அக்டோபர் 31 அன்று திரைக்கு வந்தது.ஆரம்ப காலத்தில் தீண்டாமை ஒழிப்பு,
குழந்தைகள் திருமணக் கொடுமை,வரதட்சணைக் கொடுமை, ஆலயப் பிர வேசம், மது ஒழிப்பு போன்ற கொள்கை களை மையப்படுத்தி வெளிவந்தது.இது போன்ற படத்தின் விமர்சனங்களை தினமணி, ஆனந்த விகடன், குண்டூசி,
குமரிமலர், பேசும்படம் (திரைப்பட மாத இதழ்), பொம்மை, ஜனசக்தி போன்ற
பத்திரிகைகள் வெளியிட்டன.
தியாக பூமி என்ற திரைப்படத்தில் மது ஒழிப்பிற்காக கீழ்க்காணும் பாடல் பாடப் பட்டது.
அலங்காரம் செய்திடுவோம்
அண்ணன்மாரே வாருங்களேன்!
தெருவீதிக் குப்பையெல்லாம்
கூட்டித் தள்ளுவோம்!
மானமழிக்கும் மனைவி
மக்கள் வயிற்றலடிக்கும்
மதிகெடுக்கும் உயிர் குடிக்கும்
நஞ்சன்றோ மதுபானம்!
வேலைக்குக் கூலி கொஞ்சமே
மிஞ்சுமோ அதையும்
குடிப்பதோ? பாழாய் அடிப்பதோ?
இப்படம் 1935 இல் வெளிவந்தது.இதனை அடுத்து சந்திரசேனா, சந்திரமோகன், தர்மபத்தினி, பதிபக்தி, இருசகோதரர்கள், தேவதாஸ், பக்காரவுடி, சொர்ண லதா, மதுரைவீரன் போன்ற படங்களில் தீண்டாமை ஒழிப்பிற்காக கருத்து களை வெளிப்படுத்தும் வகையில் படங்கள் வெளிவந்தன.சுதந்திர போராட்ட காலத்தில் இந்தியர்கள் பிரிட்டிஷாரை எதிர்த்து மட்டும் போராடிக் கொண்டி ருக்கவில்லை. இந்த நாட்டில் நிலவி வந்த மூட பழக்கவழக்கங்களையும், அவற்றால் நேரும் சமூகக் கேடுகளையும் எதிர்த்துப் போராடிக் கொண்டிருந் தார்கள் என காந்தியடிகள் குறிப்பிட்டார்.
1938 ஆம் ஆண்டு “சொர்ணலதா” என்ற திரைப்படம் மதுவிலக்குப் பிரச்சாரங்
களுடன் வெளிவந்தது. 1940 இல் “விமோசனம்” என்ற தமிழ் திரைப்படம் வெளி வந்தது. நவசக்தி பத்திரிகையில் 21.08.1929 அன்று, “விமோசனம்” மாதப் பத்திரி கை யானது சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியாரால் நடத்தப்பட்டு வந்தது. இதன் நோக்கம் பூரண மதுவிலக்கு. வருட சந்தா, தபால் கூலி உட்பட ரூபாய் ஒன்றுக்கு விற்பனையானது. அயல் நாட்டிற்கு ரூ 1-2-0.1940 ஆம் ஆண்டு வெளி வந்த தமிழ் திரைப்படத்திற்கு 1929 இல் வெளியான விமோசனம் பத்திரிகை யின் தலைப்பை வைத்தனர். “விமோசனம்” படம் முழுவதும் சிறுமியரே நடித் துள்ளனர் என்பது சிறப்புச் செய்தியாகும் என்ற கட்டுரை வெளியானது. 24.07. 1938 இல் ஆனந்த விகடன் இதழ், சீக்கிரமே “விமோசனம்” வந்துவிடும் போல்
இருக்கிறது என்று கூறுகிறது.
ஒரு திரைக்கதையில் கள்ளுக்கடைகள் எல்லாம் உணவு விடுதியாக மாறு கின்றன. கள்ளுக்கடை ஒழிந்த மகிழ்ச்சியில் கிராமத்தில் பெண்கள் கூடி கும்மி யடித்து பாடல்களைப் பாடுகிறார்கள். அந்தப்பாடல்,
பட்டோமடி வெகு கஷ்டமடி
அந்தப் பாழாப்போன கள்வெறி
போதையினால்,
கள்ளுக்கடைகளை மூடிவிட
நம் காந்திஜி எண்ணத்தில்
கொண்டுவிட
தெள்ளறிவுள்ளவர் ராஜாஜி
மிகத் துரிதமாய்
சட்டம் இயற்றிவிட்டார்
காந்திஜியின் சக்தியைக் காணுங்கடி - ராஜ
கோபாலர் புத்தியைக் காணுங்கடி
போற்றுங்கள் காந்தியைப்
போற்றுங்கடி!
இவ்வாறு பாடல்கள் பாடப்பட்டது.இப்படத்தின் பாடல்களை மதுரை, எல்.கிருஷ்ணசாமிபாரதி எம்.எல்.ஏ. அவர்கள் எழுதியிருந்தார்.
1929 இல் ராஜாஜி அவர்கள்“விமோசனம்”பத்திரிகையை தொடங்கினார்.துணை ஆசிரியராக கல்கி கிருஷ்ணமூர்த்தி இருந்தார். இதனை கல்கி கிருஷ்ண மூர்த்தி அவர்கள் என் பூர்வாசிரமம் என்ற கட்டுரையில் கீழ்வருமாறு குறிப்பிடு கிறார். நாற்பது பக்கத்திற்கு மதுவிலக்கு விசயத்தை எப்படித் திரட்டுவது? அப் படியே பத்திரிகையைக் கொண்டு வந்தாலும் ஜனங்கள் வாங்குவார்களா? என்ற சந்தேகம் எனக்கு எழுந்தது. ஏன் வாங்கமாட்டார்கள்? வாங்காவிட்டால்
வாங்கச் செய்ய வேண்டும்? என ராஜாஜி கூறினார். எப்படி வாங்கச் செய்வது,
வாங்குவதை கட்டாயமாக்க முடியுமா? படிக்க சுவாரஸ்யமாக இருந்தால் தானே பத்திரிகையை வாங்குவார்கள் என்று கூறினேன்.அதற்கு ராஜாஜி அவர் கள் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும்படி செய்யலாம். நீ பார்த்துக் கொண்டே இரு.முதல் இதழை நான் தனியாகவே தயாரித்துக் காட்டுகிறேன் என்று கூறினார்.
அவ்விதமே விமோசனம் முதல் இதழை ராஜாஜி தயாரிக்க ஆரம்பித்தார். ஒரு
வாரத்தில் தயாரித்து முடித்துவிட்டார்.அட்டைப் பக்கத்திற்கு மதுப்புட்டியாகிய
அரக்கனை விரட்டியடிப்பது போன்ற படம் அச்சிடப்பட்டது. இரண்டாவது பக் கத்தில் பாரதியாரின் “ஜெயபேரிகை கொட்டடா” என்ற பாட்டைத் தழுவி “மது வெனும் பேய்தனை அடித்தோம்” என்ற ஒரு பாட்டும் படமும் சேர்க்கப்பட்டது. அமெரிக்காவிலிருந்தும், இங்கிலாந்திலிருந்தும் பல மதுவிலக்கு நூல்களை ராஜாஜி தருவித்தார்.அவற்றைக் கொண்டு பல கட்டுரைகள் எழுதினார். இப்படி யெல்லாம் தயார் செய்த புத்தகத்தை ராஜாஜியே சென்னைக்கு சென்று இதழை
அச்சடித்துக் கொண்டு வந்தார். அந்த இதழை பார்த்தவுடன் பத்திரிகை வெற்றி யடையப் போகிறது என்ற தைரியம் எனக்கு உண்டாகிவிட்டது.
-வெள்ளிமணி, 12.09.1947
24.07.1938 ஆனந்தவிகடன் இதழில் “விமோசனம்” நாடகமாக நடித்து வந்ததை திரைப்படமாக வெளிவருகிறது என்றும், ஆயத்த பணிகள் தொடங்கிவிட்டன என்றும், இந்தப் படத்தில் சென்னை நகர பெண் பாடசாலை மாணவிகள் நடிக் கின்றனர். இந்த படம் வெற்றிபெற வேண்டும் என்பதே எல்லோரது விருப்பம் என்று கட்டுரையின் ஒரு பகுதி கூறுகிறது.படத்தின் தொடக்கத்திலேயே குடியை ஒழிக்க பாடல் வருகிறது.
“இன்பம் அளிக்க வருவாய்
ஏழைகள் தமக்கின்பம்
அளிக்க வருவாய்
பாரதத் தாயே!
துன்பம் தவிர்க்க வருவாய்
குடியால் வாழ்ந்த
துன்பம் தவிர்த்து எங்கள்
தீய வினையும் தவிர்த்து”

என்ற பாடலாகும்.மேலும், இன்னொரு காட்சியில் மது ஒழிக்கும் தொண்டர் படை கீழ்க்கண்ட பாடல்களைப் பாடுகிறார்கள்.
இந்தியச் சகோதரர் இன்புற வாழவே
ஏற்றவழி இதுவே!
சொந்த அறிவுதனை
மந்தமாக்கிடும் குடியைக் கைவிடுவீரே!
நாட்டினில் பஞ்சமும் பலவிதத்
தொல்லையும் வருத்துவதையோ!
வீட்டிலும் கவலை துன்பம்
குறைந்த பாடில்லை ஐயோ!
அல்லும் பகலுமே அடிமைகளாகி
அரைவயிறு தனக்குணவுமின்றி
தொல்லைப்படும் ஏழை
தமக்கிங்காகுமோ
குடியைக் கைவிடுவீரே!
இந்தியச் சகோதரர் இன்புற வாழவே
ஏற்றவழி இதுவே!
சொந்த அறிவுதனை
மந்தமாக்கிடும் குடியைக் கைவிடுவீரே!
நாட்டினில் பஞ்சமும் பலவிதத்
தொல்லையும் வருத்துவதையோ!
வீட்டிலும் கவலை துன்பம்
குறைந்த பாடில்லை ஐயோ!
அல்லும் பகலுமே அடிமைகளாகி
அரைவயிறு தனக்குணவுமின்றி
தொல்லைப்படும் ஏழை
தமக்கிங்காகுமோ
குடியைக் கைவிடுவீரே!
கிட்டப்பா என்றவுடன் நினைவுக்கு வருவது கோ.பி.சுந்தராம்பாள். கிட்டப் பா வும், கே.பி.சுந்தராம்பாளும் நாடக மேடையில் தோன்றினால் இவர்களின்
கணீரென்ற குரல் அனைவரையும் வசீகரிக்கும். ஈழத்திலும் பல இடங்களில்
கே.பி.சுந்தராம்பாளின் நாடகங்கள் சிறப்பாக நடைபெற்றது. கே.பி. சுந்தராம் பாள் அவர்களும் மதுவிலக்கிற்கு எதிராக பல்வேறு பாடல்களை மேடைகளில் பாடியுள்ளார். தமிழ்த்திரைப்பட உலகில் மதுவுக்கு அடிமையாகி பல நடிகர், நடிகைகள் வாழ்க்கையை இழந்துவிட்டனர். புகழின் உச்சிக்குச் சென்ற பல நடிகர் நடிகைகள் மதுவின் காரணமாக திரைப்பட உலகைவிட்டே வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. இவற்றையெல்லாம் “குடியால் குடை சாய்ந்த கோபுரங்கள்” என்ற நூல் திரைப்பட வரலாற்று உண்மைகளை பதிவு செய்துள்ளது.
1968 ஆம் ஆண்டு பொம்மை என்ற இதழில் டி.ஏ.மதுரம் அவர்கள் தன் பேட்டி யில் பின்வருமாறு கூறுகிறார்.“குடிச்சுப் பழகணும், நீராகாரம் குடிச்சுப் பழக ணும்” என்று பாடி உபதேசித்த மதுவிலக்கு பிரச்சாரத்திற்கு எதிராகவே நல்ல தம்பி படத்தை தயாரித்த, நாகர்கோவிலில் காந்தி நினைவு ஸ்தூபியை 60,000 ரூபாய் செலவில் கட்டிய கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவருடைய இறுதிக் காலத்தில் மதுப்பழகத்திற்கு ஆட்பட்டு சென்னை பொது மருத்துவ மனையில் 1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறந்தபோது அவருக்கு வயது 49
ஆகும்.
சிரிப்பது உடலுக்கு நல்லது என்று அடிக்கடி கூறும் என்.எஸ்.கிருஷ்ணன் உட லுக்கு நல்லது அல்லாத ஒன்றை அவர் தனக்கு விருப்பம் இல்லாமலேயே
நாடிச் சென்றார், இறுதியில் அது அவரை அடிமையாக்கிக் கொண்டது என்று
கூறியுள்ளார். தந்தை பெரியார் அவர்கள் மகாத்மா காந்தி கூறியதற்கு இணங்க
சேலம் தாதம்பட்டியில் உள்ள அவருக்குச் சொந்தமான தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார்.பெரியாருடைய குடும்பப் பெண்கள் கூட மதுவிலக்கில் தீவிரம் காட்டினார்.கள்ளுக்கடை மறியலை பெரியாரின் திரைப்படத்தில் முழு வதுமாக பதிவு செய்துள்ளனர்.

நன்றிகள்
கட்டுரையாளர் :- உடுமலை ரவி
வெளியீடு :- சங்கொலி
No comments:
Post a Comment