ஆட்சியாளரிடம் மனு கொடுத்த #மதிமுக விவசாய அணி மாநில துணை செயலாளர் வரதராஜன்
அன்றைய முதலமைச்சர் காமராஜர் ஆட்சியில் பள்ளிகளில் மதிய உணவு வழங்கும் திட்டம் துவக்கப்பட்டது. பின்னர் 1982ம் வருடம் மதிய உணவு திட்டத்தின் பெயரை மாற்றி சத்துணவு திட்டம் என்று முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பெயரிட்டார். வாரத்தில் 5 நாட்கள் உணவுடன் முட்டையை அரசு மாணவ, மாணவியருக்கு வழங்கி வருகிறது.
இது தவிர செவ்வாய்கிழமை பயறுவகைகளும், வெள்ளிக்கிழமை உருளைக்
கிழங்கும் சத்துணவுடன் அரசு வழங்குகிறது. சத்துணவு சமைக்க ஒரு மாணவ னுக்கு மசாலாவிற்கு 19.5 பைசாவும், எரிபொருள் விறகிற்கு 24 பைசாவும், காய்கனிக்கு 32 பைசாவும் அரசு கணக்கிட்டு வழங்கி வருகிறது.
கடுமையான விலைவாசி உயர்வினால் மேற்கண்ட மானியம் எவ்விதத்திலும் போதுமான தாக இல்லை என்றாலும், அரசு வழங்கக்கூடிய மசாலா பொருள், விறகு மற்றும் காய்கனி கொள்முதல் செய்வதற்கு அரசு அளிக்கும் தொகையை கடந்த காலங்களில் முன் மானியமாக வழங்கி வந்தது. இதனால் அமைப்பாளர்கள் சிரமமின்றி இருந்தனர்.
ஆனால் தற்போது இரண்டு வருட காலமாக மசாலா பொருள், காய்கனி,விறகு போன்றவற்றை தங்கள் சொந்த பொறுப்பில் கொள்முதல் செய்து நான்கு மாதம் கழித்து அதற்கான தொகையை அரசிடம் கேட்டு பெற வேண்டிய நிலை உள்ளது. இதனால் சத்துணவு அமைப்பாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
ஆகவே உடனடியாக மசாலா, விறகு, காய்கனி மானியத்தை முந்தைய மானியமாக வழங்க வேண்டுமென மதிமுக.,விவசாய அணி மாநில துணை செயலாளர் வரதராஜன் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment