மக்கள் வாழ்வதற்காக அவர்கள் இந்த அணையைக் கட்டி வைத்தார்கள் அன் றைக்கு. அதன் மூலம் நாங்களும் பயன்பெறுகிறோம். உங்களுக்கும் வாழ்வு
கொடுக்கிறோம். ஆக, இரண்டு மாநிலங்களுக்கும் வாழ்வு அளிக்கக்கூடிய அணை இது. நீங்கள் அணையை உடைத்துவிட்டால் புதியஅணை கட்டி ஒரு சொட்டு தண்ணீர் எங்களுக்குக் கொடுக்கப் போவது இல்லை.கொடுக்க முடி யாது உங்களால்.
புதிய அணை கட்டுவதற்கு உங்களுக்கு ஆட்சேபனை உண்டா? என்று உச்ச நீதி மன்றம் ஒரு கேள்வியை கேட்டது. நான் மிகுந்த மனவருத்தத்தோடு சொல் கிறேன். அன்றைய தமிழக அரசினுடைய வழக்கறிஞர் சொன்னார், எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை; அணையின் கட்டுப்பாட்டை எங்களிடத்தில் தந்தால் போதும் என்று.
999 ஆண்டுகளுக்கு நமக்கு சட்டப் பூர்வமான உரிமையுள்ள இடத்திலேயே அவர்கள் நம் உரிமையைப் பறிக்க முயல்கிறார்கள். நெய்யாறு இடதுகரை மதகிலே தண்ணீர் விட மறுக்கின்றார்கள்.
செண்பகவல்லி தடுப்பு அணையைப் பழுது பார்க்க அனுமதி மறுக்கிறார்கள். பாம்பாற்றில் அணைகட்டத் திட்டமிடுகிறார்கள். நல்லாறு, இடமலை ஆறு சொன்ன வாக்குறுதியை நிறைவேற்ற மறுக்கிறார்கள். அவர்கள் புதிதாக அணை கட்டி உங்களிடத்திலே கொடுப்பார்களா?
ஆக, புதிய அணை என்பது ஏமாற்று வேலை. அவர்கள் கட்டத் திட்டமிடுகின்ற இடத்தில் இருந்து தண்ணீரை ஏற்றவும் முடியாது. அது புலிகள் வன சரணா லயம். மத்திய அரசு அனுமதி கொடுக்க முடியாது.மத்திய அரசு ஆய்வுக்கு அனு மதி கேட்டபோது, அப்போதே அந்த அனுமதிக் கடிதத்தைத் தூக்கி குப்பைத் தொட்டியிலே போட்டு இருக்க வேண்டும். செய்யத் தவறினார்கள். ஜெய்ராம் ரமேஷ் அனுமதி கொடுத்ததாகச் சொன்னார்கள். இன்றைய அமைச்சர் ஜெயந் தி நடராசன் அனுமதி கொடுக்கவில்லை என்று சொல்கிறார். தினமணி இது குறித்து ஒரு கேள்வியை எழுப்பி இருக்கிறது. எனவே அந்த இடத்திலே அவர் கள் அணை கட்டப்போவது இல்லை.
அணையை உடைத்தால், 30 டி.எம்.சி. நமக்குத் தண்ணீர் வரும் மின்சாரம் தயா ரித்துக் கொள்ளலாம் என்று நினைத்தார்கள். துஞ்சும் புலியை இடறிய வேடன்
கதைக்குக் கேரளம் ஆளாகிவிட்டது.
இப்பொழுது பிரச்சினைக்கு வழி என்ன? பிரச்சினைக்கு என்ன தீர்வு? ஒரு தீர்வு தான். நாங்கள் அணையை உடைப்போம் என்று அறிவித்த முடிவை கைவிட் டுவிட்டோம் என்று கேரளம் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். புதிய அணை கட்டித் தீருவோம் என்று கூறுவதை நாங்கள் கைவிட்டுவிட்டோம் என்று பகி ரங்கமாக அறிவிக்க வேண்டும். உச்சநீமன்றம் தீர்ப்பு அளித்தது. முதல் கட்டத் தில் 142 அடிக்கு தண்ணீரை உயர்த்திக்கொள்ள சட்டபூர்வமான முடிவே உண்டு
தமிழ் நாட்டுக்கு.
பேபி அணையைப் பலப்படுத்திக் கொண்டதற்குப் பிறகு, மத்திய நீர்வளம் ஆணையம் பார்வையிட்டு சரியென்று சொன்னால் 152 அடிக்கும் தண்ணீரை உயர்த்திக் கொள்ளலாம்.
இதற்குக் கேரள அரசு எந்த முட்டுக் கட்டையும் போடக்கூடாது என்று 27.02.2006 ஆம் ஆண்டு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் சபர்வால், தக்கர், பாலசுப்பிரமணியம் தந்த தீர்ப்பைக் கிழித்து குப்பையிலே போட்டுவிட்டு, முல்லைப்பெரியாறு அணை உள்ளிட்ட எந்த அணையையும் உடைக்க எங்களுக்கு அதிகாரம்உண்டு , இந்தியாவின் எந்த நீதிமன்றமும் இதுகுறித்து கேள்வி கேட்க முடியாது என்று மார்ச் 18 ஆம் தேதி கேரள ஆளுநர் கையெழுத்திட்ட சட்டம் இருக்கிறதல்லவா?
Kerala Irrigation water conservation amendment Act அது இரத்து செய்யப்பட வேண்டும்.
உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பைக் குப்பையில் எறிந்துவிட்டு, கான்ஸ்டி டியூசன் பெஞ்சுக்குப் போய் நீதிபதி ஆனந்த் தலைமையில் ஒரு குழுவைப் போட்டு,
இரண்டு நிபுணர்கள் தாட்டே, மேத்தா நேற்று முன்னாள் வந்து பார்வையிட்டுப் போயிருக்கிறார்கள். எனவே இந்தப் பிரச்சினையில், அணையின் பக்கம் நெருங்காதே.
இந்தப் பிரச்சினையில் 1965 க்குப் பிறகு தமிழகம் போர்க்கோலம் பூண்டிருப்பது இன்றைக்கு முல்லைப் பெரியாறு பிரச்சினையில்தான். மக்களே கிளர்ந்து
எழுந்துவிட்டார்கள். இந்த ஆவேசமான கிளர்ச்சி தானாகத் தணியவேண்டும் என்றால், கேரளம் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள வேண்டும். மத்திய
அரசே இப்பொழுதாவது கேரளத்தினுடைய போக்குக்குக் கடிவாளம் போடு. அவர்கள் உணர்ந்து கொள்ளட்டும்.
நாங்கள் அவர்களைப் பட்டினி போடவேண்டும் என்றா முற்றுகைப் போராட் டம் அறிவித்தோம். இல்லை. நிரந்தரக் கேடு செய்வதற்கு நினைத்து விபரீதங் கள் விளைந்துவிடக்கூடாது. ஐந்து மாவட்டங்கள் மீண்டும் எத்தியோப்பியா ஆவதா? அணை உடைந்தால் நாம் வாழ்வது எப்படி? நமது பிள்ளைகள் வாழ் வது எப்படி? நமது வருங்காலச் சந்ததிகள் வாழ்வது எப்படி? அண்ணன் நெடு மாறன் அவர்களும், நானும், நம்முடைய சகோதரி பேராசிரியை சரஸ்வதி இராஜேந்திரன் அவர்களும் சீலையம்பட்டியைத் தாண்டியபோது, சின்னமனூர் எல்லையில் நாங்கள் கைதுசெய்யப்பட்டோம். வேனில் ஏற்றிவிட்டார்கள்.
சீலையம் பட்டி மக்கள் பல்லாயிரக் கணக்கிலே திரண்டுவிட்டார்கள். குறிப் பாகத் தாய்மார்கள் விளக்குமாறோடு வந்தார்கள்.
‘என்னய்யா, நம்ம முல்லைப் பெரியாறுக்காகப் போராட வந்தால் அவர்களைப் பிடித்துக்கொண்டு போகிறார்கள், ஆம்பிளைக நீங்க வேடிக்கை பாக்குறீங்க?’ என்று ஆண்களிடம் போய்ச் சண்டை போட்டார்கள். அந்த ஆவேசத்துடனேயே வேன் பக்கத்தில் வந்துவிட்டார்கள். நாங்கள் போலீஸ் வேனில் இருக்கிறோம். எங்களிடம் வந்தார்கள். அம்மா வணக்கம் என்றேன். “விடக்கூடா துய்யா அவ னை, அணையை உடைக்கனுங்கிறான் நமக்குக் குடிக்கத் தண்ணி இல்லாம போயிரும்யா. நம்ம பிள்ளைகுட்டிகளுக்கு தண்ணிக்கு எங்க போறது? குடிக்க வே தண்ணி இருக்காதுய்யா. அவன் அணையை உடைக்கனுங்கிறான். விடக் கூடாதுய்யா அவனை விடக்கூடாது” என்றார்கள். இதைத்தானே எதிர்பார்த் தோம். தமிழக மக்கள் தானாக கிளர்ந்து எழுந்துவிட்டார்கள். (கைதட்டல்).
இனி நீங்கள் அணையை உடைக்கின்ற முயற்சியில் ஈடுபட்டால் எவ்வளவு கேடு? எங்களில் ஐந்து மாவட்டங்கள் நாசமாகின்ற நிலைமை ஏற்பட்டால்
அதன்பிறகு யார் கட்டுப்படுத்த முடியும்? இப்பொழுதே கட்டுப்படுத்த முடிய வில்லையே? அணையை உடைக்க வருகிறான் என்று சொல்லுங்கள் பார்ப் போம். இலட்சம் பேர் திரண்டு போய்விடுவார்கள். யாரும் தடுக்க முடியாது. எப்படிப் போவார்கள் என்பதெல்லாம் சொல்ல முடியாது. காவல்துறையால் தடுத்த நிறுத்திவிட முடியாது. மன்மோகன்சிங்கின் இராணுவமே வந்தாலும்
தடுத்து நிறுத்த முடியாது.(பலத்த கைதட்டல்)
அரிவாள் கம்பை மறந்து இருக்கிறார்கள். அவர்களும் கிளம்பி விடுவார்கள். ஐயா, அமைதி அமைதி என்று நாங்கள் சொன்னால் கூட எவரும் கேட்க மாட் டார்கள்.அமைதியைக் காப்பாற்றுங்கள் அறவழியில் நடங்கள், நமக்கு வன் முறையெல்லாம் கூடாது என்று சொல்லிப்பார்க்கலாம். அதெல்லாம் ஒன்றும் ஏறாது. தமிழகம் கொதிநிலையிலே இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு போராட்ட உணர்வு அங்கே வந்ததனால்தான்,என்னுடைய அன்புக்குரியவர்களே, ஒரு உயிர் ஊசலாடிக்கொண்டு இருக்கின்றது மதுரை அப்பல்லோ மருத்துவ மனை யிலே.
நான் இந்த மேடைக்கு வருவதற்கு முன் மருத்துவரிடம் தொலைபேசியில் பேசி தம்பி ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கு எப்படி இருக்கிறது? என்று கேட் டேன். நேற்றைக்கு மதியத்திற்குப் பிறகு நினைவு தவறிவிட்டது என்று சொன்னார்கள்.
அவர் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவர் அல்ல.ஆனால், அனைத்தையும் நன்கு கற்று அறிந்தவர்.ஈழத்தின்பால் உணர்வுமிக்கவர். முத்துக்குமார் தீக் குளித்து மடிந்தபோதும், தான் தீக்குளித்து மடிய வேண்டும் என்று துடித்தவர். அவரது சகோதர, சகோதரிகளுக்குத் திருமணமாகிவிட்டது. அவரது தாய் என் னிடம் பேசினார். இராமநாதபுரம் சேதுபதி வரிசையிலே வந்த அந்தக் குடும்பத் தைச் சேர்ந்த தாய். சொந்தக்காரர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று சொல்லி என்னை என்னுடைய தாய்மாமாவுக்குக் கட்டி வைத்தார்கள் என்று சொன்னார் கள்.
ஆனால் இந்தத் தம்பி, இலங்கையில் உள்ள ஒரு ஒரு அகதிப் பெண்ணைத் தான் திருமணம் செய்வேன் என்று சொன்னான்.அதற்கு நான் நீ யாரைக் கட்டிக் கொண்டாலும் சரி என்றேன். யாராவது சாலையில் போகிறவர்கள் விழுந்து விட்டால், ஓடிப்போய் உதவி செய்வான். இலங்கையில் இருந்து வந்து இருக் கிறார்கள் என்றால், இருக்கின்ற துணிமணிகளைக் கொண்டுபோய்க் கொடுத் துவிடுவான்.
அப்படிப்பட்ட அந்த இளைஞன், என்னுடைய அன்புக்குரியவர்களே, டிசம்பர் 19 ஆம் தேதியன்று பிற்பகல் 3 மணிக்கு பண்டித ஜவஹர்லால் நேருவின் சிலை பேருந்து நிலையத்திற்கு அருகிலே, நல்ல உயர்ந்த பீடத்தின் மீது வைக்கப் பட்டு இருக்கிறது.
அந்த சிலை உள்ள பீடத்தின் மீது ஏறினான்.எதிரில் சிறிய உணவு விடுதி நடத்தி வருகிற கவிஞர் மணிபாரதி என்கிற அவரது நண்பன் என்னைச் சந்தித்தார்.
அவர்தான் செல்போனில் அதை போட்டோ எடுத்து இருக்கிறார். பத்திரிக்கை களில் எல்லாம் தீப்பற்றி எரிவதைப்போல புகைப்படம் வந்ததே! அவர்தான்
அந்தப் புகைப்படத்தை எடுத்து இருக்கிறார்.
பெட்ரோலை உடல் முழுக்க ஊற்றி நனைத்துக்கொண்டுதான் அந்த சிலை யுள்ள பீடத்தின் மீது ஏறி இருக்கிறார். மேலே ஏறி சிலைக்கு முன்னால் நின்று கொண்டு தீக்குச்சியை எடுத்துப் பற்றவைத்துக்கொண்டார். பெட்ரோல் என்ப தனாலே அப்படியே தீ பனைமரம்போல பரந்து எரிகிறபோது, மிகவும் உறுதி யாக நிமிர்ந்துதான் நின்றாராம்.ஓடிப்போய்க் காப்பாற்ற முடியாதபடி தீ பற்றி
எரிந்துவிட்டது.
உயிர் ஊசலாடும் நிலையில் உடனடியாக மதுரை அப்பல்லோ மருத்துவ மனைக்குக் கொண்டுசெல்லுங்கள் என்று காவல்துறை அதிகாரிகளிடம் நான் சொன்னேன்.மாவட்ட ஆட்சியர் உடனே நடவடிக்கை எடுத்தார்.மதுரை அப் பல்லோவிற்கு கொண்டுபோய் விட்டார்கள்.இரவில் அங்கே போய்ப் பார்த் தோம். முகம் உள்ளிட்ட எல்லா பாகங்களும் எரிந்துவிட்டன.
ஐயா, நான் வைகோ வந்திருக்கிறேன் என்று சொன்னேன்.அண்ணன் பழ.நெடு மாறன் அவர்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன், நான் எட்டாம் தேதியன்று தேனி யிலே உண்ணாவிரத அறப்போர் நடத்தியபோது, அந்த மேடையில் நீங்களும், கம்பம் அப்பாஸ், இரத்தினவேல், கொளத்தூர் மணி, கோவை இராமகிருஷ் ணன் அவர்களும் இருந்தீர்களே, அந்த மேடைக்கு நீங்கள் வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு இரண்டு இளைஞர்கள் வேன் ஓட்டுநர்களோடு வந்து என் னிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தார்கள். ஐந்து மணித்துளிகள் இதை வாசிக்க அனுமதி கொடுங்கள் என்று கேட்டார்கள். என்னைப் பாராட்டி எழுதி இருந்தது.
எனவே அந்த மேடையில் வாசிப்பது புகழ்ச்சி என்று கருதி, நேரம் இல்லை தம்பி என்று சொல்லிவிட்டு, ஜெயப்பிரகாஷ் நாராயணனே என்னை வாழ்த்தி
விட்டாரே வேற என்னய்யா வேண்டும்? என்றேன்.
அவர்கள் வீட்டில் யாரோ ஒருவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களை நினைத்து இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள் என்று மனதில் பட்டது. நான்
அந்தத் தம்பியிடம் சொன்னேன், அன்றைக்கு உங்களைப் பேசவிட முடிய வில்லை. ஜெயப்பிரகாஷ் நாரயணனே வாழ்த்தியாச்சு என்று சொன்னவுடன்
நீங்கள் சிரித்தீர்கள். தீக்குளித்து விட்டீர்களே தம்பி, இப்படிச் செய்யலாமா? கஷ்டமாக இருக்கிறதே என்று கூறினேன்.
உயிர் ஊசலாடும் நிலையில் அந்த தம்பி சொன்னார்.திருமணம் ஆகவில்லை, வாழ்க்கை சுகங்கள் எதையும் அவன் தேடவில்லை. அந்தத் தம்பி சொன்னது,
மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசையும், முல்லைப் பெரியாறில் துரோகம் செய்கிற கேரளம் காங்கிரஸ் அரசையும் கண்டிப்பதற்காகத்தான் நான் நேரு சிலைக்கு முன்னாலே தீக்குளித்தேன் என்றார்.
இரண்டு மூன்று பத்திரிக்கையாளர்களும், டாக்டர்களும் இருந்தவுடன் அவர் சொன்னது அவர்கள் காதிலே விழுந்ததோ இல்லையோ எனவே, அவர் சொன் னதை மறுபடியும் ஒருமுறை அவர் சொன்னால் நன்றாக இருக்கும் என்று, தம்பி என்ன சொன்னீர்கள்? மத்தியில் என்று அவர் சொன்னதை திரும்ப ஞாப கப்படுத்தினேன், மத்திய காங்கிரஸ் அரசையும், கேரள காங்கிரஸ் அரசையும்
கண்டிப்பதற்காகத்தான் நான் நேரு சிலைக்கு முன்னாலே தீக்குளித்தேன் என்று சொன்னான். உடம்பெல்லாம் எரிந்துபோய்விட்டது.
சீலையம்பட்டியைச் சேர்ந்த இடிமுழக்கம் சேகர் என்ற இளைஞர் விஷம் அருந்தி தற்கொலைசெய்துகொண்டார் என்ற செய்தி கேட்டு மனதுக்கு மிக வேதனையாக இருந்தது.
காமராஜபுரத்து பாலத்து ராஜா என்கிறவரும் ஐம்பது சதவிகிதம் தீக்காயம் ஏற் பட்டு அதே மருத்துவமனையிலே சிக்கிச்சை பெற்றிருக்கிறார்.அவரது உயிருக்கு ஆபத்து வராது பிழைத்துக் கொள்ளுவார் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். இவருக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சைக்கு அரசே ஏற்பாடு செய்துகொடுத்து இருக்கிறது.
இளைஞர்களே உங்களை மாய்த்துக்கொள்ளாதீர்கள். முத்துக்குமார் வைத்த நெருப்பு, செங்கொடி வைத்த நெருப்பு அவர்கள் மடிந்ததற்குப் பிறகும் இலட் சோப இலட்சம் இளைஞர்கள் உள்ளத்திலே கனலாக எழுந்தபோதிலும்கூட, தீக்குளிக்க வேண்டாம் என்றுதான் இன்றைக்கும் மன்றாடிக் கேட்டுக் கொள் கிறேன்.
எனவே இந்த வேளையிலே சூளுரைப்பது என்பது, எடுக்கின்ற கொள்கையிலே உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்காகச் சூளுரைப்போம்.
எந்தத் தென்பாண்டி மண்லத்தின் கழனிகள் காய்ந்து விடக்கூடாது, தோட்டங் கள் கருகிவிடக்கூடாது, குடிப்பதற்கும் தண்ணீர் இல்லாமல் போய்விடக் கூடாது என்று அந்தத் தென்பாண்டி மண்டலத்து மக்கள் மட்டுமல்ல, மொத்தத் தமிழகமே இன்றைக்ககுக் கனன்று எழுந்து இருக்கிறது.
எல்லாப் பக்கத்திலும் நமக்குச் சோதனைகள். கர்நாடகம் நமக்கு உரிமையுள்ள காவிரித் தண்ணீரைத் தர மறுக்கிறது. பாலாற்றிலே ஆந்திரம் அணைகட்டத்
துடிக்கிறது.பாலாற்றிலே வருகிற தண்ணீரைத் தடுக்கத்திட்டம் இட்டுச்செயல் படுத்துகிறது. மீனவர்கள் கடலின் மடியிலே சிங்களக் கடற்படையால் தாக்கப் படுகிறார்கள்.நாளும் கொல்லப்படுகிறார்கள்.
இலட்சக் கணக்கான தமிழர்களைக் கொன்றொழித்து விடுமோ புகுஷிமா வைப் போல, என்று கடலோர மக்கள் கொதித்து மாதக் கணக்கிலே போராடிக் கொண் டிருக்கிறார்கள் கூடங்குளத்திலே அணுமின் நிலையத்தை அகற்றுவோம் என்று. இந்தச் சோதனைகள் முற்றுகையிட்டுக் கொண்டு இருக்கின்ற நிலை யிலேதான் நாம் இருக்கிறோம்.
அந்த பாண்டிய மண்டலத்தின் தலைநகரில்தான், இதேபோலச் சூளுரைத்தான் தலையானங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். என்னை இகழ்ந்து விட் டார்கள். இவன் சிறியவன் என்று இகழ்ந்துவிட்டார்கள். என் படை வலிமையை
இகழ்ந்துவிட்டார்கள். அவர்களிடம் பெரும் படை பலம் இருக்கிறது என்ற நம்பிக்கையோடு என்னை எள்ளி நகையாடிவிட்டார்கள்.
வஞ்சினம் கூறினான். எதிரிகளைச் சாய்ப்பேன். வெற்றிபெற்று வருவேன் அப் படி வெற்றிபெறா விட்டால், அருஞ்சமம் சிதையத்தாக்கி முரசோடு ஒருமுகப்
படேனாய்.. அவன் சொல்லுகிறான், என் குடிமக்கள் என்னைக் கொடியவன் என்று சொல்லட்டும். இன்றைக்கு என்நிழல் செந்நிழல் என்னுடைய அரசிலே நீதி இருக்கிறது.
என்னுடைய அரசிலே நியாயம் இருக்கிறது. ஆனால் எங்கள் மக்கள் என் நாட் டு மக்கள் என்னை கொடியவன் என்று பழிதூற்றட்டும். கண்ணீர் சிந்தி பழி தூற் றட்டும். அல்லல்பட்டு ஆற்றாத அழுத கண்ணீர் அன்றே செல்வத்தைத் தேய்க் கும் படை என்று வள்ளுவன் கூறியதைப்போல,இந்த மக்கள் என்னைக் கொ டுங் கோலன் என்று இகழட்டும். அப்படிப்பட்ட நிலைமை எனக்கு ஏற்படட் டும்.
இந்தக் களத்திலே நான் வெற்றிபெற்று வராவிட்டால், ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவனாக புலவர் பாடாது வரைக என்று, புலவர் பெருமக்கள் நாட்டைவிட்டு வெளியேறட்டும். வருகின்றவர்களுக்கு எல்லாம் அள்ளிக்கொடுக்கின்ற ஈகை உள்ளம் கொண்ட தமிழ் நாட்டில் கேட் பவர்களுக்கு எதுவும் கொடுக்காத வறுமைக்கு நான் ஆளாகட்டும் என்று சூளுரைத்தான்.அப்படிப்பட்ட சூளுரைகள் உணர்வோடு நிகழ்த்தப் பட்டவை.
அதுபோல, இந்தக் காலகட்டத்தில், தாய்த் தமிழகத்தின் உரிமைகளைக் காக்கச் சூளுரைப்போம். முல்லைப் பெரியாறு உரிமை காக்க, காவிரி உரிமை காக்க, பாலாறு உரிமை காக்க கடலின் மடியோடு போராடிக் கொண்டிருக்கிற மீனவர் கள் உயிர் காக்க உரிமை காக்க, தெற்கு சீமையிலே அணுமின் நிலையத்தை அமைத்து மக்களை அழிக்க நினைக்கின்ற அரசின் அக்கிரம நடவடிக்கைகளை முறியடிக்க நாம் சூளுரைப்போம்.தமிழ் ஈழம் மலர்விப்பதற்கு அவர்கள் சிந்திய
இரத்தத்தின் மீது ஆணையிட்டு, சுதந்திரத் தமிழ் ஈழத்தை வென்றெடுப்பதற்கு மாவீரர்களின் தியாகத்தின் பெயராலே சூளுரைப்போம்.
இந்த நிகழ்ச்சியை இவ்வளவு அருமையாக ஏற்பாடு செய்து நடத்திய மணி மாறன் அவர்களுக்கும் தோழர்களுக்கும், பங்கெடுத்துச் சிறப்பித்த அண்ணன்
நெடுமாறன் அவர்களுக்கும், அண்ணன் நல்லகண்ணு, அருமைச் சகோதரர் விடுதலை இராசேந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகூறி விடை
பெறுகிறேன்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இவ்வாறு உரையாற்றினார்.
முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

No comments:
Post a Comment