Thursday, July 11, 2013

இனப் படுகொலை கூட்டுக் குற்றவாளி திமுக

கட்சியின் அனுதினச் செலவுகளைச் சமாளிக்க, நிதியுதவியை வாரி வழங்கு வீர் என்று விளம்பரம் தருகிறார்.விருதுநகரில் மாநில மாநாடு நடத்துவதற் கான ஏற்பாடுகளில் பரபரக்கிறார் 'நாடாளுமன்றத் தேர்தலுக்கான முஸ்தீபு காள ? என்று கேட்டால் தோள் துண்டை முறுக்கிக்கொண்டு புன்னகைக்கிறார்  வைகோ ..

ஆனந்த விகடன் பேட்டியிலிருந்து ...

கேள்வி :- மதிமுக துவங்கி 20 ஆண்டுகளுக்குப் பிறகு,கட்சியை நடத்த, தாயகத்தை இயக்க என விளம்பரப்படுத்தி நிதி வசூலிக்க வேண்டிய நிலை நிலவுவது வருத்தம் அளிக்கவில்லையா ?
வைகோ :- "வருத்தமா...? பெரு மகிழ்ச்சியில் இருக்கிறோம் , 'கட்சி நடத்த உங்களால் முடிஞ்சதைத் தாங்கனு வெளிப்டையாகக் கேட்கிறார் வைகோ ' என பொதுமக்களிடம் பெரிய வரவேற்பு ' சுயேச்சை கவுன்சிலர்கூட லட்சம் , கோடினு ஊழலில் திளைக்கும்போது நீங்கள் நிதி திரட்டிக் கட்சி நடத்துவது சிறந்த முன்னுதாரணம் ' என எங்கள் தோழர்கள் சொல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் முகமலர்ச்சியோடு தங்கள் சக்திக்கு ஏற்ப நிதி அளிக்கிறார் கள். மக்கள் பணத்தில் கட்சி நடத்துவதில் நான் பெருமைப்படுகிறேன் "

கேள்வி :- "வட்டராம்,சாதி,மதங்களைப் பின்னணியில் கொண்ட கட்சிகளே. '2016-ல் ஆட்சியைப் பிடிப்போம்... முதல்வராவோம்' என்று இலக்கோடு இருக்கையில், மதிமுக-வுக்கு என்று அப்படியான எந்த இலக்கும் இல்லையா ?

வைகோ :- " பாத்திரம் நல்ல சூடாக இருக்கும்போது மாவை ஊற்றினால்தான்,
அது தோசையாக மாறும். இல்லையெனில், அது வெறும் மாவுதான் , நிலம் 
ஈரமாக இருக்கும்போது விதைத்தால்தான் , அது முளைக்கும் அப்படித்தான் நாங்கள் ஒன்றைச் சொன்னால், அதை ஒட்டுமொத்த மக்களும் ஆமோதிக்கும் நிலைக்கு வளர்ந்த பிறகே , அப்படி எதையும் சொல்வோம். அப்படி மக்கள் எங்களை அங்கீகரிக்கக்கூடிய சூழல் வரும்போதுதான் , ஓர் இலக்கைத் திட்டவட்டமாக அறிவிக்க முடியும். நான் அரசியலுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், எந்த சமயத்திலும் ' தமிழக முதலமைச்சராக வருவேன் ' எனச்சொன்னதே கிடையாது. மற்றபடி இந்த வருடம், இந்த மாதம் , இந்தத் தேதி என இலக்கு நிர்ணயிக்க ஜனநாயகத்தில் அனைவருக்கும் உரிமை உண்டு . அதைப்பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை."

கேள்வி :- " ஈழப் பிரச்சனையை மையமாகவைத்து மத்திய அரசுக்கான தன் ஆதரவை விலக்கிக்கொண்ட திமுக, ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸிடம் வேண்டி விரும்பி ஆதரவு பெற்றதை எப்படிப் பார்க்கிறீர்கள் ? "

வைகோ :- " ஈழத் தமிழர்கள் படுகொலையில் கூட்டுக் குற்றவாளி திமுக ஆனால் தமிழகத்திலே மாணவர்களின் கொந்தளிப்பு தங்கள் பக்கம் திரும்பி யதும், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டோம் என்று அறிவாலயத்தில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டாடியவர்கள் அவர்கள் ,அப்போது சத்தியமூர்த்தி பவனிலும் ஒரு கொண்டாட்டம் நடந்ததே ? 
அதற்கெல்லாம் இப்போது என்ன பதில் சொல்வார்கள் ? இந்த ராஜ்யசபா தேர்தலில் தோற்றல்தான் என்ன ? நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராடிய போது எந்தத் தியாகத்த்துக்கும் தயாராக , உறுதியாகப் போராடுகிறார் என்று நெக்குருகி உலகத் தமிழர்களின் உள்ளங்களில் இடம் பிடித்தவர் அன்றைய கலைஞர் - ஆனால் இன்றோ, ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக எதையும் காவு கொடுத்துச் சமரசம் செய்து கொள்ளலாம் என்ற நிலைக்கு அண்ணா உருவாக்கிய இயக்கத்தைக் கொண்டு சென்று விட்டார் . வான்புகழ் வள்ளுவப் பெருந்தகை ' மானம் ' என்ற அதிகாரத்தில், 

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே 
கெட்டான் எனப்படுதல் நன்று !  என்று எழுதியிருப்பது இன்றைய கருணாநிதிக்காகத்தான் ! "

கேள்வி :- " எதிர்க் கட்சித் தலைவராக விஜயகாந்தின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது ? "

வைகோ :- " பொது வாழ்வில் மிக அரிதான வாய்ப்பு விஜயகாந்த் அவர் களுக்குக் கிடைத்தது. அந்த வாய்ப்பு கிடைப்பது அரசியலில் மிகவும் அப்பூர்வம். ஆனால், அவர் அந்த வாய்ப்பை இதைவிட இன்னும் சிறப்பாகப் பயன்படுத்திச் செயல்பட்டு இருக்கலாம்!"

கேள்வி :- "ஈழத் தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ., எம்.பி-க்களே, ' எங்களுக்கு மாகாண சுயாட்சி கிடைத்தால் போதும் ' என இந்திய அரசிடம் பேசிச் சென்றுள்ளனர். ஆனால், தமிழக ஈழ ஆதரவு அரசியல் கட்சிகள் , தனி ஈழம் கேட்கிறீர்கள், இந்த முரண்பாடு பற்றி ? "

வைகோ :- " நான் அவர்களைக் குறை சொல்ல விரும்பவில்லை, அவர்களை எப்போதும் ஆபத்துச் சூழல் சுற்றி வளைத்திருகிறது, யாருடைய உயிருக்கும் அங்கு பாதுகாப்பு இல்லை. இந்தப் பாதுகாப்பற்ற சூழல்தான் அவர்களை இப்படிப் பேச வைத்துள்ளது. ஆனால், இந்தத் தமிழ் ஈழத்தைக் கட்டி எழுப்பக் கூடிய முழுப்பொறுப்பில் அவர்கள் இல்லை. புலிகளின் ஆதரவோடு தேர்த லில் போட்டியிட்டர்களே தவிர, தமிழீழ விடுதலைப் போரை முன்னெடுக்கும்  
முன்னணியினர் அவர்கள் இல்லை. அவர்களின் கருத்து ஒட்டுமொத்தத் தமிழ் ஈழ மக்களின் கருத்தும் அல்ல. அது ஈழத் தமிழர்களின் கோரிக்கையும் அல்ல. அவர்களை இந்திய-இலங்கை அரசுகள் பகடைக்காயாக உருட்டி விளையாடு கின்றன.இது, சுதந்திரத் தமிழ் ஈழத்துக்காக உலகம் இதுவரை கண்டும் கேட்டும்  இராத பல வீரச் சமர்களை நடத்தி, உதிரம் சிந்திச் சென்றார்களே .... அந்த மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்!"

கேள்வி :- தமிழகத்தில் திமுக அதிமுக அல்லாத மாற்று அணி அமைய வாய்ப்பு உள்ளதா ? அதில் மதிமுக பங்கேற்குமா ? 

வைகோ :- " நீங்கள் குறிப்பிட்ட பெரிய கட்சிகள் அளவுக்கு எங்கள் வாக்கு வங்கி இல்லை. திமுக பேரறிஞர் அண்ணா உருவாக்கிய கட்சி. அதிமுக, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சி. ஆனால், சமீபமாக மதிமுக வலுப்பெறுவது அரசியல் சூழ்நிலையில் நல்லது என்ற நினைப்பில் மக்கள் இன்று இருக்கிறார்கள். 'கொள்கைக்காகப்போராடுகிறார்கள்' என்ற எண்ணம் 
எங்கள் மீது பரவலாகப் பதிந்திருக்கிறது. இதுவே எங்களுக்கான வெற்றி. நீங்கள் சொல்லும் மாற்று வர வேண்டும் என்பதே எங்களின் நோக்கமும் கூட.
அந்த இலக்கை நோக்கி இயக்கத்தை முன்னேடுத்துச் செல்ல வேண்டும் என்பதால்தான், ' முன்னேறிச் செல் , அதிகாரத்தைக் கைப்பற்று ' என்கிற முழக்கத்தைக் கடந்த கரூர் மாநாட்டில் பிரகடனம் செய்தோம். இனி , அரசியலைத் தீர்மானிக்கும் இளைய சமுதாயத்தினர் பரிசீலிக்கும் இடத்தில் மதிமுக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்! "

கேள்வி :- " நீங்கள் உற்சாகத்தைப் பகிர்ந்து கொள்கிறீர்கள்... ஆனால், தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் தாமோதரனோ. 'விரக்தியின் விளிம்பில் இருக்கிறார் வைகோ ' என உங்களைக் கடுமையாகத் தாக்கியிருந்தாரே ? "

வைகோ :- "அரசியலில் என்னைக் கடுமையாக எதிர்ப்பவர்கள் கூட, அவரு டைய வார்த்தைகளை ஏற்க மாட்டார்கள். 'இருமுறை அமைச்சர் பதவி தருகிறேன் என வாஜ்பாய் அவர்கள் வற்புறுத்திய போது, அதை வேண்டாம் என நிராகரித்த வைகோவைப் போல ஒருவரை அரசியலில் பார்ப்பது அபூர்வம் ' என்றார் அப்போதைய உள்துறை அமைச்சர் அத்வானி. 2004-ல் பொடா சிறைவாசத்தில் இருந்து வெளியே வந்தபோது அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்பு இருந்தும் நான் எம்.பி பதவிக்குப் போட்டியிட வில்லை. 2006-ல் சட்டமன்றத் தேர்தலில் நாங்கள்  வெற்றி பெற்ற சிவகாசியில் நான் போட்டியிட்டிருக்கலாமே! நான் லட்சியங்களை நேசிக் கின்றவன், சுயநலம் இல்லாமல் என் கைகளைக் கறைபடுத்திக் கொள்ளாமல் வாழ்கிறேன். துன்ப துயரங்களுக்கு மத்தியில் நாளும் இயங்கிக் கொண்டு இருகின்றவன், விரக்தியில் இருந்தால், வீட்டில் அல்லவா முடங்கிக் கிடப் பேன். நான் வீட்டுக்குச் செல்வதே மாதத்துக்கு ஒரு நாளோ, இரு நாளோ தான்.
அமைச்சரின் அந்த வரிகளை நான் பொருட்படுத்தாததால் அதற்குப் பதில் அளிக்கவில்லை " 

கேள்வி :- " திமுகவில் இருந்து பிரிந்து, மதிமுக வை ஆரம்பித்த சமயத்தில் உங்களுக்கு திமுகவிலே மூன்றில் ஒரு பங்கினர் ஆதரவு இருந்ததாகச் சொல் வர்கள். ஆனால், இப்போது மதிமுக வில் மக்களிடையே அறிமுகம் உள்ளவர் என்று தேடினால், நீங்கள் மட்டும்தானே மிஞ்சியிருகிறேர்கள் ? "

வைகோ :- ஓர் அரசியல் இயக்கத்தில் வெற்றிகள் கிடைக்காதபோது தொடர்ந்து போராடும் குணம் எல்லோரிடமும் இருக்காது. பலர் சோர்ந்து தளர்ந்துவிடுவார்கள். அதில் சிலர் சுயநலமாக யோசித்து சில முடிவுகள் எடுக்க நேரிடும். வீசும் வலையில் சிக்கிக்கொண்டால், அந்த ஒரு நாள் செய்தியைத் தாண்டி அவர்களின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகிவிடும்.
என்னோடு வந்தால் எல்லாப் பதவிகளுக்கும் வர முடியும் என்று சொல்லி யாரையும் நான் அழைக்க வில்லையே. எங்களுக்கு ஊடக பலமோ, பண பலமோ கிடையாது. தேர்தல்களிலும் பெரிதாக வெற்றிகள் கிடைத்துவிடவும் இல்லை. ஆனாலும், எங்கள் இயக்கத்தின் தொண்டர்கள் மட்டுமே ஒரு போராளியின் போர்க் குணத்துடன் 20 வருட காலமாக இந்த இயக்கத்தை நடத்தி வருகிறார்கள். 20 வருடங்களாக ஒரு கட்சி நடத்துவதே மிகப் பெரிய வெற்றிதானே ? இது நான் உருவாக்கிய இயக்கம் அல்ல. ஐந்து  தொண்டர்கள் தீக்குளித்து இறந்த சாம்பலில் இருந்து உருவான இயக்கம்.எதிர்காலத்தில் பெரிய வெற்றிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு போராடுகிறோம்...
போராடிக்கொண்டே இருப்போம்!"

No comments:

Post a Comment