Showing posts with label பெ.தி.க. Show all posts
Showing posts with label பெ.தி.க. Show all posts

Tuesday, July 16, 2013

ஈழ விடுதலைக்கு வாக்கெடுப்பு நடத்துக-பகுதி 2

மே 18 ஆம் தேதி, உலகம் முழுமையும் தமிழன் இரத்தக்கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்கின்றான்.ஆனால், தமிழரின் இரத்தக் குளியல் நடத்திய இராஜ பக்சேவோடு இந்திய அரசு ஒப்பந்தம் போடுகிறது. எதற்காக அதை அனுப்ப வேண்டும்? தமிழர்களுக்குச் சொரணை இல்லை என்று கருதுகிறாயா? உணர் வுகள் மரத்துப் போய்விட்டன என்று கருதுகிறாயா? அந்தக் கொலைகாரனை இங்கே அழைத்து வந்து, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பரிவட்டம் கட்டுகிறாய்.

கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிக்கு, அவனைச் சிறப்பு விருந்தினராக அழைக்கின்றீர்களே, அவன் கேட்டதை எல்லாம் செய்து கொடுக்கின்ற நீ, ஈழத் தமிழர் இனப்படுகொலையில் ஒரு கூட்டுக் குற்றவாளி.மன்மோகன் சிங் தலைமையிலான, சோனியா காந்தி இயக்குகின்ற அரசு, நடைபெற்ற இனப் படுகொலையில் ஒரு கூட்டுக்குற்றவாளி. நாம் எப்படி மன்னிக்க முடியும்?


Monday, July 15, 2013

ஈழ விடுதலைக்கு வாக்கெடுப்பு நடத்துக-பகுதி 1

ஈழப்பிரச்சினையிலும், முல்லைப்பெரியாறு அணையிலும், தமிழருக்குத் துரோகம் இழைத்த இந்தியா!

சென்னை எம்.ஜி.ஆர். நகர் பொதுக்கூட்டத்தில் #வைகோ குற்றச்சாட்டு


“ஈழ விடுதலைக்கு வாக்கெடுப்பு நடத்துக” என ஐ.நா.வையும், இந்திய அரசை யும் வலியுறுத்தி, சென்னை எம்.ஜி.ஆர்.நகரில், 19.5.2012 அன்று பெரியார் திரா விடர் கழகம் சார்பில் நடைபெற்ற உரிமை முழக்கப் பொதுக்கூட்டத்தில், கழகப் பொதுச்செயலாளர் வைகோ எழுச்சியுரை ஆற்றினார். அவரது உரையில்
இருந்து....

தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச்சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்