Sunday, July 7, 2013

மீனவர் போராட்டத்தில் மதிமுக

தூத்துக்குடி மாவட்டத்தின் கடற்கரையோரப் பகுதிகளில் மணல் அள்ளப்படு வதைத் தடுக்க வலியுறுத்தி மீனவர் விடுதலை இயக்கம் சார்பில் தூத்துக்குடி யில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மீனவர் விடுதலை இயக்க பொதுச்செயலர் அலங்காரபரதர், மதிமுக மாநில மீனவரணிச் செயலர் நக்கீரன், நிர்வாகிகள் மனோஜ்குமார், மரியசெல்வம், ஜான்சன், அமலரசு மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்கள் கலந்து கொண்டனர்.
பழைய மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மீனவர் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் உவரி அந்தோனி ராய் தலைமை வகித்துப் பேசியதாவது,

கடற்கரைக் கிராமங்களான கூட்டாம்புளி, பெருமணல், குட்டம், இடிந்தகரை, கூத்தங்குழி, கூட்டுப்பனை, பெரியதாழை உள்ளிட்ட மீனவக் கிராமங்களில் உள்ள கடற்கரைப் பகுதிகளில் சில தனியார் நிறுவனங்கள் மணலை அள்ளி வருகின்றன.

இதனால் மீனவக் கிராமங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனை தட்டிக் கேட்பவர்கள் மீது காவல்துறை மூலம் பொய் வழக்குகள் போடப்பட்டு வருகின்றன. மேலும், சட்டத்துக்குப் புறம்பாக கடற்கரை மணலை அள்ளுவது தெரிந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார்.

No comments:

Post a Comment