மதுரை மாநகர் மாவட்ட #மதிமுக சார்பில் #வைகோ கலந்து கொண்ட தேர்தல் நிதி வழங்கும் விழா மதுரை காமராஜர் சாலையில் உள்ள செல்லம் சரசுவதி திருமண மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.
மாநகர் மாவட்ட செயலாளர் புதூர் பூமிநாதன் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் சின்ன செல்வம், நிர்வாகிகள் சிவந்தியப்பன், மனோகரன், சுருதி ரமேஷ், மகபூப் ஜான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் தேர்தல் நிதியாக ரூ.43 லட்சம் பொதுச் செயலாளர் வைகோவிடம் வழங்கப்பட்டது.
பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
ம.தி.மு.க. மாவட்டந்தோறும் தேர்தல் நிதி திரட்டி வருகிறது. மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் புதூர் பூமிநாதன், கழக நிர்வாகிகள் பகுதி செயலாளர்கள் ஒத்துழைப்போடு முதல் கட்டமாக ரூ.43 லட்சம் தேர்தல் வழங்கப் பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகமாகும்.
ம.தி.மு.க. சார்பில் நிதி கேட்டு செல்லும்போது எல்லாம் மக்கள் ம.தி.மு.க. மீது நம்பிக்கை வைத்து நிதி வழங்குகிறார்கள்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடவில்லை. ஆனால் மக்களுக்காக போராட்டம் நடத்தி வருகிறது. வருகிற செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் விருதுநகரில் ம.தி.மு.க. மாநாடு நடத்தப்படும். இந்த மாநாடு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும்.
தர்மபுரியில் இளவரசன் சடலம் ரெயில் தண்ட வாளத்தில் கிடந்ததாகவும், அவரை கொலை செய்து விட்டதாகவும் பெற்றோர் கூறுகிறார்கள். இதுகுறித்து நீதி விசாரணை நடத்த ம.தி.மு.க. வலியுறுத்தி வருகிறது.
நெய்வேலி பாங்குகளை ஒரு சதவீதம் கூட விற்க அனுமதிக்க மாட்டோம். சேது சமுத்திர திட்டத்தில் எங்கள் நிலையில் உறுதியாக இருக்கிறோம்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து போராடும் இயக்கமாக ம.தி.மு.க. திகழும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மதுரை நரிமேடு சரவணா மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் சரவணன் வைகோவிடம் ரூ.1 லட்சம் தேர்தல் நிதி வழங்கி, ம.தி.மு.க.வில் சேர்ந்தார்.
வைகோவுடன், மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் பொடா அழகுசுந்தரம், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் புதூர் பூமிநாதன், அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் சின்னச்சாமி, மாநில மாணவர் அணிச் செயலாளர் பாஸ்கர சேதுபதி ஆகியோரும் சென்றிருந்தனர்.

No comments:
Post a Comment