Tuesday, July 9, 2013

தமிழரின் வீர வரலாற்று ஆவணம்-பகுதி 2

ஆகஸ்ட் 4 ஆம் தேதி, சுதுமலையில், பிரபாகரன் அவர்கள் ஆற்றிய உரையை நான் நினைவூட்டுகிறேன். இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்குப் பிறகு அவர் ஆற்றிய உரை.

சுதுமலையில் பேசுகிறபோது பிரபாகரன் சொன்னார்:

“நமது போராட்டத்தில் எதிர்பாராத ஒரு திருப்பம் ஏற்பட்டு விட்டது. ஒரு வல் லரசு, நம்மீது ஒரு ஒப்பந்தத்தைத் திணிக்கிறது. மகத்தான தியாகங்கள் செய்து, இரத்தம் சிந்தி, உயிர் கொடுத்து, நாம் உருவாக்கி வைத்த போராட்டத்தின் வடிவமே சிதைக்கப்படுகிறது. நம் மக்களைக் காப்பாற்றுகின்ற ஆயுதங்களை ஒப்படைக்கச் சொல்லி விட்டார்கள்.


எங்கள் கருத்தைக் கேட்காமல், மக்கள் கருத்தைக் கேட்காமல் இந்த ஒப்பந்தம் நம்மீது திணிக்கப்பட்டது.அதற்கு எங்கள் எதிர்ப்பை முழுமையாகத் தெரிவித் தோம். இனி, எம் மக்களைக் காப்பாற்றுகின்ற பொறுப்பை, இந்திய அரசு ஏற்றுக் கொள்கிறது.

இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து, இந்திய அரசை எதிர்த்து ஒரு துர்பாக்கியமான நிலைமை ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம். இந்திய வீரர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்த நாங்கள் விரும்ப வில்லை. சிங்கள இனவாத பூதம், இந்த ஒப்பந்தத்தை விழுங்கி விடும் என்று சுதுமலையில் பிரபாகரன் பேசினார்.

ஜெயவர்த்தனா சொல்லுகிறார்: நான் இந்தியாவோடு ஒப்பந்தம் செய்து விட் டேன்; இந்த நாட்டுக்கு உள்ளே இந்திய இராணுவத்தை நுழைய அனுமதித்து விட்டேன் என்று என்னுடைய அமைச்சர்கள் சிலரும்,எதிர்க்கட்சிக்காரர்களும் என்னைக் கடுமையாக விமர்சித்தார்கள். இப்பொழுது ஒரு உண்மை புரிந்து
விட்டதா? இப்போது நம்முடைய இராணுவ வீரர்கள் கைப்பந்து விளையாடிக் கொண்டு இருக்கின்றார்கள்; இந்திய இராணுவ வீரர்களும், விடுதலைப் புலி களும் களத்திலே மோதிக்கொண்டு இருக்கின்றார்கள்; புரிந்ததா சூட்சுமம்? நான் எதற்காக இந்த ஒப்பந்தத்தைச் செய்தேன் என்பது இப்போது புரிகிறதா? என்று ஜெயவர்த்தனா கூறியதையும், இங்கே பதிவு செய்கிறார்.

1987 செப்டெம்பர் 15. அன்று இரவில், இந்தியத் தளபதி ஹர்கிரத் சிங்குக்கு ஒரு தகவல் வருகின்றது. தீட்சித் பேசுகிறார்.

உங்களைச் சந்திக்க பிரபாகரன் வருகிறாரா? என்றுகேட்கிறார்.

ஆம்; மரியாதை நிமித்தம் சந்திப்பு நடக்கிறது என்கிறார் ஹர்கிரத் சிங்.

அவரைச் சுட்டுக் கொன்று விடுங்கள், டில்லியின் உத்தரவு என்றார் தீட்சித்.

அப்படியொரு துரோகத்தை, இந்திய இராணுவம் ஒருபோதும் செய்யாது என்று ஹர்கிரத் சிங் பதில் சொல்லுகிறார்.

அதற்குப்பிறகு, ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து,திலீபன் உண்ணா நிலை அறப்போர் தொடங்குகிறார்.அண்ணன் நெடுமாறன், செப்டெம்பர் 22 ஆம் தேதி
இங்கே இருந்து புறப்பட்டு, அங்கே நெடுந்தீவுக்குப் போய்ச் சேருகிறார். பிரபா கரனைச் சந்திக்கிறார்; மறுநாள்,திலீபனைப் போய்ப் பார்க்கிறார். அவருடைய உயிர் ஊசலாடிக் கொண்டு இருக்கின்றது, மரணத்தின் விளிம்பில் இருக் கின் றார்.

தமிழகத்தில் இருந்து கோடிக்கணக்கான தமிழர்கள் சார்பில் உங்களுக்கு என் மரியாதையைத் தெரிவிக்க வந்து இருக்கிறேன், எங்கள் அன்பைச் செலுத்த வந்து இருக்கிறேன் என்கிறார்.

தலைவரை இறுக்கமாக இருக்கச் செல்லுங்கள்.போராட்டத்தை முன்னெடுத் துச் செல்லட்டும்; என்று திலீபனின் உதடுகள் அசைகின்றன.

செப்டெம்பர் 26 ஆம் தேதி, திலீபன் மறைந்தார். அந்த உண்ணாவிரதம் நடை பெற்ற இடத்தை எட்டிப் பார்க்கவில்லை தீட்சித். திலீபனின் மரணத்தைத்
தடுத்து இருக்க முடியும். ஆனால், துளிநீரும் பருகாமல், கணைக்கால் இரும் பொறை போல் மடிந்தான்; திலீபன் இலட்சியத்துக்காகத் தன்னை அழித்துக் கொண்டான்.

அக்டோபர் 3 ஆம் தேதி புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 17 தளபதிகள், சிங்க ளக் கடற்படையால் கடலில் மடக்கிக் கைது செய்யப்பட்டனர். பலாலி விமான தளத்தில் கொண்டு போய் அவர்களை அடைத்து வைத்தார்கள்.இந்திய இராணு வம், கட்டுக்காவல் போட்டது.

பின்னர் டெல்லி உத்தரவின்பேரில், இந்திய இராணுவம் அந்தக் கட்டுக் காவ லை விலக்கிக் கொண்டது. இந்திய-இலங்கை ஒப்பந்த விதிகளுக்கு மாறாக, அவர்களைக் கொழும்புக்குக் கொண்டு செல்ல முயன்றார்கள். இந்திய அரசின் துரோகத்தால், குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 புலிப்படை தளகர்த்தர்கள், சயனைடு குப்பிகளைக் கடித்து மடிந்தார்கள்.

புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட தளபதிகள் நச்சுக் குப்பிகளைக்கடித்து இறந்து போனார்கள். அதற்குப்பிறகு உயிரோடு பிடித்தாலும் சரி; பிரபாகரன் உயிரை
முடித்தாலும் சரி என்று, அதிரடிப் படைகள், கமாண்டோக்கள், இலங்கு வானூர் திகளிலே கொண்டு வந்து இறக்கப்பட்டனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக
வளாகத்துக்கு உள்ளே, நூற்றுக்கணக்கான கமாண்டோக்களைக் கொண்டு வந்து குவித்தார்கள்.அது பிரபாகரனுக்குத் தெரிந்தது.

அக்டோபர் 12 ஆம் தேதி. புலிகளின் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து வந்தன; இந்திய கமாண்டோக்கள் ஒருவர் கூட மிஞ்சவில்லை. நிலவின் வெளிச் சத்திலே நெருப்பாக இயங்கிக் கொண்டு இருந்தார் பிரபாகரன்;சுற்றிலும் தாக் குதல் நடக்கிறது.

தன் தோளில் ஆயுதங்களைத் தாங்கியவாறு, தானே களத்தில் போர் நடத்திய வாறு கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டு இருக்கிறார்; களத்தை அவரே
இயக்கிக் கொண்டு இருக்கிறார்; இந்தக் காட்சி கண்ணிலேபட்டபோது, என் மனதிலே தோன்றியதெல்லாம், மகாபாரதத்தின் 13 ஆம் போர்ச்சருக்கம்தான் என்றார் காசி ஆனந்தன்.

பத்ம வியூகத்துக்கு உள்ளே அபிமன்யு நுழைந்தபோது, நாலாபுறங்களிலும் எதிரிகள் சூழ்ந்துகொண்டு தாக்குவதைப்போல, அதை எதிர்த்து அபிமன்யு
போராடுவதைப்போல, நான் பிரபாகரனைப் பார்த்தேன். ஒரேயொரு வித்தி யாசம்; அபிமன்யு வியூகத்தை உடைத்துக்கொண்டு வெளியே வர முடியாமல்
சிக்கிக்கொண்டு மடிந்தான்; ஆனால், பிரபாகரன் எதிரிகளின் வியூகத்தை உடைத்து வெளியேறினார் (பலத்த கைதட்டல் ஆரவாரம்)..

வெறும் வார்த்தைக்காக, பாராட்டுவதற்காக அல்ல. எந்த நாட்டின் உதவியும் இன்றி, அவர்களே ஆயுதங்களை வடித்தார்கள் என்று மணி சொன்னாரே, ஒவ் வொன்றுக்கும் ஒரு காரணப் பெயர் உண்டு.

பிரபாகரனைச் சந்தித்து விட்டு வாருங்கள் என்று சென்னையில் இருந்து இந் திய உளவுப்பிரிவு அமைப்பினர் ஜானியை அனுப்பி வைத்தனர். வழியில் இந்தி யப் படை மறித்தால், நான் இந்திய அரசால் அனுப்பி வைக்கப்பட்டவன் என்று சொன்னால் போதும் என்று தெரிவித்தார்கள். அதன்படி, அவர் காட்டுக்கு உள்ளே சென்று பிரபாகரனைச் சந்தித்துவிட்டுத் திரும்பும்போது, அவருடன் புலிகளும் வந்தார்கள். வழிமறித்தது இந்திய இராணுவம்.

நான்தான் ஜானி; இந்திய அரசாங்கத்தால் அனுப்பி வைக்கப்பட்ட தூதன் என்று
சொன்னார்.கிட்டுவைப் போல யாழ்ப்பாணத்தின் தளபதியாக இருந்தவர் ஜானி. நெற்றியில் குண்டு பாய்ந்தும் உயிர் பிழைத்து, மருத்துவ உலகத்தை வியக்க
வைத்தவர்.

அவர், நான்தான் ஜானி என்று சொன்னபோது,உச்சந்தலையில் இருந்து உள் ளங்கால் வரையிலும், இயந்திரத் துப்பாக்கிகளின் குண்டுகள் சல்லடைக் கண் களாக அவரது உடலைத் துளைத்துப் போட்டன. உடன் வந்த புலிகள் சுடப்பட வில்லை.அதற்குப்பிறகு, காட்டுச் சுள்ளிகளைப் பொறுக்கி ஜானியின் உட லைச் சுட்டு எரித்துவிட்டுப் போனார்கள்.

அந்த ஜானியின் பெயரில்தான் ஒரு கண்ணி வெடியைத் தயாரிக்கச் சொன் னார் தம்பி.(பலத்த கைதட்டல்). அந்தக் கண்ணி வெடியில் சிக்கிக் கால்களை இழந்தவர்கள், உயிர்களை இழந்தவர்கள் ஏராளம்.

எறிகுண்டுகள், கணைகளைத் தயாரிக்கச் சொன்னார். அந்தக் காலகட்டத்தில், வெறும் 28 பேர்களோடு காட்டுக்கு உள்ளே சென்றார். அன்பு என்ற ஒரு தம்பி. தமிழ்நாட்டுப் பொறுப்பாளராக சென்னையில் இருந்தவர்.

அவர் சொல்லுவார்: நல்லா வயிறு நெறயச் சாப்பிட்டுச் சண்டை போட்டுச் சாகலாமே? நாம் 28 பேர்கள்தாம் இருக்கின்றோம். நம்மைச் சுற்றி இலட்சம் பேர் வளைத்து நிற்கிறார்கள்.தலைவரும் சாப்பிடுவது இல்லை.ஒரு நாளைக் கு உப்பில்லாத ஒரு டம்ளர் கஞ்சிதான். ஆனால்,கண்ணி வெடிகளைத் தயாரிப் பதற்கான பொருள்களைத் தலைச்சுமையாகக் கொண்டு வரச் சொல்லுகிறாரே
என்று நான் நினைத்தேன். ஆனால், அதற்குப்பிறகுதான், இவன் தான் எங்கள் தலைவன் என்று நாங்கள் உணர்ந்தோம். (கைதட்டல்).

இலட்சத்துக்கும் மேற்பட்ட படைகள் குவிக்கப்பட்டு இருந்தபோது, இந்தியப் பிரதமருக்கு எட்டுக் கடிதங்களை எழுதினார் பிரபாகரன். சமாதானத்துக்கான
கதவுகளைத் திறக்க மாட்டீர்களா? போரை நிறுத்த மாட்டீர்களா? என்று கேட் டார். ஆனால், அவர்களை முற்றிலும் ஒழித்துக் கட்டி விட வேண்டும் என்று
திட்டமிட்டு, ஆபரேசன் செக்மேட் என்ற தாக்குதலை நடத்தினார்கள். இது ஒரு கட்டம்.

அதன்பிறகு, இந்தியாவில் ஆட்சி மாறுகிறது. வி.பி.சிங் பொறுப்பு ஏற்கிறார். அங்கே பிரேமதாசா, இந்தியப் படைகள் வெளியேறட்டும் என்று குரல் கொடுக் கிறார். ராஜதந்திரத்தில் காய்களை மிகத் திறமையாக நகர்த்துகிறார் பிரபா கரன். சூழ்ச்சி நிறைந்ததுதானே அரசியல்? சுயநலத்துக்காக அல்ல; ஒரு இனத் தைக்காப்பதற்காக, தன்னலத்துக்காக அல்லது யாரோ ஒரு குடும்பம் வாழ்வ தற்காக அல்ல; தன் தாயக விடுதலை ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, பிரபாகரன் காய்களை நகர்த்தினார்.

இதற்குப் பிறகு, எந்த யாழ் கோட்டை 400 ஆண்டுகளாக டச்சுக்காரர்கள், போர்த் துகீசியர்கள் அடுத்து வெள்ளையர்கள் ஆதிக்கம் செலுத்திய கோட்டை, அடுத் துச் சிங்களவன் பிடியில் இருந்த அந்த யாழ் கோட்டையை எப்படிக் கைப்பற்றி னார்கள்?

அண்ணனிடம் கேட்டேன்; எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது; யுத்த களக் காட்சிகளை நீங்கள் எப்படி எழுதினீர்கள்? என்று.

அதை நிறைய எழுதி விட்டேனோ? என்று அவர் என்னிடம் கேட்டார். இல்லை; இந்த நூலுக்கு உயிர்நாடியே அதுதானே? இது ஒரு வீர காவியம்.இதிகாசம் அல்ல. இந்த வீர காவியத்தை, ஒவ்வொருவரும் எடுத்து எழுதுங்கள்.ஹோமர், இலியட் என்ற காவியத்தை இதிகாசமாகத்தான் எழுதி இருக்கிறான். டிராய் யுத்தத்தை. அது ஒரு கிரேக்கப் புராணம். அதைப்போலத்தான், இந்த நாட்டில்
கோடிக்கணக்கான மக்கள், விரும்பி ஏற்றுக் கொண்டு இருக்கக்கூடிய இதிகா சங்கள், இராமாயணமாக இருக்கட்டும், மகாபாரதமாக இருக்கட்டும் அங்கே நடந்த யுத்தத்தைக் கம்பன் வருணிப்பதாக இருக்கட்டும், அதைப்போல மகா பாரதத்தில் 18 நாள்கள் நடந்த குருசேத்திரப் போர்க்களத்தை வில்லிபுத்தூரார்
அருமையான கவிதைகளாக ஆக்கித் தந்து இருக்கிறார்; இவை எல்லாமே இதிகாசங்கள்தாம்.

ஆனால், உண்மையில் நடைபெற்ற ஒரு போரை வைத்து ஒரு கவிஞன் எழுது வது என்பது, குலோத்துங்கச் சோழனுடைய படைத் தளபதி கருணாகரத்
தொண்டைமான் ஒரு யுத்தத்தை நடத்தியதைப் பற்றி, கலிங்கத்துப் பரணி என்ற தலைப்பில் ஜெயங்கொண்டார் எழுதினார். அதில்கூட, மெல்லிய காதல் உணர்வுகளைத் தூண்டுகின்ற கடைத்திறப்பு உண்டு; நான் அதற்கு உள்ளே செல்ல விரும்பவில்லை. ஆயினும்கூட, யுத்தகளத்திலே தமிழர்கள் சாதித் தார்கள் என்பதற்காக, ஜெயங்கொண்டார் அந்தப் பரணியைப் பாடி இருக்கிறார்.

எழுந்தது சேனை எழலும்
இரிந்தது பாரின் முதுகு
விழுந்தது கானும் மலையும்
வெறுந்தரையான நதிகள்
அதிர்ந்தன நாலு திசைகள்
அடங்கின ஏழு கடல்கள்
பிதிர்ந்தன மூரி மலைகள்
பிறந்தது தூளிப் படலம்

என அதை ஒரு காவியமாக எழுதி இருக்கிறார்.

அண்ணன் நெடுமாறன் அவர்களே, நீங்கள் தீட்டி இருக்கின்ற இந்த நூலின் பல் வேறு அத்தியாயங்கள் ஒவ்வொன்றையும்,காசி ஆனந்தனைப் போன்றவர்கள், அறிவுமதியைப் போன்றவர்கள், அத்தகைய உணர்ச்சி உள்ள கவிஞர்கள் ஒவ் வொருவரும், ஒவ்வொரு காவியமாகத் தீட்டட்டும்; இது கற்பனையும் அல்ல, இதிகாசமும் அல்ல, தமிழர்களின் இரத்தத்தால் தீட்டியது. (பலத்த கைதட்டல்).
ஆயுதங்களால் தீட்டியது.

அந்த அடிப்படையில்தான், யாழ் கோட்டைப் போரைப் பற்றி நீங்கள் விவரித்து
இருக்கின்றீர்கள். நீங்கள் பயிற்சி பெற்று,இராணுவத்தின் ஒரு படைப்பிரிவில் இருந்து போராடியதைப் போல, எப்படி இவ்வளவு நுணுக்கமாகச் செய்திகளை தந்து இருக்கிறீர்கள் என்பதைப் பார்த்தேன்.

1990 ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில்,யாழ்ப்பாணக் கோட்டையைக் கைப் பற்றப் புலிகள் புறப்படுகிறார்கள். இரவிலே போகிறார்கள். எறிகுண்டுகள் போய் விழுகின்றன.

கோட்டைக்கு உள்ளே எண்ணற்ற சிங்கள வீரர்கள் இருக்கிறார்கள். அவர் களுடைய படை அணிகள், ஆங்காங்கு இருக்கின்றன.அந்தப் படை அணி களைத் தகர்த்து விடுவது என்று அவர்கள் திட்டமிட்டுக் குண்டுகளை வீசுகிற பொழுது, உள்ளே இருந்து அவர்கள் பதிலுக்குக் குண்டுகளை வீசுகிறார்கள்.
முற்றுகைக்காகச் செல்லுகிறபொழுது, புல்டோசர்களையும், பெரும் பாரந்
தூக்கிகளையும் கொண்டு போய் நிறுத்தி, அதிலே இருந்து தாவி விடலாம் என்று போகிறார்கள்.

முதல் பாரந்தூக்கி ஒரு பெரும் பள்ளத்திலே விழுந்து, செயல் இழந்து போய் விடுகிறது.அதைவிடப் பிரமாண்டமான பாரந்தூக்கி அதை ஒதுக்கி விட்டு முன்னேறுகிறது.ஏற்கனவே பீரங்கிக் குண்டுகள் விழுந்து உருவான ஒரு
பெரும் பள்ளத்துக்குள் அந்தப் பாரந்தூக்கியும் விழுந்து விடுகிறது. எனவே, புலி கள் வகுத்த திட்டப்படி, பாரந்தூக்கிகளைக் கோட்டைக்குப் பக்கத்தில் கொண்டு
போய் நிறுத்த முடியவில்லை.

எனது அன்புக்கு உரியவர்களே, நீங்கள் திரைப்படங்களில் பார்த்து இருப்பீர்கள். உண்மைச் சம்பவங்களை மிகைப்படுத்தி எடுக்கப்பட்ட ஆங்கிலத் திரைப்படங் களைக் கூட நீங்கள் பார்த்து இருக்கலாம்.எல்சிட் என்ற படத்தை, அற்புதமான ஸ்பெயின் நாட்டுப் போரைப் பற்றிய காட்சிகளை, சார்ல்டன் ஹெஸ்டன் அதில் நடித்து இருந்தார். அது உண்மைச் சம்பவம்; கொஞ்சம் கற்பனை.இங்கே, புலிகள் ஏணிகளைக்கொண்டு போய் கோட்டைக்கு அருகில் நிறுத்துகிறார்கள். மேலே இருந்து சுடுகிறார்கள். ஆயினும் ஏணியில் ஏறி மேலே போகிறார்கள்.
தலையிலே, மார்பிலே குண்டுகள் பாய்கின்றன; கீழே விழுகிறார்கள். ஆயி னும், அடுத்தவர்கள் மேலே ஏறுகிறார்கள்.

ஒரு பீரங்கிக் குண்டு வந்து விழுந்ததில், ஏணி உடைந்து விடுகிறது. அதைக் கொண்டு போய் ஒரு அரச மரத்தோடு கட்டுகிறார்கள். அதன் வழியாக, அந்த மதில் சுவரின் மீது தாவி ஏற முயற்சிக்கிறார்கள். மேலே இருந்து சுட்டுக்
கொண்டே இருக்கிறான். அதையும் மீறித் தாவி ஏறி விடுகிறார்கள்.

அப்படி ஏறிய இளைஞர்களைப் பற்றி, இந்த நூலிலே வருணிக்கிறார். டயஸ் என்கின்ற ஒரு இளைஞன். எந்திரத் துப்பாக்கியை ஏந்தியவாறு சுட்டுக்கொண் டே போகிறான். கண்காணிப்புக் கோபுரத்தை நோக்கிப் போகிறான். அப்போது அவன் மீது குண்டு விழுந்து, அந்த இடத்திலேயே சிதறிப் போகிறான். பக்கத் திலே இருந்து சீலன், அந்த இயந்திரத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு முன் னேறுகிறான்.

நீங்கள் கேட்டு இருப்பீர்கள். மடியப்போகின்ற நேரத்திலும்கூட, தன்னுடைய துவக்கைத் தூக்கி அடுத்தவனிடம் கொடுத்து, நீ போராடு என்று சொன்னதாகக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இங்கே, அடுத்த குண்டு பாய்கிறது; சீலனுடைய இரண்டு கால்களும் பிய்ந்து போய் விடுகின்றன. இரத்தம் ஆறாக ஓடிக் கொண்டு இருக்கின்றபோதும், இயந்திரத் துப்பாக்கியால் சுடுகிறான். அவனும் மடிந்து போகிறான்.

இந்தப் போர்க்களத்தில், கோட்டையின் பிரதான வாயிலை நாங்கள் தாக்க வேண்டும் என்று, உலகத்தின் எந்த விடுதலை இயக்கத்திலும் இப்படிப் பெண் கள் படை அணியை உருவாக்கியது இல்லை என்று சொல்லுகிறோமே, அந்தப் படையில், சங்கீதா என்ற பெண்ணின் தலைமையிலே, பிரதான கோட்டை
வாயிலைத் தாக்குகிறார்கள்.

இன்னொரு பக்கத்தில் இருந்து புலிகள் தாக்குகிறார்கள், முற்றுகை போடு கிறார் கள். இப்படிப்பட்ட சூழலில், கடற்கரைப் பகுதியில் இருந்து, சிங்களக் கடற்படை தாக்க வருகிறது. அதை எதிர்த்துப் போராடுகிறார்கள்.வான்படை வந்து தாக்குகிறது. முப்படைகளும் தாக்குகின்றன. புலிகள் எல்லாம் சிதறிப்
போய்விட்டார்கள் என்று கருதி, கோட்டைக் கதவுகளைத் திறந்து கவச வண்டி களில் திபுதிபுவென்று வருகிறார்கள் சிங்கள வீரர்கள்.இடிபாடுகளுக்கு உள்ளே இருந்து எழுந்து புலிகள் சுடுகிறார்கள். கவச வண்டிகள் உடைந்து நொறுங்கு கின்றன. திரும்பி உள்ளே ஓடுகிறார்கள். கோட்டையின் மற்றொரு வாயி லைத் திறந்து, தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடுகிறார்கள்.யாழ் கோட் டையைக் கைப்பற்றினார்கள் புலிகள்.

எப்படி பெர்லின் சுவர் உடைந்ததோ, அதுபோல மக்களே வாகனங்கள், கடப் பாரைகள், மண் வெட்டிகளைக் கொண்டு வந்து, இந்த ஆதிக்கக் கோட்டையின்
அடையாளங் களை உடைத்து நொறுக்குங்கள் என்று பிரபாகரன் சொல்லு கிறார்.

அந்த யாழ் கோட்டை பிடிபட்டது என்ற செய்தியைக் கொண்டு வந்து சொன்ன அந்த வீரத் தம்பியின் தாய் இந்த அரங்கத்தில் உட்கார்ந்து இருக்கிறார். (பலத்த
கைதட்டல்).

தொடரும் .....

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே.

No comments:

Post a Comment