Saturday, July 13, 2013

விருதுநகர் பந்தலில்,முழுநாள் மாநாடு

தஞ்சாவூர் கூட்டத்தில் #வைகோ அறிவிப்பு

தஞ்சை - திருவாரூர் - நாகை மாவட்டக் கழகங்களின் சார்பில், 5.7.2013 அன்று, தஞ்சாவூரில் கழக வளர்ச்சி நிதி - தேர்தல் நிதி வழங்கும் விழா வெகு சிறப்பு டன் நடைபெற்றது. நிதியினைப் பெற்றுக் கொண்டு பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து.....

நெடிய வரலாறு படைத்த இந்தத் தஞ்சைத் தரணியில், தஞ்சை மாவட்டம், திரு வாரூர் மாவட்டம்,நாகை மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டங்களின் சார்பாக
நடைபெறுகின்ற, நாடாளுமன்றத் தேர்தல் நிதி, கழக வளர்ச்சி நிதி அளிப்புக் கூட்டத்தில், உங்களை எல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். கழகத்துக்கு புதியதோர் எழுச்சி தருகின்ற விதத்தில், இந்தத் தஞ்சை நகரில்,
நம்முடைய இலட்சியங்களைப் பறைசாற்றுகின்ற பதாகைகளை, பட்டயங் களை, நெடுகிலும் மிளிரச் செய்து, இந்த மண்டபத்தில் உங்களை எல்லாம் சந்திக்கின்ற இந்த வாய்ப்பை,தன் சக தோழர்களோடு சேர்ந்து அமைத்துத் தந்து வரவேற்று இருக்கின்றீர்கள்.
கழகத்தை வாழ வைத்துக் கொண்டு இருக்கின்ற காவல் வீரர்களாகத் திகழ் கின்றீர்கள். அடக்குமுறைகள், இருட்டடிப்புகள், சோதனை களுக்கு நடுவே இக்கட்சியை, இருபது ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்து வதற்கு, தன்னலம் இன்றிப்பாடுபட்டு வந்து, வறண்டு போன ஒரு சூழ்நிலையில், காவிரி பொய்த் துப் போன நேரத்தில், கல்லணைக்கும் வராத காலத்தில், கழனிகள் எல்லாம் காய்ந்து கிடக்கின்ற வேளையில், கொடுப்பதற்கு மனம் இருந்தாலும், போதிய நிதி இல்லையே என்று நம்மீது நல்லெண்ணம் கொண்டோர் எல்லாம் எண்ணு கின்ற வேளையிலும்,அல்லும் பகலும் அயராது பாடுபட்டு, பெரும் நிதியைத் திரட்டித் தந்து இருக்கின்ற, இமைப்பொழுதும் நெஞ்சில் நீங்காது, என் ஊனோ டும், உதிரத்தோடும், உணர்ச்சியோடும் நீக்கமற நிறைந்து இயக்கிக் கொண்டு
இருக்கின்ற கழகத்தின் கண்மணிகளே, வணக்கம்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவின் பெயரை, கொள்கைகளைச் சொல் லக்கூடிய தகுதியோடு நாம் கட்சி நடத்திக் கொண்டு இருக்கின்றோம். அண்ணா பிறந்த நாள் விழா என்பது, அண்ணாவின் கொள்கைகளை, இந்த மண்ணில் நிலைநாட்டுவதற்காக, இலட்சியங் களை வென்றெடுப்பதற்காக,
ஆண்டுதோறும் சூளுரைத்துக் கொள்கின்ற, சபதம் பூணுகின்ற ஒரு நிழ்ச்சி ஆகும்.



நாம் எதைச் சாதித்தோம்? எவற்றில் தோற்றுப் போனோம்? என்று ஒரு ஐந் தொகைக் கணக்கு எடுத்தால், தேர்தல்களில் தோற்று இருக்கிறோம்; சில வேளைகளில் நமது அரசியல் முடிவுகள் தவறாகப் போயிருக்கலாம்; சட்ட மன்றத்தில் நமக்கு இடம் இல்லை; ஆனால், திராவிடஇயக்கத்தின் பரிமாணம்
என்று சொல்லக்கூடிய தகுதியை, அண்ணா ஒரு இயக்கத்தை எப்படி நடத்தி னாரோ அப்படி நடத்தி வருகின்றார்கள் என்ற பாராட்டுக்கு உரிய தகுதியை, தமிழக அரசியலில் மறுமலர்ச்சி தி.மு.கழகம் பெற்று இருக்கின்றது.

இதற்கு நாம் கொடுத்து இருக்கின்ற விலை அதிகம்; பட்ட துயரங்கள் அதிகம். ஆண்டுதோறும் அண்ணாவின் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடி இருக் கின்றோம். இந்த ஆண்டு தஞ்சையில் நடத்துவதாக அறிவித்த ஒரு சூழலில், இம்முறை விருதுநகருக்கு அந்த வாய்ப்பை அளிக்கக் கருதி, தலைமை நிர்வாகிகள் முடிவு எடுத்து அறிவித்து இருக்கின்றோம். அடுத்தடுத்த ஆண்டு களில், தஞ்சைக்கும் அந்த வாய்ப்பு உண்டு.

நமக்கு இருக்கின்ற பல்வேறு நெருக்கடிகளால், இந்த மாநாட்டையும், திருச்சி, காஞ்சி, திருநெல்வேலி போல திறந்தவெளி மாநாடாக நடத்தலாமா? என்று ஒரு யோசனை மேற்கொள்ளப்பட்டது. அண்ணன் மலர்மன்னன், மறைந்த
மண்ணச்சநல்லூர் நடராசன் ஆகியோரின் அரும்பெரு முயற்சி களால், வெகு சிறப்பான ஏற்பாடுகளுடன் திருச்சி மாநாடு நடைபெற்றாலும் கூட, அன்று
மாலை பெய்த பெருமழையால், உங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களை எண்ணிப் பார்க்கின்றேன்.

காஞ்சியிலும், திருநெல்வேலியிலும் கூட, மழை அச்சுறுத்தியது. எனவே தான், கடந்த ஆண்டு கரூரில் நடத்தியதைப் போல, கொட்டகை அமைத்து, செப்டெம் பர் 15 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை ஒன்பது மணியில் இருந்து முழுநாள் மாநாடாக நடத்துவது எனத் தீர்மானித்து இருக்கின்றோம். இலட்சோ பலட்சம் பேர் திரளுகின்ற விருதுநகர் மாநாடு, கழகத்துக்கு ஒரு திருப்புமுனை யை ஏற்படுத்திக் கொடுக்கும்.

பெரும் நிதியைத் தந்து இருக்கின்றீர்கள். கண்ணை இமை காப்பது போல, இக் கழகத்தை நீங்கள் காத்து வருகின்றீர்கள். தலைமைக் கழகத்தின் சார்பில் உங்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

மாற்றம் எப்போது வரும்?

நேற்றைய தினம் ஒரு வார ஏட்டுக்குப் பேட்டி அளித்தேன். நம்மீது நல்லெண் ணம் கொண்ட ஏடு அது. அந்தச் செய்தியாளர் என்னிடம் கேட்டார்: ஒவ்வொரு வரும் நாங்கள் இந்தத் தேதியில் ஆட்சிக்கு வருவோம்; முதல் அமைச்சர் ஆவோம் என்று பேசிக் கொண்டு இருக்கின்றார்கள்; நீங்கள் மறுமலர்ச்சி தி.மு. கழகம் மாற்று அரசியலை முன்னெடுக்கும் என்கிறீர்கள். ஆனால், நாங்கள்
ஆட்சிக்கு வருவோம் என்றெல்லாம் பேசுவது இல்லையே; ஏன் அப்படிப்
பேசுகின்ற மனம் இல்லை? என்று கேட்டார்.

நான் சொன்னேன்: ‘எல்லாவற்றையும் மக்கள் கவனித்துக் கொண்டு இருக்கின் றார்கள்; அவர்கள்தான் முடிவு எடுப்பார்கள்’என்றேன். நான் அடிக்கடி சொல் வது உண்டு; நிலம் ஈரமாக இருந்தால் தான் விதை முளைக்கும். நாம் எடுத்து வைக்கின்ற முழக்கங்களை மக்கள் மன்றம் ஏற்றுக் கொள்கின்ற போது, அதற் கான காலம் கனியும்.அப்படி மக்கள் மனம் கனிகின்ற போதுதான்,அதற்கு ஏற்ற வகையில் அந்தக் கருத்தைச் சொல்ல முடியும் என்று சொன்னேன்.

தமிழகத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், அண்ணா திராவிட முன் னேற்றக் கழகத்துக்கும் மாற்று அரசியல் வேண்டும் என்கின்ற எண்ணம், புதிய வாக்காளர்களிடம், இணையதளத்தைப் பயன்படுத்து கின்ற இளைஞர்களிடம் ஏற்பட்டு இருக்கின்றது; முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங் களைப் பயன்படுத்துகின்றவர்கள் அத்தகைய கருத்துகளை வெளிப் படுத்தி
வருகின்றார்கள்; அரசியல் பொதுவாழ்வு,ஈழத்தமிழர் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி வருகின்றார்கள். மாற்றம் வேண்டும் என அவர்களிடம் அரும்பி இருக்கின்ற எண்ணம், மொட்டு ஆகும்; மலராகப் பூக்கும். அந்தக் கட்டத்தில் மாற்றம் எந்த வடிவத்திலும் உருவாகும். மல்லிகைப் புரட்சி வரும் என்று
துனீசியாவில், எகிப்தில் மாற்றம் வரும் என்று எவரும் கருத வில்லை; 
அப் படிப்பட்ட புறச்சூழல், அகச்சூழல்களால் மாற்றம் விளையும்.அத்தகைய முடிவுக்கு இன்றைய இளம் தலைமுறை வருகிறபோது, அந்த மாற்றத்துக்குத் தகுதியானவர்களாக, அவர்கள் பரிசீலிக்கின்ற இடத்தில், மறுமலர்ச்சி தி.மு. கழகம் இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

தமிழ் ஆழி என்கிற மாத இதழ், நமது இயக்க ஆதரவு ஏடு அல்ல; நடுநிலையாக நடத்து கிறார்கள். அவர்கள் நடத்திய ஆய்வில், தமிழகத்தில் மாற்று அரசிய லுக்குத் தலைமை தாங்கக் கூடிய தகுதி யாருக்கு இருக்கின்றது? என நடத்தப் பட்ட வாக்குப்பதிவில், என் இனிய தோழர்களே, உங்கள் பொதுச்செயலாளரை 63 விழுக்காட்டினர் ஆதரித்து இருக்கின்றார்கள். (பலத்த கைதட்டல்).

அதைப்போலத்தான், கீற்று இணையதளம் நடத்திய கணிப்புகளிலும் அப்படித் தான் முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால், நம்மைப் பற்றி என்ன குறை சொல்லுவார்கள்? இவர்களிடம் பணம் இல்லை, ஊடக வலு இல்லை, பெரிய கட்சிகளைப் போன்ற கட்டுமான அமைப்பு இல்லை, இதைத்தானே
சொல்ல முடியும்?

இவர்கள் தவறானவர்கள் என்று எவராவது விரல் நீட்ட முடியுமா? கொள்கை யைக் காவு கொடுத் தவர்கள் என்று சொல்ல முடியுமா? நாம் நாணயமான வர் கள். நேர்மை யாளர்கள். எனவே அரசியலில் தலைநிமிர்ந்து நிற்கிறோம்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment