Wednesday, July 17, 2013

திப்பு சுல்தானும் மது ஒழிப்பும்!

மதங்களைக் கடந்து மனித நேயத்தோடு ஆட்சி புரிந்த திப்பு சுல்தான் மதுவை
அடியோடு வெறுத்தார். திப்புவின் வருவாய்த்துறை சட்டம் (1787) மது  ஒழிப்பைக் கூறுகிறது.

நமது மக்களின் சமுதாய, ஆன்மிக நன்மைக்காக மது காய்ச்சுவதும், விற்பதும் முழுமையாக தடைசெய்யப்பட வேண்டும். வெளிநாட்டினர்க்கு தேவை
யானால் மது அனுமதி வழங்கப்படலாம்.

மீர்சாதிக்கு திப்பு 1787 இல் கடிதம் எழுதினார். “மது விற்பனையாளர்கள் தமது தொழிலை நிறுத்துவதற்கான ஒப்பந்தம் செய்து கையொப்பம்  வாங்கியுள்ள தாக உங்கள் அறிக்கை தெரிவிக்கிறது. மதுவை முற்றாக ஒழிக்க மது காய்ச் சுபவர்களிடமும் இத்தகைய ஒப்பந்தம் செய்து கையெழுத்து வாங்குவது அவசியம். பின்னர் அவர்களுக்கு வேறு வேலைவாய்ப்புகள் உருவாக்க உதவு வதும் அவசியம்.
முழுமையான மதுவிலக்கைக் கொண்டு வருவதில் உள்ள பொருளாதார லாப
நஷ்டங்களுக்காக தயங்கவோ, ஒதுங்கவோ செய்வது மக்களுக்கு நல்லதல்ல. இந்த விஷயத்தில் உறுதியான முடிவை நாம் எடுக்க வேண்டும். இது ஏதோ வெறும் மத நம்பிக்கை குறித்த விஷயம் மட்டுமல்ல.நமது மக்களின் பொரு ளாதார நன்மை, ஆன்மிக நல்லுணர்வுகள் சார்ந்தது.

நமது இளைஞர்களிடம் நல்லொழுக்கத்தை உருவாக்க வேண்டியது நமது
கடமை. இதனால் உண்டாகும் உடனடியான பொருளாதார இழப்புகள் குறித்த உங்கள் கவலை எனக்குப் புரிகிறது. ஆனால், அவற்றை மீறி நாம் சிந்திக்க வேண்டாமா? நமது மக்களின் உடல் நலம், வளமான வாழ்வு இவற்றை விட நமது அரசு கஜானாவை நிரப்புவதை முக்கியமானதாகக் கருதுவது எப்படி
சரியாகும்?

மது காய்ச்சுவதையும், விற்பதையும் முற்றிலுமாக தடை செய்தார் திப்பு சுல் தான். புகையிலையை பக்குவப் படுத்த சாராயம் கலக்குவதற்கு பதிலாக
சர்க்கரைப்பாகு கலக்கும் முறையைப் பயன்படுத்தினார். பாங் என்ற போதைப்
பொருளை தடைசெய்தார். சாராயம் காய்ச்சுவோர்க்கு மாற்று தொழிலை  உருவாக்கினார்.

பின்னாளில் திப்புவிற்கு துரோகம் செய்த மீர் சாதிக் “மதுவிலக்கால் உண்டா கும் இழப்பு பற்றி குறை கூறியபோது மதுஒழிப்பு எனது ஆத்மார்த்தமான
இலட்சியம். நமது மக்களின் ஆரோக்கிய வாழ்வும், ஆன்மிக மேன்மையும் இளைய தலைமுறையிடம் பண்பாடும் பொருள் இழப்பை விடவும் மதிப்பு வாய்ந்தவை” என்று உறுதிபடக் கூறினார். மேலும் “மதுவால் வரும் வருமா னத்தைவிட மக்களின் உடல் நலமும், மன வளமும் அதிக மதிப்புமிக்கவை” என்ற கருத்தில் உறுதியாக இருந்தார்.

“மக்களின் நலனை கருத்தில் கொண்டு போதைப் பொருட்களை ஒழிக்க  முன் வந்த ஒரே மன்னன் திப்பு” என்றுபோற்றுகின்றார் எட்வர்ட் தாம்ஸன்.

அண்ணல் காந்தியடிகள் திப்புவைப் பற்றி “நல்ல இஸ்லாமியரான அவர்  மது விலும் மங்கையர்களிலும் மூழ்கிப்போகாத நல்ல மன்னராக வாழ்ந்தார். வரு மானம் இழப்புகளைப் பற்றி கவலைப்படாது பூரண மதுவிலக்கை அமுலாக் கிய திப்பு ஓர் உன்னதமான மன்னர்” என “யங் இந்தியா”வில் எழுதினார்.

18 ஆம் நூற்றாண்டின் மத்தியில் மைசூர், மதுரை அரசுகள் வலுவிழந்து அந்நி யரின் ஓயாத படை எடுப்புகளால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருந்த போது ஹைதர் அலியும் அவரது மகன் திப்புசுல்தானும் மக்களுக்கு 40 ஆண்டு கள் நிம்மதியான நல்வாழ்வை கொடுத்தனர்.

காந்தியடிகளுக்கு முன்னதாக மத ஒற்றுமையையும், மதுவிலக்கையும் அமல் படுத்தி அன்னிய நாட்டாரை இங்கே நிலைக்கவிடாமல் தடுத்தது. மக்களு டைய சுதந்திர எழுச்சிக்கும், தேசிய இயக்கத்திற்கும் தூண்டுகோலாய்  அமைந் தது என “மைசூர் கெஜட்” கூறுகிறது.

ஒரு நாட்டிற்கு சிறப்பினை கொடுப்பது அந்த நாட்டு மக்களின் கலாச்சாரம்,
பண்பாடு முதலியன. மதுவின் காரணமாக கலாச்சாரம் முற்றிலும் சிதைந்து வருகிறது. பண்பாடு அழிந்து வருகிறது எனக் கூறினார்.

நன்றிகள் 

கட்டுரையாளர் :- உடுமலை ரவி

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment