இன்று(7/7/2013 ) காலை 8.30 மணிக்கு ,உத்தரகண்ட் மாநில மீட்புப் பணியில் ஈடுபட்ட போது விபத்தில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த ஹெலிகாப்டர் விமானி ஃபிளைட் லெப்டினன்ட் பிரவீண் அவர்கள் இல்லத்திற்கு சென்ற தலைவர் வைகோ அவர்கள் விமானி பிரவீண் அவர்களின் படத்திற்கு மாலை அணி வித்து மரியாதை செய்தவர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பிரவீன் குடும்பத் தாருடன் இருந்து பிரவீண் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.. இன்று பிரவீனின் பிறந்த நாள்..

தலைவர் வைகோ அவர்களுடன் மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் பொடா அழகுசுந்தரம், மதுரை மாநகர் மாவட்டசெயலாளர் புதூர் பூமிநாதன், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் எம்.டி.சின்னசாமி, மாநில மாநில மாணவர் அணிச் செயலாளர் பாஸ்கர சேதுபதி, ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தி & படம் :- மின்னல் முகமது அலி அவர்கள்
No comments:
Post a Comment