இயற்கை எரிவாயு - டீசல் விலை உயர்வைத்திரும்பப் பெற வேண்டும்
வைகோ அறிக்கை
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, ஒரே மாதத்தில் மூன்று முறை பெட்ரோல் விலையை உயர்த்தியது.எரிகின்ற நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல, தற் போது டீசல் விலையை 50 பைசா உயர்த்தி உள்ளது.கட்டுக்கடங்காத விலை வாசி உயர்வால் மக்கள் அல்லல்படும்போது, பெட்ரோல் டீசல் விலைகளை பத்து நாள்களுக்கு ஒருமுறை உயர்த்திக் கொண்டே இருக்கின்றார்கள்.
ஏழை, எளிய மக்களைப் பற்றிச் சிந்திக்காமல், பெருமுதலாளிகளின் ஏக போகக் கொள்ளைக்கு நாட்டைக் கூறு போட்டுக் கொடுத்துக் கொண்டு இருக் கின்றது. பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டுப் பெருமுதலாளி களுக் கான அரசு என்பதையே தொடர்ந்து நிலைநாட்டி வருகிறது.
எரிவாயு இறக்குமதிக்கு அந்நியச் செலாவணி அதிகம் செலவாகிறது என்ற காரணம் காட்டி, தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாக, உள்நாட்டில் உற் பத்தியாகும் இயற்கை எரிவாயு விலையை, ஒரு பில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்டுக்கு 4.2 டாலர் என்பதை, 8.4 டாலராக உயர்த்தி விட்டனர்.
இதனால் எரிவாயு மூலம் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்திச் செலவு அதிகரிக்கும்;மின்சாரத்தின் விலையும் பன்மடங்கு உயரும். இரசாயன உர ஆலைகள் மிகவும் பாதிக்கப்படும்.ஏற்கனவே, இரசாயன உரங்கள், யூரியா போன்றவற்றின் விலைகள், கடந்த மூன்று ஆண்டுகளில் 300 சதவீதம் உயர்ந்து விட்டன. இயற்கையின் பாதிப்பில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் விவசாயிகளை,உரவிலை ஏற்றத்தால், விவசாயத் தொழிலையே கைவிட வேண்டிய நிலைக்கு மத்திய அரசு தள்ளிவிட்டது.
இந்நிலையில் இயற்கை எரிவாயு விலை கூடினால், உர நிறுவனங்கள் இதை யே காரணமாக்கி, யூரியா, உரங்களின் விலையைத் தாறுமாறாக உயர்த்தி விடும். இது விவசாயிகளை மேலும் பாதிக்கும். மத்திய அரசின் மக்கள்விரோத நடவடிக்கைகள் கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.
இயற்கை எரிவாயு விலை அதிகரிப்பதன் மூலம் ஏற்படப்போகும் சங்கிலித் தொடர் விளைவுகளைக்கருத்தில் கொண்டும், விலைவாசி உயர்வைக் கட்டுப் படுத்தவும், எரிவாயு விலையை மாற்றி அமைப்பதையும், டீசல் விலை உயர் வையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
தாயகம், வைகோ,
சென்னை - 8 பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
No comments:
Post a Comment