ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த கொலைகாரன் ராஜபக்சே, மத்தியப் பிர தேசம் -சாஞ்சிக்கு வருவதைக் கண்டித்து, கருப்புக்கொடி அறப்போர் நடத்திட, கழகப் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், சாஞ்சிக்கு அணிவகுத்துச்
சென்ற கழகத்தோழர்கள் 23.09.2012 அன்று சென்னை வந்தடைந்தனர். பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்திய பின் பொதுச்செயலாளர் வைகோ ஆற்றிய உரை....
அன்புக்குரிய சகோதரர்களே, சகோதரிகளே,
பேரறிஞர் அண்ணா அவர்களின் சதுக்கத்தில், சரியாக ஏழு நாள்களுக்கு முன்பு, அறிவாசான் தந்தை பெரியார் பிறந்த நாளாம் செப்டெம்பர் 17 அன்று,அந்தி

சாய் வதற்கு முன்பாக, இதே இடத்தில் சூளுரைத்து, நானும், ஆயிரத்துக்கும் மேற் பட்ட கழகத்தின் கண்மணிகளும், தமிழ் ஈழ விடியலுக்காக ஏங்குகின்ற தமிழ் உணர்வாளர்களும், மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சியில், புத்தருடைய
போதனைகளைப் பரப்ப அமைக்கப்படுகின்ற ஆராய்ச்சிக் கல்லூரிக்கு அடிக் கல் நாட்டுவதற்கு,தமிழ் இனப் படுகொலை செய்த, இலங்கையின் சிங்கள அதிபர், மகிந்த ராஜபக்சே வருவதை எதிர்த்துப் போராடப் புறப்பட்டுச் சென் றோம்.
இந்தக் கல்லறையில் கண் உறங்குகின்ற எங்கள் அண்ணனே, 1969 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 5 ஆம் நாள், உங்கள் உயிர் அற்ற மேனியை, சந்தனப்
பேழைக்கு உள்ளே வைத்தபோது நிலவிய நிசப்தத்துக்கு நடுவே, கடல் அலை களின் ஓசை மட்டும்தான் கேட்டது. கண்ணீர் சிந்தியவர்களுள் நானும் ஒரு வ னாக,இந்தக்கடற்கரை மணலில் எங்கோ ஓர் மூலையில் அமர்ந்து இருந்தேன்.
அண்ணனே, செப்டெம்பர் 17 இல் உங்கள் சதுக்கத்தில் நான் சபதம் ஏற்றுச்சென் றேன்.தமிழர்களின் தன்மானத்தையும், வீரத்தையும், வடதிசையில், கங்கைச் சமவெளியில் நிலைநாட்டித் திரும்புவோம்; எத்தகைய அடக்குமுறை வந்தா லும் அதைச் சந்திப்போம் என்று சூளுரைத்துவிட்டு, இங்கிருந்து புறப்பட்டுச் சென்றேன்.
மதிப்பிற்கு உரிய செய்தியாளர்கள், தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் ஏரா ளமாக, இன்றுபோலவே அன்றும் திரண்டு இருந்தார்கள். இங்கிருந்து புறப்பட் டுச் சென்று, நடுநிசியில் உணவு அருந்திவிட்டு, வழிநெடுகிலும் பாதை சரியாக
இல்லாததாலும், மழை கொட்டியதாலும், மறுநாள் மாலையில்தான், நாங்கள் ஹைதராபாத் நகருக்கு அடுத்த ஒரு இடத்துக்குப் போய்ச் சேர்ந்தோம்.காலை உணவு இல்லை; பகல் உணவு இல்லை;சேலத்தில் ஒடுக்கப்பட்ட அருந்ததியர் சமூகத்தில் பிறந்த வீர வாலிபன் விஜயராஜ், மகிந்த ராஜபக்சேயை, இந்திய மண்ணில் அடி எடுத்து வைக்க அனுமதிக்காதீர்கள் என்று கூறி, தன்னுடைய
மேனிக்குத் தீயிட்டுக் கொண்டான். அவன் மரணத்தை அரவணைக்க இருந்த அந்தக் கடைசி விநாடிகளில், உடல் முழுமையும் கருகி இருந்த துன்பத்தைத் தாங்கிக் கொண்டு உறுதி நிறைந்தவனாக, உரம் கொண்டவனாக, சொன்ன
வார்த்தைகளை, நான் குறுந்தட்டில் கண்டேன்.
எவ்வளவு உறுதியாகச் சொல்லுகிறான்?தமிழர்களைக்கொன்று குவித்த கொடி யவனை, இந்தியாவுக்கு உள்ளே அனுமதிக்காதீர்கள்; அந்த நாயை அடித்து விரட்டுங்கள்; அவனைச் செருப்பால் அடித்து விரட்டுங்கள் என்றான். இது சாகப் போகின்ற ஒரு இளைஞன் கூறியது. அது மட்டும் அல்ல; அவன் மிகத் தெளிவாகச் சிந்தித்துச் சொன்னான். இந்தக் கொலைகளுக்குக் காரணமான, தமிழ் இனப் படுகொலைக்குக் காரணமான, இராஜபக்சேவை,திரும்பத்திரும்ப இங்கே அழைத்து வருகின்ற,இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர் கள் மீதும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை இயக்கி வருகின்ற சோனி யா காந்தி மீதும், வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று, தன்னுடைய இறுதி மூச்சு அடங்குவதற்கு முன்பு, தன்னுடைய கருத்தாகப் பதிவு செய்துவிட்டு அவன் மடிந்து போனான்.
அவனுக்குத் திருமணம் ஆகவில்லை. ஒரு ஏழ்மையான குடும்பம். ஓட்டுந ராகப் பணி ஆற்றியவன். சிஐடியு தொழிற்சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவன். அவனுடைய மரணச் செய்தி வந்து தாக்குகிறபோது, அதற்காக அறிக்கை கொடுத்துவிட்டு, என் தோழர்கள் மத்தியில் நான் ஒரு மணி நேரம் அங்கே பேசினேன்.
அதன்பிறகு, நாங்கள் தொடர்ந்து பயணித்தோம்.இடைவிடாது, 37 மணி நேரம் பயணித்து, 1350 கிலோமீட்டர்களைக் கடந்து, மத்தியப் பிரதேச மாநிலத்தின் எல்லைக்கு உள்ளே நுழைந்தோம்.அதற்கு முன்பு, மராட்டிய மாநிலத்தில், நாக புரிக்குச் சென்றோம். அது, ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைமை அலுவலகம் இயங்குகின்ற நகரம். அந்த இயக்கம் வேர் ஊன்றிய பகுதி.பாரதிய ஜனதா கட்சி யின் பலமான பகுதிகளுள் ஒன்று. அங்கே செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்திய அரசையும், பாரதிய ஜனதா கட்சி அரசையும், இதயம் பிளக்கப்பட்ட தமி ழர்களின் சார்பில், மன்னிக்க முடியாத மாபாதகச் செயலில் இவர்கள் ஈடுபட்டு இருக்கின்றார்கள் என்று நான் குற்றம் சாட்டினேன்.
என் இனிய நண்பர், மராட்டியத்தின் தலைவராக, இந்திய நாடு போற்றுகின்ற தலைவர்களுள் ஒருவராக, இயங்கி வருகின்ற, வீர சிவாஜியின் வழியில் வந்த வர் என்று மராட்டியம் பாராட்டுகின்ற, மாண்புமிகு சரத் பவார் அவர்களிடம், நான் மராட்டிய மாநிலத்தின் வழியாக என் தோழர்களோடு மத்தியப் பிரதேசம் செல்லுகிறேன். ஆங்காங்கு தங்குவதற்கும், சில அடிப்படை உதவிகள் செய்வ தற்கும், நீங்கள் ஏற்பாடு செய்தால் நலமாக இருக்கும் என்று கேட்டுக்கொண் டேன்.
அடுத்த நிமிடமே அவர் சொன்னார்: அனில் தேஷ்முக் என்கின்ற மராட்டிய மாநில அமைச்சர், நாகபுரியைச் சேர்ந்தவர். அடுத்த ஐந்து நிமிடங்களில் உங் களிடம் பேசுவார்; அங்கே உங்களுக்கு என்ன தேவையோ,அதைச் செய்து தரு வார் என்றார். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை.அவர் காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருக்கின்றார்.ஆனால்,அரசியல் வேறு, நட்பு வேறு.அந்த அடிப்படையில், அமைச்சர் அனில் தேஷ்முக் அவர் கள், நாகபுரியில் நாங்கள் தங்குவதற்கான, உணவுக்கான ஏற்பாடுகளைச் செய்து இருந்தார்.
நாகபுரிக்கு நாங்கள் சென்று இறங்கியபோது,தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நாகபுரி நகரத் தலைவர் அஜய் பாட்டீல் அவர்கள் எங்களை அன்போடு வர வேற்றுச் சொன்னார்: நாளை காலையில்,நீங்கள் இங்கிருந்து புறப்படுகையில்,
நாம் தீக்ஷா பூமிக்குச் செல்வோம் என்றார். பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள், மூன்று இலட்சத்து எண்பது ஆயிரம் மக்களோடு, பெளத்த சமயத்தைத்தழுவிய இடம் அது. உலகத்தில் வேறு எங்கும் அதற்கு நிகரான ஒரு நினைவு அரங்கம் இல்லை; ஸ்தூபா இல்லை என்று சொல்லத் தக்க விதத்தில் அமைக்கப்பட்ட இடம்..
1956 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 14 ஆம் நாள்,3,80,000 தோழர்களோடு, அண் ணல் அம்பேத்கர் அவர்கள் பெளத்த சமயத்தில் தன்னை இணைத்துக் கொண் டார். அந்த வேளையில், 22 உறுதிமொழிகள் எடுத்து இருக்கின்றார். அவை, அங்கே ஒரு கல்வெட்டில் செதுக்கப்பட்டு இருக்கின்றன.
அவர் 1935 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் நாள், ஹிவோலி என்ற கிராமத்தில் ஒரு பிரகடனம் செய்தார்: “நான் இந்துவாகப் பிறந்தேன்; ஆனால், இந்துவாகச் சாக மாட்டேன்” என்று.
வருணாசிரமத்தின் கொடுமையால், மனு தர்மத்தின் கொடுமையால், சூத்திரர் களாக, பஞ்சமர்களாக, ஒடுக்கப்பட்டவர்களாக, சபிக்கப்பட்டவர்களாக, இழிவு படுத்தப்பட்ட மக்களுக்கு ஒரு விடியலைக் காண வேண்டும் என்றார்.
1956 அக்டோபர் 14 இல் பெளத்த சமயத்தில் சேர்ந்தார். அதற்கு அடுத்த 53 ஆம் நாளில், டிசம்பர் 6 ஆம் நாளில் அவர் மறைந்தார்.
அந்த தீக்ஷா பூமியில், பிரமாண்டமான அம்பேத்கர் சிலை இருக்கின்றது.அந்தச் சிலைக்கு மலர்களைத் தூவினேன். சமூக நீதியின் காவலராக, இந்தியத் துணைக் கண்டத்துக்கே வழிகாட்டிய அறிவாசான் தந்தை பெரியாரின் வழி யில், அவரது தலை மாணாக்கர் பேரறிஞர் அண்ணா அவர்களால் வார்ப்பிக் கப் பட்டவனாக இந்த இடத்திலே வந்து நிற்கிறேன் என்று பேசினேன்.
அண்ணா அவர்களே, சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் நூலில், ‘புரந்தர் கோட்டை வீழ்ந்தது; கல்யாண் கோட்டை வீழ்ந்தது; வாளின் முனையில் சிவாஜி, மலை யின் புலியாகிய வீர சிவாஜி, ஒரு அரசை அமைத்தான். ஆனால், புல்லேந்தி களிடம் அவன் தாள் பணிய வேண்டிய நிலைமை ஏற்பட்டது’ என்று நீங்கள் எழுதியதை நான் படித்து இருக்கின்றேன்.
Who are the Sutras? என்ற தலைப்பில், டாக்டர் அம்பேத்கர் அவர்கள் எழுதிய நூலை யும், நாடாளுமன்றத்தில் நான் படித்து இருக்கிறேன்.சூத்திரர்கள் யார்? என்று சூத்திரர்கள் யார்? சொல்லும்போது, வாளின் வலிமையால் எங்கள் மண்ணில் ஒரு அரசை அமைத்தான் வீர சிவாஜி; ஆனால், காகபட்டரின் காலைக் கழுவ வேண்டிய இழிவுக்கு, மனுதர்மமும், சனாதன தர்மமும், வருணாசிரமமும் ஆளாக்கியது என்று, அண்ணல் அம்பேத்கர் கூறினார். அவரது படத்தை,இந்திய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் திறந்து வைக்க வேண்டும் என்று
போராடி,பிரதமர் வி.பி.சிங் அவர்கள் மூலமாக,அந்தக் காரியத்தை நிறைவேற் றி வைத்தவன் என்ற தகுதியோடு தான்,நான் அம்பேத்கருடைய சிலைக்கு
மாலை அணிவித்தேன்.
அங்கே பேசும்போது சொன்னேன்: நாங்கள் பெளத்த சமயத்துக்கு எதிரிகள் அல்ல; புத்தர் கருணையைப் போதித்தார்; அன்பைப் போதித்தார்; சகிப்புத் தன் மையைப் போதித்தார்; அரண்மனை வாழ்வை உதறி எறிந்து விட்டுச் சென்றார்; காடுகளுக்கு உள்ளே உலவினார்; போதி மரத்துக்கு அடியில் புதிய விளக்கம் பெற்றார். அத்தகைய புத்தரின் கொள்கைகளைக் குழிதோண்டிப் புதைத்த ஒரு
கொடியவனை, இங்கே அனுமதிக்காதீர்கள். புத்தரின் பெயரால் நடத்தப்படு கின்ற விழாவுக்கு அவனை அழைத்து வராதீர்கள் என்பதற்காகத்தான், நாங்கள்
சாஞ்சியை நோக்கிச் செல்லுகிறோம் என்றேன்.

தொடரும் ...........
No comments:
Post a Comment