Tuesday, July 2, 2013

ஈழத்தமிழ் இனத்தின் விம்மல் ஒலி-பகுதி 1

ஈழத்தமிழ் இனத்தின் விம்மல் ஒலி: ‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படம்!

இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த ‘உச்சித னை முகர்ந்தால்’ திரைப்பட வெளியீட்டு விழா நிகழ்ச்சி சென்னை முத்துரங் கன் சாலையில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு கழகப் பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய உரை வருமாறு:-

உச்சிதனை முகர்ந்தால் உள்ளங்கால் வரைச் சிலிர்க்குதடி, ஓடி உனை அணைத்தால் இன்பம் கோடி துளிர்க்குதடி’ என்ற, நெஞ்சை உருக்கும் ஒரு சோகக் காவியத்தின் பாடல் வரிகளை, உங்கள் அலைபேசிகளே ஒலிக்க விடுங்கள் என்ற வேண்டுகோளை முன்வைத்த, தமிழ் ஈழ விடுதலைக் களத் தில் சிந்தனையாளராக, எழுத்தாளராக, மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்களை
ஈழத்துக்குச் சென்று சந்தித்த நினைவை நெஞ்சில் தாங்கிக் கொண்டு, காற்றுக்
கென்ன வேலி திரைப்படத்தையும்,உச்சிதனை முகர்ந்தால் எனும் இச்சோக
காவியத்தையும் இயக்கி வழங்கி இருக்கின்ற, ஆருயிர்ச் சகோதரர் புகழேந்தி தங்கராஜ் அவர்களுடைய திரைக்காவியத்தை, மக்கள் மன்றத்துக்கு எடுத்துச் செல்லச் சூளுரைக்கின்ற வகையிலே நாம் இங்கே திரண்டு இருக்கின்றோம்.
இந்த மாபெரும் மக்கள் அரங்கத்தின் தலைவர், ஆயுதம் ஏந்திப் போராடுவதில்
தங்களை ஒப்படைத்துக் கொண்ட பொது உடைமைவாதி, அண்ணன் நல்ல கண்ணு அவர்கள், நான்தான் விம்மல்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் விழிநீர் சிந்தினேன் என்றால்,என் ஆருயிர்ச் சகோதரர், இந்தக் காவியத்துக்கு வசனத்தைத் தந்த தமிழருவி மணியன், நானும் அழுதேன் என்று குறிப்பிட்டார்.

அண்ணன் நல்லகண்ணு அவர்களை,புரட்சிக்காரராக நான் படித்து இருக்கின் றேன். தலைமறைவு வாழ்க்கை நடத்தி இருக்கிறார். வெடிகுண்டுகளை ஏந்திச் செல்வோம் என்ற உணர்வோடு போராடி இருக்கிறார். அவர், கலங்கினேன்; தாங்க முடியாமல் விம்மினேன்; இந்த அருமைப் பேத்தி நீலிகாவின் திருக்கரங் களைப் பற்றிக் கொண்டே என்று நா தழுதழுக்கச் சொன்னார்.

நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம் என்று,அப்பர் அடிகள் வழியில், இன்றைக்குத் தமிழகத்தின் களங்களில் முழங்கி வருகின்ற, காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் ஆருயிர்ச் சகோதரர் தமிழருவி மணியன்
அவர்கள், இந்தப் படத்துக்கு வசனங்களைத் தீட்டித் தந்து இருக்கின்றார்.

ஈழ விடுதலைக் களத்திலே சீறி வருகின்ற உணர்வுகளை மக்களிடம் எடுத்துச் செல்லுகின்ற, என் பாசமிகு சகோதரர் தியாகு அவர்களும், மதிப்பு மிக்க பேராசிரியர் தீரன் அவர்களும் அரிய உரைகளைத் தந்தார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்த என் ஆருயிர்ச் சகோதரர் வேளச் சேரி மணிமாறன், திருமலை, வெங்கட்ராம் உள்ளிட்ட, நிகழ்ச்சிக்குத் துணை நின்ற தோழர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

உச்சிதனை முகர்ந்தால்..திரைப்படத்தின் மறு வெளியீட்டுக்கு மக்களை ஆயத் தப்படுத்துகின்ற அரங்கத்தில், இதய நாடிகளை வருடுகின்ற இசை தந்த இமா னின் இசை கலந்த நிகழ்ச்சியை இங்கே காண இருக்கின்றீர்கள்.

ஒரு திரைப்படம் வெற்றி பெற்றதா? தோல்வியுற்றதா? என்பது, திரைப்படம்
வெளியானவுடன், எத்தனை நாள்கள் ஓடிற்று? எவ்வளவு வருவாயை ஈட்டி யது? என்ற அடிப்படையிலே தீர்மானிக்கப்படுவது இல்லை.

தமிழருவி மணியன் அவர்கள் ஆவேசத்தோடு இங்கே குறிப்பிட்டார்கள்.

வீர சிதம்பரம் அவர்களுடைய தியாக வாழ்வை, பத்மினி பிக்சர்ஸ் தயாரித்த
கப்பலோட்டிய தமிழன் என்ற திரைப்படம், நெடுநாள்கள் திரை அரங்கிலே இடம் பெறவில்லை என்பதைச் சொன்னார்கள். அதிலே முண்டாசுக் கவிஞ னாக எஸ்.வி.சுப்பையா அவர்கள் நடித்தார்கள்.

என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்?
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?

என்ற பாரதியின் வரிகளை, பதினோரு வயதுச் சிறுவனாக நான் வீதிகளில்
பாடிச்சென்றேன் என்று அண்ணன் நல்லகண்ணு அவர்கள் குறிப்பிட்டார்கள்.

அந்தக் கவிஞன் மறைந்து 70, 80 ஆண்டுகளுக்குப் பிறகும், அந்தப் பாடல் வரி களை, இந்த முத்துரங்கன் சாலையில் நீங்கள் சொல்லுகிறீர்கள்.

அந்த மாபெரும் கவிஞன் பாரதி,தின்பதற்குத் தேங்காயைக் கொடுத்தபோது திரு வல்லிக்கேணி கோவில் வேழத்தால் செல்லமாகத் துதிக்கையால் தட்டப் பட்டு, காயமுற்று சிகிச்சை பெற வேண்டிய தேவை இல்லை;குணம் அடைந்து விட்டேன் என்று பாவேந்தருக்குத் தகவலும் சொன்னதற்குப் பிறகு மரித்துப் போனார்.அந்தப் பாரதியின் உடலைத் தூக்கிக் கொண்டு சென்றபோது, இறுதிச்
சடங்கில் கலந்து கொண்டவர்கள் மொத்தம் 11 பேர்கள்தாம் என்பதை நான்
இங்கே எண்ணிப் பார்க்கிறேன். அன்று பெருங்கூட்டம் திரளவில்லை. உச்சந் தலை பிளக்கப்பட்டு மடிந்த திருப்பூர் குமரனைத் தூளியில் கட்டித் தூக்கிச் செல்ல இரண்டு பேர்தான் இருந்தார்கள்.ஆனால், இத்தனை ஆண்டுகள் கடந் ததற்குப்பிறகும், அவர்கள்தாம் நம் நினைவுகளில் நிலைத்து இருக்கின்றார் கள். பாரதியின் கவிதை வரிகளைத்தான் இங்கே பாடுகின்றோம்.

அதுபோல, உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம்,ஈழத் தமிழ் இனத்தின் விம்மல் ஒலி. ஆனால், இது உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அது காலக் கல்வெட்டாக இருக்கும்.

இது கற்பனை அல்ல. கற்பனையாகத் தீட்டப்பட்ட சோக காவியங்களே, அமர
காவியங்களாக நிற்கின்றன.

சின்னவயதில், ஓலைக்கொட்டகைத் திரை அரங்கில், ஒரு ரீல் முடிந்ததற்குப்
பிறகு, இடையிலே முறுக்கு விற்பவனின் குரல்தான் கேட்கும். அங்கே மண லைக் கூட்டி வைத்துக்கொண்டு, அதில் உட்கார்ந்து நான் பார்த்த திரைப் படங் களுள், என் மனதை விட்டு அகலாத சித்திரம் ஒன்று: சரத் சந்திரரின் காவிய மாகிய, தேவதாஸ் திரைப்படம்.

அதில், தேவதாசாக, நாகேஸ்வரராவ் நடித்து இருந்தார்.பார்வதியாக சாவித் திரி. தேவதாசின் நண்பனாக, எம்.என். நம்பியார் நடித்தார். 

இப்பொழுது தாடி வைத்துக் கொண்டால், ஒரு புரட்சிகரமான எண்ணம் கொண் டவர்களுக்கு அது அடையாளமாக இருக்கிறது. அந்தப் படம் வெளிவந்த பல ஆண்டுகளுக்குப் பிறகும், அந்த நாள்களில், யாராவது கொஞ்சம் முகத்தை மழிக்காமல், தாடி வைத்துக் கொண்டு இருந்தால், என்ன நீ தேவதாஸ் ஆகி விட்டாயா? என்றுதான் கேட்பார்கள்.

சரத் சந்திரர் தீட்டிய தேவதாஸ் காதல் காவியத்தில், திரைப்படத்துக்காக கண் டசாலா பாடிய அந்தப் பாடல்கள்:

உலகே மாயம்; வாழ்வே மாயம்;
துணிந்தபின் மனமே,
துயரம் கொள்ளாதே
உறவும் இல்லை, பகையும் இல்லை
எல்லாம் மாயைதானா? பேதை
எண்ணம் யாவும் வீணா?
கனவிதுதான் நிஜமிதுதான்
அன்பே பாவமா?

என இந்தப் பாடல்கள் எல்லாம்,இன்றைக்கும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன.

தேவதாஸ், ஜமீன்தார் மகன்; பார்வதி,ஏழைப்பெண். அந்தக் காதல்கைகூடாமல் போய், அந்த ஏக்கத்தில் இருந்து விடுபட முடியாமல் போய், மதுவுக்கு அடிமை யாகி, பின்னர்,காசநோய்க்கும் ஆளாகிய தேவதாஸ், இருமும்போது இரத்தத் துளிகள் தெறிக்கும். தந்தை மடிந்து விட்டார்.இளைய ஜமீன்தார் அண்ணன்.

இதுதான் கடைசியாகக் கொடுத்து அனுப்பு கின்ற பணம் என்று, விசுவாசமாக வே உடன் இருக்கின்ற அந்த ஊழியக்காரனிடம் அனுப்பியதற்குப் பிறகு, அதை யும்,வாழ்க்கையில் தவறு இழைக்கக்கூடிய பகுதியில், வறுமையின் காரண மாகத் தான் இருக்கக்கூடிய பெண் தன் மீது கொண்ட நேசத்தை ஏற்றுக் கொள் ள முடியாவிட்டாலும், அந்தப் பணத்தை அங்கே கொடுத்து விட்டு, சாவதற்கு
முன்பு கடைசியாகப் பார்வதியைப் பார்க்க வேண்டும் என்று அந்த ரயிலில் வருவார்.வேலைக்காரர் தூங்கி விடுவார். அவரை எழுப்ப வேண்டாம் என்று துர்காபுரம் ரோடு இரயில்வே நிலையத்தில் இறங்கி விடுவார் தேவதாஸ்.

அவரது உயிர் பிரியும் அந்தக் கடைசிக் காட்சிகளை எண்ணும்போது, எத்தனை
ஆண்டுகள் ஆனாலும், இதயத்தைப் பிழிந்து விடும். அது கற்பனைக் காவியம் தான்.

எனவே, துன்பமான நிகழ்வுகள்.இராஜாமணி பிக்சர்ஸ் தயாரித்த பாசமலர்
திரைப்படத்தைப் பற்றி நமது தமிழருவி மணியன் அவர்கள் மிக அழகாகச்
சொன்னார்கள். தன் தங்கை அந்த இராதா நிலையத்தில் இருக்கட்டும் என்று, கிழிந்து போன அந்தப் பழைய கோட்டோடு, அந்த வீட்டுக்குக் கை காட்டி விட்டுச் செல்வார் சிவாஜி.

அந்தப் படத்தின் கடைசிக் காட்சியில், கை வீசம்மா கை வீசு; கடைக்குப் போக லாம்; மிட்டாய் வாங்கலாம் கை வீசு; என்று சிவாஜி பாடிக்கொண்டே சாகின்ற அந்தக் கடைசிக் காட்சியைப் பார்த்தவர்கள் யாரும் அழாமல் இருக்கமுடியாது.

அதுவும் கற்பனைக் கதைதான்.அண்ணன்-தங்கை பாசத்தை வைத்துக் கொண்டு எழுதப்பட்ட கதை.

மதுரை வீரன் படத்தில், மாறுகால் மாறு கை வாங்கப்பட்ட நிலையில், புரட்சி
நடிகர் எம்.ஜி.ஆர். இரத்த வெள்ளத்தில் கிடக்கின்ற காட்சியைப் பார்த்தவர்கள்,
கண்கலங்கிக் கதறினார்கள்.

திரைப்படங்களில் காட்டப்பட்ட உச்சகட்டக் காட்சிகள் கண்ணீரை வர வழைத்தன.

அதுபோல, இந்த உச்சிதனை முகர்ந்தால் படத்தின் இறுதிக் காட்சி.

மனிதநேயத்தின் சிகரமாகவும், அழிவின் பாதையில் கொண்டு போய் நிறுத்தப் பட்ட ஒரு இனத்தின் குமுறலாகவும் இருப்பினும்,உயிர்க்கொல்லி எய்ட்ஸ் நோய், பிறந்த குழந்தையையும் தாக்கி இருக்கிறது என்ற நிலையிலும்கூட, பேராசிரியர் நடேசன், நீண்ட நாள்களுக்குப் பிறகு கருவுற்ற தன் துணைவி யாருக்குப் பிறந்த குழந்தையோடு, இந்தக் குழந்தையையும் சேர்த்து எடுத்துக் கொண்டு, எந்த மண்ணில் விளைந்தாலும் ரோஜா ரோஜாதானே? இந்த ரோஜா வையும் நான் தூக்கிச் செல்லுகிறேன் என்று அவர் செல்லுகின்ற வேளையில், இலங்கையில் இருந்து முறையான அனுமதி பெறாமல் தமிழ்நாட்டுக்கு வந்த இந்தத் தாயை, இந்த மகளைத் தன் வீட்டில் தங்க வைத்ததும், காவல்துறைக் குத் தெரிவிக்காததும், பேராசிரியர் நடேசன் செய்த இராஜத்துரோகக் குற்றம் என்று போலீஸ் கைது செய்கிறதே, இதுதான் தமிழ்நாடு என்பதையும், அந்தத்
திரைப்படத்தின் நிறைவில் புகழேந்தி அவர்களே, நீங்கள் காட்டி இருக்கிறீர்கள்.

இங்கே நமது உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களும், மானமிகு விடு தலை இராசேந்திரன் அவர்களும், உன்னதமானக் கவிதைகளைத் தருகின்ற சகோதரி தாமரை அவர்களும், இந்தத் திரைக்காவியத்தின் உயர்வுகளைப் பற்றிச் சொன்னார்கள்.

ஐயா நல்லகண்ணு அவர்கள் வாழ்த்தியது, எனக்கு எத்தனையோ விருதுகள் கிடைத்ததுபோல இருந்தது என்று,புனிதவதி என்ற பாத்திரமாகவே மாறிவிட்ட நீனிகா இங்கே சொன்னார்.

நீ நீனிகா. நீர், நிலம், காற்று: நீரில்தமிழர்களின் இரத்தமும், கண்ணீரும் கலந் தது; நிலத்தில், மாவீரர்களும், இன அழிப்பில் கொல்லப்பட்டவர்களும் உள்ளே உறங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். மாவீரர்களின் சுவாசமும், தமிழர்கள் அழிக்கப்பட்ட போது, அவர்கள் எழுப்பிய ஓலக்குரலும் காற்றோடு கலந்து இருக்கின்றது.

நான் மிகைப்படுத்திச் சொல்லவில்லை.முறையாக இந்தப் படம் ஆஸ்கர் 
விரு துக்கு அனுப்பப்பட்டால், நடுநிலையோடு அவர்கள் தேர்வு செய்வார் களானால், நிச்சயமாகச் சொல்லுவேன்: நீனிகா உலகத்திலேயே உயர்ந்த விருதைப் பெறுகின்ற அளவுக்கு, இந்தப் படத்தில் அந்தப் பாத்திரமாகவே மாறி இருக்கிறார்.

இது ஈழத்தமிழர்களுக்காக எடுக்கப்பட்ட படம் என்ற உணர்வில், நான் எதையும்
மிகைப்படுத்திச் சொல்லவில்லை. நான் படைப்பாளி அல்ல; ஆனால், ஒரு நல் ல ரசிகன். சின்ன வயதில் இருந்து நல்ல படங்களைப் பார்த்து ரசிக்கின்ற வன். 

உமர் முக்தார் திரைப்படத்தில் உமர் முக்தாராக நடித்த ஆண்டனி குயின், ஹன்ச்பேக் ஆப் நாட்டர்டாம்(Hunchback of Notterdam) என்ற படத் தில், கூனராக வருவார். ஜீனா லோலா பிரிகிடா அதில் கதாநாயகி. கன்ஸ் ஆப் நவரோன் (Guns of Navarone) திரைப்படத்திலும் அற்புதமாக நடித்து இருக் கிறார். எதிரிகளின் பீரங்கிகளைத் தகர்க்கச் செல்லுகின்ற படை வீரர்களுள் ஒருவராக வருவார். அப்படிப்பட்ட ஆண்டனி குயின், பரிசு வாங்கி இருக்கிறார்.

தனது முதல் படமான லாரன்ஸ் ஆப் அரேபியாவில் நடித்ததற்காகப் பரிசு
வாங்கினார் பீட்டர் ஓ டூல். நடிக்க வந்த நீண்ட நாட்களுக்குப் பிறகு, காட்பாதர்
படத்துக்காக மார்லன் பிராண்டோ பரிசு வாங்கினார். அண்மையில் கிளாடி யேட்டர் படத்தில் நடித்ததற்காக, ரஸ்ஸல் குரோவ் பரிசு வாங்கினார்.

சிசில் பி டிமெல்லி இயக்கிய பத்துக் கட்டளைகள் (Ten Commandments) திரைப்படத் தில் சார்ல்டன் ஹெஸ்டன், மோசசாக நடித்தார். அது கிட்டத்தட்ட பத்து ஆஸ் கர் விருதுகளை வென்றது.சார்ல்டன் ஹெஸ்டன் புகைப்பழக்கம் கொண்டவர். அந்தப் படத்தில் மோசசாக நடித்ததற்குப் பிறகு, தன் வாழ்க்கையில் மது அருந்துவதையும், புகை பிடிப்பதையும் விட்டு விட்டார்.

பென்ஹர் என்ற திரைப்படத்தில் வருகின்ற ரதப் போட்டிக் காட்சிகளைப்போல இதுவரையிலும் வேறு எவரும் எடுக்கவில்லை. உண்மையான காட்சி.அந்தப் படத்துக்கும் ஆஸ்கர் விருது வாங்கினார். ஆஸ்கர் விருது பெற்றவர்கள், அந்தப் பாத்திரங்களாகவே மாறி இருப்பதைப் பார்த்து வியந்து இருக்கிறேன்.

அந்த வகையில், இந்தத் திரைப்படத்தை,விடுதலை இராசேந்திரன் அவர்கள்
குறிப்பிட்டதைப் போல, ஒவ்வொரு காட்சிக்கும் உரிய விளக்கத் தலைப்பு களோடு, நம்முடைய தமிழருவி மணியன் அவர்களுடைய வசனங்களை
ஆங்கிலப்படுத்தி, உலக அரங்கிற்கு அனுப்ப வேண்டும்.

நான் அறிந்த மட்டில், நோர்வே திரைப்பட விழாவில் இந்தப் படம் விருதுக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டு இருப்பதாக ஒரு செய்தி வந்து சேர்ந்து இருக்கிறது. நிச்ச யமாகச் சொல்வேன், உலக அரங்கில் விருது பெறுகின்ற படங்களின் பந்தய வரிசையில்,கற்பனையாக அல்லாமல்,உண்மையை உணர்த்துவதால், மிகைப் படுத்தப்படாத காட்சிகளைக் கொண்ட இந்த உச்சிதனை முகர்ந்தால் திரைப்பட மும் விருதுகளைப் பெறும்.

முதல் சுற்று வெளியீடு சரியாக அமையவில்லை; எனவே, இரண்டாவது சுற்றுக்கு விடுகிறோம்; இதற்கு அடுத்த முயற்சிகளிலும் ஈடுபடுவோம்; மக்க ளிடம் இந்தத் திரைப்படத்தைக் கொண்டு போவோம் என்று அண்ணன் நல்ல கண்ணு அவர்கள் சொன்னார்கள்.நாளை மறுநாள், இந்தத் திரைப்படம் வெளி யிடப் படுகிறது. சென்னையில் எந்த அரங்குகளில் வெளியாகும் என்ற தகவல்
இன்னும் இறுதியாகவில்லை. இரவுக்குள் வரலாம்.

என்னுடைய அன்புக்குரியவர்களே,திரை அரங்குகளுக்குச்செல்லுங்கள். குடும் பத்தோடு செல்லுங்கள்; நண்பர்களை அழைத்துக் கொண்டு செல்லுங்கள்; இந் தத் திரைப்படத்தைப் பாருங்கள்.

தொடரும் .....

No comments:

Post a Comment