Tuesday, July 16, 2013

சீனம் சிவந்தது ஏன்? - 4

வரலாறு எழுப்பும் கேள்வி 

1962 அக்டோபர் 20 ஆம் தேதி அதிகாலை சீனாவின் மக்கள் விடுதலைப் படை (Peoples Liberation Army) எல்லை முழுவதிலும் தாக்குதலை ஆரம்பித்தது. தக்லா முகட்டிற்கு கீழ் இந்தியப் படை திடீர் தாக்குதலுக்குள்ளாகியது. மிகத் தீவிரமாக
வீரத்துடன் இந்தியப்படை போரிட்ட போதும், சீன இராணுவம் அதிக  எண்ணிக் கையில் படையெடுத்து வந்ததால், தாக்குப்பிடிக்க முடிய வில்லை.சீன இராணுவம் அரைமணி நேரத்தில் வேகமாக முன்னேறி தெற்கே ‘டவாங்கை’ கைப்பற்றி விட்டனர். மேலும் அக்சாய்சின்னின் சிப்சாப் பள்ளத்தாக்கிலும் பாங்காங் ஏரி பகுதியிலும், கிழக்கே சிக்கிமில் நதுலா கணவாயிலும், இந்தியப் படைகளை சீன இராணுவம் தாக்கியது.


போர் தொடங்கிய நான்கு நாட்களில் சீனா, தவாவிற்குரிய கணிசமான  இடங் களைக் கைப்பற்றிக் கொண்டது.மேற்கில் மட்டுமின்றி கிழக்கிலும்கூட  மக்ம கான் கோட்டிற்கு தெற்கே நாம்காசு, டவாங், பலாங் ஆகிய பகுதிகளில் தாக்கி முன்னேறினர்.அக்டோபர் 22 இல் சுசூலுக்கு வடக்கே இருந்த அனைத்து இந்தி ய காவல் நிலையங்களும் சீனர்கள் வசமாயின.மேற்கு அரங்கில் சீனத் துருப்பு களின் எண்ணிக்கை இந்தியப் படைகளைக் காட்டிலும் பத்து மடங்கு அதிக மாக இருந்தது. அக்டோபர் 24 க்குள் சீனப் படைகள், அக்சாய்சின் எல்லைக்குள்
இருந்த இந்திய காவல் நிலையங்கள் அனைத்தையும் கைப்பற்றின.

இந்தியப் படைத்தளபதி கைது - தியாகம்

அக்டோபர் 22 இல் இந்திய இராணுவத்தின் 7ஆவது படைப் பிரிவின் தளபதி ஜான்.பி.தால்வி போர்க் கைதியாக சீன இராணுவத்தால் பிடிக்கப்பட்டார். மேலும், பல இந்திய இராணுவத்தினர் கைது செய்யப் பட்டனர்.

ரெஜாங் லா முகட்டில் 16,000 அடி உயரத்திலிருந்த நமது தளத்தைப் பாதுகாக்க ஹைதராபாத்திலிருந்து அக்டோபர் 24 ஆம் தேதி ஒரு படைப்பிரிவு மேஜர் ஷைத்தான் சிங் தலைமையில் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டது. இந்தப் படைப் பிரிவினர் மிகத் தீரமுடன் போரிட்டனர்.போரில் மேஜர் ஷைத்தான் சிங்
உட்பட பலர் மாண்டனர். சிப்தாப் பள்ளத்தாக்கு கால்வான் பள்ளத்தாக்கு, பாங் காங் ஏரி ஆகிய பகுதிகள் சீனப்படைகளால் கைப்பற்றப்பட்டன.

கிழக்கில் பல முனைகளில் மக்மகான் எல்லைக்கு தெற்கே 16 கி.மீ. வரை சீனர் கள் முன்னேறிவிட்டனர். இந்தியப் படைகள் சேலாவிற்கும் பாம்டிலாவிற்கும் திரும்பப் பெறப்பட்டன. அக்டோபர் 24 இல் சீனப் படைகளின் முன்னேற்றத்தை
நிறுத்துமாறு உத்தரவிட்ட சூ என் லாய், பிரதமர் நேருவுக்கு மீண்டும் ஒரு கடிதம் அனுப்பினார்.

அதில், இப்போது கட்டுப்பாட்டில் இருக்கும் எல்லையிலிருந்து இரு நாடுகளும் 20 கி.மீ. திரும்பிச் செல்ல வேண்டும். அசல் கட்டுப்பாட்டு எல்லையை இரு நாடுகளும் ஏற்பது. பின்னர், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது என்று சூ என் லாய் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இந்தியா இதனை ஏற்க மறுத்துவிட்டது. ‘எப்பொழுதுமே பேச்சு வார்த்தை மூலம் வேறுபாடுகளுக்கு தீர்வு காண வேண்டும். சமாதான வழி முறை களைப் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையைக்கடைபிடிக்கும் நாடு இந்தியா.

ஆனால், ‘சீனப் படைகள் தொடர்ந்து இந்தியப் பிரதேசத்தில் ஆக்கிரமிப்பில்
ஈடுபடுவதையும் கணிசமான இந்தியப் பகுதியைக் கைப்பற்றி, இதைப் பேரம்
பேசப் பயன்படுத்தி, தனது நிலைகளின் அடிப்படையில் தீர்வு காண முயல் வதை இந்தியா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்றும், ‘அசல் கட்டுப் பாட்டுக் கோடு (actual line of control)’என்றால் என்ன? 40, 60 கி.மீ முன்னேறிவிட்டு
அதிலிருந்து 20 கி.மீ. திரும்பப் பெறுவது ஒரு ஏமாற்று உத்தி என்றும் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை விட்டது.

மேலும், அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் எல்லைப் பிரச்சி னைக்குத் தீர்வு காண சீனா முற்படுவது உண்மையானால், 1962 செப்டம்பர் 8 ஆம் தேதி இருந்த நிலைக்கு சீன இராணுவம் திரும்பிச் செல்ல வேண்டும் என்று இந்தியா உறுதிபட தனது நிலையைத் தெளிவு படுத்தியது.

பிரதமர் நேரு பதிலடி

பிரதமர் நேருவும் சீனப் பிரதமர் சூ என் லாய்க்கு மிகக் கடுமையாக பதில் கூறி னார். “இரத்தம் தோய்ந்த ஆக்கிரமிப்புத் தாக்குதலை சீனா நடத்திவிட்டு, உங்கள் யோசனைகளை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஆக்கிர மிப்பும் அகம்பாவமும் நாடு பிடிக்கும் கொள்கையும் கொண்ட ஒரு அண்டை நாட்டின் தயவில் இந்தியா வாழ வேண்டும் என்பதாகும்” என்று நேரு பதிலடி கொடுத்தார்.

இந்திய நாடாளுமன்றத்திலும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. “சீனா வுடன் இந்தியா தொடர்ந்து வந்த தோழமையையும், நல்லெண்ண செயல்களை யும், சீனா புறக்கணித்து விட்டது ஆழமான வேதனைக்கு உரியது. இந்த நல் லெண்ணத்திற்கும் நட்புக்கும் துரோகம் இழைத்து விட்டனர். ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு பெரும் தாக்குதலை நடத்தி,இந்தியாவின் மீது படையெடுத்துஉள்ளது சீனா. இந்திய மக்கள் ஆக்கிரமிப்பாளர்களை இந்தியாவின் புனித மண்ணிலி ருந்து விரட்டி விடுவது என உறுதி பூண்டு உள்ளார்கள்” என்று மக்களவை
தீர்மானம் அறைகூவல் விடுத்தது.

உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்து, சீனாவின் அடாவடி யுத்தத்தை எடுத்துக்கூறுமாறு இந்தியாவின் தூதுவர்களை பிரதமர் நேரு அனுப்பி வைத் தார். ஐக்கிய அரபு எமிரேட் தலைவர் எகிப்து அதிபர் நாசர், இந்தியாவின் நிலைப்பாட்டை ஏற்று சீனப் படைகள் 1962 செப்டம்பர் 8க்கு இருந்த நிலைக்கு திரும்ப வேண்டும் என்று சீனாவை அறிவுறுத்தினார்.நாசர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் எவரது கோரிக்கையையும் சீனா ஏற்க மறுத்துவிட்டது.

மீண்டும் போர்

நவம்பர் முதல் வாரத்தில் சீனப்படைகள் தாக்குதல் நடத்தி, சிறிது  சிறிதாக இந் திய இராணுவ காவல் சாவடிகளைக் கைப்பற்றின. கிழக்கில் நாம்காசு, தக்லா முகடு, சேலா ஆகிய பகுதிகள் சீனப் படைகளிடம் வீழ்ந்தன. இந்தியாவின் படைகள் தோல்வியுற்றுத் திரும்பின. 1962 நவம்பர் 14, பிரதமர் நேருவின் பிறந்த நாள் அன்று ‘வாலாங்’ என்ற பகுதியில் சீனா-இந்தியப் படைகளுக்கு
இடையில் கடும் போர் நடந்தது.இந்திய இராணுவம் பின் வாங்கியது.தொடர் தோல்விகளுக்குப் பிறகு போர் முனையிலிருந்த இந்தியத் தளபதி பி.எம்.கவுல் டெல்லிக்கு செய்தி அனுப்பினார்.

“எதிரி பெரும் படைகளைக் கொண்டு கடுமையாகத் தாக்கி முன்னேறுவதால்
இவர்களைத் தடுத்து நிறுத்த நமது படைபலம் போதாது. சீனப் படைகள் நமது படைபலத்தை மீறியதாக உள்ளது” என்று எச்சரிக்கை மணி அடித்திருந்தார். வாலாங் யுத்தம் முடிந்தசில மணி நேரத்தில் மேற்கு அரங்கிலும் சீன இராணு வம் தாக்குதலைத் தொடங்கியது. நவம்பர் 17க்குள் காஷ்மீரிலிருந்து இந்தியப்
படைகள் பெருமளவில் அக்சாய்சின் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டன.ஆனால், நவம்பர் 18 இல் சீனப்படைகள் பெருமளவில் குவிக்கப் பட்டு, தாக்குதல்கள் தீவிரம் அடைந்தன. இந்தியப் படைகள் சேதங்களைத் தவிர்ப்பதற்காக பின் வாங்க வேண்டியதாயிற்று. அப்பகுதியில் சுஸீல் வரை சீனா முன்னேறி விட்டது.

கிழக்கில், நெபா (Nefa) அரங்கில் நவம்பர் 16 இல் தொடங்கிய சீனத் தாக்குதல் கள் பல முனைகளில் பரவியது. செலா-பாம்டியா, டிராங் ட்ஜோங், ஃபுடாங், சாரு ஆகிய இடங்களில் எல்லாம் சீனப் படைகள் பயங்கர தாக்குதல்களை நடத்தின.இரண்டு மூன்று நாட்களில் 60 கி.மீ.முன்னேறிவிட்டனர். நவம்பர் 17 இல் ஃபுடாங்கில் நடந்த சண்டையில் பிரிகேடியர் ஹோஷியார் சிங் கொல்லப்
பட்டார்.

பிரதமர் நேரு கண்ணீர் பேச்சு

எல்லைப் போரில் இந்திய இராணுவம் தோல்வி முகத்தில் இருக்கும் தகவல்
களால் பிரதமர் ஜவஹர்லால் நேரு அதிர்ச்சியும் கவலையும் அடைந்தார்.
நவம்பர் 18 இல் இந்தியப் படைகள் பின்வாங்க நேரிட்டது குறித்து நாடாளுமன் றத்தில் நா தழுதழுக்க கண்ணீர் துளிகள் தெறிக்க பிரதமர் நேரு விளக்கம் அளித்தார்.

“நடந்துள்ளவை மிக மோசமானவை.நம்மை துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.படை யெடுப்பாளரை இந்தியாவை விட்டு வெளியேற்றும்வரை நாம் ஓயமாட்டோம். அவர்கள் முன் வைக்கும் எந்த அடிப்படைகளையும் நாம் ஏற்க மாட்டோம். ஏனெனில் நாம் பின் வாங்க நேர்ந்தால், பயந்துவிட்டதாக அவர்கள் எடுத்துக் கொள்வார்கள்” என்று தெளிவுபடுத்தினார்.

1962 நவம்பர் 20ஆம் நாள் அகில இந்திய வானொலியில் பிரதமர் நேரு கண்ணீர் மல்க நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவரது உரையைக் கேட்ட இந்திய மக்கள் உள்ளத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு யுத்தம் பெரும் கோபாவேசத்தை உருவாக்கியது.இந்தியா முழுவதும் அரசியல்வேறுபாடுகள் இன்றி அனைவ ரும் நேருவின் கரத்தை வலுப்படுத்துவதில் உறுதியாக இருந்தனர்.

போர் நிறுத்தம்

1962 நவம்பர் 21 ஆம் நாள் காலை.எல்லையில் போர் நின்றது. அதாவது சீனா தனது ஆக்கிரமிப்பை முடித்துக் கொண்டு போரை நிறுத்தியது. 1962 அக்டோபர் 20 இல் வெடித்த எல்லைப்போர் நவம்பர் 21 இல் முடிவுக்கு வந்தது. போரில் கிழக்கே அருணாச்சலப் பிரதேசம், மேற்கே அக்சாய்சின்-லடாக் எல்லையில்
இந்திய இராணுவம் தோல்வியைத் தழுவிய தழும்புகள் அவ்வளவு எளிதில் வரலாறு மறந்துவிடாது.மேற்கே அக்சாய்சின் பகுதியில் 38,000 சதுர கி.மீ. பரப் பளவு, கிழக்கே மக்மகான் எல்லைக் கோட்டிற்கு தெற்கில் உள் 90,000 சதுர கி.மீ.
பரப்பளவு இந்திய நிலப்பகுதிகள் போரின் முடிவில் சீனாவால் கைப்பற்றப் பட் டன. 1962 நவம்பர் 21 இல் இருந்து இன்றுவரை இப்பகுதிகளில் சீன இராணுவம் நிலைகொண்டு உள்ளது.

தோல்வி ஏன்?

சீனா அக்சாய்சின் வரை சாலை அமைத்து எல்லையில் இராணுவத்தை குவித் துக்கொண்டிருந்தபோது (1958), இந்திய உளவுத்துறைத் தலைவர் பி.என். மல் லிக், அக்சாய்சினில் சீனா அமைத்துள்ள சாலை வரையில் நமது இராணுவம்
மற்றும் ஆயுத காவல் நிலையங்களை அமைத்து கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என்று இந்திய அரசுக்கு தகவல் தந்தார். ஆனால், 1959 ஜனவரியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இராணுவ அமைச்சர் வி.கே.கிருஷ்ண மேனனும், வெளியுறவு அமைச்சரும் இதை கடுமையாக எதிர்த்தனர்.

இராணுவ முதன்மைத் தளபதி ஜெனரல் திம்மையா இந்தச்சாலையால் இந்தி யாவின் பாதுகாப்பிற்கு எந்த ஆபத்தும் இல்லை.இப்பகுதியில் இராணுவ நிலை யங்கள் அமைப்பது கூடாது.எப்படி இருந்தபோதிலும் இந்த நிலப்பரப்பில் சீன இராணுவத்தை நமது இராணுவம் எதிர்கொள்வது மதியீனமாகும் என்று கூறி, உளவுத்துறையின் யோசனையை நிராகரித்து விட்டார். இராணுவத் தளபதி ஜெனரல் திம்மையாவின் இந்த நிலைப் பாட்டால், பின்னர் இந்திய இராணுவம்
இதற்கான விலையைக் கொடுக்க வேண்டியதாயிற்று. சீனாவின் படைகள் திடீரென்று முன்னேறி தாக்கியபோது, இந்தியப் படைகள் பின்வாங்க வேண் டிய நிலைமை ஏற்பட்டு போரில் தோல்வி ஏற்பட்டது.

எல்லை மோதல் ஏற்பட்டபோது, நமது இராணுவத்தின் 7 ஆவது படைப் பிரிவின் தலைவர் பிரிகேடியர் ஜான் பி.தால்வி, 1962 அக்டோபர் 22 இல் சீன
இராணுவத்தால் போர்க் கைதியாக கைது செய்யப்பட்டார். அவரும், அவரோடு கைது செய்யப்பட்ட போர் கைதிகள் 3213 இராணுவத்தினர் 26 உயர் அதிகாரிகள் மற்றும் படைப் பிரிவின் 29 அதிகாரிகள் 1963 ஏப்ரலில்தான் சீன அரசால் விடுதலை செய்யப்பட்டனர்.

போர் முனையில் இருந்த பிரிகேடியர் ஜான் பி. தால்வி (Brigadier John.P.Dalvi) பின் னர் எழுதிய எல்லை யுத்தம் பற்றிய நூலில், (Himalaiyan Blunder) தோல்விக்கான
காரணங்களை கூறி இருக்கின்றார்.

‘The Indian Army lacked leadership, equipment for mountain warfare, weaponry, and basic essentials like warm clothing, snow boots and glasses’

“நமது இராணுவத்தின் களத்தில் நின்ற தலைமை, போர் தயாரிப்பு உத்தி,படை எண்ணிக்கை போன்றவற்றில் கோட்டை விட்டது. அடிப்படைத்தேவைகளான இராணுவ வீரர்களுக்கான மலை குளிருக்கான உடை, பனிமலையில் போரி டத் தேவையான யுத்த தளவாடங்கள் நம்மிடம் இல்லாமை,இவையே இந்தி யப் படையின் தோல்விக்குக் காரணம்” என்று சுட்டிக் காட்டினார்.

அவர் மேலும், எல்லை நிலைமைகளை சரியான முறையில் யூகிக்காத பாது காப்புத்துறை அமைச்சர் வி.கே.கிருஷ்ணமேனன் மற்றும் இராணுவத் தளபதி பிரிஜ் மோகன் கவுல் ஆகியோரும் இந்தியாவின் தோல்விக்கு பொறுப்பானவர் கள் என்று மதிப்பீடு செய்துள்ளார். தால்வி கூறியதைப் போலவே, வி.கே. கிருஷ்ண மேனன் தோல்விக்கு பொறுப்பேற்று பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டிய நிலை உருவாயிற்று.

எல்லையைக் காக்க அறைகூவல் விடுத்த அண்ணா

சீன இராணுவம் இந்திய எல்லையை நோக்கி முன்னேறி, போர் முழு அளவில் வெடித்தபோது, பேரறிஞர் அண்ணா விலைவாசி உயர்வுப் போராட்டத்தில் நடத்திய மறியலுக்காகத் தண்டனை பெற்று வேலூர்ச் சிறையில் இருந்தார். 1962 அக்டோபர் 24 இல் அறிஞர் அண்ணா விடுதலை பெற்று வேலூர் சிறை யிலிருந்து வெளியே வந்தவுடன் “சீனாவின் ஆக்கிரமிப்பை நாம் ஒருபோதும் சகித்துக்கொண்டிருக்க மாட்டோம். ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு இருக்கும் சீனர் களின் காலடி திருப்பி எடுக்கப்படும் வரை திராவிட முன்னேற்றக் கழகம் நேரு வின் கரத்தை பலப்படுத்தும்” என்று பிரகடனம் செய்தார்.

சிறை மீண்ட அண்ணாவுக்கு அளிக்கப்பட இருந்த வரவேற்புகளை எல்லாம் வேண்டாம் என்று மறுத்த அண்ணா, “இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ள சீன ஆதிக்க வெறியர்களை விரட்டியடிக்கும் வரை எனக்கு வரவேற்போ, பாராட்டு விழாவோ தேவையில்லை” என்று அறிவித்தார்.

திராவிட நாடு பிரிவினை கோரிக்கையை ஒத்தி வைப்பதாக அறிவித்த அண் ணா, “வீடு இருந்தால் தான் ஓடு மாற்றலாம். நாடு இருந்தால்தான் இயக்கம் நடத்த முடியும். நாட்டுக்கே ஆபத்து வந்திருக்கும் நிலையில் நமது பிரிவினை கோரிக்கையை வலியுறுத்துவது என்பது அந்நியருக்கு இடம் கொடுப்பதாகும். கண்களை விற்று சித்திரம் வாங்க முடியாது” என்று தெளிவுபடுத்தினார். அறிஞர் அண்ணா தனது பேருரையில் சீனர்கள் எப்பேர்பட்டவர்கள் என்பதை
சித்தரித்தார்.


“சீனர்களைச் சாதனையாளர்கள் என்று கருதாதீர்கள்.சீனாவின் மக்கள்தொகை விரைந்து பெருகி உள்ளதால், சில இலட்சம் பேர் செத்தாலும், பரவாயில்லை எனக்கருதி அவர்கள் இந்த ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள்.அவர்கள் ஒரு நூற்றாண்டில் ஐந்தாறு போர் களைச் சந்திக்கிறார்கள். நாம் சில நூற் றாண்டாகப் போரையே சந்திக்க வில்லை.

சீன ஏகாதிபத்தியம் மண்ணாசை கொண்டிருக்கிறது. ஒரு கோடிப் பேரை பலி யிட்டோம். ஒரு கை பார்த்து விடுவது என்ற நினைக்கிறது அந்த ஏகாதிபத்திய வெறிக்கும்பல்.மக்களின் கண்களைக் கட்டிவிட்டு ஆளும் காட்டுமிராண்டிச் சர்வாதிகார வெறிதான் பீக்கிங்கில் இருப்பது. அந்த சர்வாதிகாரம்தான் இப் போது ஜனநாயகத்தைத் தாக்குகிறது.இருந்தாலும் ஜனநாயகம் நிலைக்கும்.”
இவ்வாறு சீன நாட்டை ஆள்வோரின் வெறித்தன்மையை விளக்கிய அறிஞர்
அண்ணா, நாட்டு இளைஞர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.

“பட்டாளத்தில் சேர முடிந்தவர் சேருங்கள். பண உதவி அளிக்க முடிந்தவர்கள் அளியுங்கள். போர்ப் பீதி ஏற்படாமல் மக்களுக்குத் தெளிவூட்டக் கூடியவர்கள் அதைச் செய்யுங்கள். லடாக் பகுதியிலும், வடகிழக்குப் பகுதியிலும் கடுங்
குளிரில் போரில் அடிபட்டுக் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கும் நமது படை வீரர்களுக்கு இரத்தம் செலுத்தினால்தான் பிழைக்க முடியும். அதற்கு நிறைய இரத்தம் தேவைப்படும். அதுவும் நல்லவர்கள் இரத்தம்தான் தேவை. தூயவர்களின் இரத்தம் தேவை. நமது தோழர்களின் இரத்தம் தேவை. திராவிட
முன்னேற்றக் கழக இரத்தம் தேவை.”

நமது கடமை

அறிஞர் அண்ணாவின் எழுச்சிமுழக்கம் நாட்டு மக்களையும், கழகத் தோழர் களையும் தட்டி எழுப்பியது.சீனப்போரின்போது அண்ணா பேசிய பொதுக்கூட் டங்களைக் கேட்ட மக்கள் சீன ஆதிக்கத்தைத் தகர்த்திட உறுதி பூண்டனர்.சீனப் போரினால் ஏற்பட்ட நெருக்கடி நேரத்தில் தி.மு.க.தொண்டர்கள் ஆற்ற வேண் டிய பணிகள், அரசியல் கடமைகள் குறித்து ஒரு பொதுக்கூட்டத்தில் அறிஞர்
அண்ணா எடுத்துரைத்தார்.

“காங்கிரஸ் மீதுள்ள கோபத்தில் நாட்டைக் காப்பாற்றும் பிரச்சினையில் நமது தோழர்கள் தவறு இழைத்து விடக்கூடாது. இந்த அரசு இவர்களுக்குத்தானா சொந்தம்? இப்பொழுது அரசியலில் இதே நிலை நீடித்து வருமானால், ஆட்சி
தி.மு.கழகத்திடம் வராது என யார் சொல்ல முடியும்? இரண்டு ஆண்டுகளுக்கு முன் கேரளம், கம்யூனிஸ்ட்டு கேரளமாக மாறி இருக்க வில்லையா? எனவே, ஆட்சியாளர்கள் இதுவரை நமக்கு இழைத்த கொடுமை அநீதி களை எல்லாம் மன்னிப்போம்.மறப்போம். நமது கோட்டைக்குள் எதிரிகள் நுழைய முடியாத வாறு கதவை நன்றாகத் தாழிட்டுக்கொள்ள வீர சபதம் எடுத்துக்கொள்வோம்.

தி.மு.கழகம் ஒரு தீயணைக்கும் படை.தீயணைக்கும் படை வேண்டியவர் வீடு, வேண்டாதவர் வீடு பார்த்து தீயை அணைப்பது இல்லை. யார் வீடாக இருந்தா லும் தீயை அணைக்கிறது.அதுபோல, தீயவை அழிக்க தி.மு.கழகம் துடிதுடித்து வரும்., அதனால் தான் சீன ஆக்கிரமிப்பை எதிர்த்து அந்த விஷயத்தில் அரசாங் கத்தை ஆதரிப்பதாகக் கூறினோம்.

ஜனநாயகம் எங்கு பாழ்படுத்தப் படுகிறதோ, அங்கு துடிதுடித்துப் பாய்ந்து உதவிக்கு வருகிறது தி.மு.கழகம்.

புரட்சி நடிகர் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் போர் நிதிக்கு ரூ.75,000  கொடுத் தார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும், முதல் காணிக்கை முன்னேற்றக் கழகத் தோழருடையது தான் என்பதை எண்ணிப் பெருமைப் படுகிறேன். அதே போல, எல்லைப் போரில் முதல் பிணமும் சிந்தப்படும் முதல் இரத்தமும் தமிழனுடையதாகத் தான் இருக்கும் என்று நான் போளூரில் நடந்த பாராட்டுக் கூட்டத்தில் பேசியபோது சொன்னேன், அடுத்த நாள் பத்திரிகையைத் திறந்து
பார்த்ததும், தூத்துக்குடியைச் சேர்ந்த செல்வராசு என்னும் தமிழ் மகன் போரி லே இறந்துவிட்டதாக அவர் குடும்பத்துக்கு தந்தி வந்திருக்கிறது என்ற செய்தி வெளியாகி இருந்தது. ஆகவே, முதலில் விழுந்த பிணமும்  தமிழனுடைய தாகவே இருந்து இருக்கின்றது.”

தி.மு.க. திரட்டிய யுத்த நிதி

போர் நிதி திரட்ட ஆணையிட்ட அறிஞர் அண்ணா, 1962 டிசம்பரில் ரூ.35,000 போர் நிதியாக இந்திய அரசுக்கு அளித்தார். மேலும், சீனப்போர் குறித்து நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்க 9.12.1962 மற்றும் 7.1.1963 ஆகிய தேதிகளில் பேரறிஞர்
அண்ணா வானொலியில் இரண்டு முறை உரையாற்றினார்.

மாநிலங்களவையில் அண்ணா முழக்கம்

1962 நவம்பரில் இந்திய நாடாளுமன்றத்தில் சீனப் போர் குறித்து ஒரு தீர்மானம் உள்துறை அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி அவர்களால் முன்மொழியப்பட்டு, விவாதிக்கப் பட்டது. இந்தத் தீர்மானத்தை தி.மு.க.சார்பில் ஆதரித்து அறிஞர் அண்ணா முழக்கமிட்டார். இந்த உரையின் மூலம் அண்ணாவின் தொலை நோக்குப் பார்வையை வடபுலம் உணர்ந்தது.

சீனரை இந்த மண்ணிலிருந்து விரட்டுவதில் எனது கட்சி பரிபூரணஒத்துழைப்பு அளிக்கும். எனது கட்சியின் பிரிவினை முழக்கம் நியாயமானதே. இருந்தாலும் தேசிய நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்த சமயத்தில் நாங்கள் எந்தவிதமான
கிளர்ச்சியிலும் ஈடுபட மாட்டோம்.எல்லா அரசியல் கட்சிகளும் தங்கள் கிளர்ச் சிகளையும் அற்ப பூசல்களையும் நிறுத்திவிட வேண்டும்.நெருக்கடியான இத் தருணத்தில் நாடு முழுவதும் பிரதமர் பின்னால் திரண்டு நிற்கிறது என்பதில் ஐயம் இல்லை.பிரதமர் நேரு நாட்டின் பாதுகாவலர்என்பதைச் சந்தேகிப்பவர் எவரும் இல்லை.

அரசு கடைப்பிடித்து வருகின்ற நடு நிலைக் கொள்கையை கைவிட்டுவிட
வேண்டுமென்று நான் சொல்ல மாட்டேன். ஆனால், நடுநிலை கோட்பாடா னது நாட்டின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற முயற்சிக்கு தடைக்கல்லாக அமைந்து உள்ளது.

தத்துவ அடிப்படையில் நடு நிலைமைக் கோட்பாட்டில் குறை காண்பதற்கு ஏதுமில்லை.இருந்தாலும் இக்கோட்பாடு செயல் உருவம் பெறுகின்றபோது அது பலரிடம் பெரும் ஐயப்பாட்டை உருவாக்கி இருக்கிறது.

எதிர்க்கட்சி உட்பட மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட தூதுக்குழு ஒன் றை அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றுமுள்ள நட்பு நாடுகளுக்கு அனுப்பி படைக்கலன் களை நமக்கு உதவுவதற்குரிய அமைப்பு ஒன்றை நிறுவ முயல
வேண்டும். ஜனநாயகத்தைப் பாதுகாக்கத் தங்கள் உயிரைத் தியாகம் செய்யத் துணிந்திருக்கின்ற வெளி நாட்டினரைத் திரட்ட வேண்டும் என்றுகூட நான் விரும்புகிறேன்.நிதியும் படைக்கலன்களும் பெறுவதுடன் சீனர்களை எதிர்த் துப் போரிட்ட வெளிநாட்டினரைத் திரட்டினால் நடுநிலைக் கொள்கை யானது வெறும் எதிர்மறையானது அல்ல. நலன் பயக்கும் உடன்பாடு உடையதே என்பதை அறிவுறுத்த இயலும்.

அமைச்சர் கோபால்ரெட்டி அவர்கள் போர் ஆதரவு விளம்பரத்திற்குப் பத்திரி கைகள் இலவச இடம் ஒதுக்கித் தர வேண்டும் என கேட்டுக் கொண்டார். என் கட்சியினர் நடத்தும் நாளிதழ்கள், கிழமை இதழ்களில் அமைச்சர் கேட்டுக் கொண்டபடி இலவச இடம் ஒதுக்கிட ஏற்பாடு செய்கிறேன்.

சீனர்கள் சமாதானப் பேச்சு மூலம் புதிய தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள்.
எனவே, இப்போது நமது பிரச்சாரம் உயிரோட்டம் உள்ளதாக  இருக்க வேண் டும்.

அறிஞர் அண்ணாவின் மனப்பூர்வமான ஆதரவு அரசுக்கு மனநிறைவு  தருவ தாக உள்ளது எனத் தெரிவித்த உள்துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி, அறிஞர் அண்ணாவிற்கு நாடாளுமன்றத்தில் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தார்.

தமிழனுக்கு எதிராக சீனாவுடன் இந்தியா

சீனப் போரின்போது, முதல் களப்பபலி தூத்துக்குடி செல்வராசு என்ற தமிழ் நாட்டு இராணுவ வீரன் என்பதை பேரறிஞர் அண்ணா சுட்டிக்காட்டி இருக் கின் றார். 1999 இல் பாகிஸ்தானுடன் கார்கில் சண்டையில் முதல் களப்பலி ஆன தமிழன் மேஜர் சரவணன். இந்தியாவையே காக்க தமிழர்கள் களப்பலியாகும் வரலாறு இன்றும் தொடருகிறது.

ஆனால், தமிழர்களை அழிக்க சீனாவுடன் இந்தியாவும் கை கோத்து நின்றது தான் வரலாற்று முரண். தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை முற்றாக நசுக்கி தமிழ் மக்களை இலங்கையில் இலட்சக் கணக்கில் கொன்று குவித்த இராஜபக்சேவுக்கு சீனா ஆயுதங்கள் தந்தது. இன்றும் சீனாவின் நிதி உதவியும் இலங்கைக்கு தாராளமாக வழங்கப்பட்டு வருகின்றது. சீனா இராணுவத் தள வாடங்கள் கொடுத்து இலங்கையில் தமிழர்களை அழித்த போது, இந்தியாவும் சிங்கள கொலை வெறி அரசாங்கத்திற்கு இராணுவ உதவிகளைச் செய்தது. தமிழர்களைப் பொறுத்தவரையில் சீனாவிற்கும் இந்தியாவுக்கும் எந்த வேறு பாடும் இல்லை என்ற மனநிலையை இந்திய அரசு உருவாக்கிவிட்டது. இந்த
மனக்காயத்தை இனி எந்தக் காலத்திலும் மாற்ற முடியாது.

1962 இல் இந்தியா மீது போர் தொடுத்த சீனா, எல்லையை ஆக்கிரமித்த சீனா , 2013 லும் அதே நிலைப்பாட்டில்தான் ஊடுருவல் செய்கிறது. எல்லைக்குள்
இராணுவத்தை அனுப்புகிறது. உலகம் புகழ்ந்த மாபெரும் தலைவர்  ஆசியா வின் ஜோதி மனிதருள் மாணிக்கம் பண்டித ஜவஹர்லால் நேரு, சீனாவின் போர் தாக்குதல் களால் நிலைகுலைந்து போனார் என்றால், இந்தியாவை ஆட்சி செய்யும் சோனியாவின் குமாஸ்தா மன்மோகன்சிங் போன்ற பிரதம ரால் தாக்குப்பிடிக்க முடியுமா? வரலாறு இந்தக் கேள்வியை எழுப்பிக் கொண் டே இருக்கும். இந்திய நாட்டை வழி நடத்த மக்கள் சக்தியும் ஆன்ம பலமும் நிறைந்த தலைவர் கிடைப்பாரா? காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

நன்றிகள்

கட்டுரையாளர் :- ஈழ வாளேந்தி


வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment