Monday, July 8, 2013

ஆலயங்களில் தமிழ் ஒலிக்க போராடியவர் பழனியப்பனார்.

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை(7/7/13) நடைபெற்ற கி. பழனியப்பனார் நூற்றாண்டு விழாக் கருத்தரங்கத்தில் #வைகோ பேசியது:

தமிழின் பெருமை உலகறியச் செய்யும் வகையில் சமய நூல்களை எழுதியவர் பழனியப்பனார் என, மதிமுக பொதுச் செயலர் வைகோ புகழாரம் சூட்டினார்.

அறம் ஓங்க வேண்டும். ஆலயங்களில் தமிழ் ஒலிக்கவேண்டும் என்று போராடியவர் பழனியப்பனார்.
கோயில் மாநகர் நூலில் பழனியப்பனார் விருப்பு வெறுப்பின்றி வரலாற்று உண்மைகள் பலவற்றைக் கூறியிருக்கிறார். தமிழுக்கும், தமிழினத்துக்கும் அவர் ஆற்றிய தொண்டுகள் ஏராளம். தமிழின் பெருமையை உலகமறியச் செய்யும் வகையில் சமய நூல்களை எழுதியவர்.

ஆனால், இன்று தமிழ் இனம் துரோகத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. பாட சாலைகளில், நீதிமன்றங்களில் ஆட்சி நிர்வாகத்தில் தமிழ் ஓங்கி ஒலிக்க வேண்டுமென காலம் காலமாக போராடியிருக்கிறோம். இப்போது, பள்ளி களில் ஆங்கிலவழிக் கல்வியை கொண்டு வந்திருக்கிறார்கள்.

தொடர்ந்து சூழ்ச்சிகள் நம்மை முற்றுகையிட்டுள்ள இந்த நேரத்தில், தமிழ் தேசம் மலர பழ. நெடுமாறன் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வாழவேண்டிக் கொள்வோம் என்றார்.

சாதி ஒழிய வேண்டும்: முன்னதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லகண்ணு பேசுகையில், தமிழ் வாழ வேண்டும். சாதி ஒழிய வேண்டும் என பாரதியின் நெஞ்சம் என்ற பெயரில் பாரதிதாசன் குறிப்பிட் டுள்ளார்.

அந்த வழியில் தமிழ் வாழவும், சாதி ஒழியவும் போராடியவர் பழனியப்பனார். இன்று சாதி ஆதிக்கம் தலை தூக்கியுள்ளது. தமிழன் என்ற உணர்வு மேலோங் கினால்தான் சாதி ஒழியும்.

இதற்கு, பழனியப்பனார் போன்றோரின் லட்சியத்தைப் பின்பற்ற வேண்டியது அவசியம் என்றார்.

நிகழ்ச்சியில், கவிஞர் காசி ஆனந்தன் தலைமை வகித்தார். முனைவர் ம.நடராசன், அண்ணாத்துரை எம்.எல்.ஏ., முன்னாள் மேயர் பெ. குழந்தைவேலு உள்ளிட்டோர் பேசினர். மா. பழனியப்பன் வரவேற்றார். ஆ. சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment