Thursday, July 18, 2013

சாஞ்சி அறப்போர்-பகுதி 2

என் இனிய தோழர்களே,

நாகபுரியில்,தீக்ஷா பூமியில் அமைக்கப்பட்டு இருக்கின்ற அந்த ஸ்தூபா,சாஞ்சி யில் மாமன்னர் அசோகர் கட்டி எழுப்பிய ஸ்தூபாவின் வடிவமைப் பிலேயே கட்டப்பட்டு இருக்கின்றது. ஆனால், இதற்கு உள்ளே இருக்கின்ற தியான அரங் கத்தைப் போல, உலகத்தில் வேறு எங்கும் இல்லை என்கின்றசெய்தியைப் பார்த்தோம். அந்த ஸ்தூபாவுக்குஉள்ளே சென்றோம். விரலைச் சொடுக்கி ஓசை எழுப்பினால் அதிர்கிறது.

புத்தரின் போதனைகளைக் குழிதோண்டிப் புதைக்கின்ற கொலைகாரன், எங் கள் குழந்தைகளை, எங்கள் தாய்மார்களை, எங்கள் சகோதரிகளைக் கொன்று குவித்த கொடியவனை, புத்தர் விழாவுக்கு அழைத்து வருகின்றீர்கள்.ஏ...பாரதிய ஜனதா கட்சியே, உன் கோர முகத்தை நாங்கள் அம்பலப் படுத்துகின்றோம். இந்துக்களுக்காக நீ கட்சி நடத்துகிறாயா?

திராவிட இயக்கச் செம்மல் என்.வி.நடராசன்

“திராவிடர் கழகத்தில் இருந்தபோது, அதன் வளர்ச்சிக்காக தன்னலமற்று தம் மையே ஒப்படைத்துக்கொண்டு உழைத்தவர் என்.வி.என்.! தந்தை பெரியார் அவர்கள், அவர் மீது பேரன்பைப் பொழிந்ததோடு, நிற்க வில்லை. பெருநம்பிக் கையும் வைத்து இருந்தார். எந்த அளவுக்கு என்றால், தாம் எங்கே சென்றாலும், காரிலோ, வண்டியிலோ, என்.வி.என்.னைத் தம்முடன் அழைத்துச் செல்லும்
அளவுக்கு. போராட்டங்களிலே ஈடுபட்டு சிறைக்கோட்டம் செல்வதிலும் நல்ல தேர்ச்சி பெற்றவர் நடராசன்.‘கொள்’ என்றால், வாயைத் திறப்பதும், கடிவாளம் என்றால், வாயை மூடிக்கொள்வதும் குதிரைகளுக்கு மட்டுமே சொந்தமான இயல்பு இல்லை. சில சந்தர்ப்பவாத அரசியல்வாதி களிடமும் அந்தப் போக்கு உண்டு.அவர்கள் ஆர்ப்பாட்டமாக மேடையில் முழங்குவார்கள். ஆனால், போர்ப் பரணி கேட்டதுமே எங்கேனும் புதரில் போய் பதுங்குவார்கள். என்.வி. என். அத்தகைய கோழை அல்லர், கொள்கைக் குன்று!” என்று நம் நெஞ்சம் நிறை அண்ணா அவர்களால் புகழாரம் சூட்டிப் பெருமைப்படுத்தப்பட்டவர் திராவிடர் இயக்க தியாகச் செம்மல் என்.வி. நடராசன் அவர்கள்.

Wednesday, July 17, 2013

திருவாசகம் சிம்ஃபொனி விழா-வைகோ-பகுதி 4

ஆம். இந்தத் திருவாசகம் எப்படி வந்தது?

தமிழில், சைவ இலக்கியத்தில் பன்னிரு திரு முறைகள் உண்டு. பன்னிரு திரு முறைகளுள் முதல் ஏழு திருமுறைகள் திருநாவுக்கரசரும், திருஞான சம்பந்த ரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் தந்தவை. எட்டாவது திருமுறை மாணிக்கவாச கரின் திருவாசகம் - முதல் பகுதி திருவாசகம்; இரண்டாம் பகுதி திருக்கோவை யார்! ஒன்பதாவது திருமுறை ஒன்பது அடியார்கள் தந்த திருமுறைகள்.திரு மாளிகைத் தேவர், கருவூர்த் தேவர், சேந்தனார், சேதுராயர், கண்டரா தித்தர், பூந்துருத்திக் காடநம்பி,புருடோத்தம நம்பி,திருவாழிய அமுதனார், வேணாட்டு அடிகள் என்று ஒன்பது அடியார்கள் தீட்டியதுதான் ஒன்பதாம் திருமுறை. பத் தாம் திருமுறை திருமூலர் தந்த திருமந்திரம். 11-ஆம் திருமுறை காரைக்கால் அம்மையார், நக்கீர தேவ நாயனார், கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார், கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி இவர்கள் தந்தவை. 12-ஆம் திருமுறை சேக்கிழார் தந்த ‘பெரியபுராணம்’. இந்தப் பன்னிரண்டு திருமுறைகளின் அடிப்படையும் ‘நம சிவாய’ என்ற ஐந்து எழுத்துதான். இந்த ‘நமசிவாய’ என்ற ஐந்து எழுத்தை வைத்துத்தான் சிவபுராணத்தைத் தொடங்குகிறார் மாணிக்கவாசகர். இவரது திருவாசகத் தைப் பற்றி வடலூர் வள்ளலார் அருட்பெருஞ்சோதி தனிப் பெருங் கருணை இராமலிங்க அடிகளார் கூறும் போது,

சாஞ்சி அறப்போர்-பகுதி 1

ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த கொலைகாரன் ராஜபக்சே, மத்தியப் பிர தேசம் -சாஞ்சிக்கு வருவதைக் கண்டித்து, கருப்புக்கொடி அறப்போர் நடத்திட, கழகப் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், சாஞ்சிக்கு அணிவகுத்துச்
சென்ற கழகத்தோழர்கள் 23.09.2012 அன்று சென்னை வந்தடைந்தனர். பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்திய பின் பொதுச்செயலாளர் வைகோ ஆற்றிய உரை....

அன்புக்குரிய சகோதரர்களே, சகோதரிகளே,

பேரறிஞர் அண்ணா அவர்களின் சதுக்கத்தில், சரியாக ஏழு நாள்களுக்கு முன்பு, அறிவாசான் தந்தை பெரியார் பிறந்த நாளாம் செப்டெம்பர் 17 அன்று,அந்தி
சாய் வதற்கு முன்பாக, இதே இடத்தில் சூளுரைத்து, நானும், ஆயிரத்துக்கும் மேற் பட்ட கழகத்தின் கண்மணிகளும், தமிழ் ஈழ விடியலுக்காக ஏங்குகின்ற தமிழ் உணர்வாளர்களும், மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சியில், புத்தருடைய
போதனைகளைப் பரப்ப அமைக்கப்படுகின்ற ஆராய்ச்சிக் கல்லூரிக்கு அடிக் கல் நாட்டுவதற்கு,தமிழ் இனப் படுகொலை செய்த, இலங்கையின் சிங்கள அதிபர், மகிந்த ராஜபக்சே வருவதை எதிர்த்துப் போராடப் புறப்பட்டுச் சென் றோம்.

திப்பு சுல்தானும் மது ஒழிப்பும்!

மதங்களைக் கடந்து மனித நேயத்தோடு ஆட்சி புரிந்த திப்பு சுல்தான் மதுவை
அடியோடு வெறுத்தார். திப்புவின் வருவாய்த்துறை சட்டம் (1787) மது  ஒழிப்பைக் கூறுகிறது.

நமது மக்களின் சமுதாய, ஆன்மிக நன்மைக்காக மது காய்ச்சுவதும், விற்பதும் முழுமையாக தடைசெய்யப்பட வேண்டும். வெளிநாட்டினர்க்கு தேவை
யானால் மது அனுமதி வழங்கப்படலாம்.

மீர்சாதிக்கு திப்பு 1787 இல் கடிதம் எழுதினார். “மது விற்பனையாளர்கள் தமது தொழிலை நிறுத்துவதற்கான ஒப்பந்தம் செய்து கையொப்பம்  வாங்கியுள்ள தாக உங்கள் அறிக்கை தெரிவிக்கிறது. மதுவை முற்றாக ஒழிக்க மது காய்ச் சுபவர்களிடமும் இத்தகைய ஒப்பந்தம் செய்து கையெழுத்து வாங்குவது அவசியம். பின்னர் அவர்களுக்கு வேறு வேலைவாய்ப்புகள் உருவாக்க உதவு வதும் அவசியம்.

Tuesday, July 16, 2013

ஈழ விடுதலைக்கு வாக்கெடுப்பு நடத்துக-பகுதி 2

மே 18 ஆம் தேதி, உலகம் முழுமையும் தமிழன் இரத்தக்கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்கின்றான்.ஆனால், தமிழரின் இரத்தக் குளியல் நடத்திய இராஜ பக்சேவோடு இந்திய அரசு ஒப்பந்தம் போடுகிறது. எதற்காக அதை அனுப்ப வேண்டும்? தமிழர்களுக்குச் சொரணை இல்லை என்று கருதுகிறாயா? உணர் வுகள் மரத்துப் போய்விட்டன என்று கருதுகிறாயா? அந்தக் கொலைகாரனை இங்கே அழைத்து வந்து, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பரிவட்டம் கட்டுகிறாய்.

கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிக்கு, அவனைச் சிறப்பு விருந்தினராக அழைக்கின்றீர்களே, அவன் கேட்டதை எல்லாம் செய்து கொடுக்கின்ற நீ, ஈழத் தமிழர் இனப்படுகொலையில் ஒரு கூட்டுக் குற்றவாளி.மன்மோகன் சிங் தலைமையிலான, சோனியா காந்தி இயக்குகின்ற அரசு, நடைபெற்ற இனப் படுகொலையில் ஒரு கூட்டுக்குற்றவாளி. நாம் எப்படி மன்னிக்க முடியும்?


சீனம் சிவந்தது ஏன்? - 4

வரலாறு எழுப்பும் கேள்வி 

1962 அக்டோபர் 20 ஆம் தேதி அதிகாலை சீனாவின் மக்கள் விடுதலைப் படை (Peoples Liberation Army) எல்லை முழுவதிலும் தாக்குதலை ஆரம்பித்தது. தக்லா முகட்டிற்கு கீழ் இந்தியப் படை திடீர் தாக்குதலுக்குள்ளாகியது. மிகத் தீவிரமாக
வீரத்துடன் இந்தியப்படை போரிட்ட போதும், சீன இராணுவம் அதிக  எண்ணிக் கையில் படையெடுத்து வந்ததால், தாக்குப்பிடிக்க முடிய வில்லை.சீன இராணுவம் அரைமணி நேரத்தில் வேகமாக முன்னேறி தெற்கே ‘டவாங்கை’ கைப்பற்றி விட்டனர். மேலும் அக்சாய்சின்னின் சிப்சாப் பள்ளத்தாக்கிலும் பாங்காங் ஏரி பகுதியிலும், கிழக்கே சிக்கிமில் நதுலா கணவாயிலும், இந்தியப் படைகளை சீன இராணுவம் தாக்கியது.

பேரழிவு அபாயமான கூடங்குளம்

தென்தமிழ் நாட்டுக்கு பேரழிவு அபாயமான கூடங்குளம் அணுஉலை
மத்திய அரசின் வஞ்சக ஏமாற்று வேலை!

#வைகோ அறிக்கை

கூடங்குளம் அணுஉலையை அகற்றக்கோரி, சுதந்திர இந்தியாவில் இதுவரை எங்கும் நடைபெற்றிடாத வீரம் செறிந்த அறவழிப்போராட்டத்தை, 700 நாட்க ளாகத் தொடர்ந்து அணுசக்தி எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினரும், பொதுமக்க ளும், குறிப்பாக மீனவப் பெருமக்களும், இடிந்தகரையை அறப்போர்க்கள மாக் கி நடத்தி வருகின்றனர்.

Monday, July 15, 2013

ஈழ விடுதலைக்கு வாக்கெடுப்பு நடத்துக-பகுதி 1

ஈழப்பிரச்சினையிலும், முல்லைப்பெரியாறு அணையிலும், தமிழருக்குத் துரோகம் இழைத்த இந்தியா!

சென்னை எம்.ஜி.ஆர். நகர் பொதுக்கூட்டத்தில் #வைகோ குற்றச்சாட்டு


“ஈழ விடுதலைக்கு வாக்கெடுப்பு நடத்துக” என ஐ.நா.வையும், இந்திய அரசை யும் வலியுறுத்தி, சென்னை எம்.ஜி.ஆர்.நகரில், 19.5.2012 அன்று பெரியார் திரா விடர் கழகம் சார்பில் நடைபெற்ற உரிமை முழக்கப் பொதுக்கூட்டத்தில், கழகப் பொதுச்செயலாளர் வைகோ எழுச்சியுரை ஆற்றினார். அவரது உரையில்
இருந்து....

தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச்சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்

இன்ப அதிர்ச்சி தந்த காஞ்சி!

தாம்பரம் நிதி அளிப்புப் பொதுக்கூட்டத்தில் #வைகோ

காஞ்சிபுரம் மாவட்ட மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில், 29.6.2013அன்று தாம்பரத் தில், கழக வளர்ச்சி நிதி - தேர்தல் நிதி அளிப்புப் பொதுக்கூட்டம் பேரெழுச்சி யுடன் நடைபெற்றது.நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் வைகோ ஆற்றிய உரையில் இருந்து....

வானம் துலங்கினும் மீனம் படினும், அலைகள் பொங்கினும் மலைகள் வீழி னும், தன்னிலை மாறாது தாய்த் தமிழகத்தின் விடியலுக்காகவும்,தரணியில் தமிழ் ஈழத் திருநாட்டின் விடுதலைக் கொடியை உயர்த்தவும், அறிவாசான் தந்தை பெரியார், தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா நிலை நாட் டிய இலட்சியங்களை வென்றெடுப் பதற்காகவும், இருபதாவது ஆண்டில்
களங்களுக்கு மத்தியில் கம்பீரமாகத் தலைநிமிர்ந்து நிற்கிற தமிழ்ப் பெரு மக் களின் கனிவான அன்பைப் பெற்று இருக்கின்ற மறுமலர்ச்சி திராவிட முன் னேற்றக் கழகத்தின், காஞ்சி மாவட்ட நாடாளுமன்றத் தேர்தல் நிதி வழங்கு கின்ற பொதுக்கூட்டத்தில், உங்களை எல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி
அடைகின்றேன்.

பெட்ரோல் விலை நிர்ணயம் அரசு ஏற்க வேண்டும்

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பெட்ரோல் விலை 120 சதவிகிதம் உயர்ந்தது! #வைகோ அறிக்கை!


மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, கடந்த ஒன்றரை மாதத்தில் நான்காவது முறையாக பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.1.95 ஆக உயர்த்தி இருக் கிறது. தற்போதைய விலை உயர்வையும் சேர்த்து, 44 நாட்களில் ரூபாய் 6.52 பெட்ரோல் விலை அதிகரித்திருக்கின்றது. இந்த அரசு 2004 இல் பதவி ஏற்ற போது, பெட்ரோல் விலை ரூபாய் 35.71 ஆக இருந்தது. இப்போது, 73.60 ஆக உள்ளது.

Sunday, July 14, 2013

ஈழத்தமிழர்கள் தனி நாடு கேட்கவில்லை-பகுதி 2

இன்றைக்கு மனித உரிமைகள் கவுன்சில், ஒரு நீர்த்துப்போன தீர்மானத்தை, மேலும் நீர்த்துப் போகச்செய்து நிறைவேற்றி இருக்கின்றது. கடந்த இருபதா வது அமர்வில், சிங்கள அரசுக்கு ஒரு பாராட்டுத் தீர்மானத்தை, இந்தியாவும், கியூபாவும் வரிந்து கட்டிக்கொண்டு ஆதரவு திரட்டி நிறைவேற்றினார்கள்.
29 நாடுகள் ஆதரித்தன, 8 நாடுகள் வாக்குப்பதிவில் கலந்து கொள்ளவில்லை. 12 நாடுகள் எதிர்த்து வாக்கு அளித்தன. அதைவிட இப்போது முன்னேற்றம் தானே என்கிறார்கள். ஒருவகையில் அது சரிதான். ஐ.நா.பொதுச்செயலாளர், மூவர் குழு விசாரணையை அறிவித்தார். உடனே உலகத்தை ஏமாற்ற, கொடிய வன் ராஜபக்சேவும் ஒரு குழுவை அறிவிக்கின்றான். கற்றுக் கொண்ட படிப் பினைகள், நல்லிணக்க ஆணையக் குழு என்றான். Lessons learned and Reconciliation
Commission-LLRC என்றான். உண்மையில் அது,Lies Launched and Renegade Commission
ஆகும். முழுக்க முழுக்கப் பொய்யான அந்த அறிக்கையைச் செயல்படுத்த வேண்டும் என்றுதான் தீர்மானம். இதை அமெரிக்கா முன்வைத்தது.

என்று அணையும் இந்த சா ‘தீ’?

சங்கொலி தலையங்கம்

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” - பிறப்பினால் ஏற்றத்தாழ்வு இல்லை என்று குறள் பேசும் மண்ணில்,

“சாதியிலே மதங்களிலே; சாத்திரம் சந்தடிகளிலே
கோத்திரச் சண்டையிலே; ஆதியிலே அபிமானிந்து அலைகின்ற உலகீர்!
அலைந்து அலைந்து வீணே நீர்
அழிதல் அழகலவே”

என்று வள்ளல் பெருமான் அருளிய அருட்பா பாடும் மண்ணில்,

கட்டாய இலவச கல்வி சட்டம் ?

அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டப்படி இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடக்கவில்லை என்று #மதிமுக குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக மதிமுகவின் மாநில இளைஞரணிச் செயலர் வே.ஈஸ்வரன், மாவட்ட ஆட்சியருக்கு 12.07.13 அன்று  எழுதிய கடித விவரம்:

தமிழகத்தில் இந்த ஆண்டு அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டப்படி 33 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளதாக மெட்ரிக் பள்ளி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

பனை தொழிலாளுக்கு மறுவாழ்வு தருக

ஆட்சியாளரிடம் மனு கொடுத்த #மதிமுக விவசாய அணி மாநில துணை செயலாளர் வரதராஜன் 

பனை ஓலையான பொருட்களுக்கு அரசு மானியம் வழங்கி இத்தொழிலாளர் களுக்கு மறுவாழ்வு தர வேண்டுமென மதிமுக கோரிக்கை விடுத் துள்ளது.

பெருகி வரும் மக்கள் தொகையும், கருகி வரும் இயற்கை வளங்களும் மனித சமுதாயத்தின் எதிர்காலம் குறித்து இன்றைய தினம் பல கேள்விகளை எழுப்புகிறது. அறிவியல் தொழில் நுட்பத்தால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிப்படைந்து வருகிறது என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாகும். 

Saturday, July 13, 2013

விளாத்திகுளம் தொகுதி முன்னாள் உறுப்பினர்

சங்கொலி இதயக்குரல் பகுதிக்கு விளாத்திகுளம் சட்டமன்றத்தொகுதி முன் னாள் உறுப்பினர் திரு.குமரகுருபர இராமநாதன் பேட்டியில் இருந்து ...

1972 ஆம் ஆண்டு, மதுரைக் கல்லூரியில், பி.ஏ. பட்டம் பெற்றேன். கல்லூரி நாள்களில், திருபுவனம் பாலுச்சாமி அவர்களோடு இணைந்து, மாணவர் 
தி.மு. க.வில் பணி ஆற்றினேன்.1969 இல் அண்ணா அவர்கள் மறைந்தபோது, மாணவ நண்பர்களோடு சென்னைக்கு வந்து கலந்து கொண்டேன். சட்டக் கல்லூரிக்குச் செல்ல விரும்பிய என்னை, என் தந்தையார் தொழிற்துறையில் புகுத்தினார்கள். 1973 ஆம் ஆண்டே எனக்குத் திருமணம் நடைபெற்றது. அதே ஆண்டில், கடம்பூர் தொடர்வண்டி நிலையத்தில், தலைவர் வைகோ அவர் களைப் பார்த்தேன். அவசர நிலைக்குப் பிறகு, பல இடங்களில் அவருடைய சொற்பொழிவைக் கேட்டேன். பொதுவாழ்வில், அவரைப் போல எளிமையாக, தூய்மையாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டேன். எங்கள் பகுதியில் கழகப் பணிகளில் ஈடுபட்டேன்.

ஈழத்தமிழர்கள் தனி நாடு கேட்கவில்லை-பகுதி 1

இழந்த சுதந்திரத்தை, தங்கள் தாயகத்தை மீட்கத் துடிக்கின்றார்கள்!

முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிர் ஈந்தவர்களுக்கு 3 ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார் பில், 17.5.2012 அன்று, சென்னை-வில்லிவாக்கத்தில், பழ.நெடுமாறன் தலைமை யில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்று கழகப்பொதுச் செயலளர் #வைகோ ஆற்றிய உரையில் இருந்து...

எங்கள் தோழர்களின் புதைகுழியில், மலர்தூவிப் பயணிக்கின்றோம்; கழுத்தில் நஞ்சைக் கட்டிய புலிகள், களங் கண்டு அஞ்சியது இல்லை. அவர்களது நிலத் தில் எதிரிகளை வீழ்த்திய நிகழ்வுகள் ஒன்றல்ல, இரண்டல்ல,எண்ணற்றவை. இந்த இரண்டையும் நம் நெஞ்சில் பதிக்கின்றவகையில், சூழலில் வடிவமைக் கப்பட்டு,ஒருபுறத்தில் தரணியில் தமிழனுக்குத் தன்மான முகவரியைத் தேடித் தந்த மாவீரர்திலகம் பிரபாகரன் அவர்களுடைய திருவுருவப் படம்; அவர் சுடர் ஏந்துகின்ற படம். இன்னொருபுறத்தில், ஈழத்தில், முள்ளிவாய்க்காலில், நந்திக் கடல் பகுதியில், கிளிநொச்சி, மன்னார்,விஸ்வமடு, அனந்தபுரத்தில் இலட்சக் கணக்கில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு, அவர்கள் சிந்திய இரத்தத் துளிகள் வீண்போகாது என்பதை, நினைவூட்டச் சூளுரைக்க, சுடர் ஏந்துகின்ற
வடிவமைப்பு.

விருதுநகர் பந்தலில்,முழுநாள் மாநாடு

தஞ்சாவூர் கூட்டத்தில் #வைகோ அறிவிப்பு

தஞ்சை - திருவாரூர் - நாகை மாவட்டக் கழகங்களின் சார்பில், 5.7.2013 அன்று, தஞ்சாவூரில் கழக வளர்ச்சி நிதி - தேர்தல் நிதி வழங்கும் விழா வெகு சிறப்பு டன் நடைபெற்றது. நிதியினைப் பெற்றுக் கொண்டு பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து.....

நெடிய வரலாறு படைத்த இந்தத் தஞ்சைத் தரணியில், தஞ்சை மாவட்டம், திரு வாரூர் மாவட்டம்,நாகை மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டங்களின் சார்பாக
நடைபெறுகின்ற, நாடாளுமன்றத் தேர்தல் நிதி, கழக வளர்ச்சி நிதி அளிப்புக் கூட்டத்தில், உங்களை எல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். கழகத்துக்கு புதியதோர் எழுச்சி தருகின்ற விதத்தில், இந்தத் தஞ்சை நகரில்,
நம்முடைய இலட்சியங்களைப் பறைசாற்றுகின்ற பதாகைகளை, பட்டயங் களை, நெடுகிலும் மிளிரச் செய்து, இந்த மண்டபத்தில் உங்களை எல்லாம் சந்திக்கின்ற இந்த வாய்ப்பை,தன் சக தோழர்களோடு சேர்ந்து அமைத்துத் தந்து வரவேற்று இருக்கின்றீர்கள்.

Thursday, July 11, 2013

இனப் படுகொலை கூட்டுக் குற்றவாளி திமுக

கட்சியின் அனுதினச் செலவுகளைச் சமாளிக்க, நிதியுதவியை வாரி வழங்கு வீர் என்று விளம்பரம் தருகிறார்.விருதுநகரில் மாநில மாநாடு நடத்துவதற் கான ஏற்பாடுகளில் பரபரக்கிறார் 'நாடாளுமன்றத் தேர்தலுக்கான முஸ்தீபு காள ? என்று கேட்டால் தோள் துண்டை முறுக்கிக்கொண்டு புன்னகைக்கிறார்  வைகோ ..

ஆனந்த விகடன் பேட்டியிலிருந்து ...

கேள்வி :- மதிமுக துவங்கி 20 ஆண்டுகளுக்குப் பிறகு,கட்சியை நடத்த, தாயகத்தை இயக்க என விளம்பரப்படுத்தி நிதி வசூலிக்க வேண்டிய நிலை நிலவுவது வருத்தம் அளிக்கவில்லையா ?

தமிழகம் என்ன குப்பை மேடா ?

கேரளாவில் உள்ள தொழிற்சாலை கழிவுகள், மருத்துவ கழிவுகளை அங்கி ருந்து லாரிகளில் இரவுநேரத்தில் ஏற்றி வந்து கோவையின் புறநகர் பகுதியில் கொட்டுவது தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட் களுக்கு முன்பு கேரள மாநிலம் கொச்சி விமான நிலைய கழிவுகளை ஏற்றி வந்து வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொண்டு வந்து கொட்ட முயன்ற லாரி ஒன்று பிடிபட்டது. இது தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.

இந்தநிலையில் கோவையை அடுத்த எல் அண்டு டி பைபாஸ் ரோடு–கோண வாய்க்கால்பாளையம், செட்டிப்பாளையம் ரோடு சந்திப்பில் கடந்த இரு தினத்திற்கு முன்  இரவு ஒரு லாரியில் கொண்டு வந்து ஒரு டன் மருத்துவ கழிவுகளை கொட்டியிருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக தகவல் கிடைத் ததும் மதிமுக  மாநில இளைஞர் அணி செயலாளர் வே.ஈஸ்வரன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார் இதுகுறித்து போத்தனூர் போலீசாருக் கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

உத்தரகாண்ட் உணர்த்தும் பாடம்

உத்தரகாண்ட் வெள்ளப் பெருக்கு உணர்த்தும் பாடம்:

நாட்டின் நதிகள் இணைக்கப்பட வேண்டும்!

உத்தரகாண்ட் மற்றும் இமாச்சல பிரதேசப் பகுதிகளில் ஏற்பட்ட பெரு வெள்ள மும் அதனால் விளைந்த உயிர்ச் சேதங்களையும் பொருட் சேதங்களையும் கண்ட பின்பாவது மத்திய அரசு விழித்தெழுந்து, மக்கள் தலைவர் வைகோ நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ‘நதிகள் இணைக் கப்பட வேண்டும்’ என்ற மசோதாவைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் நதிகள் இணைக்கப்பட்டால் வெள்ளச் சேதத்தையும், உயிர்ப் பலிகளையும் தவிர்த்து, வறட்சிப் பகுதிகளில் வளம் காணலாம் என் பது உத்தரகாண்ட் வெள்ளப் பெருக்கு மத்திய அரசுக்கு உணர்த்தும் பாடமாகும்.

Wednesday, July 10, 2013

தமிழரின் வீர வரலாற்று ஆவணம்-பகுதி 3

யாழ் கோட்டையைப் பிடித்து விட்டோம்; புலிக்கொடி பறக்கிறது; கோட்டை யை உடைத்து நொறுக்குவோம் என்று சொன்னான்.

இப்படிப் போராடக்கூடிய அந்த ஆற்றலில்தான் அங்கே இன்னொரு அதிசயம் நடந்தது. நீங்கள் கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா?

சிறைக்குள் இருந்து மண்ணை வெட்டிச் சுரங்கம் அமைத்து, அதன் வழியாகத் தப்பித்த சம்பவங்கள் நடந்து இருக்கின்றன. இரண்டாம் உலகப் போரின்போது,
ஜெர்மனியரின் சிறையில் இருந்து தப்பிச் சென்றவர்களைப் பற்றிய கிரேட் எஸ்கேப் (Great Escape) என்ற ஒரு படம் 1965 ஆம் ஆண்டு, சென்னை குளோப் தியேட்டரில் ஓடியது. ஜேம்ஸ் ஸ்டூவர்ட்தான் கதாநாயகன். நான் நான்கைந்து முறை அந்தப் படத்தைப் பார்த்து இருக்கிறேன்.

ஆலையை அகற்றும் வரை அறப்போர் தொடரும்

ஸ்டெர் லைட் நாசகார ஆலையை அகற்றும் வரை தொடர்ந்து போராடுவேன் - 
#வைகோ அறிக்கை

இன்று புதுடெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த ஆலை யில் மார்ச் 23 ஆம் தேதி நச்சுப் புகை வெளியேறி தூத்துக்குடி மக்கள் பாதிக்கப் பட்டு, தொடர் போராட்டங்கள் நடைபெற்று, மார்ச் 29 ஆம் தேதி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை மூட உத்தரவு பிறப்பித்தது. அதனை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் சென்னையில் உள்ள பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கு, டெல்லியில் உள்ள பசுமைத் தீர்ப்பாய முதன்மை அமர்வுக் கு மாற்றப்பட்டது.

சீனம் சிவந்தது ஏன்? - 3

1947 ஆகஸ்டு 15 இந்தியா விடுதலை பெற்றபோது, ஆங்கிலேயர்கள் தங்கள்
கட்டுப்பாட்டிலிருந்த இந்தியப் பகுதிகளின் வரைபடத்தைச் சுதந்திர அரசிடம் அளித்துச் சென்றனர்.இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் சார்பில் கடைசி கையொப்பமிட்ட மவுன்ட்பேட்டன் பிரிட்டனுக்கு அனுப்பிய அறிக்கையில் இணைக்கப் பட்டிருந்த இந்திய வரைபடத்தில் மக்மகான் எல்லைக் கோடு இந்தியாவின் எல்லையாகக் குறிக்கப் பட்டிருந்தது.மேற்கே அக்சாய்சின், கிழக்கே மக்மகான் கோடு - இவைதான் பிரிட்டிஷ் இந்தியா 1947-இல் உரு வாக்கி வைத்திருந்த இந்திய எல்லைகளாகும்.

இன்றைய மாநிலமான அருணாச்சலப் பிரதேசம் என்பதை வடகிழக்கு எல்லை
நிலப்பரப்பு (North East Frontier Area -NEFA) என்று ஆங்கிலேயர்கள் அதிகார பூர்வ மாக அழைத்து வந்தனர். இது போன்று வடமேற்கு எல்லை மாகாணம் (North West Frontier Province)  என்று மேற்கில் வடகோடி பிரதேசத்தை அழைத்தனர். ஒன்று ‘மாகாணம்’, மற்றொன்று ‘நிலப்பரப்பு’ என்று வேறுபடுத்திப் பார்க்கப் பட்டு இருந்தன.

தொழிலாளர்களின் வேலை நிறுத்தம்

என்.எல்.சி. தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு பங்குகள் விற்பனை முயற்சியைக் கைவிட வேண்டும்

#வைகோ அறிக்கை
பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி.யின் பங்குகளை விற்கக்கூடாது என்ற கோரிக்கையை மட்டும் முன் வைத்து, ஜூன் 3ஆம் தேதியில் இருந்து ஒருவார காலமாக என்.எல்.சி. தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ள னர். பதிமூன்றாயிரம் நிரந்தரப் பணியாளர்களும், பதிமூன்றாயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களும் ஒன்றினைந்து உறுதியுடன் போராட்டம் நடத்தி வருகின் றனர். மத்திய அரசின் தனியார்மயக் கொள்கைக்கு எதிராக, நாட்டின் அனைத் துப் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் வழிகாட்டக்கூடிய வகையில் போராடி வரும் என்.எல்.சி. தொழிலாளர்களுக்கு, வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவிக்கிறேன்.

Tuesday, July 9, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 30

குடியரசுத் தலைவர் மாளிகை காங்கிரஸ் சதி ஆலோசனை சபையா?

சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் ஆட்சி,பாரதிய ஜனதா கட்சியினால் கவிழ்க்கப்பட்டப் பிறகு,டெல்லி ஆட்சி பீடத்தில் நடைபெற்றவை ஜனநாயகத் தை கேலிக் கூத்தாக்கிவிட்டன.

இந்திய நாட்டு சரித்திரத்தில் இல்லாத வகையில், மத்தியில் 54 நாடாளுமன்ற
உறுப்பினர்களை வைத்துக் கொண்டு, சந்திரசேகர் -காங்கிரஸ் கட்சியின் ஆதர வுடன் ஆட்சி அமைத்தார்.ராஜீவ்காந்தியின் ஜனநாயக விரோத நடவடிக்கை கள் அனைத்தும் குடியரசுத்தலைவர் பதவி வகித்த ஆர்.வெங்கட்ராமன்ஆதரவு டன் நடைபெற்றது.

காவிரி உரிமை மீட்புக்குழுவினர் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்தியஅரசை வலியுறுத்தி சிதம்பரம் வடக்குவீதி தலைமை தபால் நிலையம் முன்பு காவிரி உரிமை மீட்புக்குழு வினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு காவிரி உரிமை மீட்புக்குழு ஆலோசகர் கி.வெங்கட்ராமன் தலைமை வகித்துப் பேசினார். அவர் பேசியதாவது:

தமிழகத்திற்கு கர்நாடகம் 489 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும் என்று 1924-ல் மைசூர் அரசுடன் ஒப்பந்தம் செய்தவன் வெள்ளையன். ஆனால் இன்று 192 டிஎம்சி கர்நாடகம் நீர் தர வேண்டும் என்று காவிரி தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பைக் கூட மத்தியஅரசு நிறைவேற்றித்தர மறுக்கிறது. கர்நாடக அணை களில் இருப்பில் உள்ள நீரில் 46 விழுக்காடு தமிழகத்திற்கும், 54 விழுக்காடு கர்நாடகத்திற்கு என பகிர்ந்து கொள்வதுதான் காவிரி தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பின் சாரம். ஆனால் நீர் தர மறுக்கும் கர்நாடகத்தின் அடாவடிக்கு மத்தியஅரசு கை கொடுக்கிறது.

எம்ஜிஆர் சத்துணவு திட்டம் -அரசு மெத்தனம்

ஆட்சியாளரிடம் மனு கொடுத்த #மதிமுக விவசாய அணி மாநில துணை செயலாளர் வரதராஜன் 

பள்ளிகளில் சத்துணவு சமைக்க தேவைப்படும் மசாலா பொருட்கள், விறகு, காய்கனிகளுக்கு முன் மானியம் வழங்க வேண்டுமென மதிமுக.,மாநில விவசாய அணி வலியுறுத்தியுள்ளனர்.

அன்றைய முதலமைச்சர் காமராஜர் ஆட்சியில் பள்ளிகளில் மதிய உணவு வழங்கும் திட்டம் துவக்கப்பட்டது. பின்னர் 1982ம் வருடம் மதிய உணவு திட்டத்தின் பெயரை மாற்றி சத்துணவு திட்டம் என்று முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பெயரிட்டார். வாரத்தில் 5 நாட்கள் உணவுடன் முட்டையை அரசு மாணவ, மாணவியருக்கு வழங்கி வருகிறது. 

தமிழரின் வீர வரலாற்று ஆவணம்-பகுதி 2

ஆகஸ்ட் 4 ஆம் தேதி, சுதுமலையில், பிரபாகரன் அவர்கள் ஆற்றிய உரையை நான் நினைவூட்டுகிறேன். இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்குப் பிறகு அவர் ஆற்றிய உரை.

சுதுமலையில் பேசுகிறபோது பிரபாகரன் சொன்னார்:

“நமது போராட்டத்தில் எதிர்பாராத ஒரு திருப்பம் ஏற்பட்டு விட்டது. ஒரு வல் லரசு, நம்மீது ஒரு ஒப்பந்தத்தைத் திணிக்கிறது. மகத்தான தியாகங்கள் செய்து, இரத்தம் சிந்தி, உயிர் கொடுத்து, நாம் உருவாக்கி வைத்த போராட்டத்தின் வடிவமே சிதைக்கப்படுகிறது. நம் மக்களைக் காப்பாற்றுகின்ற ஆயுதங்களை ஒப்படைக்கச் சொல்லி விட்டார்கள்.

ராஜாஜியும் மதுவிலக்கும்!

சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி என்ற ராஜாஜி 1879 இல் ஹோசூர் அருகில்
தொடிப்பள்ளியில் பிறந்தவர். 1972 டிசம்பர் 25 இல் மறைந்தவர். சுதந்திர இந்தி யாவின் ஒரே கவர்னர் ஜெனரல் (1948-1950) இந்திய அரசியல் ஞானி;மூதறிஞர்; எழுத்தாளர், பத்திரிகையாளர். இந்திய தேசிய காங்கிரசின் செயற்குழுவில் 1922 முதல் 1942 வரை பணியாற்றியவர். 1930 இல் வேதாரண்யம் உப்புச் சத்தியா கிரகப் போரில் தலைமை ஏற்றவர்.

மதராஸ் பிரசிடென்ஸியின் முதலமைச்சராக (1937-1939) இருந்தார். 1952- 1954 வரை சென்னை மாகாண முதலமைச்சராகவும் இருந்தவர். இவர் காலத்தில் மதுவை ஒழித்திட அவர் ஆற்றிய அரும்பணிகள், மதுவிலக்கு குறித்து அவர் தம் அரிய கருத்துகள் இதோ:

Monday, July 8, 2013

திருவாசகம் சிம்ஃபொனி விழா-வைகோ-பகுதி 3

ஆற்றல் எங்கிருந்து வந்தது?

நான் நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் சொன்னேன். இந்த நாட்டின் கவ னத்துக்கு வராமல் போன காரணத்தினால் சொன்னேன். ஒரு கொரியாக் காரன் சாதிக்காததை, சீனாக்காரன் சாதிக்காததை, ஜப்பான்காரன் சாதிக்கா ததை, ஓர் இந்தியன் - ஒரு தமிழன் - ஒரு தென்னாட்டுத் தமிழன் எங்கள் பண்ணைப்புரத்து இளையராஜா சாதித்து இருக்கிறார். அந்த இளையராஜாவுக்கு ஆற்றல் எங்கி ருந்து வந்தது? இது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக உலகத்தில் தோன்றிய முதல் இசை - தமிழ் இசை என்ற காரணத்தினால் தடைகளை உடைத்து எறிந் து கொண்டு, அந்தத் தென்னாட்டுத் தமிழன் இசையைப் படைத்து இருக்கின் றார். இசை எங்கே இருந்து வந்தது? சாம வேதத்தில் இருந்து வந்தது அல்ல. ‘ச ரி க ம ப த நி’ என்றார்கள். சட்சமம், ரிஷிபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிசாதம் - சரிகமபதநி என்று சொன்னார்கள்.

தமிழரின் வீர வரலாற்று ஆவணம்-பகுதி 1

‘பிரபாகரன் : தமிழர் எழுச்சியின் வடிவம்’ என்ற நூல் வெளியீட்டு விழா 13.4.2012 அன்று சென்னையில் சர். பிட்டி. தியாகராயர் அரங்கில் நடைபெற்றது. பழ.நெடு மாறன் அவர்கள் எழுதிய இந்நூலை வெளியிட்டு, கழகப் பொதுச் செயலாளர்
வைகோ அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து....

வானம் துளங்கினும், மீனம் படினும், அலைகள் பொங்கினும், மலைகள் வீழி னும், நெஞ்சுறுதி மாறாத மாவீரர் திலகம் பிரபாகரன், தமிழர் எழுச்சியின் வடி வம் என்ற வரலாற்றுப் பெட்டகத்தை, தரணிக்கும் தமிழ் இனத்துக்கும் உயிரோ வியமாகத் தீட்டித் தந்து இருக்கின்ற, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர்
ஆருயிர் அண்ணன் பழ. நெடுமாறன் அவர்களே,

ஆலயங்களில் தமிழ் ஒலிக்க போராடியவர் பழனியப்பனார்.

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை(7/7/13) நடைபெற்ற கி. பழனியப்பனார் நூற்றாண்டு விழாக் கருத்தரங்கத்தில் #வைகோ பேசியது:

தமிழின் பெருமை உலகறியச் செய்யும் வகையில் சமய நூல்களை எழுதியவர் பழனியப்பனார் என, மதிமுக பொதுச் செயலர் வைகோ புகழாரம் சூட்டினார்.

அறம் ஓங்க வேண்டும். ஆலயங்களில் தமிழ் ஒலிக்கவேண்டும் என்று போராடியவர் பழனியப்பனார்.

மறுமலர்ச்சி காண்போம்!

மனிதநேயம் காப்போம்; மறுமலர்ச்சி காண்போம்!

நிதி வழங்கிய வள்ளல்களுக்கு நன்றி!


இராமநாதபுரம் மாவட்டக் கழகத்தின் சார்பில், 27.06.2013 அன்று கழக வளர்ச்சி நிதி - தேர்தல் நிதி வழங்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.நிதியினைப் பெற்றுக் கொண்டு கழகப் பொதுச்செயலாளர் வைகோ ஆற்றிய உரையில் இருந்து....

வீரம் மணக்கின்ற இராமநாதபுரம் தியாகபூமியில், சரித்திரப் புகழ் பெற்ற பல களங்களைச் சந்தித்து இருக்கின்ற இந்த முகவை மண்ணில், இராமலிங்க விலாசத்துக்கு அருகில் இருக்கின்ற இந்தத் திடலில் எத்தனையோ கூட்டங் களில், நான் உரையாற்றி இருக்கின்றேன். இன்றுபோல், மக்கள் கடல் திரண்டு இருக்கக்கூடிய ஒரு கூட்டத்தை இதற்கு முன்பு நான் இங்கே சந்தித்தது இல்லை. கண்ணுக்கு எட்டிய தொலைவுக்கு அப்பாலும் கட்டுக்கு அடங்காமல்
பல்லாயிரக்கணக்கில் திரண்டு இருக்கின்ற தமிழ்ப்பெருமக்களின் நம்பிக்கைக் கு உரிய இயக்கமாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் திகழ்கின்றது. கட்சிகளைக் கடந்து, சாதி மத எல்லைகளைக் கடந்து நடுநிலையாளர்கள் இங்கே வந்து குவிந்து இருக்கின்றார்கள் என்றால், நாங்கள் நாணயமானவர்
களாக, அரசியல் ஒழுக்கம் உள்ளவர் களாக, இலட்சியங்களுக்குப் போராடு
கின்றவர்களாக, உங்கள் நம்பிக் கையைப் பெற்று இருக்கின்றோம்.

Sunday, July 7, 2013

மதுரை மாவட்ட நிதி வழங்கும் விழா

மதுரை மாநகர் மாவட்ட #மதிமுக சார்பில் #வைகோ கலந்து கொண்ட தேர்தல் நிதி வழங்கும் விழா மதுரை காமராஜர் சாலையில் உள்ள செல்லம் சரசுவதி திருமண மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.

மாநகர் மாவட்ட செயலாளர் புதூர் பூமிநாதன் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் சின்ன செல்வம், நிர்வாகிகள் சிவந்தியப்பன், மனோகரன், சுருதி ரமேஷ், மகபூப் ஜான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இளைஞர் அணி கூட்டம் -பகுதி 2

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அருள்: 

என் சொந்தஊர், தூத்துக்குடி மாவட்டம் லட்சுமிபுரம். தற்போது தூத்துக்குடி மாவட்டச் செயலாராக இருக்கின்ற தம்பி ஜோயல், என்னுடைய சித்தப்பா மகன் தான். 

1989 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், ஐயா கே.பி.கே.அவர்கள் திருச் செந்தூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றபோது, பத்து வயதுச் சிறுவனாக இருந்த நான் மொட்டை அடித்துக் கொண்டேன்.எங்கள் வீட்டு இரும்புக்கதவில்
உதயசூரியன் சின்னம் பொறித்து இருந்தேன். வைகோவை கட்சியை விட்டு நீக்கியபோது, அந்தக் கதவைக் கழற்றி வைத்து விட்டு, பம்பரம் சின்னம் பொறித்து புதுக் கதவு செய்து மாட்டினேன்.

மீனவர் போராட்டத்தில் மதிமுக

தூத்துக்குடி மாவட்டத்தின் கடற்கரையோரப் பகுதிகளில் மணல் அள்ளப்படு வதைத் தடுக்க வலியுறுத்தி மீனவர் விடுதலை இயக்கம் சார்பில் தூத்துக்குடி யில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மீனவர் விடுதலை இயக்க பொதுச்செயலர் அலங்காரபரதர், மதிமுக மாநில மீனவரணிச் செயலர் நக்கீரன், நிர்வாகிகள் மனோஜ்குமார், மரியசெல்வம், ஜான்சன், அமலரசு மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்கள் கலந்து கொண்டனர்.

இயற்கை எரிவாயு விலைக் கொள்கை(ளை?)

சங்கொலி தலையங்கம்

மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு பன்னாட்டு நிதிநிறுவனங்கள், உள்நாட்டுப்
பெரு முதலாளிகளுக்கான அரசு என்பதை மீண்டும் மீண்டும் மெய்ப்பித்து வரு கின்றது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து
கடந்த ஒன்பது ஆண்டுகளாகக் கடைபிடிக்கப்பட்டு வரும் நாசகார பொருளா தாரக் கொள்கைகளால் ரூபாயின் மதிப்பு 60.73 என்ற அளவுக்கு வரலாறு காணாத வீழ்ச்சியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றது.

இதையே காரணம் காட்டி இந்த அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு
விலைகளைத் தாறுமாறாக உயர்த்திக் கொண்டே போகிறது. பணவீக்கம் விகிதம் அதிகரிப்பதால் விலைவாசி கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் கடுமை யாக உயர்ந்து விட்டது. சாதாரண, ஏழை, எளிய மக்கள் மட்டுமின்றி மாத
ஊதியம் பெறுவோர்கூட சமாளிக்க முடியாத அளவுக்கு விலைவாசி ஏற்றம் நாளுக்கு நாள் மக்களை வாட்டி வதைக்கிறது.

விமானி பிரவீணுக்கு வைகோ அஞ்சலி

உத்தரகண்ட் மாநில மீட்புப் பணியில் ஈடுபட்டபோது விபத்தில் பலியான விமானி பிரவீண் அவர்கள் இல்லத்தில் #வைகோ அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல்.

இன்று(7/7/2013 ) காலை 8.30 மணிக்கு ,உத்தரகண்ட் மாநில மீட்புப் பணியில் ஈடுபட்ட போது விபத்தில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த ஹெலிகாப்டர் விமானி ஃபிளைட் லெப்டினன்ட் பிரவீண் அவர்கள் இல்லத்திற்கு சென்ற தலைவர் வைகோ அவர்கள் விமானி பிரவீண் அவர்களின் படத்திற்கு மாலை அணி வித்து மரியாதை செய்தவர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பிரவீன் குடும்பத் தாருடன் இருந்து பிரவீண் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.. இன்று பிரவீனின் பிறந்த நாள்..

Saturday, July 6, 2013

விருதுநகரில் மதிமுக மாநாடு

விருதுநகரில் மதிமுக மாநாடு - தலைவர் வைகோ இடம் தேர்வு

செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு வருடம்தொரும் மதிமுக சார்பில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.. இந்த வருடம் விருதுநகரில் மாநாடு நடைபெறுகிறது.. தலைவர் வைகோ இன்று விருதுநகர் அருகில் உள்ள சூளக்கரையில் மாநாடு நடைபெறும் இடத்தை பார்வையிட்டு தேர்வு செய்தார்..  

பிரபல பந்தல் அமைப்பாளர் தஞ்சை பந்தல் சிவா மற்றும் மவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி, மாவட்ட அவைத்தலைவர் ஆசிரியர் நாராயணசாமி, மாவட்ட துணை செய லாளர்கள் இலட்சுமணன், சிவசக்தி குமரேசன், நகர செயலாளர் இராமர், வழக் கறிஞர் ரவீந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்..

இளைஞர் அணி கூட்டம் -பகுதி 1

மாற்று சக்தி மறுமலர்ச்சி தி.மு.கழகம்தான் என
மக்கள் மன்றம் பேசுகின்றது; புறம் சிறப்பாக இருக்கின்றது;
அகப்பணிகளை ஆற்றுங்கள்; அமைப்புகளை வலுப்படுத்துங்கள்!

மறுமலர்ச்சி தி.மு.க. இளைஞர் அணி மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள்,துணை அமைப்பாளர்கள் கூட்டம் 22.06.2013 அன்று தாயகத் தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்றோர் ஆற்றிய உரைகளில் இருந்து...

வே. ஈஸ்வரன் (மாநில இளைஞர் அணிச் செயலாளர்):

தமிழ் இனத்தைக் காக்கவும், தமிழகத்தை வளப்படுத்தவும், கடந்த இருபது
ஆண்டுகளாக நாம் பாடுபட்டுக் கொண்டு இருக்கின்றோம்.இன்றைக்குத் தமி ழக அரசியல் களத்தில்,எந்தக் கொள்கைகளைப் பேச வேண்டும்? எதற்காகப் போராட வேண்டும்? என்ற அடிப்படையை எடுத்துக் கொடுப்பது மறுமலர்ச்சி
தி.மு.கழகம்தான். ஈழத்தமிழர்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது
கழகம்தான். அதன் விளைவாகத்தான்,இன்றைக்குத் தமிழகத்தின் அனைத்து
அரசியல் கட்சிகளும், அதைப் பற்றிப் பேசுகின்ற நிலைமை உருவாயிற்று.
அதைப்போலத்தான், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை.அதற்கான போராட்டக் களத்தை அமைத்ததும் மறுமலர்ச்சி தி.மு.கழகம்தான்.

மதிமுக மீது மக்களின் நன்மதிப்பு

நாடாளுமன்றத்தில் இந்த முறை மதிமுகவின் குரல் ஒலிக்கும் என்றார் #மதிமுக பொதுச் செயலர் #வைகோ.

தஞ்சாவூரில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட மதிமுக சார்பில் வெள்ளிக் கிழமை (05.07.13 ) இரவு நடைபெற்ற கழக வளர்ச்சி நிதி, தேர்தல் நிதியளிப்பு வழங்கும் விழாவில் அவர் மேலும் பேசியது:

முல்லைப் பெரியாறு பிரச்னை, ஈழத் தமிழர்கள் பிரச்னை, உர விலை உயர்வு, ராஜபட்ச வருகை எனப் பல்வேறு பிரச்னைகளுக்கு போராட்டம் நடத்திய இயக்கம் இது.

உணவு பாதுகாப்புச் சட்டம்

உணவு பாதுகாப்புச் சட்டம் 
பொதுவிநியோக முறையை சீர்குலைத்துவிடும்!
#வைகோ கண்டனம்

மக்களாட்சி நடைமுறைகளையும் நாடாளுமன்ற ஆட்சிமுறையையும் கேலிக் கூத்து ஆக்குவதை மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு தொடர்ந்து செய்து வரு கின்றது. நாடாளுமன்றத்தின் மாண்பை குறைத்து, அரசியல் சட்ட நெறிமுறை களை குழிதோண்டி புதைத்து வருகின்றது. இதற்கு தற்போதைய எடுத்துக் காட்டு, தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை அவசர அவசரமாக கொண்டு வந்துள்ளதைக் கூறலாம்.

Friday, July 5, 2013

இளவரசனின் துயர மரணம்

இளவரசனின் துயர மரணம், கடும் அதிர்ச்சி தருகிறது!
வைகோ அறிக்கை! 


தருமபுரி மாவட்டம் நத்தம் காலனியைச் சேர்ந்த இளைஞனான இளவரசன் இரயில்வே பாதைக்கு அருகில் உயிரற்ற சடலமாக கிடந்தார் என்ற செய்தி தாங்க முடியாத அதிர்ச்சியைத் தருகிறது.

வாலிப மனங்களில் காதல் உணர்வுகள் மலர்வதும், ஒரு இளைஞனும் இள நங்கையும், ஒருவரையொருவர் நேசிப்பதும், திருமண வாழ்வை அமைத்துக் கொள்வதும், மனிதகுல வாழ்க்கைக்கு எழில் கூட்டும் நிலைப்பாடு ஆகும்.

Thursday, July 4, 2013

தலைமை நீதிபதி 2 ஆண்டுகள் நீடிக்க வேண்டும்!

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி இரண்டு ஆண்டுகள் நீடிக்க வேண்டும்!
#வைகோ அறிக்கை

தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மண்டகுளத்தூரில் பிறந்த பதஞ்சலி சாஸ்திரி, 1952 ஆம் ஆண்டில், இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பு ஏற்றார்.

61 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகம் தந்த நீதிபதி சதாசிவம் அவர்கள் அப்பதவி யை ஏற்பது மகிழ்ச்சி அளிக்கின்றது.மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத் தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Wednesday, July 3, 2013

ஈழத்தமிழ் இனத்தின் விம்மல் ஒலி-பகுதி 2

தமிழ் ஈழத்தின் நியாயத்தைத் தரணிக்கு எடுத்துச் சொல்லும்! #வைகோ 

நீங்கள்தான் உடனுக்குடன் குறுஞ்செய்திகள் வழியாக எத்தனையோ பேருக் குச் செய்திகளை அனுப்பிக் கொண்டு இருக்கின்றீர்களே? அப்படி உங்கள் நண் பர்களுக்குச் செய்திகளை அனுப்புங்கள். இந்தப் படத்தைப் பாருங்கள் என்று சொல்லுங்கள்; இன்று இரவில் இருந்தே இந்தப்பணியைச் செய்யுங்கள்.பார்க்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துங்கள்.

நஞ்சை அருந்தி மடிந்தார் சாக்ரடீஸ்.அப்போது,கிரேக்கம் அவரைப் பற்றி அதிக மாகக் கவலைப்படவில்லை.தீர்ப்பில் அவருக்குப் பெரும்பான்மை கிடைக்கா விட்டாலும், அவர் நிரபராதி, குற்றம் அற்றவர் என்று அப்போது சொன்னவர் களும் உண்டு. அவர் இறந்தது, கி.மு. 399.

தமிழ்வழிக் கல்வி

தமிழ்நாட்டில் பயிற்று மொழியாகவும், தேர்வுமுறையாகவும் தமிழ் இருந்து
வந்ததை ரத்து செய்து ஆங்கிலம் பயிற்று மொழியாகவும், தேர்வுமுறையாக வும் மாற்றப்படும் என்று கல்வி அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தவுடன்
தலைவர் வைகோ உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்து தமிழக
அரசின் முடிவை மாற்றிக்கொள்ள கண்டன அறிக்கைகள் விடப்பட்டு போராட் டத்திற்கு நாள் குறிக்கப்பட்டது.

தோழர் மணியரசன் ஏற்பாட்டில்,28.5.2013 அன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை தலைமையகத்தை தடையை மீறி முற்றுகைப் போராட் டம் கைது, பின்னர் கண.குறிஞ்சி ஏற்பாட்டில் 1.6.2013 அன்று சென்னை லயோ லா கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கம், 5.6.2013 அன்று சென்னை
திருவல்லிக்கேணி தொழிலாளர் நல அரங்கில் நடைபெற்ற ஆலோசனைக்
கூட்டம், அதனைத் தொடர்ந்து 17.6.2013 அன்று மாவட்டத் தலைநகரங்களில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டங்களிலும் பல்வேறு தமிழ் அமைப்புகள் பங்கேற்ற போதிலும், அரசியல் கட்சிகளில் இப்போராட்டங்களில் கலந்து கொண்ட ஒரே கட்சி மதிமுக மட்டுமே.

தொடரும் கூட்டுச் சதி!

இனப்படுகொலைக் கூட்டுக் குற்றவாளிகள் தில்லியில் சந்திப்பு; 
தொடரும் கூட்டுச் சதி! 
13 ஆவது அரசியல் சட்டத் திருத்த ஆலோசனை எனும் மாய்மால வலை! வைகோ அறிக்கை!

வரலாற்றில் நடைபெற்ற கொடூரமான மனிதப் பேரழிவுகளுள் ஒன்றான ஈழத் தமிழர் இனப்படுகொலையை நடத்திய சிங்கள அரசின் போர்முகங்களில் ஒரு வனான பசில் இராஜபக்சேவை புது தில்லிக்கு வரவழைத்து, ஜூலை 4 ஆம் தேதி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்துடன் பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறார்கள்.

Tuesday, July 2, 2013

கோவை மதிமுக மாணவரணி நிகழ்ச்சி

கோவை மாவட்ட மதிமுக மாணவரணியின் சார்பாக கோவை கல்வி மாவட்டத்தில் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் மாவட்ட அளவில் முதல்,இரண்டு,மற்றும் மூன்றாம் இடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியருக்கு சால்வை அணிவித்து நினைவுக் கேடயம் மற்றும் பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது. அந்நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்



கட்டாய இலவச கல்வி சட்டம் விதி மீறல் ?

அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி சட்டத்தின்கீழ், முறை யான வழி முறை யில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என மதிமுக வலியுறுத் தியுள்ளது. மதிமுக மாநில இளை ஞர் அணி செயலாளர் ஈஸ்வரன் வெளி யிட்டுள்ள அறிக்கை:

அனைவருக்கும் கட் டாய இலவச கல்வி உரிமை சட்டம் கொண்டுவந்த நோக் கம் முழுமையாக நிறைவேறவில்லை. இச்சட்டத்தின்படி, மாணவர் சேர்க்கை யில் சரியான நடை முறையை பள்ளிக்கல்வி துறை பின்பற்றவில்லை.

ஈழத்தமிழ் இனத்தின் விம்மல் ஒலி-பகுதி 1

ஈழத்தமிழ் இனத்தின் விம்மல் ஒலி: ‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படம்!

இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த ‘உச்சித னை முகர்ந்தால்’ திரைப்பட வெளியீட்டு விழா நிகழ்ச்சி சென்னை முத்துரங் கன் சாலையில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு கழகப் பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய உரை வருமாறு:-

உச்சிதனை முகர்ந்தால் உள்ளங்கால் வரைச் சிலிர்க்குதடி, ஓடி உனை அணைத்தால் இன்பம் கோடி துளிர்க்குதடி’ என்ற, நெஞ்சை உருக்கும் ஒரு சோகக் காவியத்தின் பாடல் வரிகளை, உங்கள் அலைபேசிகளே ஒலிக்க விடுங்கள் என்ற வேண்டுகோளை முன்வைத்த, தமிழ் ஈழ விடுதலைக் களத் தில் சிந்தனையாளராக, எழுத்தாளராக, மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்களை
ஈழத்துக்குச் சென்று சந்தித்த நினைவை நெஞ்சில் தாங்கிக் கொண்டு, காற்றுக்
கென்ன வேலி திரைப்படத்தையும்,உச்சிதனை முகர்ந்தால் எனும் இச்சோக
காவியத்தையும் இயக்கி வழங்கி இருக்கின்ற, ஆருயிர்ச் சகோதரர் புகழேந்தி தங்கராஜ் அவர்களுடைய திரைக்காவியத்தை, மக்கள் மன்றத்துக்கு எடுத்துச் செல்லச் சூளுரைக்கின்ற வகையிலே நாம் இங்கே திரண்டு இருக்கின்றோம்.

டீசல் விலை உயர்வு திரும்பப் பெறவேண்டும்

இயற்கை எரிவாயு - டீசல் விலை உயர்வைத்திரும்பப் பெற வேண்டும்
வைகோ அறிக்கை

மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, ஒரே மாதத்தில் மூன்று முறை பெட்ரோல் விலையை உயர்த்தியது.எரிகின்ற நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல, தற் போது டீசல் விலையை 50 பைசா உயர்த்தி உள்ளது.கட்டுக்கடங்காத விலை வாசி உயர்வால் மக்கள் அல்லல்படும்போது, பெட்ரோல் டீசல் விலைகளை பத்து நாள்களுக்கு ஒருமுறை உயர்த்திக் கொண்டே இருக்கின்றார்கள்.

திரைப்படங்களில் மது ஒழிப்பு!

முதன் முதலில் தமிழில் பேசிய, பாடிய சினிமா காளிதாஸ். இப்படம் 1931
அக்டோபர் 31 அன்று திரைக்கு வந்தது.ஆரம்ப காலத்தில் தீண்டாமை ஒழிப்பு,
குழந்தைகள் திருமணக் கொடுமை,வரதட்சணைக் கொடுமை, ஆலயப் பிர வேசம், மது ஒழிப்பு போன்ற கொள்கை களை மையப்படுத்தி வெளிவந்தது.இது போன்ற படத்தின் விமர்சனங்களை தினமணி, ஆனந்த விகடன், குண்டூசி,
குமரிமலர், பேசும்படம் (திரைப்பட மாத இதழ்), பொம்மை, ஜனசக்தி போன்ற
பத்திரிகைகள் வெளியிட்டன.

தியாக பூமி என்ற திரைப்படத்தில் மது ஒழிப்பிற்காக கீழ்க்காணும் பாடல் பாடப் பட்டது.

Monday, July 1, 2013

தமிழ் ஈழம் மலரும்-பகுதி 4

மக்கள் வாழ்வதற்காக அவர்கள் இந்த அணையைக் கட்டி வைத்தார்கள் அன் றைக்கு. அதன் மூலம் நாங்களும் பயன்பெறுகிறோம். உங்களுக்கும் வாழ்வு
கொடுக்கிறோம். ஆக, இரண்டு மாநிலங்களுக்கும் வாழ்வு அளிக்கக்கூடிய அணை இது. நீங்கள் அணையை உடைத்துவிட்டால் புதியஅணை கட்டி ஒரு சொட்டு தண்ணீர் எங்களுக்குக் கொடுக்கப் போவது இல்லை.கொடுக்க முடி யாது உங்களால்.

புதிய அணை கட்டுவதற்கு உங்களுக்கு ஆட்சேபனை உண்டா? என்று உச்ச நீதி மன்றம் ஒரு கேள்வியை கேட்டது. நான் மிகுந்த மனவருத்தத்தோடு சொல் கிறேன். அன்றைய தமிழக அரசினுடைய வழக்கறிஞர் சொன்னார், எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை; அணையின் கட்டுப்பாட்டை எங்களிடத்தில் தந்தால் போதும் என்று.

ஆதரவு கரம் நீட்டுவீர் - வைகோ

ஆதரவுக் கரம் நீட்டுவீர் ; நிதி அள்ளித் தருவீர் -வைகோ வேண்டுகோள் 

சீனம் சிவந்தது ஏன்? - 2

இந்திய மண்ணை ஆக்கிரமித்த சீனா

1962 அக்டோபர் 20 இந்தியா மீது சீனா போர் தொடுத்து 50 ஆண்டுகள் உருண் டோடிவிட்டன. இந்திய-சீனப்போரின் விளைவாக, எல்லையில் மேற்கே காஷ் மீரின் அக்சாய்சின் பகுதியில் 43,180 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு பகுதியை சீனா ஆக்கிரமித்துக் கொண்டது.

ஆனால், கிழக்கே அருணாசலப் பிரதேசத்தில், சீனாவுக்குச் சொந்தமான 90,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு பகுதியை இந்தியா கைவசப்படுத்திக் கொண்ட தாக சீனா அக்கிரமமான குற்றச்சாட்டை முன்வைத்தது.