்கொண்டிருக்கின்ற செய்திகள் தினந் தோறும் வந்துகொண்டிருக்கின்றன. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிபாட் டுத் தலங்கள், பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில்தான் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆண்டுக்கு 24 ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டி, இலவசங்களை வாரி வழங்குவதன் மூலம் தமி ழக அரசு பண்பாட்டை குழிதோண்டி புதைத்து வருவதுடன், சமூக அமைதியை யும் சீர்குலைத்து வருகிறது.

கொலை, கொள்ளை, கற்பழிப்புகள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு அனைத்துக் கும் மதுதான் அடிப்படைக் காரணமாக இருக்கிறது. நெஞ்சைப் பிளக்கும் வகை யில், 5 வயது, 6 வயது சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தைகள்கூட பாலியல் வன் கொடுமைக்கு ஆளாகும் கொடூரங்கள் நடக்கின்றன. நாட்டின் எதிர்கால ஒளி விளக்குகளாக பிரகாசிக்க வேண்டிய இளைஞர்களும், மாணவர்களும் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதற்கு ஜெயலலிதா அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

Wednesday, December 4, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 8

விவசாயமும் தொழிலும் பாதிக்கப்படாமல் இருக்க , சாயக் கழிவு நீரை அரசே சுத்திகரிக்க வேண்டும்

சாயக் கழிவு நீரை அரசே சுத்திகரிப்பு செய்து விவசாயத்தையும் ,தொழிலையும் காப்பாற்ற வேண்டுமென 27-04-2010 அன்று நாடாளுமன்றத்தில் மதிமுக (ஈரோடு தொகுதி ) உறுப்பினர் அ.கணேச மூர்த்தி கோரிக்கை விடுத்து உள்ளார்.

விவரம் வருமாறு

தமிழ் நாட்டில் ஈரோடு மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் மட்டும் , சுமார் 650 துணி மற்றும் நூல் சாயத்தொழிற்சாலைகள் இருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கணக்கெடுத்து உள்ளது. கணக்கெடுப்பில் சேராத சுமார் ஆயிரத்துக் கும் மேற்பட்ட சிறிய சாயப்பட்டறைகள் இயங்குகின்றன .தினசரி சுமார் 50 இலட்சம் மீட்டர் துணி சலவை செய்யப்படுகிறது. ஆண்டுக்கு சுமார் ரூ.2,000 கோடி அளவிற்கு ஏற்றுமதிக்கு வேண்டிய துணிகள் பதப்படுத்தப்படுகிறது. 

அடக்குமுறை சட்டங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் மல்லை சத்யா உரை

பொடா சட்டத்தை சுக்கு நூறாக உடைத்தெறிந்து ஏவியவர்கள் முகத்திரையை கிழித்தவர் #வைகோ!

அடக்குமுறை சட்டங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் மல்லை சத்யா பங் கேற்று உரையாற்றினார். அவரது உரை வருமாறு:

காமன்வெல்த் மாநாட்டை ஒட்டி ஜெயலலிதா அரசு இரண்டு முறை சட்டசபை யில் தீர்மானம் நிறை வேற்றியது. முதல்முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட
பின் தோழர் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டார்.இரண்டாம் முறை தீர்மா னம் நிறைவேற்றிய அடுத்த நாள் முள்ளிவாய்க்கால் முற்றத்தின் முகப்பை இடித்துத் தள்ளினர்.

அதே நாளில், முற்றம் இடிக்கப் படுவதை அறிந்து அங்கு வந்து எதிர்ப்புத் தெரி வித்துப் போராடிய அய்யா பழநெடுமாறன், மதிமுக மாவட்டச் செயலாளர் உத யகுமார், தேர்தல் பணித் துணைச்செயலாளர் விடுதலை வேந்தன் உள்ளிட் ட தோழர்கள் 83 பேர் கொலை முயற்சி, பொதுச் சொத்துக்குச் சேதம் விளை வித் தது எனப் பல்வேறு பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டனர்.

காவிரி உரிமை மீட்புக்குழுவினர் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மத்திய அரசை வலியுறுத்தி டெல்டா பகுதிகளில் காவிரி உரிமை மீட்புக்குழு வினர் நேற்று (03.12.13) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதில் #மதிமுக உட்பட பல கட்சிகள் பங்கேற்றன .

தஞ்சையில் 

ரயில்வே ஸ்டேஷன் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க., துணை பொதுச் செயலாளர் துரை பாலகிருஷ்ணன், ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் உதய குமார், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணிமொழியன், வக்கீல் நல்லதுரை, அயனாவரம் முருகேசன் உள்பட மீட்புக்குழு நிர்வாகிகள் பங் கேற் றனர்.

டிச 21 யில் அணுசக்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், அணுசக்திக்கு எதிரான அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்பு நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இடிந்தகரையில் நடைபெற்றது.

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் உதயகுமார், புஷ்பராயன், முகிலன், மை.பா.சேசுராஜ், தமிழர் தேசிய இயக்க பொதுச்செயலர் பரந்தாமன், தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலர் தியாகு, ம.தி.மு.க. இளைஞரணி செயலர் ஈஸ்வரன், மதிமுக நெல்லை மாவட்ட செயலர் சரவணன், மார்க்சிஸ்ட் கட்சி சங்கரன், தமிழக மக்கள் புரட்சி கழகத்தை சேர்ந்த அரங்ககுணசேகரன், தமிழ் தேசப்பொதுவுடமை கட்சி ராசு, மனிதநேய மக்கள் கட்சி அப்துல் ஜாபர், பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா கட்சி அகம்மது நவாபி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி (விடுதலை) ரமேஷ், தமிழ்நாடு மக்கள் கட்சி அருண்ஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tuesday, December 3, 2013

வழக்கறிஞர்கள் மாநாட்டில் வைகோ உரை -பாகம் 2

இரண்டு கட்சிகளும், இந்த மாநிலத்தை பாழ்படுத்திவிட்டன, வழக்கறிஞர்களே,
உங்களுக்கு நிறையக் கடமை இருக்கின்றது!என்று சென்னையில் நடந்த வழக் கறிஞர்கள் மாநாட்டில் #வைகோ உரை ஆற்றினார்.சென்ற பாகத்தின் உரை யின் தொடர்ச்சி வருமாறு:

கடந்த கால நிகழ்வுகளை எல்லாம் நினைவூட்டிப் பேசினார்கள்.நீண்ட நெடுங் காலத்திற்குப் பிறகு, நீண்ட நாள்களுக்குப் பிறகு, ஸ்டெர்லைட் வழக்குக்காக,
நான் கருப்பு அங்கியை அணிந்து கொண்டு நீதிமன்றத்திற்கு வந்ததாக நன் மாறன் சொன்னார்.அந்த ஆலையில் இருந்து நச்சுப் புகை வெளியேறும்போது, அதைச் சுவாசிக்கின்ற மக்கள் புற்று நோயால் மடிவார்கள்; 40 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள நிலங்கள் பாழாகிப் போய்விடும்;கடல் வாழ் உயிரினங்கள் அழியும் என்பதற்காக, அந்த ஆலையை எதிர்த்து 17 ஆண்டுகளாகப் போராடிக் கொண்டு இருக்கின்றோம்.

டிச 12 தில்லில் கரும்பு விவசாயிகள் போராட்டம்

விவசாயிகளின் போராட்டத்திற்கு அகில இந்திய அளவில் அனைத்து கட்சித் தலைவர்களின் ஆதரவை திரட்டும் விவசாய சங்க தலைவர்களுடன் #மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்  அ.கணேசமூர்த்தி

அகில  இந்திய கரும்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு சார்பில் டெல்லி யில் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை முன் வைத்து 12.12.2013 அன்று  நாடாளுமன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது ...

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து அகில  இந்திய கரும்பு விவசாயிகள் சங்க ஒருங் கிணைப்புக்குழுவின் தமிழ்நாடு செய்தி தொடர்பாளர் திரு.கி.வே பொன்னை யன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை ...

கொலைவெறியன் ராஜபக்சேவை கூண்டில் ஏற்றுவோம்!

கொலைவெறியன் ராஜபக்சேவை கூண்டில் ஏற்றுவோம்!
பொதுவாக்கெடுப்பில் தமிழ் ஈழம் மலரச் செய்வோம்!!

விருத்தாசலம் இரயில் மறியல் கிளர்ச்சியில் #மதிமுக ஆ.வந்தியத்தேவன் சூளுரை

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசு கலந் து கொள்வதைக் கண்டிப்பதற்காக, முழு அடைப்பு மற்றும் இரயில் மறியல்
போராட்டத்தில் கலந்து கொண்டு ஆர்த்தெழுந்து போராட அணி திரண்டு வந் துள்ள மறுமலர்ச்சி தி.மு.கழகம், வணிகர்சங்கம், பெரியார் திராவிடர் கழகம், தமிழக வாழுவுரிமைக்கட்சி, தமிழ் தேச பொது உடமைக் கட்சி, மனித நேய மக் கள் கட்சி, ஆகிய அமைப்புகளின் தோழர்களுக் கெல்லாம் கனிவான வாழ்த்து
களையும் பாராட்டுகளையும் முதலில் தெரிவித்துக் கொள்கிறோம்.

இலங்கையில் நடக்கவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள் ளக்கூடாது என்பதற்காகத்தான் நாம் இப்போது போராடிக் கொண்டு இருக்கி றோம். ஆனால், இது மட்டுமே நமது கோரிக்கை அல்ல! காமன் வெல்த்தின் கொள்கைகளுக்கு முற்றிலும் விரோதமான இலங்கையின் கழுத்தைப் பிடித்து
வெளியேற்ற வேண்டும்.இனப்படுகொலை நடந்த இலங்கைத் தீவில் மாநாட் டை நடத்தக் கூடாது. கொடியவன் ராஜபக்சேவை பன்னாட்டு நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரித்துத் தண்டிக்க வேண்டும். பொது வாக் கெடுப்பு நடத்தி தமிழ் ஈழம் மலர்ந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். போருக் குப்பின்னரும் ஈழத்தமிழர்கள் மீது ஏவிவிடப்படும் அடக்குமுறைகள் அரச வன் முறைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதையெல்லாம் நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.இதற்காகப் போராடி வருகிறோம்.

தென்காசி மதிமுக சார்பில் கறுப்பு கொடி போராட்டம்

தென்காசி நகர #மதிமுக செயலாளரும், ரெயில் பயணிகள் நலச்சங்க தலைவ ருமான என். வெங்கடேசுவரன் வெளியிட்டுள்ள அறிக்கை

வளர்ந்து வரும் நகரமான தென்காசிக்கு ஆண்டு தோறும் சுமார் 50 லட்சம் பேர் வந்து செல்கிறார்கள். ஆனால் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இங்கு அடிப்படை வசதிகள் இல்லை.

பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2 மாதங்களுக் கு முன்பே முன்பதிவு முடிந்து விடுகிறது. எனவே கூடுதலாக ரெயில் இயக்க வேண்டும். 

Monday, December 2, 2013

என் குரு நாதர்கள்! -வைகோ

சென்னையில் நடந்த மதிமுக வழக்கறிஞர்கள் மாநாட்டில் #மதிமுக பொது செயலாளர் #வைகோ தனது குரு நாதர்களை நினைவு கூர்ந்தார் ... அவரின் உரையில் இருந்து ....

அர்ச்சுனன் அம்பைத் தொடுப்பதில் வல்லவன் என்று நான் படித்து இருக்கின் றேன். அவனுக்கு அந்தக் கலையைக் கற்றுத் தந்தவர் துரோணாச் சாரியார். அந்த மரியாதைக்காகத்தான்,மகாபாரதப் போரின் தொடக்கத்தில், பிதாமகர் பீஷ்மர், துரோணாச்சாரியாருக்கு முன்பு அம்புகளைத் தொடுத்து, அவர்கள்
முன்னால் தரையில் குத்திடச் செய்தான் தனஞ்செயன்.

என்னை வழக்கறிஞர் தொழிலில் பயிற்று வித்தவர் அண்ணாச்சி இரத்தின வேல் பாண்டியன் அவர்கள். 1964 ஆம் ஆண்டு, திருவேங்கடம் என்ற ஊரில், திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்கூட்டத்தில் அவர் உரை ஆற்ற வந்த போது, அவருக்கு முன்பு நான் பேசினேன். ‘பேச்சை நிறுத்தாதே, தொடர்ந்து பேசு’ என்றார்.கூட்டம் முடிந்தபிறகு, என்னையும் உடன் அழைத்துக் கொண்டு போய், சுப்பையாத் தேவர் வீட்டில் நடந்த விருந்தில் பக்கத்தில் உட்கார வைத் துச் சாப்பிடச் சொன்னார்.தம்பி நீ எந்த ஊர்? என்று கேட்டார்.மூன்று கல் தொலைவில் உள்ள கலிங்கப்பட்டி என்று சொன்னேன். ‘எப்படி வந்தாய்?’ என்று கேட்டார்.‘சைக்கிளில் வந்தேன்’ என்று சொன்னேன். சைக்கிளை வேறு
ஒருவரிடம் கொடுத்து விட்டு, தனது காரில் என்னை ஏற்றி வைத்துக்கொண்டு, அந்த நடுநிசியில் என் வீடு வரையிலும் கொண்டு வந்து என்னை இறக்கி விட் டுச் சென்றார்.


மூன்று தமிழரை விடுதலை செய்க!

சங்கொலி தலையங்கம் 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டிருக்கும் பேர றிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று தமிழர்களும் அநியாயமாகத் தண் டிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.மூவரையும் விடுதலை செய்யவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வரையில் சென்று #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ அவர்கள் சட்டப் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கின்றார். இந்த வழக்கில் அப்பாவி களான மூன்று பேரும் 22 ஆண்டு களாகக் கொட்டடியில் பூட்டப்பட் டும் கிடக்கின்றார்கள்.ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேண்டு மென்றே இவர் கள் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு இருக்கின்றது என்று இதுவரை கூறப்பட்டு வந்தது உண்மை என்பதற்கு ஒரு ஆதாரம் இப்போது வெளியாகி இருக்கின்றது.

மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள “உயிர்வலி”
என்ற ஆவணப்படம் ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணையின் குளறுபடி களை அம்பலப்படுத்தி உள்ளது.மேலும் அரசியல் சக்திகளால் வழக்கு விசார ணை நடத்திய அதிகாரிகள் இயக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் வெளிச் சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.ராஜீவ் கொலை வழக்கின் விசாரணையின் போது சி.பி.ஐ. எஸ்.பி.பணியில் இருந்த அவருக்கு ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பெற்றவர்களிடம் வாக்குமூலம் பெறுவதற்கு ஆணை வழங்கப் பட்டு இருந்தது. இது குறித்து, “உயிர்வலி” ஆவணப்படத்தில் தியாகராஜன் அப் போது நடந்தவற்றை ஒப்புதல் வாக்கு மூலமாகப் பதிவு செய்து இருக்கிறார்.

டிசம்பர் 3 உலக மாற்றுத் திறனாளிகள் தினம் -வைகோ வாழ்த்து

டிசம்பர் 3 உலக மாற்றுத் திறனாளிகள் தினம் #வைகோ வாழ்த்து

செங்காந்தள்தமலர் பூத்துக் குலுங்கும் கார்த்திகை மாதம் 17ம் நாள் 3.12.2013 உலக மாற்றுத் திறனாளிகள் தினம். கார் இருள் விலகி, விடியலைத் தரிசித்து சமூகத்தில் சகமனிதர்களைப் போன்று சுயமாகவும், சுயமரியாதையோடும் வாழ்க்கை அமைந்திட, மனித நேயத்துடன் நாம் இணைந்து பணியாற்றினால் சிறிய செயல்கள் கூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் மட்டும் பல்வேறு உடல் உறுப்புக் குறைபாடுகளுடன் கூடிய சுமார் 20 இருபது லட்சம் மாற்றுத் திறனாளிகள் இருக்கின்றார்கள்.

நீர், நிலம், காற்று நஞ்சாகி சுற்றுச்சூழல் மாசுபட்டு, பிறவி ஊனம் உருவாக அரசுகளும் ஒரு காரணமாக அமைகின்றது. உலக பொது மன்றம் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளைச் சட்டமாக்கி நடைமுறைப்படுத்த உலக நாடு களைப் பணித்தது.

Sunday, December 1, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 7

தமிழக அரசின் மெத்தனப் போக்கு! தமிழக திட்டங்களுக்கு குறைந்த தொகை ஒதுக்கீடு!

இரயில்வே நிதிநிலை அறிக்கை விவாதத்தில் நாடாளுமன்றத்தில் அ.கணேச மூர்த்தி குற்றச்சாட்டு

இரயில்வே நிதி நிலை அறிக்கை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத் தில் கலந்து கொண்டு, நாடாளுமன்றத்தில் மதிமுக உறுப்பினர் அ.கணேச மூர்த்தி (ஈரோடு தொகுதி) 9-03-2010 அன்று ஆற்றிய உரை:

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே! இரயில்வே துறை மானியக்கோரிக் கையின் மீதான இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேச வாய்ப்பு தந்ததற்கு நன்றி.

உடனடியாகக் கிடைக்கும் பலனை மட்டும் கருதாமல், நாட்டின் வளர்ச்சியை யும் மக்களின் தேவைகளையும் கருத்தில் கொண்டு, நமது இரயில்வே துறை நடை போட வேண்டும் என்ற இரயில்வே துறை அமைச்சர் அவர்களின் மு னைப்பை இந்த இரயில்வே துறை நிதி நிலை அறிக்கையில் காண முடிகிறது.
அதற்காக எனது பாராட்டுகள்.

கண் தானத்தொடு ,கடைசி பயணத்தை நிறைவு செய்த திரு.ரத்தினராஜ்

கன்னியாகுமரி  மாவட்ட முன்னாள் #மதிமுக செயலாளரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான எஸ்.ரத்தினராஜ் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந் தார். நேற்று பிற்பகல் அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74.

ரத்தினராஜின் உடல் உரப்பனவிளையில் உள்ள குடும்ப கல்லறை தோட்டத் தில் அடக்கம் செய்யப்படுகிறது. ரத்தினராஜின் உடலுக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று காலை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத் தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

ரத்தினராஜ், வெள்ளிச்சந்தை அருகே உள்ள உரப்பனவிளையில் 1940–ம் ஆண்டு பிறந்தார்.

நீந்திக் கடந்த நெருப்பாறு - நூல் வெளியீட்டுவிழா

நீந்திக் கடந்த நெருப்பாறு - நூல் வெளியீட்டு விழாவில் #மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ பங்கேற்பு

சென்னை - எழும்பூரில் உள்ள தூய அந்தோணியார் அரங்கத்தில் நடைபெற்ற அரவிந்த குமாரனின் "நீந்திக்கடந்த நெருப்பாறு" எனும் நூலை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் வெளியிட, தமிழ்நாடு மாணவர் கூட்டமைப் பைச் சேர்ந்த மாணவர்கள் பெற்றுக்கொண்டார்கள். உடன் கழகத் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, உயர்நிலைக்குழு உறுப்பினர் இமயம் ஜெப ராஜ், தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பைச்சேர்ந்த பாரி மைந்தன் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் முன்ன ணியினரும், மாணவர்களும் கலந்துகொண்டனர்.

நெஞ்சில் உறைந்த பூங்கொடி சாமிநாதன்-வைகோ கண்ணீர் உரை

நெஞ்சில் உறைந்த பூங்கொடி சாமிநாதன்-வைகோ கண்ணீர் உரை 

எங்கள் கண்கள் எல்லாம் குளமாகி இருக்கின்ற சூழ்நிலையில், இந்த இரங்கல் கூட்டத்தில் உங்கள் முன்னால் நிற்கின்றேன்.

என் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் துயரங்களைச் சந்தித்து இருக்கின் றேன்.துயரங்களாலேயே என்னுடைய மனது மரத்துப்போய் விட்டது. கடந்த 17 ஆம் தேதி நள்ளிரவில்,விழுப்புரத்தில் இருந்து, நான் இந்த நாகமலைத் தோட் டத்துக்கு வந்தேன்.கார் இங்கே நுழையும்போது விழித்துக் கொண்டுதான் இருந் தேன். ஓடோடி வந்து காரின் கதவைத் திறந்தார் பூங்கொடி சாமிநாதன்.
நான் நேராக வீட்டுக்கு உள்ளே செல்லாமல், வழக்கமாக நான் விரும்பி அமர் கின்ற அந்த ஊஞ்சலில் ஏறி உட்கார்ந்தேன். தரையில் காலைப் பதித்து ஊஞ்ச லை ஆட்டத் தொடங்கியபொழுது,‘அண்ணே இன்னும் கொஞ்சம் வேகமாக ஆட்டி விடவா?’ என்று கேட்டார். ‘சரி’ என்றேன்.‘கெட்டியாகப் பிடித்துக் கொள் ளுங்கள்’ என்றார்.

அப்போது நான் சொன்னேன்: ‘என் பாட்டனார் கட்டிய வீட்டிலும் இப்படி ஒரு ஊஞ்சல் உண்டு.ஆனால், இங்கே நீங்கள் போட்டு இருப்பது போல்,பின்பக்கச் சாய்மானப்பிடி கிடையாது’ என்றேன்.‘இங்கே இரண்டு ஊஞ்சல் போட்டு இருக் கின்றீர்களே?’ என்று கேட்டேன்.

மத்திய அரசின் ரகசிய சதி வேலை - வைகோ குற்றச்சாட்டு

இந்தியக் கடற்படைத் தளபதி இலங்கை பயணமும்,கோத்தபய ராஜபக்சேயின் இந்தியப் பயணமும்,மத்திய அரசின் ரகசிய சதி வேலை - #வைகோ குற்றச் சாட்டு

இலங்கைத் தீவில் சிங்கள இனவாத ராஜபக்சே அரசு, ஈழத் தமிழ் இனப்படு கொ லையை நடத்த இந்தியாவின் மத்திய காங்கிரஸ் அரசு தான் நேரடியாகவும், மறை முகமாகவும் ஆயுதங்கள் தந்தும், இந்தியாவின் முப்படைத் தளபதிகள் மூலம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இயக்கியும், மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்தது.

2007 ஆம் ஆண்டில், இந்திய-இலங்கைக் கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந் தம் செய்து, புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கைக்கு தகவல்கள் தந்தும், புலிகளுக்கு வந்த 14 கப்பல்களைக் கடலில் மூழ்கடிக்கச் செய்தும், அப்போரில் உதவியது. அதனால்தான், யுத்தத்தில் தாங்கள் வெல்ல முடிந்தது என்றும், இப்போரை இயக்கியதே இந்தியாதான் என்றும் அதிபர் ராஜபக்சேவும், இலங் கை அமைச்சர்களும் கூறினர்.