Thursday, July 11, 2013

உத்தரகாண்ட் உணர்த்தும் பாடம்

உத்தரகாண்ட் வெள்ளப் பெருக்கு உணர்த்தும் பாடம்:

நாட்டின் நதிகள் இணைக்கப்பட வேண்டும்!

உத்தரகாண்ட் மற்றும் இமாச்சல பிரதேசப் பகுதிகளில் ஏற்பட்ட பெரு வெள்ள மும் அதனால் விளைந்த உயிர்ச் சேதங்களையும் பொருட் சேதங்களையும் கண்ட பின்பாவது மத்திய அரசு விழித்தெழுந்து, மக்கள் தலைவர் வைகோ நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ‘நதிகள் இணைக் கப்பட வேண்டும்’ என்ற மசோதாவைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் நதிகள் இணைக்கப்பட்டால் வெள்ளச் சேதத்தையும், உயிர்ப் பலிகளையும் தவிர்த்து, வறட்சிப் பகுதிகளில் வளம் காணலாம் என் பது உத்தரகாண்ட் வெள்ளப் பெருக்கு மத்திய அரசுக்கு உணர்த்தும் பாடமாகும்.

வரலாறு காணாத கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, உத்தர காண்ட் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களின் பல பகுதிகள் உருக்குலைந்துபோய் விட்டன. மழை வெள்ளம் ஆயிரக்கணக்கில் உயிர்ப்பலியை ஏற்படுத்தியுள் ளது. இலட்சக் கணக்கானோர் வெள்ளத்தின் நடுவில் சிக்கி, உணவின்றியும், தங்குவதற்கு இடமின்றியும் பரிதவித்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். நதிக் கரையில் இருந்த பல குடியிருப்புகள் சீட்டுக் கட்டுகள் போல் சாய்ந்து வெள் ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டதைத் தொலைக் காட்சியில் பார்க்கும்போது துயரம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மனித சடலங்கள், கால்நடைகள், வாக னங்கள் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட செய்தி மனதைச் சஞ்சலமாக்கு கின்றது.அரசின் புள்ளிவிவரப்படி உயிர்ப் பலியானோர் எண்ணிக்கை 5,000 பேர்
என்றால் நிச்சயமாக இழப்பு கூடுதலாகவே இருக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை நாட்டின் சில பகுதிகளில் தீவிரமடைந்து
பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தி விலை மதிப்பற்ற உயிர்களையும் பொருட்
களையும் பலிகொள்கின்றது. கடந்த ஆண்டு அசாமில் பலத்த வெள்ளம். பெரும் சேதம் ஏற்பட்டது. அதே கால கட்டத்தில் பிரம்மபுத்திரா நதியும் பொங்கி எழுந்து காசிரங்கா உயிரியல் பூங்கா வரை சென்று தனது ஆக்ரோசத் தைக் காட்டியது. அதற்கு முன்பு, ஒடிசா மாநிலத்தில் வெள்ளம். 2011-இல் தமிழகத்தில் இயற்கையின் சீற்றம். ஆந்திராவில் கடந்த 100 ஆண்டுகளில் ஏற்படாத மிகவும் மோசமான வெள்ளம் ஏற்பட்டு பெரும் சேதம் நிகழ்ந்தது. பீகாரில் கடந்த 30 ஆண்டுகளில் காணாத வெள்ளம். மராட்டிய மாநிலம், 2005-இல், 100 ஆண்டுகள் காணாத வெள்ளத்தின் பிடியில் சிக்கித் தவித்தது.

வெள்ளப் பெருக்கும் சேதமும் ஏற்படும் போது முந்தைய சேதங்களை ஆட்சி யாளர்கள் மிகவும் வசதியாக மறந்து விடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,700 பேர் மழையாலும் வெள்ளத்தாலும் பலியாகின்றனர் என்கின்றது மத்திய நீர்வள ஆணையம்.சுமார் 96,000 கால்நடைகள் ஆண்டு தோறும் வெள் ளத்தால் இழுத்துச் செல்லப்படுகின்றன. மரங்கள், பாறைகள், வாகனங்கள், கட்டடங்கள், சடலங்கள் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப் படுவதைத் தொலைக் காட்சியில் காண்கிறோம். வெள்ளம் கொண்டு வந்து சேர்த்துள்ள மண்ணிற்கு அடியில் எத்தகைய சோகங்கள் புதைந்து உள்ளதோ? தெரிய வில்லை.உத்தரகாண்ட் வெள்ளத்தில் 500-க்கும் மேற்பட்ட பாலங்கள் வெள் ளத்தில் போய் விட்டன. சாலைப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட் டுள்ளது.

பாலங்களையும் சாலைகளையும் சீரமைக்க எத்தனை காலம் ஆகுமோ? உயிர் பிழைத்தவர்கள், உடைமைகளை இழந்தவர்கள், வீடுகளை இழந்தவர்கள் தங் களின் பழைய நிலைக்குத் திரும்ப எத்தனை ஆண்டுகள் ஆகுமோ? அப்பகுதி யை ஆக்கிரமித்திருக்கும் துயரத் திரை விலக இன்னும் எத்தனை காலம் ஆகுமோ?

ஆனால், ஒரே ஒரு சம்பிரதாயம் மட்டும் வெள்ளத்திற்குப் பின் தொடர்ந்து தவ றாமல் நடைபெற்று வருகின்றது.அது பிரதம மந்திரி தன் பரிவாரங் களுடன் வானில் இருந்து வெள்ளப்பகுதிகளைப் பார்வையிடுவதும் வெள்ள நிவாரணம் அறிவிப்பதும்தான்.மன்மோகன் சிங், இதுவரை ஒன்பது தடவைகள் வெள்ளப் பகுதிகளைப் பார்வையிட்ட சாதனையைச் செய்து உள்ளார்.

ஒன்பது தடவைகள் வானில் பறந்து வெள்ளப் பகுதிகளைப் பார்வையிட்ட பிரதமரும் நிர்வாகமும் நிவாரணம் அறிவித்தது தவிர வேறு எந்தவித உருப் படியான செயலையும் செய்ய வில்லை.

மத்திய அரசு ஒவ்வொரு முறையும் வெள்ள நிவாரண நிதியை வழங்கிவிட்டு திருப்தி அடைந்து கொள்கிறதே தவிர, நதிகளை இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ள ஆர்வம் காட்டவில்லை; எந்தப் பாடமும் இதுவரை கற்றுக் கொள்ளவில்லை.

உலகில் மோசமான இயற்கைப் பேரிடர் களைச் சந்திக்கும் 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 35 மாநிலங்களில் 27 மாநிலங்கள் பேரிடருக்கு இலக்கா னவை. 58 சதம் நிலப்பரப்பு பூகம்பத்திற்கும், 12 சதம் அல்லது 40 மில்லியன் எக்டேர் பரப்பு வெள்ளத்திற்கும், 7,500 கி.மீ. நீள கடற்கரையில் 5,700 கி.மீ. நீளம்
புயலுக்கும் சுனாமிக்கும் இலக்கான வையாக உள்ளன. 68 சதம் பரப்பளவு
வறட்சிக்கு இலக்காகும் பகுதியாக உள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதி கிட்டத்தட்ட மூன்று மடங்கும், வறட்சிக்கு இலக்காகும் பரப்பு பல மடங்கும் அதிகரித்துள் ளதாகவும் ஆய்வு கூறுகிறது.

ஆண்டுதோறும் பருவமழை வெள்ளங் களால் சுமார் 40 மில்லியன் எக்டேர்
பரப்பளவில் வசிக்கும் 260 மில்லியன் மக்கள் நம் நாட்டில் பாதிக்கப் படுகிறார் கள். வெள்ள நிவாரணப் பணிகளுக்குச் செலவிடும் தொகை சுமார் ரூ. 2,000 கோடிக்கும் மேல்.நாட்டின் முக்கிய நதிகளான பிரம்மபுத்திரா, கங்கை போன்ற எட்டு நதிகளின் வெள்ளப் பெருக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ. 3,000 கோடிக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்துகிறது.

பிரம்மபுத்திரா - பாரக் நதிகளில் நாட்டின் 32 சதம் நீர்வளம் உள்ளது. கங்கை
நதியில் 28 சதம் நீர்வளம் உள்ளது. நம் நாட்டின் மக்கள் தொகை 2020-இல் சுமார் 136 கோடியாக உயர்ந்திருக்கும் என கருதப்படுகிறது. மக்கள் தொகைக்குத் தேவையான உணவு 345 மில்லியன் டன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. தீப கற்ப நதிகளின் தண்ணீர் சுமார் 7,800 டிஎம்சி கடலில் சென்று வீணாகின்றது. கடந்த 2001-ஆம் ஆண்டு கோதாவரியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 35
இலட்சம் Cu. Secs.தண்ணீர் பல நாட்களாக ஓடி கடலில் வீணாகியது.வீணாகிய தண்ணீர் மேட்டூர் அணைக்குக் கிடைத்திருந்தால், அணை 10 மணி நேரத்தில் நிரம்பி இருக்கும்.

வீணாகிய தண்ணீரால் 3.8 இலட்சம் எக்டேர் நிலம் பாசனம் பெற்று ரூ. 1,150
கோடி மதிப்புள்ள நெல் விளைச்சல் கிடைத்திருக்குமாம். ஆண்டுதோறும்
மகாநதி, கோதாவரி நதிகள் மூலம் 2,600 டிஎம்சி நீர் கடலுக்குச் சென்று வீணா கின்றது. நாட்டில் மொத்தம் 1,880 கன கி.மீ. தண்ணீர் கிடைக்கின்றது. ஆனால், நாம் பயன்படுத்துவது 690 கன கி.மீ. மட்டுமே. மக்கள் தலைவர் வைகோ அவர் கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மசோதாவின்படி நாட்டின் நதிகளை இணைத்தால் 35 மில்லியன் எக்டேர் தரிசு நிலம் சாகுபடிக்குக் கொண்டு வர லாம். அதாவது 7.7 கோடி ஏக்கர். தற்சமயம் நாட்டின் பாசன வசதி பெறும் நிலத் தின் பரப்பு 10.8 கோடி ஏக்கர் மட்டுமே. நதிகளை இணைத்தால் பாசனப் பரப்பு
சுமார் 70 சதம் அதிகரிக்கும். நீர் மின்சக்தி 34,000 MW கிடைக்கும். தற்சமயம் மின் உற்பத்தி சுமார் 22,000 MW மட்டுமே.

நதிகளை இணைப்பதன்மூலம் உள்நாட்டு நீர்வழிச் சாலைகளை அமைக்க லாம். நீர்வழிச் சாலைகள் மூலம் ஆண்டுக்கு ஒரு இலட்சம் கோடி ரூபாய்
வருமானம் கிடைக்கும். தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்,
சாலை விபத்துகள், சுற்றுச்சூழல் மாசுபடுதல் போன்றவற்றைத் தடுக்க முடியும்.

சுமார் 1,500 கி.மீ. நீர்வழிப் பாதை நமக்குக் கிடைக்கும். நதிகளின் மூலம் நீர் வழிப் போக்குவரத்து அமைத்த பின்புதான் அமெரிக்கா, ரஷ்யா,ஐரோப்பிய நாடுகள் மிகவும் முன்னேறி உள்ளன. உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்து மிசி சிப்பி நதியில் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டு விட்டது. ஐரோப் பாவில் 10 வளர்ந்த நாடுகள் 1992 முதல் ரைன்-டேன்யூப் நதிகளின் மூலம் கருங்கடல் -வடகடலுக்கு இணைப்பை ஏற்படுத்தி உள்ளன. சீனாவும் யாங்ட்சே நதியில் நீர்வழிப் போக்குவரத்தை ஏற்படுத்தி உள்ளது. அனைத்திற் கும் மேலாக, நதிகளை இணைப்பதன்மூலம் 60 கோடி மக்களுக்குக் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும்.

பல்லாயிரம் கோடி ரூபாய் ஆண்டு தோறும் வெள்ள நிவாரண நிதியாக மத்திய - மாநில அரசுகள் வழங்கு கின்றன. இதுதவிர தன்னார்வத் தொண்டு நிறுவனங் களின் தொகை, இராணுவத்தினரின் மீட்புப் பணிக்கான செலவினங்கள், மருத் துவ சேவைக்கான செலவினங்கள், பலியானவர்களுக்கான நிவாரணம், சேத மடைந்த சாலைகள், பாலங்கள் மற்றும் குடியிருப்புகளைப் புனரமைக்கும் செலவினங்கள் எனப் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவிடப் படுகிறது.

மக்கள் தலைவர் வைகோ அவர்களின் தொலைநோக்குப் பார்வை கொண்ட
‘நதிகள் இணைக்கப்பட வேண்டும்’ என்ற தனிநபர் மசோதாவை நிறைவேற்றி மத்திய அரசு செயல்படுத்தினால் செலவினங்களையும், வெள்ளச் சேதங்களை யும், உயிர்ப் பலிகளையும் தவிர்த்து நாடு தழைக்கவும் வளம் கொழிக்கவும் நல் வழி ஏற்படும். உத்தரகாண்ட் வெள்ளப் பெருக்கு உணர்த்தும் பாடம் இது

நன்றிகள்

கட்டுரையாளர் :- ஆர்.ஞானதாஸ்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment