இன்றைக்கு மனித உரிமைகள் கவுன்சில், ஒரு நீர்த்துப்போன தீர்மானத்தை, மேலும் நீர்த்துப் போகச்செய்து நிறைவேற்றி இருக்கின்றது. கடந்த இருபதா வது அமர்வில், சிங்கள அரசுக்கு ஒரு பாராட்டுத் தீர்மானத்தை, இந்தியாவும், கியூபாவும் வரிந்து கட்டிக்கொண்டு ஆதரவு திரட்டி நிறைவேற்றினார்கள்.
29 நாடுகள் ஆதரித்தன, 8 நாடுகள் வாக்குப்பதிவில் கலந்து கொள்ளவில்லை. 12 நாடுகள் எதிர்த்து வாக்கு அளித்தன. அதைவிட இப்போது முன்னேற்றம் தானே என்கிறார்கள். ஒருவகையில் அது சரிதான். ஐ.நா.பொதுச்செயலாளர், மூவர் குழு விசாரணையை அறிவித்தார். உடனே உலகத்தை ஏமாற்ற, கொடிய வன் ராஜபக்சேவும் ஒரு குழுவை அறிவிக்கின்றான். கற்றுக் கொண்ட படிப் பினைகள், நல்லிணக்க ஆணையக் குழு என்றான். Lessons learned and Reconciliation
Commission-LLRC என்றான். உண்மையில் அது,Lies Launched and Renegade Commission
ஆகும். முழுக்க முழுக்கப் பொய்யான அந்த அறிக்கையைச் செயல்படுத்த வேண்டும் என்றுதான் தீர்மானம். இதை அமெரிக்கா முன்வைத்தது.
பிப்ரவரி 27 ஆம் தேதி இந்தியாவின் பிரதிநிதி அங்கே பேசுகிறபோது, எந்த ஒரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினையையும் இந்த மனித உரிமைகள் கவுன்சிலில்
விவாதப் பொருளாக, தீர்மானமாக ஆக்கக்கூடாது என்று கருத்துத் தெரிவித் தார். உடனே கொந்தளிப்பு ஏற்பட்டது. கண்டனங்களைத் தெரிவித்தோம். 28 ஆம் தேதி, நான் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங்குக்கு ஒரு கண்டனக் கடிதம் எழுதினேன். ஏற்கனவே நீங்கள் ஆயுதங்களைக் கொடுத்து, ஈழத்தமிழர்களை அழித்த இனக்கொலையில் நீங்களும் கூட்டுக்குற்றவாளி.இப்போது, ராஜபக்சே யைக் காப்பாற்ற முனைகின்றீர்கள்.தமிழர்கள் ஒருபோதும் உங்களை மன்னிக் க மாட்டார்கள் என்று எழுதினேன். அதன் பின்னரே தமிழகத்தின் இந்நாள் முதல்வர், முன்னாள் முதல்வர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும், எதிர்ப்புத் தெரிவித்தனர்.அதற்குப் பிறகுதான், அந்தத் தீர்மானத்தை மேலும் நீர்த்துப் போகச் செய்து, இலங்கையின் ஆலோசனைப்படிதான் எந்தவிதமான செயல் பாடுகளும் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்களே தவிர, அந்தத் தீர்மா னத்தில் இனப்படுகொலை என்ற சொல்லே கிடையாது.
அதுமட்டும் அல்ல. சேனல் 4 தொலைக்காட்சி காட்டிய கொலைக்குற்றங்கள் எதுவுமே அந்த அறிக்கையில் கிடையாது. பொய் அறிக்கை. மன்னார் மாவட்ட
கிறித்துவ ஆயர் ராயன் அவர்கள், 1,46,000 பேர் கொல்லப்பட்டார்கள் என்கிறார். அவரை இப்போது மிரட்டுகிறார்கள்.
ஆனால், அங்கே ஈழத்தமிழர்கள் தனி நாடு கேட்கவில்லை என்று, அரைவேக் காட்டுத்தனமாக, இந்தப் பிரச்சினையின் அரிச்சுவடி கூட அறியாத சுஷ்மா சுவ ராஜ் உளறிக் கொட்டி இருக்கின்றார். அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் தலை மை அமைச்சராக இருந்தபோது, பணத்துக்காகக் கூட இலங்கைக்கு ஆயுதங் களை விற்பது இல்லை என, அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி முடி வெடுத்து அறிவித்தார். அதே இயக்கத்தில் இருக்கின்ற, எனது இனிய நண்பர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்கா அவர்கள், கடந்த ஆண்டு, நாடாளுமன்றத்துக்கு எதிரே, பல்லாயிரக்கணக்கில் நாம் திரண்டபோது, ஈழத்தமிழர்களைக் காப்பதற்கு இங்கே இருந்து தமிழர்கள் புறப் பட்டுச் செல்ல வேண்டும்; அப்படிச் செல்வீர்களானால், நானும் வரத் தயாராக இருக்கிறேன் என்றுசொன்னார்.ஈழத்தமிழர்களைக் காக்க நீங்கள் களம் அமைத் தால், நானும் வருகிறேன் என்றார், அருமைச் சகோதரர் ராம் விலாஸ் பஸ் வான். அது அவர்களுடைய தனிப்பட்ட கருத்து. அந்த முகாமிலே பலவிதமான விசித்திரமான குரல்கள் எழும். ஜின்னாவை ஆதரித்து ஒரு கருத்து; அதனால் வெளியேற்றுகிறோம், பதவியைப் பறிக்கிறோம் என்று ஒரு கருத்து.

சுஷ்மா சுவராஜ் அவர்களே, எங்கள் இனத்தின் கருவையே அறுத்துக்கொண்டு இருக்கின்ற,இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்சேவை, ஏன் நீங்கள் தனி யாகச் சந்தித்துப் பேசினீர்கள்? இதற்கு நீங்கள் விளக்கம் தர வேண்டும். ஒரு குழுவாகச் சென்ற நீங்கள், ஏன் அவரைத் தனியாகச் சந்திக்கின்றீர்கள்? நீங்கள் பணத்துக்கு ஆசைப்பட்டீர்கள் என்று நான் சொல்லவில்லை. நீங்கள் பரிசுப் பொருளுக்கு ஆசைப்பட்டீர்கள் என்றும் விமர்சிக்கவில்லை. ஆனால், இரத்தக் கண்ணீர் வடிக்கின்ற தமிழர்களின் சார்பில் கேட்கிறேன், அவனிடம் நீங்கள் எப்படி பரிசுப் பொருள்களை வாங்கினீர்கள்? எதற்காக வாங்கினீர்கள்? அதை, அரசாங்கத்திடம் ஒப்படைக்கப் போவதாக அறிவித்து இருக்கின்றீர்கள். எப்படி நீங்கள் பெறலாம்? எங்கள் தமிழர்களின் இரத்தம் தோய்ந்த அந்தக் கொலை காரனின் கரங்களில் இருந்து, கொடியவனின் கரங்களில் இருந்து எப்படி ஒரு பரிசுப் பொருளை வாங்குகிறீர்கள்?
இலங்கையில் 13 ஆவது அரசியல் சட்டத்திருத்தத்தை இந்திய அரசின் சார்பில் நாங்கள் வலியுறுத்துகிறோம் என்கிறீர்களே, அது ஒரு ஏமாற்று மோசடி வேலை என்று அப்போதே தமிழர் அமைப்புகள் நிராகரித்து விட்டனவே? அதை நிறைவேற்றுவோம் என்று உங்களிடம் ராஜபக்சே சொன்னானா? சுஷ்மா சுவராஜ் தில்லி திரும்புவதற்குள்ளாகவே, 13 ஆவது திருத்தத்தைப் பற்றி நான் எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை என்று ராஜபக்சே சொல்லிவிட்டானே? தமிழர் தாயகம் என்பதை அவன் ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படி ஒன்றும் கிடையாது என்று சொல்லிவிட்டான். அவன் தம்பி கோத்தபய ராஜபக்சே, ஈழத் தமிழ் இளைஞர்களை எங்கே கண்டாலும், சுட்டுக் கொல்லுங்கள்; தமிழ்ப் பெண் களை, உங்கள் உல்லாசத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொன்னான்.
சுஷ்மா சுவராஜ் அவர்களுக்குச் சொல்லுகிறேன். அங்கே 6 ஆவது திருத்தச் சட் டத்தை, அப்போதே புலிகள் கடுமையாக எதிர்த்தார்கள், தமிழர் தலைவர்களும்
எதிர்த்தார்கள். இலங்கையில் சுதந்திரத் தமிழ் ஈழம் கேட்டாலோ, இலங்கை யின் ஒற்றுமைக்கு எதிராகப் பேசினாலோ, ஏழு ஆண்டுகளுக்கு அவர்களு டைய குடி உரிமை ரத்து செய்யப்படும்; சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்; சிறையில் அடைக்கப்படுவார்கள். இப்படிப்பட்ட சூழலில், அங்கே நீங்கள் யாரைச் சந்தித்தீர்கள்? இத்தனை இலட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட் டார்களே, எதற்காக? பத்து இலட்சம் பேர் அகதிகளாக உலகின் பல நாடுகளுக் குப் போயிருக்கின்றார்களே, எதற்காக?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை நான் விமர்சிக்கவில்லை, அவர்களுடைய துயரம், வேதனையில், நான் அவர்களைக் குறை சொல்ல
வில்லை. ஆனால், சுதந்திரத் தமிழ் ஈழத்துக்காகத்தானே இரத்தம் சிந்திப் போராடினார்கள்? அது மட்டும் அல்ல. இங்கே படித்தவர்கள் நிறைய வந்து இருக்கின்றார்கள்.இலங்கையில் தமிழர்கள் பிரிவினை கேட்கவில்லை. ஒன் றாக இருக்கின்ற ஒரு நாட்டிடம் இருந்து பிரிவினை கேட்கவில்லை. அவர்கள் பிரிவினை கேட்பதாக நீங்களாகக் கற்பனை செய்து கொண்டு, அவர்கள் மீது
குற்றச்சாட்டு வைக்கக்கூடாது. அவர்கள் சுதந்திரமாகக் கொற்றம் அமைத்து, அரசு அமைத்து வாழ்ந்தவர்கள். அவர்கள் இழந்த சுதந்திரத்தைப் பெறுவதற்குத்
துடிக்கின்றார்கள். தங்கள் தாய்நாட்டில் இருந்து அந்நிய ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றத் துடிக்கின்றார்கள்.
ஈழத்தமிழர்கள் தனி நாடு கேட்கவில்லை
அபிசீனியாவில் இத்தாலி படையெடுத்து ஆக்கிரமிக்க வில்லையா? அவர் களை வெளியேறுமாறு உலகம் குரல் கொடுக்கவில்லையா? பண்டித நேரு குரல் கொடுக்கவில்லையா? அதைப்போலத்தான், ஈழத்தை விட்டு கொடிய வனே வெளியேறு. குடியேற வந்த சிங்களவனே வெளியேறு. எங்கள் நிலத் தில் உனக்கு என்னடா வேலை என்று கேட்கிறார்கள். அதைத்தான் நாங்கள் ஆதரிக்கின்றோம். பிலிப்பைன்சில் இருந்து ஸ்பெயின் வெளியேற வேண்டும் என்று உலகம் குரல் கொடுக்கவில்லையா? செஞ்சீனத்தில் இருந்து ஜப்பான்
வெளியேற வேண்டும் என்று மாவோ போராடவில்லையா? அதற்காக சியாங்கே சேக்கோடு கரம் கோர்த்துப் போராடவில்லையா? அதேபோலத் தான், தமிழ் ஈழத்தை ஆக்கிரமித்து இருக்கின்ற அந்நிய சிங்களவன் வெளியேற வேண்டும். ஈழத்தமிழர்கள் சுதந்திரம் பெற வேண்டும். அது, ஆயிரக்கணக்கான
ஆண்டுகளாக அவர்களுடைய தனி அரசு. ஆங்கிலேயன் அங்கிருந்து வெளி யேறியதற்குப் பின்னர், சிங்களவனின் நுகத்தடிக்கு உள்ளே தமிழன் சிக்கிக் கொண்டான்.சம உரிமைகளோடு வாழ முடியும் என்று அவர்கள் வைத்த
நம்பிக்கை தவறாகப் போய்விட்டது.
தமிழனின் நிலம் பறிக்கப்பட்டது, வழிபாட்டுத் தலங்கள் உடைக்கப்பட்டன. பெண் கள் மீதும், குழந்தைகள் மீதும் வன்கொடுமைகள். தமிழர்களின் சொத்து உடைமைகள் சூறையாடப்பட்டன. இனி சேர்ந்து வாழ இயலாது என்று, 1976 ஆம் ஆண்டு, மே 14 ஆம் நாள், தீர்மானித்து விட்டனர். பண்ணாகம் வட்டுக் கோட்டையில் தமிழர் அமைப்புகள் அனைத்தும் ஒன்றுகூடி, தந்தை செல்வா
தலைமையில், சுதந்திரத் தமிழ் ஈழம்தான் என்று பிரகடனம் செய்து விட்டனர். அதற்கு முன்பு, அதே கோரிக்கையை முன்வைத்துத்தான், காங்கேசன்துறை
நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு, வெற்றியும் பெற்றார்.
அதற்கு அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழர் பகுதிகளில் இருந்த 18 தொகுதிகளில், 17 தொகுதிகளில், அந்தக் கோரிக்கையை முன்வைத்தவர்களே வெற்றி பெற்றார்கள். தமிழ் மக்கள் பெருவாரியாக வாக்கு அளித்து வெற்றி பெறச் செய்தார்கள். எனவே, அன்றைக்கே மக்கள் அங்கீகாரம் அளித்து விட் டார்கள்.
வரலாற்றின் பக்கங்களைப் படிக்காத சுஷ்மா சுவராஜ் போன்றவர்களுக்குச் சொல்லுகிறேன். சுதந்திரத் தமிழ் ஈழம் என்ற கோரிக்கை வெல்லும். அமெரிக் காவில் இங்கிலாந்தின் ஆதிக்கத்தை எதிர்த்த முதலாவது மாநிலம், பாஸ்டன் துறைமுகத்தில் கப்பல்களில் இருந்த தேயிலையைக் கடலில் தூக்கி எறிந்து போராடிய மசா சூசெட்ஸ் மாநிலத்தின் நாடாளுமன்றத்தின் மக்கள் சபையில், 1979 ஆம் ஆண்டு, மே 10 ஆம் நாள், சுதந்திரத் தமிழ் ஈழம் என்று தீர்மானம் நிறை வேற்றி விட்டார்கள். அது மட்டும் அல்ல, ஆளுநர் எட்வர்டு ஜே.கிங், மே 22 ஆம் நாளை, ஈழம் நாள் என்று அறிவித்து விடுமுறை அளித்துக் கொண்டாடி னார்கள். ஆளுநர் மாளிகையில், தமிழர் பிரதிநிதிகளை அழைத்து விருந்து
அளித்தார். சாமர்வில்லே நகர மேயர் புருனே, அவர் ஈழம் நாள் அறிவித்துக் கொண்டாடினார்.
1948 ஆம் ஆண்டு,ஐ.நா.வின் பொதுச்சபை,சுயநிர்ணய உரிமை என்பது, அந்தந்த தேசிய இனங்களின் உரிமை என்று அறிவித்து இருக்கிறது.மாமேதை லெனின் இதை வலியுறுத்தி இருக்கின்றார். அந்த அடிப்படையில்தான், இன்றைக்கு பொது வாக்கெடுப்பு நடத்துங்கள் என்று கேட்கிறோம்.
கண. குறிஞ்சி அவர்களும், பேராசிரியர் ராஜ் இருதயா அவர்களும், முள்ளி வாய்க் கால் படுகொலைகளுக்குப் பிறகு ஈழத்துக்குச் சென்று விட்டு வந்து,
முள்ளிவாய்க்கால் சாட்சியம் என்ற ஒரு நூலை வெளியிட்டு இருக்கின்றார் கள். தமிழர் பகுதிகள் அனைத்திலும் சிங்களவர்களைக் குடியேற்றிக் கொண்டு
இருக்கின்றார்கள். பிரித்தாளும் சூழ்ச்சி இனி வெற்றி பெறாது. கொழும்புக்கு 80 கிலோ மீட்டர் தொலைவில், தம்புல்ல என்ற இடத்தில் இருந்த மசூதியை,சிங்க ளவன் தாக்கி இருக்கின்றான். இன்றைக்கும், புத்தளத்துக்கு அருகில் ஒரு இலட்சம் இஸ்லாமியர்கள், மீள் குடியேற்றம் இல்லாமல் சிக்கித் தவிக்கின் றார்கள்.
இலங்கை முழுமையும் பெளத்த மயமாக்கல், சிங்கள மயமாக்கல் முழுமை யாக நடைபெறுகிறது. தமிழ்ப் பெயர்கள் தாங்கிய கல்வெட்டுகளை அகற்று கிறார்கள்.சிங்களப் பெயர்களைப் பொறிக்கின்றார்கள். தமிழர்களின் கோவில் வளாகத்துக்கு உள்ளே, புத்தர் சிலைகள்.

நல்லூர் கந்தசாமி கோவில் நிர்வாகம் இன்றைக்கு இராணுவத்தின் கையில். முன்னூறு மீட்டருக்கு ஒரு இராணுவச் சோதனைச் சாவடி; மூன்று கிலோ
மீட்டருக்கு ஒரு இராணுவ முகாம். நான்கு தமிழர்களுக்கு ஒரு இராணுவச் சிப்பாய் என்ற அளவுக்கு, மக்களை மிரட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்.
பெயர் சூட்டுதல், சடங்கு போன்ற தமிழர்களின் குடும்ப விழாக்களை நடத்து

வதற்கும், இராணுவத்திடம் அனுமதி பெற வேண்டும். இது கொடுமை இல்லை யா? இந்தநிலையில், அவர்கள் என்ன கருத்துச் சொல்ல முடியும்? இலட்சக் கணக் கானவர்களைக் கொன்ற கொடியவர்களோடு இனி எப்படிச் சேர்ந்து வாழ முடியும்? தமிழர் தாயகத்தில் இருந்து சிங்கள இராணுவமும், ஆக்கிரமிப் பாளர்களும் வெளியேற வேண்டும்.அதற்காகத் தமிழகம் ஆர்த்து எழும். எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. தமிழகத்து இளைஞர்கள், கட்சி எல்லைகளைக் கடந்து, இந்தப் பிரச்சினையில் ஒற்றுமையோடு, ஒரே உணர்வோடு இருக்கின் றார்கள்.
25 தாய்மார்கள் கொடுக்கின்ற குரல் உலகம் முழுமையும் எதிரொலிக்கின்றது என்றால், அதுபோலத் தமிழகம் ஆர்த்து எழுமானால் நம்மாலும் சாதிக்க முடியும். அந்தக் கட்டம் வரும்!
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இவ்வாறு உரையாற்றினார்.
முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

No comments:
Post a Comment