Saturday, July 13, 2013

விளாத்திகுளம் தொகுதி முன்னாள் உறுப்பினர்

சங்கொலி இதயக்குரல் பகுதிக்கு விளாத்திகுளம் சட்டமன்றத்தொகுதி முன் னாள் உறுப்பினர் திரு.குமரகுருபர இராமநாதன் பேட்டியில் இருந்து ...

1972 ஆம் ஆண்டு, மதுரைக் கல்லூரியில், பி.ஏ. பட்டம் பெற்றேன். கல்லூரி நாள்களில், திருபுவனம் பாலுச்சாமி அவர்களோடு இணைந்து, மாணவர் 
தி.மு. க.வில் பணி ஆற்றினேன்.1969 இல் அண்ணா அவர்கள் மறைந்தபோது, மாணவ நண்பர்களோடு சென்னைக்கு வந்து கலந்து கொண்டேன். சட்டக் கல்லூரிக்குச் செல்ல விரும்பிய என்னை, என் தந்தையார் தொழிற்துறையில் புகுத்தினார்கள். 1973 ஆம் ஆண்டே எனக்குத் திருமணம் நடைபெற்றது. அதே ஆண்டில், கடம்பூர் தொடர்வண்டி நிலையத்தில், தலைவர் வைகோ அவர் களைப் பார்த்தேன். அவசர நிலைக்குப் பிறகு, பல இடங்களில் அவருடைய சொற்பொழிவைக் கேட்டேன். பொதுவாழ்வில், அவரைப் போல எளிமையாக, தூய்மையாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டேன். எங்கள் பகுதியில் கழகப் பணிகளில் ஈடுபட்டேன்.
என்னுடைய நண்பர்கள், என்னைச் சட்டமன்ற வேட்பாளராக ஆக்க விரும்பி, வைகோவிடம் அழைத்துச் சென்றார்கள்.1980 ஆம் ஆண்டு, சட்டமன்றத் தேர்த லில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு, வெற்றி வாய்ப்பை இழந்தேன். எங்கள்
பகுதியில், அனைத்துக் கிராமங்களிலும், வைகோ அவர்களின் அரசியல் விளக் கக் கூட்டங்கள் நடைபெற்றன.அனைத்திலும் பங்கு ஏற்றேன். மீண்டும், 1984 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டேன். தலை வர் வைகோ அவர்களுடைய தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தால் வெற்றி பெற்றேன்.

அந்தத் தேர்தலில், தென் மாவட்டங்களில் திமுக சார்பில் நானும் நாகர் கோவி
லில் ரத்தினராஜ் மட்டுமே வெற்றி பெற்றோம். தேர்தலுக்குப் பின்னர் அனைத் து கிராமங்களுக்கும் சென்று நன்றி தெரிவித்தேன். கட்சி வேற்றுமைகளைக் கடந்து, சமூக ஒற்றுமைக்காகப் பாடுபட்டேன். 1986 ஆம் ஆண்டு, விளாத்தி குளம் ஒன்றியப் பெருந்தலைவர் தேர்தலில் என்னை வேட்பாளராக நிறுத்தி னார்கள். முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள், அந்த ஒன்றியத்தில்,அண்ணா தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார்கள். அதையும் மீறி, தலைவர் வைகோ அவர்களின் தேர்தல் பிரச்சாரம், என்னை வெற்றி பெறச் செய்தது. சட்டமன்ற உறுப்பினராகவும், பெருந்தலைவராகவும் கிடைத்த பொறுப்புகளில், கிராமங்களுக்கு சாலை வசதிகள்,பேருந்து வசதிகள், குடிநீர்த் திட்டங்களைக் கொண்டு வர முடிந்தது.

அ.தி.மு.க. அரசை எதிர்த்து நடைபெற்ற அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு, சிறைவாசம் ஏற்று உள்ளேன். பாளை சிறையில், அண்ணன் வைகோ அவர்கள் தலைமையில் இருந்தது மகிழ்ச்சியான தருணங்கள். பாசறைக் கூட்டங்கள் நடக்கும்; நல்ல உணவு கிடைக்கும். ஆயுள் கைதிகளும், மூத்த அரசியல் நிர்வாகிகளும் அவருக்கு உதவுவதை பெரும் பாக்கியமாகக் கருதுவார்கள். சிறைப்பறவையாக, அண்ணன் வைகோ அவர்களுடன் பல முறை பாளைச் சிறையில் இருந்து உள்ளேன்.

1993 இல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உதயமானது. அதன் பிறகு, தலைவர் அவர்களுடைய கடுமையான உழைப்பு, தமிழ்நாடு முழுவதும்
பிரமிக்கத்தக்க வகையில் அமைந்தது. கழக முன்னோடிகளுக்காக பதவி களைத் தியாகம் செய்தது மட்டும் அல்ல, ம.தி.மு.க. என்ற மலர்த் தோட்டத்தை மணம் பெற வைத்து உள்ளார்கள். தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக் காகக் களம் அமைத்துப் போராடி வருகிறார். தலைவர் வைகோ அவர்கள் வழி யைப் பின்பற்றி,அனைத்துக் கட்சிகளும் ஈழப்பிரச்சினையில் பாடுபட வந்தது, காலத்தின் கட்டாயம்.

தேர்தலுக்காக மட்டும் அல்ல, தமிழர் சமுதாயம் நெறியோடு வாழ்ந்திட, மது விலக்கைவலியுறுத்தி, நாடு முழுவதும் நடந்து வருகிறார். இந்த இலட்சியப் பயணம், இளைஞர்களைப் பாதுகாத்திடும். வைகோவின் கைகளில் அரசியல் அதிகாரத்தைத் தர வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் மலர்ந்து உள்ளது. கட்சிக்கு நிதி கேட்டுச் செல்லுகின்ற இடங்களில், நாங்கள் அதை உணர்கிறோம்; மனமுவந்து நிதி தருகிறார்கள். நன்றி உணர்வோடு,
மறுமலர்ச்சி தி.மு.கழகம் பணி ஆற்றும்.

No comments:

Post a Comment