ஆட்சியாளரிடம் மனு கொடுத்த #மதிமுக விவசாய அணி மாநில துணை செயலாளர் வரதராஜன்
பனை ஓலையான பொருட்களுக்கு அரசு மானியம் வழங்கி இத்தொழிலாளர் களுக்கு மறுவாழ்வு தர வேண்டுமென மதிமுக கோரிக்கை விடுத் துள்ளது.
பெருகி வரும் மக்கள் தொகையும், கருகி வரும் இயற்கை வளங்களும் மனித சமுதாயத்தின் எதிர்காலம் குறித்து இன்றைய தினம் பல கேள்விகளை எழுப்புகிறது. அறிவியல் தொழில் நுட்பத்தால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிப்படைந்து வருகிறது என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாகும்.
அதற்கு முக்கிய காரணம் இன்றைய காலகட்டத்தில் அன்றாடம் நாம் 50 சத வீதம் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதுதான். தமிழகத்தில் பிளாஸ் டிக் எதிர்ப்பு விழிப்புணர்வை மக்களிடம் எடுத்து செல்வதற்கு சுமார் 3200 சுற்றுச்சூழல் மன்றங்கள் பள்ளிகளில் இந்த ஆண்டு துவக்கப்பட்டுள்ளது.
நாம் பயன்படுத்தும் பொருட்களிலிருந்து உடுத்தும் பொருட்கள் வரை பிளாஸ்
டிக் புகுந்து விட்டது. அக்காலத்தில் திண்பண்டங்கள் நகர்புறம் மற்றும் கிராம புறங்களில் ஆங்காங்கு பலகார கடை என்ற பெயரில் செயல்படும். அப்பல காரங்களை வீடுகளுக்கு வாங்கி செல்வதற்கு இயற்கையிலான ஓலை கொட் டான்கள் மற்றும் தாள்களில் மக்கள் வாங்கி செல்வார்கள்.
அவை காற்றோட்டமாகவும், நறுமனத்துடனும், கெடாமலும் இருக்கும். அப்பண்டங்கள் தயாரிக்கப்பட்டு 10 தினங்கள் வரை ஊடல் வாடை வராது. இது தவிர வீடுகளில் தூங்குவதற்கு கோரைபாய், நவதானியங்களை புடைப்பதற்கு பனை நார்களை கொண்டு சுளகு, கட்டிலுக்கு பனை நார் மூலம் பின்னல், இன்றைய பிளாஸ்டிக் கோணிப்பைகளுக்கு பதிலாக பனை நார் மூலம் நெய் யப்பட்ட கடகம் என்ற பெட்டியை சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
சேதமடைந்த இப்பொருட்களை குப்பையில் கொட்டினால் பயிர்களுக்கு உர மாகும். இவை மக்கும் தன்மை உடையது. இதனால் எந்தவித பக்க விளைவும் மனிதனுக்கு கிடையாது. இதன் மூலம் பிளாஸ்டிக்கே இல்லாத கிராமங்களில் 30 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் ஆரோக்கியமாக நோய் நொடியின்றி வாழ்ந்து வந்தான்.
ஆனால் விலைமதிக்க முடியாத இயற்கையை நாம் கொஞ்சம் கொஞ்சமாக கைவிட்டு செயற்கை பிளாஸ்டிக் மோகம் மக்களிடத்தில் புகுந்து விட்டது. இதன் மூலம் மனிதன் ஆயுட்காலத்தையும், இனம் புரியாத நோய்களையும் இலவசமாக இன்று பெற்று வருகிறான்.
பனை நார், பனை ஓலை அவற்றிற்கான மகிமையை நாம் மறந்து விட்டோம். இதனால் இத்தொழிலை செய்து வருவோர்களும் அழிந்து வருகின்றனர். எனவே மத்திய, மாநில அரசுகள் பனைநார், பனைஓலை போன்றவற்றால் செய்யப்படும் பொருட்களுக்கு நிதிஉதவி செய்து ஊக்குவிக்க வேண்டுமென மதிமுக.,மாநில விவசாய அணி துணை செயலாளர் வரதராஜன் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment