“திராவிடர் கழகத்தில் இருந்தபோது, அதன் வளர்ச்சிக்காக தன்னலமற்று தம் மையே ஒப்படைத்துக்கொண்டு உழைத்தவர் என்.வி.என்.! தந்தை பெரியார் அவர்கள், அவர் மீது பேரன்பைப் பொழிந்ததோடு, நிற்க வில்லை. பெருநம்பிக் கையும் வைத்து இருந்தார். எந்த அளவுக்கு என்றால், தாம் எங்கே சென்றாலும், காரிலோ, வண்டியிலோ, என்.வி.என்.னைத் தம்முடன் அழைத்துச் செல்லும்
அளவுக்கு. போராட்டங்களிலே ஈடுபட்டு சிறைக்கோட்டம் செல்வதிலும் நல்ல தேர்ச்சி பெற்றவர் நடராசன்.‘கொள்’ என்றால், வாயைத் திறப்பதும், கடிவாளம் என்றால், வாயை மூடிக்கொள்வதும் குதிரைகளுக்கு மட்டுமே சொந்தமான இயல்பு இல்லை. சில சந்தர்ப்பவாத அரசியல்வாதி களிடமும் அந்தப் போக்கு உண்டு.அவர்கள் ஆர்ப்பாட்டமாக மேடையில் முழங்குவார்கள். ஆனால், போர்ப் பரணி கேட்டதுமே எங்கேனும் புதரில் போய் பதுங்குவார்கள். என்.வி. என். அத்தகைய கோழை அல்லர், கொள்கைக் குன்று!” என்று நம் நெஞ்சம் நிறை அண்ணா அவர்களால் புகழாரம் சூட்டிப் பெருமைப்படுத்தப்பட்டவர் திராவிடர் இயக்க தியாகச் செம்மல் என்.வி. நடராசன் அவர்கள்.