Monday, July 8, 2013

தமிழரின் வீர வரலாற்று ஆவணம்-பகுதி 1

‘பிரபாகரன் : தமிழர் எழுச்சியின் வடிவம்’ என்ற நூல் வெளியீட்டு விழா 13.4.2012 அன்று சென்னையில் சர். பிட்டி. தியாகராயர் அரங்கில் நடைபெற்றது. பழ.நெடு மாறன் அவர்கள் எழுதிய இந்நூலை வெளியிட்டு, கழகப் பொதுச் செயலாளர்
வைகோ அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து....

வானம் துளங்கினும், மீனம் படினும், அலைகள் பொங்கினும், மலைகள் வீழி னும், நெஞ்சுறுதி மாறாத மாவீரர் திலகம் பிரபாகரன், தமிழர் எழுச்சியின் வடி வம் என்ற வரலாற்றுப் பெட்டகத்தை, தரணிக்கும் தமிழ் இனத்துக்கும் உயிரோ வியமாகத் தீட்டித் தந்து இருக்கின்ற, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர்
ஆருயிர் அண்ணன் பழ. நெடுமாறன் அவர்களே,


விழுமிய தலைமை ஏற்று இருக்கின்ற உணர்ச்சிக் கவிஞர் ஆருயிர்ச் சகோதரர் காசி. ஆனந்தன் அவர்களே, தியாகத் தழும்புகளைப் பெற்ற, பொது உடைமை
இயக்கத்தினுடைய புகழ் வாய்ந்த தலைவர்களுள் ஒருவரான அன்புமிக்க அண்ணன் நல்லகண்ணு அவர்களே,

படைக்கலங்கள் பயிற்சிக் கூடங்களாகத் தமிழகத்திலே அமையட்டும்; ஒரு காட்டுப் பாதையில் தோட்டம் ஒன்றைத் தேர்ந்து எடுத்து, நாங்கள் அனுப்பி வைக்கின்ற இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சிக்கு ஏற்பாடு செய்யுங்கள்என்று,  நாம் நெஞ்சால் நேசித்துப்போற்றுகின்ற பிரபாகரன் அவர்கள், அண்ணன் நெடு மாறன் அவர்களுக்குக் கடிதம் எழுதியபோது, அதற்காக அவர் நேரடியாகச் சென்று தேர்ந்து எடுத்த இடங்களுள் ஒன்று, கொளத்தூரை அடுத்த புலியூர்;
மற்றொன்று திண்டுக்கல் சிறுமலை. அந்தப் பயிற்சிக்கூடத்தையும் அமைத் துக் கொடுத்து, போர்க்களங்களில் உலவிய தோழர்களோடு களத்துக்கும் சென்று வந்த, இங்கே உரை ஆற்றிய ஆருயிர்ச் சகோதரர் கொளத்தூர் மணி அவர்களே,


பேரன்புக்குரிய சகோதரர் மணியரசன் அவர்களே,அன்புமிக்க பரந்தாமன் அவர் களே,தொகுத்துத் தந்த முனைவர் ஜெயராமன் அவர்களே,வரவேற்ற முத்தமிழ்
மணி அவர்களே,

நூலின் படிகளைப் பெற்றுக்கொண்ட அன்புக்குரிய கணக்காயர் பாலசுப்பிர மணியம் அவர்களே, மதுரா டிராவல்ஸ் பாலன் அவர்களே, சந்திரேசன் அவர் களே, திருச்சி செளந்தரராசன் அவர்களே,

உணர்ச்சி கொந்தளிக்கத் திரண்டு இருக்கின்ற தமிழ்ப் பெருமக்களே, செய்தி யாளர்களே,ஊடகங்களின் ஒளிப்பதி வாளர்களே, எனது சிரந்தாழ்ந்த வணக்கம்.

வாழ்நாளில் பெறற்கரிய ஒரு பேற்றினை எனக்கு வழங்கிய அண்ணன் நெடு மாறன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டு இருக்கின்றேன்.

அவரது அருமை மகள் பூங்குழலிக்கு, உன் அன்பு மாமா பிரபாகரன் என்று எழு திய கடிதத்தை, 1207 பக்கங்கள் கொண்ட இந்த நூலிலே காணலாம். நான் திரும்பத்திரும்ப இந்த 1207 பக்கங்களையும் படித்து இருக்கின்றேன். தமிழர் களின் வரலாற்றில் ஏற்பட்ட ஒரு பெருங்குறையை, இந்த நூல் போக்குகிறது.

மேதினி மெச்ச வாழ்ந்த தமிழர்களின் பழமையான வரலாற்றுக்குச் சரியான ஆவணங்கள் கிடையாது. சங்க இலக்கியங்கள் உண்டு; காவியங்கள் உண்டு; வீரம் மணக்கும் புறப்பொருள் வெண்பா மாலையும், புறநானூறும், பத்துப் பாட்டும் உண்டு. ஆனால், இந்தத் தரணியில் இவர்களுக்கு நிகராகச் சிறந்து எவரும் வாழ்ந்தது இல்லை என்ற பெருமையை நிலை நாட்டத்தக்க விதத்தில், ஆதாரங்களைக் காட்டக்கூடிய வகையில், சரியாக ஆவணப்படுத்தவில்லை தமிழன்.

ஆனால், இனி ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் மேற்கோள் காட்டத் தக்கதாக இந்த நூல் தமிழர்களின் ஒரு வீர வரலாற்றுக்கு ஆவணமாகி இருக் கின்றது.(பலத்த கைதட்டல்).

நான் பேச எழுந்ததற்கு முன்பு அண்ணன் நெடுமாறன் அவர்கள், நீங்கள் நெடு நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும்;நான் பேச இருப்பதாகக் கருதாதீர்கள்;ஐந்து பத்து மணித்துளிகளுக்குள் நன்றி மட்டும்தான் சொல்லப் போகிறேன் என்றார்.

வாழ்க்கையில் இதைவிடப் பெரிய வாய்ப்பாக நான் வேறெதையும் கருதப் போவது இல்லை. (கைதட்டல்)

இந்த நூலில் பல கேள்விகளுக்கு விடை இருக்கின்றது. நம்முடைய எதிரி களின் விமர்சனங்களுக்குப் பதில் இருக்கின்றது. பல புதிர்கள் அவிழ்க்கப்பட்டு இருக்கின்றன.

1982 ஆம் ஆண்டு, சென்னை மத்தியச் சிறையில் பிரபாகரனைச் சந்தித்தபோது,
இந்த வீர வாலிபன் பேபி சுப்பிரமணியத்தோடு தம் இல்லத்துக்கு வந்தவர் தானே என்று அவர் உணருகிறார்.அங்கே தொடங்கி, இந்த நூலில் செய்திகள்
வேகமாக வருகின்றன. நானும், இந்த நூலில் என்ன செய்திகள், இந்த நாளில், இந்த அரங்கத்தில் பதிவாக வேண்டுமோ, அவற்றை மட்டும், ஒரு பருந்துப் பார்வையில் சொல்ல விரும்புகிறேன்.

1983 ஜூலை மாதம் இனக்கலவரம் நடக்கிறது. இந்திரா காந்தி அம்மையார், இந்திய நாட்டின் தலைமை அமைச்சர். நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில், ஆகஸ்ட் திங்கள் 16 ஆம் நாள், ‘இலங்கைத் தீவில் நடப்பது இனப்படுகொலை’ என்று தம்முடைய கருத்தைப்பதிவு செய்தார்.ஆனால்,இந்த ஆண்டில்அண்மை யில் நடைபெற்ற ஒரு விவாதத்தில், ‘இனப்படுகொலை’ என்று குறிப்பிட்ட போது, அந்தச் சொல், நாடாளுமன்றக் குறிப்பு ஏட்டில் இருந்து அகற்றப்பட்டது.

அடப் பைத்தியக்காரர்களே,1983 ஆம் ஆண்டு இந்திராகாந்தி சொன்னாரே, அந்த ஆவணத்தைக் கொளுத்தப் போகின்றீர்களா? (பலத்த கைதட்டல்).

தமிழகம் எரிமலையாகக் காட்சி அளித்தது. நேற்று முன்தினம் நில அதிர்வு ஏற் பட்டபோது மக்கள் எப்படிப் பதற்றம் அடைந்தார்களோ அதைப்போல, பூகம்பம்
விளைந்தாற்போலத் தமிழர் மனங்கள் நடுங்கின.அப்போது, நான் இந்த வங்கக் கடல் கடந்து செல்வேன்; இராமேஸ்வரத்தில் இருந்து புறப்படுவோம் என்று
அண்ணன் நெடுமாறன் அவர்கள் தமிழர் தியாகப் பயணம் புறப்பட்டு விட்டார்.

மதுரையில் இருந்து புறப்பட்டார். வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கிலே மக் கள் திரளுகின்றார்கள்.தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களும், அன்றைய
முதல்வர் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுடைய அமைச்சர்களும் வந்து, ‘பயணத்தை நிறுத்தலாமா?’ என்று கேட்கிறார்கள். அதற்கு அவர் இசைவு
அளிக்கவில்லை.

இராமேஸ்வரத்தில் இருந்து படகுகள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டன. அதை யும் மீறி ஒரு படகில் ஏறிப் புறப்பட்டபோது, கடலில் கைது செய்யப்பட்டு, கரைக்குக் கொண்டு வரப்பட்டு, விடுவிக்கப்படுகிறார். இது, ஆகஸ்ட் மாதம்
நடைபெறுகிறது.

நவம்பரில் சட்டமன்றம் கூடுகிறது. 15 ஆம் தேதி இந்தப் பிரச்சினை விவாதத் துக்கு வருகிறது. படகுகள் அப்புறப்படுத்தப்பட்டன என்ற குற்றச்சாட்டு வரு கிறது.அப்போது, முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். பேசுகிறார்: இராமேஸ்வரத்தில் படகுகளை அப்புறப்படுத்தியதாக, இந்த மன்றத்தில் விமர்சனங்களை முன் வைத்தார்கள்.நான் கேட்கிறேன்: ஒரு நெடுமாறனை இழந்துவிட்டால், இன் னொரு நெடுமாறனை நாம் பெற முடியுமா? அவர் மீது தாக்குதல் நடத்தப்பட் டால், அவர் மீது குண்டுகள் பாயுமானால், அதைத் தடுப்பதற்கு அவரிடம் துப் பாக்கி இருக்கிறதா? தடுப்புக் கருவிகள் இருக்கின்றதா?துணிச்சல் உள்ள மனம் மட்டும்தான் இருக்கிறது.

நான் பிரச்சாரம் செய்ய முடியாது; அவர் பிரச்சாரம் செய்கிறார். அவரை நாம் பாதுகாக்க வேண்டாமா? நான் செய்ய முடியாத பிரச்சாரத்தை அவர் செய் கிறார். மக்கள் திரளுகிறார்கள்; ஏடுகளிலே செய்திகள் வருகின்றன என்று முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். பேசினார்.

அந்த நாளிலேயே அண்ணன் நெடுமாறன் அவர்கள் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருகிறார். அதேநாளில், அதே அளவுக்குத் தீவிரம் இல்லாத ஒரு தீர்மானத்தை, அண்ணா தி.மு.க. அரசு கொண்டு வருகிறது.

உடனே, அண்ணன் நெடுமாறன் அவர்கள், என்னுடைய தீர்மானத்தைத் திரும் பப் பெற்றுக் கொள்கிறேன்; உங்கள் தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள் ளப்படட்டும் என்கிறார்.

வேண்டாம்; உங்கள் தீர்மானமும் இருக்கட்டும். அதை நீங்கள் திரும்பப் பெற வேண்டாம். அந்தத் தீர்மானத்தின் மீது, நீங்கள் என்ன பேச விரும்புகின்றீர் களோ, அதைப்பேசுங்கள். அதை வாக்குப்பதிவுக்கு விட வேண்டாம்.ஆனால், நீங்கள் பேச வேண்டியதைப்பேசுங்கள் என்று தெரிவித்து விட்டு,அரசுகொண்டு வந்த, ஆளுங்கட்சி கொண்டு வந்த தீர்மானத்தின்போது முதல் அமைச்சர்
பேசும்போது சொல்லுகிறார்; இங்கே நெடுமாறன் அவர்கள் பேசியதுதான், ஐந்தரைக் கோடித் தமிழ் மக்களின் உணர்வு என்பதை, இந்தச் சட்டமன்றத் திலே பதிவு செய்கிறோம் என்று சொன்னார். (பலத்த கைதட்டல்).

இதற்குப்பிறகு, ஈழத்தில் இருந்து வந்த அமைப்புகளைச் சார்ந்தவர்களுக்கு இந்திய அரசு சார்பில் பயிற்சி அளிக்க ஏற்பாடு ஆகிறது.

சகோதர யுத்தம் என்ற விமர்சனத்தைச் சில பேர் இப்போது சொல்கிறார்கள். அவர்கள் ஒருங்கிணைந்து போராட முடியவில்லையா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

1985 இல், திம்பு பேச்சுவார்த்தை. 1984 ஆம் ஆண்டு, டெலோ, ஈரோஸ், ஈபிஆர் எல்எஃப் ஆகிய இயக்கங்கள் சேர்ந்து,ஈழ தேசிய விடுதலை முன்னணி அமைத் தார்கள்.

1985 ஆம் ஆண்டு, அந்த அமைப்பில், தமிழ் ஈழ விடுதலைப்புலிகளையும், பிரபா கரன் அவர்களையும் இடம் பெறச் செய்தார். திம்பு பேச்சுவார்த்தைக்கு ஆயத்த மாகிச் செல்கிறபோதுதான், இந்திய அரசின் ரா உளவு அமைப்பின் தலைவ ரான சக்சேனா, நாங்கள் முன்வைப்பதைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நிர்பந்தித்தார் என்ற செய்தி, இந்த நூலில் வருகிறது.

1985 ஜூலை 8 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை, திம்புவில் முதல்சுற்றுப் பேச்சுவார்த்தை. ஆகஸ்ட்டில் இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை. ஜெயவர்த் தனாவின் சகோதரர், ஹெக்டர் ஜெயவர்த்தனா, சிறந்த வழக்குரைஞர், இலங் கை அரசின் சார்பில் பங்கு ஏற்கிறார்.நான்கு தமிழ் அமைப்புகளின் பிரநிதி களும் சென்றார்கள்.

அப்போது, இலங்கையில் தமிழர்கள் ஒரு தனித் தேசிய இனம்; ஈழம் என்பது
தமிழர்களின் பூர்வீகத் தாயகம்; தமிழ் தேசிய இனத்திற்கு எவராலும் பறிக்கப் படாத சுய நிர்ணய உரிமை; அனைத்து மக்களுக்கும் உரிமைகள்: என்ற இந்த நான்கு கோட்பாடுகளை இவர்கள் முன்வைத்தபோது, அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்கள்.

அந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளையும், இந்த நூலில்
அண்ணன் நெடுமாறன் விவரிக்கின்றார்.

1984 ஆம் ஆண்டு, இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் படுகொலை செய்யப் பட்டார். அதனால், ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்ட துயரத்தையும், இரங்கல் அஞ்சலி செலுத்தச் சென்ற இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியை யும், கவிஞர் அவர்கள் இங்கே சுட்டிக் காட்டினார்கள்.

அதற்குப் பிறகு, ராஜீவ் காந்தி அவர்கள் தலைமை அமைச்சர் ஆனார்கள். பெங் களூரில் நடைபெற்ற சார்க் மாநாட்டின்போது கொடுக்கப்பட்ட நிர்பந்தங்கள்,
புலிகளிடம் இருந்து தொலைத்தொடர்புக் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவங்கள் இந்த நூலில் இடம் பெற்று உள்ளன.

கிழக்கு மாகாணத்தை மூன்று கூறுகளாக்க முயற்சிக்கின்றார் ஜெயவர்த்தனா; ஒருபோதும் அதற்கு உடன்பட முடியாது என்பதை எம்.ஜி.ஆரிடம் பிரபாகரன்
தெளிவாகச் சொன்னார்.

இனி ஆயுதப் போர்தான் ஒரே வழி என்று முடிவு செய்யப்பட்டதற்குப் பிறகு, வட்டுக்கோட்டை தீர்மானத்தின்படி, இனி இளைய தலைமுறை இதை முன் னெடுத்துச் செல்லட்டும் என்று தந்தை செல்வா அறிவித்ததற்குப்பிறகு, தங் கள் தாயக விடுதலைக்கு இனி ஆயுதப் போராட்டம்தான் வழி என்று அவர்கள்
நடத்திக்கொண்டு இருக்கின்ற காலகட்டத்தில், அவர்களுக்குத் தேவைப்பட்ட நிதியை அள்ளித் தந்தார் எம்.ஜி.ஆர் என்கின்ற செய்தியைத் தருகிறார் அண் ணன் நெடுமாறன்.

மதுரையில் தம்முடைய இல்லத்தில் பிரபாகரன் தங்கி இருந்தது, அப்போது மதுரையில் நடைபெற்ற சம்பவங்கள் என அத்தனைச் செய்திகளையும் விவ ரித்து இருக்கின்றார். அதற்குப்பிறகு அவர் ஈழம் செல்லும்போது, கடலிலே போகும் போதுதான் பிரச்சினைகள் வரக்கூடும்; நான் கரை சேர்ந்து விட்டால்
எந்த ஆபத்தும் வராது என்று சொல்லிவிட்டுப் போகிறார்.இனி, இந்திய மண் ணுக்கு வருவது இல்லை என்று முடிவு எடுத்துச் செல்லுகிறார்.

மதுரையில், தமிழ் ஈழ விடுதலை ஆதரவாளர்கள் (Tamil Eelam Supporters Organisation-TESO) டெசோ மாநாடு நடைபெறுகிறது. அக்காலகட்டத்தில் டெலோ இயக்கத் தைச் சார்ந்தவர்களைச் சுட்டுக் கொன்று விட்டார்கள் என்று விடுதலைப்புலி கள் இயக்கத்தின் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகின்றது. விடுதலைப் புலி களின் தளபதிகளுள் ஒருவரான லிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் பல கொடிய சம்பவங்களும் நடைபெற்றன. பிற இயக்கத்தவர்கள் மக்கள் விரோதச்
செயல்களில் ஈடுபட்டபோது, எதிர்ப்புரட்சியாளர்களை, கலகக்காரர்களை அடக்குகின்ற முறையில், உலகில் எல்லாப்புரட்சிகளின்போதும் நடைபெற்ற தைப் போன்ற சம்பவங்கள் அங்கே நடைபெற்றன.

அதற்குப்பிறகு, விடுதலைப்புலிகளை ஏகப் பிரதிநிதியாக ஏற்றுக் கொள் கிறோம் என்று, இந்தியத் தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் பூரி அங்கே போய்ச் சொல்லி,மேதகு பிரபாகரன் அவர்களை அங்கே இருந்து அழைத்துக் கொண்டு வந்து, தில்லி அசோகா ஓட்டலில், எவரும் சந்திக்க முடியாத வகை யில் சிறை வைக்கப்பட்டதைப் போல அடைக்கப்பட்டு இருந்தார்.அந்தச் சம்ப வங்களை, பாலசிங்கத்தின் வாயிலாகவே இங்கே குறிப்பிடுகிறார்.

இந்த சுங்கானின் புகை அணைவதற்குள்ளாகவே உங்களை ஒழித்துக் கட்டி விடுவோம் என்றார் தீட்சித்.After all two thousand boys; இரண்டாயிரம் பொடியன்கள் தானே? அரை மணி நேரத்துக்குள் என் காலடியில் கிடப்பார்கள் என்றார் அன் றைய தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தி. ஒப்பந்தத்தைத் திணித்தார்கள்.

ஜூலை மாதம் 29 ஆம் தேதி, ராஜீவ் காந்திகொழும்புக்குச் சென்று, ஜெயவர்த் தனாவோடு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டு விட்டுத் திரும்பியபோது, துப்பாக்கியால் அவர் மீது தாக்கிய ரோஹண விஜயமுனி, அதே நாட்டில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றான் என்ற செய்தியும், ராஜீவ் காந்தி யின் உயிரைக் குடிக்க முயன்றவனுக்கு அந்த நாடு மகுடம் சூட்ட முயன்ற செய்தியும், இந்த நூலில் வெளியிடப்பட்டு இருக்கின்றது.

தொடரும் .....

No comments:

Post a Comment