Tuesday, July 2, 2013

கட்டாய இலவச கல்வி சட்டம் விதி மீறல் ?

அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி சட்டத்தின்கீழ், முறை யான வழி முறை யில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என மதிமுக வலியுறுத் தியுள்ளது. மதிமுக மாநில இளை ஞர் அணி செயலாளர் ஈஸ்வரன் வெளி யிட்டுள்ள அறிக்கை:

அனைவருக்கும் கட் டாய இலவச கல்வி உரிமை சட்டம் கொண்டுவந்த நோக் கம் முழுமையாக நிறைவேறவில்லை. இச்சட்டத்தின்படி, மாணவர் சேர்க்கை யில் சரியான நடை முறையை பள்ளிக்கல்வி துறை பின்பற்றவில்லை.
முறையான விழிப்புணர்வு ஏற்படுத்தாத காரணத்தால், ஏழை மாணவர்களின் 25 சதவீத இடம் பூர்த்தியாகவில்லை. பெற்றோர் பள்ளி களை அணுகும்போது, பெரும்பாலான பள்ளிகள் 25 சதவீத இடங்களை ஏற்கனவே பூர்த்தி செய்து விட்டோம் என பொய் தகவல் வெளியிட்டுள்ளன.

உண்மையிலேயே இச்சட்டத்தின்படி, ஏழை மாணவர்களுக்கு 25 சதவீதம் பேர்
பள்ளிகளில் சேர்க்கப்பட்டிருந்தால், அதற்கான பெயர் பட்டியலை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் கேட்டு பெற்றிருக்க வேண்டும்.

ஆனால், அவர்கள் இதை செய்யவில்லை. மாறாக, பள்ளிகளில் ஆய்வு என கண்துடைப்பு நாடகம் நடத்தி முடித்துள்ளனர்.இதனால், ஏழை மாணவர்கள் கல்வி பயில அரசு ஒதுக்கிய நிதி, பணம் படைத்தவர் களுக்கு செல்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை தொடர்ந்து நீடித்தால் இச்சட்டம் கொண்டு வந்த நோக்கம் நிறைவேறாமல் போய்விடும்.

இச்சட்டத்தின்மூலம், உண்மையான ஏழை மாணவர்களை தேர்வு செய்ய வேண்டுமானால், ஒற்றை சாளர முறையில் ஊழலுக்கு இடமில்லாமல் மாண வர் சேர்க்கையை நடத்த வேண்டும். விதிமீறி மாணவர் சேர்க்கை நடந்திருப் பது இனி தெரியவந்தா லும், அந்த சின்னஞ்சிறு பிள்ளைகளின் சேர்க்கையை தற்போது ரத்துசெய்வது முறையாகது. இது, மேலும் மோசமான விளைவு களை ஏற்படுத்தும். 

எனவே, மாணவர் சேர்க்கையின்போதே முறையான வழிமுறைகளை கடை பிடிக்க வேண்டும். இந்த ஆண்டு இச்சட்டத்தின்படி எத்தனை மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வெளியிட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார். 

No comments:

Post a Comment