Tuesday, July 9, 2013

ராஜாஜியும் மதுவிலக்கும்!

சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி என்ற ராஜாஜி 1879 இல் ஹோசூர் அருகில்
தொடிப்பள்ளியில் பிறந்தவர். 1972 டிசம்பர் 25 இல் மறைந்தவர். சுதந்திர இந்தி யாவின் ஒரே கவர்னர் ஜெனரல் (1948-1950) இந்திய அரசியல் ஞானி;மூதறிஞர்; எழுத்தாளர், பத்திரிகையாளர். இந்திய தேசிய காங்கிரசின் செயற்குழுவில் 1922 முதல் 1942 வரை பணியாற்றியவர். 1930 இல் வேதாரண்யம் உப்புச் சத்தியா கிரகப் போரில் தலைமை ஏற்றவர்.

மதராஸ் பிரசிடென்ஸியின் முதலமைச்சராக (1937-1939) இருந்தார். 1952- 1954 வரை சென்னை மாகாண முதலமைச்சராகவும் இருந்தவர். இவர் காலத்தில் மதுவை ஒழித்திட அவர் ஆற்றிய அரும்பணிகள், மதுவிலக்கு குறித்து அவர் தம் அரிய கருத்துகள் இதோ:
மதுவிலக்கு முழக்கம்

1937 ஜூலையில் தமிழகத்தின் முதலமைச்சரானார் ராஜாஜி.மதுவிலக்குத் திட் டத்தை எப்படி அமுலுக்கு கொண்டு வருவது என்பது பற்றி யோசித்தார்.

சேலத்தில் முழு மதுவிலக்கு

1937 அக்டோபர் முதல் தேதியிலிருந்து, சேலத்தில் மாவட்டம் முழுவதும் முழு
மதுவிலக்கை மேற்கொள்ள அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது என்றும்; அங்குள்ள எல்லா கள்ளு, சாராயக் கடைகளும் மூடப்படும் என்றும் ராஜாஜி
அறிவித்தார். இந்த அறிவிப்பை தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய தேசமே உவகையுடன் வரவேற்றது.

ராஜாஜியின் உரை

“மக்களின் சேமத்திற்கு (நலத்திற்கு)மதுவிலக்கு மிகவும் அவசியமானது. ஆகையால், அதனால் என்ன நஷ்டம் உண்டானாலும் சரி. அதை உடனே ஆரம் பித்துத் தீருவதே சரி என்று நாங்கள் உணர்ந்தோம்.

மாகாணத்தின் செல்வத்துறை அஸ்தி வாரத்தில் குடி மூலமான வருமானத்
திற்கு முக்கியஸ்தானம் அளிக்கப்பட்டு இருப்பதால் மதுவிலக்குக் காரியம்
சிக்கலாக இருந்து வந்திருக்கிறது. குடி வியாபாரத்தில் ஈடுபட்டு அதன் மூல மாகச் சம்பாத்தியத்தைப் பெற்று ஜீவித்து வந்த குடும்பத்தினருக்கு வேறு ஜீவ னத்தைத் தேடித்தர வேண்டிய பொறுப்பு சர்க்காருக்கும் இருக்கின்றது.

இதுபோன்ற இன்னும் பல பிரச்சினைகளும் இருக்கின்றன. இவற்றை எல் லாம் தீர்த்துவைக்க வேண்டியிருப்பதால் சர்க்கார் மதுவிலக்கை படிப்படியாக
அனுஷ்டானத்திற்குக் கொண்டு வருவது என முடிவு செய்திருக்கின்றனர் என்றார் ராஜாஜி.

முதல்படி

சேலம் மதுவிலக்கு வெறும் பரீட்சார்த்தமல்ல என்றும், அது மதுவிலக்குத் திட்டத்தின் முதல்படி என்றும் ராஜாஜி கூறினார்.

கொள்கை முடிவு

“எங்கள் கொள்கையை நாங்கள் இறுதியாக முடிவு செய்துவிட்டோம்; இனி அதனின்றும் பின் வாங்குவது என்பது இல்லை என்று உறுதியாக இப்போது ராஜாஜி கூறினார்.

மாநிலம் முழுவதும்

“திட சங்கல்பமில்லாத ஜனங்களின் வாழ்வைக் கெடுத்து, அவர்களது குடும் பங்களைச் சேர்ந்த ஸ்திரிகளையும் (பெண்களையும்) குழந்தைகளையும் பட் டினி போடவல்ல பொல்லாத தூண்டுதல்களை ஏற்படுத்துவதில் சர்க்கார் உடந்தையாகயிருப்பது தவறு என்பது எங்கள் உறுதி. செல்வத் துறையான (நிதித்துறை) சரிக்கட்டுதலுக்குச் சிறிது அவகாசம் வேண்டும்.மதுவிலக்கை அனுஷ்டிப்பதில் அனுபவம் வேண்டும். இவ்விரண்டும் இருந்துவிட்டால் மாகாணம் பூராவும் மதுவிலக்கை அனுஷ்டிப்பது சாத்தியமாகிவிடும்.

சேலத்தில்

சேலத்தில் மதுவிலக்கை ஆரம்பித்தால் நமக்கு 26 இலட்ச ரூபாய் நஷ்டம் ஏற் படுகிறது. ஆனால், அதனால் ஏற்படும் லாபம் என்ன? சேலம் ஜில்லாவிலுள்ள விவசாய மக்களிடமும் தொழிலாளி வகுப்பினரிடையேயும் வருஷா வருஷம் ஒரு கோடி ரூபாய்க்குக் குறையாத தொகை தங்கிப் பல காரியங்களுக்குப் பயன்படுகிறது.

மதுவிலக்கை நாம் விஸ்தரிக்க விஸ்தரிக்க இந்த அனுகூலமும் அதிகரிக்கும் என்றார் ராஜாஜி.

ராஜாஜியின் முடிவை ஜஸ்டிஸ் கட்சி தலைவர் ஸர்முகம்மது உஸ்மான்
பாராட்டினார்.

சர்க்கார் கடமை

“மதுவிலக்குத் திட்டத்தை ஆரம்பிப் பதில் சர்க்காருக்கு நஷ்டம் உண்டாகிற தெனச் சிலர் கூறினர். குடி வியாபாரத்தை (மதுக்கடைகளை) சர்க்கார் நடத்த வே கூடாது. செல்வம் சீரழிந்து போவதாயிலும் சரி, ஜனங்களைக் குடிக்கும்படி சர்க்கார் விடக்கூடாது.

குடிப்பதில் என்னென்ன தடைகளை விதிக்க முடியுமோ அத்தனையையும்
விதிக்க வேண்டியது சர்க்கார் கடமை. “ஏழை மக்களிடமிருந்து இத்தகைய வழி களில் பணத்தைக் கொள்ளை யடித்தால் தான் துரைத்தனத்தை (ஆட்சியை) நடத்த முடியுமென்றால் அத்தகைய துரைத்தனத்திற்கு ஆட்சி புரியத் தகுதியே இல்லை” என்று முழங்கியவர்; மதுவிலக்கை தமிழகத்தில்1937 களில் அமுல் படுத்தி வெற்றி கண்டவர் ராஜாஜி.

மனிதன் பாழாவதா?

மனிதனுடைய தேகத்திற்கு என்ன விலை மதிப்பிடலாம்? கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த இயந்திரத்தை நம்மால் செய்ய முடியாது.தன்னைத்தானே பழுது பார்த்துக் கொள்ளும் விசித்திரசக்தி அதற்கு உண்டு.பகுத்தறிவு என்னும் அதிநுட்பமான சக்தி இந்த இயந்திரத்தின் ஒரு சிறப்பான அமைப்பு.

இந்த அமைப்பு கெட்டுப்போகும் படியாக கள்ளையும், சாராயத்தையும் (மது வையும்) உள்ளே கவலையின்றி செலுத்துவது என்ன அறியாமை? தினம் ஒரு தடவை கெட்டுப்போய், தடுமாறி தலைகீழாக நடத்தப்பட்டு வந்தால் எந்த
இயந்திரம்தான் சரியாக வேலைசெய்யும்? விலைமதிப்பற்ற ஒரு இயந்திரத் தை இங்ஙனம் பாழ்படுத்தலாமா? என்று மதுவைக் குடிப்பவர்களைப் பார்த்து
ராஜாஜி கேட்டார்.

1937 வருவித்து, 10 ஆவது சட்டமாக சென்னைப் பிரதிரிதி அவையிலும், ராஜாங்க சபையிலும் மதுவிலக்குச் சட்டம் நிறைவேறியது.

கலெக்டர் டிக்ஸன்

சேலம் ஜில்லா கலெக்டர் டிக்ஸன் அப்போது சொன்னார். என்னுடைய மூன்று மாத அனுபவத்திலிருந்து மதுவிலக்கு சேலம் ஜில்லாவிலுள்ள ஏழைகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக விளங்குகிறது என்பதைத் தெரிந்து கொண்டேன் என்றார்.

1929 களில் இதழ் நடத்தியவர்

‘மதுவிலக்கு’ என்ற மாதப் பத்திரிகையை இரண்டணாவிலையில் வெளியிட் டவர் ராஜாஜி. திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் அப்பிரதிகளை அப்போது
வாங்கலாம். என்று 11.7.1929 யங் இந்தியாவில் காந்தியடிகள் எழுதி உள்ளார்.

தமிழகத்தில் குடிக்கு எதிராக மதுவிலக்கை அமுல்படுத்தி வெற்றி கண்டவர் அன்றைய முதல்வர் ராஜாஜி.எனவே ஆளுவோர் நினைத்தால் எத்தகைய இடர்ப்பாடுகள் இருந்தாலும் தூக்கியெறிந்துவிட்டு மதுவிலக்கை தமிழகத்தில் அமுல்படுத்தலாம். தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமுல் படுத்த அனுதின மும் அயராது பாடுபட்டு வரும் தமிழர் தலைவர் வைகோ கரங்களை பலப் படுத்துவோம்.

தமிழர் தலைவர் வைகோ

தமிழர் தலைவர் வைகோவின் மதுவிலக்குப் பிரச்சாரம் வெல்லட்டும்; தமிழ கத்தில் மது ஒழிந்தது என்ற நிலை வரட்டும்; அது வந்தே தீரும். அது காலத்தின் கட்டாயமன்றோ.

நன்றிகள் 

கட்டுரையாளர் :- செ.திவான்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment