Saturday, July 6, 2013

மதிமுக மீது மக்களின் நன்மதிப்பு

நாடாளுமன்றத்தில் இந்த முறை மதிமுகவின் குரல் ஒலிக்கும் என்றார் #மதிமுக பொதுச் செயலர் #வைகோ.

தஞ்சாவூரில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட மதிமுக சார்பில் வெள்ளிக் கிழமை (05.07.13 ) இரவு நடைபெற்ற கழக வளர்ச்சி நிதி, தேர்தல் நிதியளிப்பு வழங்கும் விழாவில் அவர் மேலும் பேசியது:

முல்லைப் பெரியாறு பிரச்னை, ஈழத் தமிழர்கள் பிரச்னை, உர விலை உயர்வு, ராஜபட்ச வருகை எனப் பல்வேறு பிரச்னைகளுக்கு போராட்டம் நடத்திய இயக்கம் இது.
தமிழ்நாட்டில் மாற்று அரசியல் சக்தியாக மதிமுக இருக்கிறது என்ற எண்ணம் மக்கள் மனதில் இருப்பதை ஒரு இதழ் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந் ததுள்ளது. மக்களிடம் இந்த எண்ணம் ஏற்பட்டிருப்பது நமக்கு வெற்றிதான்.

இந்த இயக்கம் வெற்றி பெறும் எனக் கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற மாநாட்டில் குறிப்பிட்டேன். அதை முன்னெடுத்துச் செல்லும் திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் விருதுநகரில் நடைபெறவுள்ள மாநாட்டில் வகுக்கப்படும்.

தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்காகவும், தமிழர்களின் வாழ்வாதாரத்தைக்
காப்பதற்காகவும் போராடுவதற்கு வாய்ப்பளிக்கும் விதமாக நாடாளுமன்றத் தில் மதிமுகவின் பிரதிநிதிகள் செல்ல வேண்டும் என மக்களிடம் கோரு கிறோம். வருகிற தேர்தலில் நம்மை மக்கள் வெற்றி பெறச் செய்து நாடாளு மன்றத்தில் மதிமுகவின் குரலை ஒலிக்கச் செய்வர் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்காகத்தான் இந்த நிதி திரட்டப்படுகிறது. இந்த நிதி எதிர்கால வெற்றிக்கு அச்சாரமாகக் கருதுகிறேன்.

தஞ்சாவூர் மாவட்டத் தோழர்கள் ரூ. 28,17,611-ம், 
திருவாரூர் மாவட்டத் தோழர்கள் ரூ. 18,28,100-ம், 
நாகை மாவட்டத் தோழர்கள் ரூ. 20 லட்சமும் 
என மொத்தம் ஏறத்தாழ ரூ. 66.57 லட்சம் நிதியை வழங்கியுள்ளனர்.

இந்த இயக்கம் தொடங்கப்பட்ட காலத்தில் கூட இந்த 3 மாவட்டங்களிலும் இவ்வளவு பெரிய தொகை வந்தது கிடையாது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை அதிகமாக நிதி வந்துள்ளது. இது மதிமுக மீது மக்கள் வைத்துள்ள நன்மதிப்பைக் காட்டுகிறது என்றார் வைகோ.

விழாவில் கட்சியின் துணைப் பொதுச் செயலர் துரை. பாலகிருஷ்ணன், அரசியல் ஆலோசனைக் குழுச் செயலர் அ. மலர்மன்னன், மாவட்டச் செயலர்கள் கோ. உதயகுமார் (தஞ்சாவூர்), டி. பாஸ்கர் (திருவாரூர்), ஏ.எஸ். மோகன் (நாகை), க. சந்திரசேகரன் (புதுக்கோட்டை) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment