கேரளாவில் உள்ள தொழிற்சாலை கழிவுகள், மருத்துவ கழிவுகளை அங்கி ருந்து லாரிகளில் இரவுநேரத்தில் ஏற்றி வந்து கோவையின் புறநகர் பகுதியில் கொட்டுவது தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட் களுக்கு முன்பு கேரள மாநிலம் கொச்சி விமான நிலைய கழிவுகளை ஏற்றி வந்து வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொண்டு வந்து கொட்ட முயன்ற லாரி ஒன்று பிடிபட்டது. இது தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.
இந்தநிலையில் கோவையை அடுத்த எல் அண்டு டி பைபாஸ் ரோடு–கோண வாய்க்கால்பாளையம், செட்டிப்பாளையம் ரோடு சந்திப்பில் கடந்த இரு தினத்திற்கு முன் இரவு ஒரு லாரியில் கொண்டு வந்து ஒரு டன் மருத்துவ கழிவுகளை கொட்டியிருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக தகவல் கிடைத் ததும் மதிமுக மாநில இளைஞர் அணி செயலாளர் வே.ஈஸ்வரன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார் இதுகுறித்து போத்தனூர் போலீசாருக் கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அங்கு கொட்டப்பட்டிருந்த மருத்துவ கழிவில் வேலூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ் பத்திரியின் பெயர் பொறிக்கப்பட்ட பிளாஸ்டிக் பை கிடந்தது. மேலும் அந்த ஆஸ்பத்திரியின் சீட்டும் அங்கு கிடந்தது.
இதுகுறித்து வே.ஈஸ்வரன் கூறியதாவது:–
தனியார் ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேற்றப்படும் மருத்துவ கழிவுகளை அழிக்கும் பணியில் சில தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தனியார் ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேற்றப்படும் மருத்துவ கழிவுகளை பிளாஸ்டிக் பைகளில் சேகரித்து அவற்றை அழிக்கும் மையத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். ஆனால் அந்த மருத்துவ கழிவுகளை அங்கு கொண்டு செல்லாமல் வேலூரிலிருந்து கோவைக்கு கொண்டு வந்தது ஏன்? என்று தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
வேலூரிலிருந்து பல நூறு கிலோ மீட்டர் தூரம் உள்ள கோவை அருகே கொண்டு வந்து மருத்துவ கழிவுகளை கொட்ட வேண்டிய அவசியம் என்ன?

என்று போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அல்லது வேறு பகுதியிலிருந்து மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து கொட்டி விட்டு போலீசாரை திசை திருப்ப வேலூர் தனியார் ஆஸ்பத்திரியின் சீட்டை இங்கு போட்டார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார் கள்.
No comments:
Post a Comment