மனிதநேயம் காப்போம்; மறுமலர்ச்சி காண்போம்!
நிதி வழங்கிய வள்ளல்களுக்கு நன்றி!
இராமநாதபுரம் மாவட்டக் கழகத்தின் சார்பில், 27.06.2013 அன்று கழக வளர்ச்சி நிதி - தேர்தல் நிதி வழங்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.நிதியினைப் பெற்றுக் கொண்டு கழகப் பொதுச்செயலாளர் வைகோ ஆற்றிய உரையில் இருந்து....
வீரம் மணக்கின்ற இராமநாதபுரம் தியாகபூமியில், சரித்திரப் புகழ் பெற்ற பல களங்களைச் சந்தித்து இருக்கின்ற இந்த முகவை மண்ணில், இராமலிங்க விலாசத்துக்கு அருகில் இருக்கின்ற இந்தத் திடலில் எத்தனையோ கூட்டங் களில், நான் உரையாற்றி இருக்கின்றேன். இன்றுபோல், மக்கள் கடல் திரண்டு இருக்கக்கூடிய ஒரு கூட்டத்தை இதற்கு முன்பு நான் இங்கே சந்தித்தது இல்லை. கண்ணுக்கு எட்டிய தொலைவுக்கு அப்பாலும் கட்டுக்கு அடங்காமல்
பல்லாயிரக்கணக்கில் திரண்டு இருக்கின்ற தமிழ்ப்பெருமக்களின் நம்பிக்கைக் கு உரிய இயக்கமாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் திகழ்கின்றது. கட்சிகளைக் கடந்து, சாதி மத எல்லைகளைக் கடந்து நடுநிலையாளர்கள் இங்கே வந்து குவிந்து இருக்கின்றார்கள் என்றால், நாங்கள் நாணயமானவர்
களாக, அரசியல் ஒழுக்கம் உள்ளவர் களாக, இலட்சியங்களுக்குப் போராடு
கின்றவர்களாக, உங்கள் நம்பிக் கையைப் பெற்று இருக்கின்றோம்.
நன்றி உணர்வோடு உங்கள் முன்னால் நிற்கின்றேன். வைரம் பாய்ந்த நெஞ்சு றுதியோடு, இயக்கத்துக்கு நிதியைத் திரட்டித் தருகின்ற அரிய பணியினைச் செய்து முடித்து இருக்கின்ற மாவட்டச் செயலாளர் நென்மேனி ஜெயராமன்
அவர்களையும், கழக நிர்வாகிகளையும் நான் பாராட்டுகிறேன்.நீங்கள் திரட்டித் தந்து இருக்கின்ற நிதி, இதுவரை இந்த மாவட்டத்தில் கொடுக்கப்படாத பெருந் தொகை ஆகும். ஒவ்வொரு காசும் கோடிப் பொன் பெறும். அள்ளி வழங்கிய
கருணை உள்ளங்களுக்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன்.

இந்த இராமநாதபுரத்துக்கு நெடிய சரித்திரம் உண்டு. பேரரசுகள் அமைந்து இருந்த காலங்களில்,மன்னர் ஆட்சி ஓங்கி இருந்த காலங்களில், ஆங்கிலேயர் கள் வருகைக்கு முன்னரும்,எங்காவது கலகம் விளைகிறது என்றால்,அமைதி யை நிலைநாட்டுவதற்கு,இராமநாதபுரத்து வீரர்கள்தாம் சென்றார்கள். இராம நாதபுரம் வீரர் படை குறித்து, ஆங்கிலேயர்கள் எழுதி வைத்து இருக்கின்றார் கள். அப்படிப் பட்ட வீரம் செறிந்த இந்த மண்ணில், 1674 ஆம் ஆண்டில் இருந்து, 1710 ஆம் ஆண்டு வரை, ஏறத்தாழ 30 ஆண்டுகள், கிழவன் சேதுபதி அரசோச்சி னான். அந்த வரலாற்று வழியில்தான், சேதுபதி மன்னருடைய குடும்பத்தில் இருந்துதான், இரகுநாதனுக்குத் தொண்டைமான் பட்டம் சூட்டப்பட்டு, புதுக் கோட்டை அரசு தனியாக அமைத்துக் கொடுக்கப்பட்டது; சிவகங்கை அரசும் உதயமாயிற்று. அந்த நாள்களை நான் எண்ணிப் பார்க்கின்றேன்.
கிழவன் சேதுபதி அரசுப் பொறுப்புக்கு வந்து 98 ஆண்டுகளுக்குப் பிறகு, 1772 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் நாள்,மேஜர் ஸ்மித்,துப்பாக்கிகள், பீரங்கிகள், பெரும் படையோடு இராமநாதபுரத்தைத் தாக்கிக் கைப்பற்றினான். அரசியையும், இள வரசரையும் கைது செய்து கொண்டு போய்க் கொட்டடியில் பூட்டினான். பாஞ் சோர் தலைமையில் ஒரு படை சிவகங்கைக்குச் சென்றது. காளையார் கோவி லுக்குப் பூசை வைக்கப் போனார் மன்னர் முத்துவடுகநாதர்.சூழ்ச்சியாக மறைந் து இருந்து சுட்டார்கள். இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து மாண்டார்.அந்த இரத் தத்தை நெற்றியில் திலகம் இட்டுக் கொண்ட வீரத்தாய் வேலு நாச்சியார், சிவ கங்கை மண்ணின் வீரத்தை நிலைநாட்டினார்.
1798 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் நாள், செப்டெம்பர் 10 ஆம் நாள், இங்கே இருந்த மண் கோட்டைகள் எல்லாம் அகற்றப்பட்டு, கிழவன் சேதுபதி காலத் தில்தான் கற்கோட்டை கட்டி எழுப்பப்பட்டது. இங்கேதான், ஜாக்சன் துரையை கட்டபொம்மன் சந்தித்தான். அப்போது அவனைக் கைது செய்ய முயன்றபோது எதிர்த்துப் போராடித் தப்பிச் சென்றான்.அந்த எதிர்த்தாக்குதலில் ஒரு வெள் ளைத் தளபதி கொல்லப்பட்டான். அப்படிப் பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க
இராமநாதபுரத்தில் நின்று பேசுகிறேன்.
16 இலட்சம் ரூபாயைத் திரட்டித் தந்து இருக்கின்றீர்கள். இது உழைத்த காசு. கள்ளம் கபடம் அற்ற உள்ளம் கொண்ட உங்களுடைய காசு; உழைத்தவர்களின் காசு. அன்பால் நீங்கள் தந்து இருக்கின்றீர்கள். இன்று காலையில், சிவகங்கை மாவட்டக்கழகத்தின் சார்பில் நிதியை அள்ளித் தந்தார்கள் என்றாலும், இந்த முறை நிதி பெறுகின்ற முதலாவது பொதுக்கூட்டம் இந்த இராமநாதபுரம்தான்.
இது கூட்டம் அல்ல, மாநாடுதான். நான் எதிர்பார்த்ததைவிடப் பலமடங்கு
திரண்டு வந்து இருக்கின்றீர்கள். இந்த மண்ணில்தான், வள்ளல் சீதக்காதியின் பெருமை பேசுகின்ற கீழக்கரை இருக்கின்றது. அள்ளித் தந்த பெருமக்கள் அனை வருக்கும், நான் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நீங்கள் கொடுத்து இருக்கின்ற நிதி, இந்த நாட்டின் வாழ்வாதாரங்களைக் காப்ப தற்காகப் போராடுவதற்குப் பயன்படும்.
அரசியல் வாழ்வில் ஐம்பது ஆண்டுகள்
தோழர்களே, என் வாழ்க்கையின் பெரும்பகுதியைப் போராட்டக் களங்களில் கழித்து இருக்கின்றேன்.1964 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில், சென்னை கோகலே அரங்கில் பேரறிஞர் அண்ணா அவர்கள் முன்னிலையில், முதன்
முதலாக நான் உரை ஆற்றினேன்.அண்ணா அந்த உரையைப் பாராட்டினார். வருகின்ற ஆகஸ்ட் திங்களோடு, 50 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இது வரையிலும் நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்து இருக்கின்றேன். அறிவிக் கப்பட்ட பயணங்களில், 5000 கிலோ மீட்டர்கள் நடந்து இருக்கின்றேன்.அறிவிக் கப்படாத நிகழ்வுகளுக்காக நடந்ததும், ஊர் ஊராகச் சென்று நடந்து கொடிகளை ஏற்றியதும், இன்னும் எத்தனையோ ஆயிரம் கிலோமீட்டர்கள்; காலால் நான்
பயணித்த தொலைவு எண்பது இலட்சம் கிலோ மீட்டரைத் தாண்டும்.இந்த மண்ணுக்கு ஓடி ஓடி உழைத்து இருக்கின்றேன். என் குடும்பத்தை முன்னிறுத் தியது இல்லை. இந்தத் தாய்த் தமிழகம்தான் என் குடும்பம்.
பழந்தமிழர்களின் தொல்குடிப் பெருமையைச் சொல்லுகின்ற மண் இது. வீர மும், மானமும் தழைத்த மண்.உலகத்துக்கு நல்ல அறநூல்களைத் தந்த மண். நான் இந்தப் புண்ணிய பூமியில் பிறந்தேன். இந்த மண்ணுக்காக, மக்களுக்காக உழைக்கின்றேன்.இங்கே திரண்டு இருக்கின்ற இளம் தம்பிமார்களைப் பார்க் கின்றபோது, எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை தெரிகின்றது. நான் இதுவரை என்னால் முயன்ற அளவுக்குப் பாடுபட்டு வந்து இருக்கின்றேன். முறுக்கேறிய நரம்பு களைக் கொண்டு இருக்கின்ற இளைஞர்களை, உரிமைப் போர்ப் படை யின் ஈட்டி முனைகளாகப் பார்க்கிறேன். அடுத்த கட்டத்தை அவர்கள்தான் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே நடைபெற்ற மாநாட்டை, கராத்தே பழனிசாமி நினைவூட்டினார்.1980 இல், என்னை இங்கே பேச அழைத்து வந்தார் மாவட்டச் செயலாளர், என் நெஞ்சத்தை விட்டு மறையாத உத்தமன் சத்தியேந் திரன். அவர்தான் அந்த மாநாட்டு வரவேற்புக் குழுவின் தலைவர். இங்கே ஒரு
விடுதியில் தங்கி இருந்தேன். நடுச்சாமத்துக்குப் பிறகும் எனக்குத் தூக்கம் வர வில்லை. முதல் நாள் மாநாட்டில் முத்திரை பதித்த சொற் பொழிவை நிகழ்த்தி யவர் மறைந்து விட்ட க. சுப்பு. அன்றைக்கு அற்புதமாக அமைந்தது, அனைவ ரையும் உலுக்கியது.
இரண்டாம் நாள் மாநாட்டில் நான் பேசினேன். என் மனதில் இருந்த வேதனை யைக் கொட்டினேன்.‘பிரபாகரா, தமிழ்த் தாயின் தலை மகனே வா; எங்கள் தாயகத்துக்கு வா; தாயின் மடியென உன்னைத் தாங்கிப் பிடிக்கிறோம்; உன் காயங்களை முத்தம் இடுகிறோம்; உன் மேனியில் பட்டு இருக்கின்ற புண் களில் எங்கள் கண்ணீரைச் சொரிகிறோம் என்று நான் பேசியபோது, எதிரில் அமர்ந்து இருந்த எண்ணற்ற தோழர்கள் கண்ணீர் வடித்தார்கள். அந்த பிரபாகர னின் பிள்ளை, பச்சிளம் குழந்தை பாலச் சந்திரன் என்ன பாவம் செய்தான் அவன் நெஞ்சைச் சுட்டுத் துளைத்து இருக்கின்றார்களே?

மீனவர்களின் வேதனைக் கண்ணீர்
இராமேஸ்வரம் மீனவர்கள் நாள் தோறும் சிங்களக் கடற்படையால் தாக்கப் படுகிறார்கள். 578 மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள். சேவியர் விக்டர் அந்தோணிராஜ், தனபால், மாரிமுத்து ஆகிய, தங்கச்சி மடத்து மீன வர் கள் நான்கு பேரைச் சிங்களக் கடற்படையினர் வெட்டிப் படுகொலை செய் து, உடல்களை கடலில் வீசிய கொடுமை கேட்டு நான் இங்கே வந்தேன். ஒருவரு டைய தலையைத்துண்டித்து விட்டார்கள்; மற்றொருவரின் கையை வெட்டி
விட்டார்கள். நெருப்பு வெயிலில் மீனவச் சகோதரர்கள் கண்ணீரும் கம்பலை யுமாக நின்று கொண்டு இருந்தார்கள். அந்த வீதி வழியாகச் சென்றேன். ஒவ் வொரு சகோதரனுடைய வீட்டுக்கும் சென்று ஆறுதல் கூறினேன்.
அவர்களுள் ஒரு பெண்ணுக்குத்தந்தை இல்லை தாய் இல்லை, உடன்பிறந்தார் இல்லை. சொந்த வீடு இல்லை. பள்ளி இறுதித் தேர்வு முடித்து இருக்கின்றாள். ஒரேயொரு பிள்ளை. சின்ன வயது என்று மீனவத்தாய்மார்கள் சொன்னார்கள். இந்தப் பெண்ணை ஒரு ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் சேர்த்து நீங்கள் படிக்க
வைத்தால், அவள் தன் குழந்தையைக் காப்பாற்றிக் கொள்வாள் என்றார்கள்.
அந்தப் பெண்ணுக்கு அழுவதற்குச் சக்தி இல்லை. அழுது அழுது அவளது கண் கள் உலர்ந்து விட்டன. அவள் தலைகவிழ்ந்து உட்கார்ந்து இருந்தாள். நிமிர்ந்து பார்க்கவில்லை.அப்போது நான் சொன்னேன்: ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்க்க நான் ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் கவலைப்படாதீர்கள். அதற்கான
செலவையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றேன். மனம் உடைந்து தலை கவிழ்ந்து உட்கார்ந்து இருந்த அந்த அபலைப் பெண், அப்போதுதான் என்னை நிமிர்ந்து பார்த்தாள். அவளது கண்களில் நன்றி உணர்வோடு பார்த்த பார்வை யை நான் மறக்க முடியாது. இதையெல்லாம் நாங்கள் விளம்பரப்படுத்திக் கொள்ள வில்லை. இருண்டு போன அவளது வாழ்வில் ஒரு அகல் விளக்கை ஏற்றி வைக்கக்கூடிய வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.
பின்னர் ஒருநாள் இந்தப் பகுதிக்கு வந்த மே 17 இயக்க ஒருங்கிணைப் பாளர் திருமுருகன் காந்தி, இந்தக் குடும்பத்தைச் சந்தித்தபோது, அந்தக் குழந்தை வைகோ தாத்தா எப்போது வருவார்? என்று கேட்டதாம். அதை அவர் சென்னை யில் நடைபெற்ற ஒரு விழாவில் சொல்லுகின்ற வரையிலும் எனக்கு அது தெரியாது. அப்போது என் மனதில் ஏற்பட்ட எண்ணம், அப்படிப் பட்ட பச்சிளம் குழந்தைகளின் எதிர் காலத்தைப் பாதுகாப்பதற்காகத்தான் நாங்கள் போராடு கிறோம். இராமேஸ்வரம் மீனவர்களுக்குப் பாதுகாப்பு உண்டா?

எங்கள் கடற் படையா?
இந்த இராமாநாதபுரம் சீமைக்கு உட்பட்டதுதான் கச்சத்தீவு. இதைத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டார்களே சிங்களவனுக்கு? இன்றைக்கு அங்கே போர்க்கப்பல்களைக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றான்.இந்தியக் கடற் படையும், இலங்கைக் கடற்படையும் தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள்.இருவரும்தான் கூட்டுக் குற்றவாளிகள். தமிழக மீனவர்கள்
கொல்லப்படுவதைத் தடுத்து இருக்கிறதா இந்தியக் கடற்படை? இது எங்கள் கடற்படையா? எங்கள் வரிப்பணத்தில் இருக்கின்ற கடற்படையா? தடுப்பதற்கு முயற்சி எடுத்தீர்களா? என்றைக்காகவது தடுக்க முயன்று இருக்கின்றீர்களா? ஒருபோதும் இல்லை.அதற்கு மாறாக,சிங்களக் கடற்படையோடு கை கோர்த் து, விருந்து கொண்டாடுகிறான்.கேரளத்தில் இரண்டு மீனவர்கள் கொல்லப் பட்டதற்காக, இத்தாலி மீது படை எடுப்பது போல இந்திய அரசு வெகுண்டதே. இத்தனை மீனவர்கள் கொல்லப்பட்டு இருக்கின்றார்களே,இந்திய அரசு அதைப் பற்றி என்றைக்காவது கவலைப்பட்டது உண்டா?
மலேசியாவில் மரணத்தின் பிடியில்...
இந்த இராமநாதபுரத்தைச் சேர்ந்த 12 பேர் போதைப் பொருள் வைத்து இருந்த தாக, மலேசியாவில் கைது செய்யப்பட்டார்கள். உழைத்துப்பிழைக்கச் சென்ற வாலிபர்களை, போதைப் பொருள் வைத்து இருந்து பிடிபட்ட ஒருவன், தான் தப்பிப்பதற்காக பழியை இவர்கள் மீது போட்டு விட்டான். மரண தண்டனைக்கு உள்ளாக்கக்கூடிய பிரிவுகளின் மீது வழக்குத் தொடுத்து விட்டார்கள்.அப்போது நான் வேலூர் சிறையில் இருந்தேன். எனக்குக் கடிதம் வந்தது. எங்களைக் காப் பாற்றுங்கள்; உங்களை விட்டால் எங்களுக்கு வேறு யாரும் இல்லை என்று எழுதி இருந்தார்கள். நான் வெளியுறவு அமைச்சர் யஷ்வந்த் சின்காவுக்குக்
கடிதம் எழுதினேன். இந்த இளைஞர்கள் குற்றம் அற்றவர்கள்; அவர்களை விடு வித்துக் கொண்டு வாருங்கள் என்று வலியுறுத் தினேன்.அதன் விளைவாக நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். சென் னைக்கு வந்தபோது செய்தி யாளர்களிடம், எங்களை மீட்டுக் கொண்டு வந்த வர் வேலூர் சிறையில் இருக்கின்றார் என்று சொன்னார்கள். (கைதட்டல்).
மனிதநேயம் காப்போம்
பரமக்குடியில் ஒரு திருமண மண்டபத்தைத் திறப்பதற்காக வந்து கொண்டு இருந்தேன். நெடுஞ்சாலையில் கூட்டம். என்னவென்று பார்த்தேன். ஒரு விபத்து. இரண்டு மூன்று இளைஞர்கள் இரத்த வெள்ளத்தில் கிடக்கின்றார்கள். கால் துண்டிக்கப்பட்டு இருந்தது.அவர்களைத் தூக்கிக் கொண்டு போய் மருத்து வமனையில் சேர்த்துக் காப்பாற்றினோம். பத்து நாள்களுக்கு முன்னர், மருது பாண்டி என்ற அந்தத் தம்பி, மதுரையில் வந்து என்னைச்சந்தித்தான். காலைச் சாய்த்துச் சாய்த்து வந்து நன்றி சொன்னான்.அவன் மறவர் குலத்துப் பிள்ளை.
அவன் ஓட்டி வந்த வண்டியில் இரட்டை இலைச் சின்னம் இருந்தது.
அதேபோலத்தான், பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் இரண்டு குண்டுகள் உடலில் பாய்ந்த நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்தான் ஒரு இளை ஞன்.அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை இல்லை.மாவட்டஆட்சி யர் சகாயம் அவர்களோடு பேசினேன்.நான் மதுரை அப்பல்லோ மருத்துவ
மனைக்குக் கொண்டு போய் என் சொந்தச் செலவில் மருத்துவம் பார்க்கிறேன் என்று கேட்டேன். அந்த நல்ல மனிதர், மருத்துவமனை டீனோடு பேசி ஏற்பாடு செய்து கொடுத்தார். அந்த இளைஞனை மதுரைக்குக் கொண்டு போய்ச் சேர்த் தேன். படுக்கை இரத்த வெள்ளத்தில் நனைந்து விட்டது. அந்த நிலையிலும் அந்த இளைஞனின் கண்களில் ஒரு நம்பிக்கை. தனக்கு இப்படி ஒரு சிகிச்சை கிடைக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. நலம் பெற்றுத் திரும்பி வந் தான். அவன் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவன்.
அதேபோலத்தான் புதுச்சேரிக்கு அருகில், விபத்தில் சிக்கிய ஒரு இஸ்லாமி யப் பேராசிரியரும், அவரது துணைவியாரும் ஒரு பிள்ளையும் அந்த இடத்தி லேயே இறந்து போனார்கள்.எங்களால் இயன்ற உதவிகளைச்செய்தோம். ஒரு
பிள்ளையின் உயிர் ஊசலாடிக் கொண்டு இருந்தது. அந்தப் பிள்ளையைக் காப் பாற்றி மருத்துவ மனையில் சேர்த்தோம்.
அதேபோலத்தான், இன்னொரு விபத்தில் சிக்கிக் கிடந்த தோழர் கருப்பு சிவப்பு வேட்டி கட்டி இருந்தார்.என் தொண்டர் படைத் தம்பிமார்களை வைத்து, அவ ரைக் கொண்டு போய் கடலூர் மருத்துவமனையில் சேர்த்தேன். அவர் தி.மு.கழ கத்தின் நகர செயலாளர். ஒரு மாதம் கழித்துச்சந்தித்தபோது நன்றி சொன்னார்.
எனவே எனக்கு சாதி கிடையாது, மதம் கிடையாது. இதுதான் எனது அணுகு
முறை. எங்கே மனிதர்கள் துன்பப் பட்டாலும், கண்ணீர் வடித்தாலும் அவர் களைக் காப்பாற்ற வேண்டும் என்று துடிக்கின்றோம்.
பஹ்ரைன் நாட்டில் இருந்து பாரதி தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் என்னோடு தொலைபேசியில் பேசினார்; நீங்கள் ஒரு இஸ்லாமியப் பிள்ளையைக் காப் பாற்றினீர்களே, அந்தப் பேராசிரியர் இறந்து விட்டாரே, அவரது துணைவி யாரின் தங்கையின் கணவன் நான். பஹ்ரைனில் இருக்கிறேன் என்றவர், ஒரு
அதிர்ச்சியான செய்தியைச் சொன்னார்.
அந்த விபத்தில் பேராசிரியர் உடனே இறந்து விட்டார். ஆனால்,அவரது துணை வியார் உடனே இறக்க வில்லை. நினைவு இருந்தது. தன் தாயாரோடு அலை பேசியில் பேசினார்.நான் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடக்கிறேன்; தண் ணீர் தண்ணீர் என்று கேட்கிறேன்; எந்தக் காரும் நிற்கவில்லை என்று சொல்லி யவாறே இறந்து போனார் என்றார். மனித நேயத்தை வளர்த்த தமிழகமா இது?
பக்கத்திலேதானே பறம்பு மலை இருக்கின்றது. முல்லைக்குத் தேர் ஈந்த பாரி வாழ்ந்த மண்ணா இது? வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் கருணையைப் பற்றிப் பேசுகிறோம்.மனிதநேயம் அழிந்து விட்டதா? இந்த மனிதநேயத்தை அழிப்பது எது? மது.
மதுவின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்போம்
கோவை மதுக்கடையில் நிற்கின்றார்கள் இருவர். முன் பின் எந்த விரோதமும் இல்லை. சற்றுத் தள்ளி நிற்கச் சொல்லுகிறான் ஒருவன். பகல் ஒரு மணி. வாக்குவாதம் நடக்கிறது.கைகலப்பாகிறது. அவர்கள் மோட்டார் சைக்கிளில் போகிறார்கள். பத்து இருபது பேர் சேர்ந்து வருகிறார்கள்.அவர்களைத் தடுத்துக் கீழே வீழ்த்துகிறார்கள். பாறாங்கல்லைத் தூக்கித் தலையில் போடுகிறார்கள்.
இரண்டு பேர் அந்த இடத்திலேயே துடிதுடித்துச் சாகின்றார்கள்.மக்கள் நடமாடு கின்ற இடம். எல்லோரும் அதிர்ச்சி அடைகிறார்கள். ஈழத் தமிழர்கள் படு கொலையைப் பற்றிக் கண்டுகொள்ளாத வட இந்தியத் தொலைக்க்hட்சிகள் இந்தக் காட்சியைப் பெரிதாக ஒளிபரப்பு கின்றார்கள். மது மனிதனை மிருக
மாக்குகிறது. எனவேதான், மதுவின் கொடுமையில் இருந்து தமிழகத்தை மீட்கப் பாடுபடுகிறோம்.
மதுக்கடைகளால் 25,000 கோடி அரசுக்கு வருமானம் வருகிறது என்கிறீர்களே, அதனால் எத்தனைக் குடும்பங்கள் அழிந்து போகின்றன? இன்றைக்கு மாண வர்கள் மதுக்கடைகளில் நிற்கின்றார்கள். விதை நெல்லையே அழித்து விடு வோமோ என்ற வேதனை நெஞ்சைக் கவ்வு கிறது. அவர்களைப் பாதுகாக்க
வேண்டும் என்று போராடுகிறோம்.முல்லைப்பெரியாறுக்கு வந்த ஆபத்தைத் தடுக்க இலட்சக்கணக்கானவர்களைத் திரட்டினோம்.
தேர்தலில் நிற்கவில்லை,சட்டமன்றத்தில் ஒருஇடம் இல்லை என்றாலும்,என் தோழர்கள் இலட்சியவாதிகள், கொள்கைவாதிகள் என்று சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு சாலையில் நடக்க முடிகின்றது. என் கண்ணின்மணி களே, அந்தப் பெருமையை, என் உடலில் உயிர் இருக்கின்ற வரையிலும் காப் பாற்றித் தருவேன். தன்னலம் அற்ற அரசியலை வென்றெடுப்போம். செப்டெம்பர் 15 ஆம் நாள், விருதுநகர் மாநாட்டுக்கு அணிதிரண்டுவாருங்கள்!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:
Post a Comment