Wednesday, July 10, 2013

தொழிலாளர்களின் வேலை நிறுத்தம்

என்.எல்.சி. தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு பங்குகள் விற்பனை முயற்சியைக் கைவிட வேண்டும்

#வைகோ அறிக்கை
பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி.யின் பங்குகளை விற்கக்கூடாது என்ற கோரிக்கையை மட்டும் முன் வைத்து, ஜூன் 3ஆம் தேதியில் இருந்து ஒருவார காலமாக என்.எல்.சி. தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ள னர். பதிமூன்றாயிரம் நிரந்தரப் பணியாளர்களும், பதிமூன்றாயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களும் ஒன்றினைந்து உறுதியுடன் போராட்டம் நடத்தி வருகின் றனர். மத்திய அரசின் தனியார்மயக் கொள்கைக்கு எதிராக, நாட்டின் அனைத் துப் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் வழிகாட்டக்கூடிய வகையில் போராடி வரும் என்.எல்.சி. தொழிலாளர்களுக்கு, வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவிக்கிறேன்.
ஆண்டுக்கு சுமார் 1400 கோடி லாபம் ஈட்டும் என்.எல்.சி. நிறுவனத் தொழிலாளர் கள், காலவரையற்றவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதை, கண்டும் காணா மல் அலட்சியப்படுத்தி வரும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் அதிகார ஆணவப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது ஆகும்.

என்.எல்.சி. தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடருவதால், உற்பத்தி பாதிக் கப்படவில்லை என்பதைக் காட்டுவதற்கு அங்கு பணியாற்றும் பொறியாளர் கள், அதிகாரிகளைக் கட்டாயப்படுத்தி உற்பத்தியில் ஈடுபட வைக்க வேண்டும் என்று மத்திய அரசு, என்.எல்.சி. நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதன் மூலம் தொழிலாளர்களின் போராட்டத்தைச் செயல் இழக்கச் செய்ய லாம் என்று மத்திய அரசு மனப்பால் குடிக்கின்றது. என்.எல்.சி. தொழிலாளர்கள் மட்டும் அல்ல; அனைத்து பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களும் போராட் ட உணர்வை நீறுபூத்த நெருப்பு போல நெஞ்சில் சுமந்து உள்ளார்கள் என்பதை எச்சரிக்கையோடு சுட்டிக்காட்டுகிறேன்.

2002 ஜனவரியில் மத்திய அரசின் பங்குகள் விலக்கல் ஆணையம், தனது 13
ஆவது அறிக்கையை மத்திய அரசிடம் அளித்தபோது, என்.எல்.சி.யின் 51 சத வீத பங்குகளை விற்பனை செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்தது. அப் போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இந்தப் பரிந்துரையை ஏற்று, அமைச்சரவைக் கூட்டத்தில் என்.எல்.சி.யின் 51 சதவீத பங்குகளை விற்பதற்கு முடிவு எடுத்தது. அன்றும் என்.எல்.சி. தொழிலாளர்கள் அனைவரும் காலவரை யற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். என்.எல்.சி. தொழிலாளர் களின் நியாயமான போராட்டத்தை ஆதரித்து நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்ததுடன், பிரதமர் வாஜபாய் அவர்களின் நேரடி கவனத்திற்கும் மறுமலர்ச்சி தி.மு.க. கொண்டு சென்றது. அதன் விளைவாக என்.எல்.சி.யின் 51 சதவீத பங்குகள் விற்பனை முடிவை கைவிடுவதாக பிரதமர் வாஜ்பாய் அவர்கள் அறிவித்தார்கள்.

பத்து ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் மத்திய அரசின் பங்குகள் விற்பனைத் துறை, என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யவும், முழுமை யாக தனியார் மயம் ஆக்கவும் துடித்துக்கொண்டு இருக்கின்றது. என்.எல்.சி. பங்குகள் விற்பனை தொடர்பாக மத்திய அரசு ஏதோ சம்பந்தம் இல்லாததைப் போல் ‘செபி’யின் மூலம் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டு இருக்கின்றது.

என்.எல்.சி. தொழிலாளர்களின் உறுதிமிக்க உரிமைப் போராட்டம் தொடர் கின்ற நிலையில், அதனை முடிவுக்குக் கொண்டுவர, என்.எல்.சி.பங்குகள் விற்பனை முயற்சியை மத்திய அரசு, உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

‘தாயகம்’                                                                                             வைகோ
சென்னை - 8                                                                         பொதுச்செயலாளர்
10.07.2013                                                                                 மறுமலர்ச்சி தி.மு.க.

No comments:

Post a Comment