Sunday, July 7, 2013

இளைஞர் அணி கூட்டம் -பகுதி 2

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அருள்: 

என் சொந்தஊர், தூத்துக்குடி மாவட்டம் லட்சுமிபுரம். தற்போது தூத்துக்குடி மாவட்டச் செயலாராக இருக்கின்ற தம்பி ஜோயல், என்னுடைய சித்தப்பா மகன் தான். 

1989 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், ஐயா கே.பி.கே.அவர்கள் திருச் செந்தூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றபோது, பத்து வயதுச் சிறுவனாக இருந்த நான் மொட்டை அடித்துக் கொண்டேன்.எங்கள் வீட்டு இரும்புக்கதவில்
உதயசூரியன் சின்னம் பொறித்து இருந்தேன். வைகோவை கட்சியை விட்டு நீக்கியபோது, அந்தக் கதவைக் கழற்றி வைத்து விட்டு, பம்பரம் சின்னம் பொறித்து புதுக் கதவு செய்து மாட்டினேன்.

எனக்கு மேடையில் பேசிப் பழக்கம் இல்லை.முருங்கை மரம் வேகமாக வள ரும் ; ஆனால், எளிதாக முறிந்து விடும். தேக்கு, ஈட்டி மரங்கள் வளர இருபது ஆண்டுகள் ஆகும். ஆனால், வைரம் பாய்ந்து உறுதியாக நிற்கும். அதுபோலத் தான் மறுமலர்ச்சி தி.மு.கழகம். இருபது ஆண்டுகளாக வளர்ந்து வைரம் பாய்ந்து நிற்கின்றது.கிருஷ்ணசாமி உள்ளிட்ட என் நண்பர்களோடு அலைபேசி யில் பேசும் பொழுதெல்லாம், தலைவர் வைகோ அவர்களை, ‘கடவுள்’ என்று தான் நாங்கள் பேசிக்கொள்வோம்.



தற்போது கோவையில் சில சிறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறேன்.
எனவே, என்னால் தீவிரமாகக் களப்பணி ஆற்ற முடியவில்லை. எனது சார் பில் கழக வளர்ச்சி நிதியாக, ஒரு இலட்சம் ரூபாயை, இங்கே அளிக்கிறேன். மேலும், 3,60,000 ரூபாய்க்கு, மாநகர் மாவட்டச் செயலாளர் அண்ணன் மோகன் குமார் அவர்கள் சீட்டு கொடுத்து உள்ளார்கள்.முடிந்த அளவுக்கு அதையும் திரட்டிக் கொடுப்பேன்.

ஈரோடு கோபாலகிருஷ்ணன்: 

1999 ஆம் ஆண்டு, நான் படித்துக் கொண்டு இருந்த கல்லூரியில் உரை ஆற்று வதற்காகத் தலைவர் வைகோ அவர்கள் வந்தார்கள். கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள் எல்லோரும் வாயிலில் நின்று வரவேற்கக் காத்து இருந் தோம். கல்லூரியை நோக்கி வந்துகொண்டு இருந்த தலைவருடைய கார் திடீரென நின்றது.வண்டியில் இருந்து இறங்கிய ஓட்டுநர்,காரில் கட்டப் பட்டு இருந்த கழகக் கொடியைக் கழற்றினார். அதற்குள் நாங்கள் அருகில் சென்று விட்டோம். முதல்வரைப் பார்த்து, ‘கல்லூரிக்குள் நான் அரசியலைப் புகுத்த விரும்பவில்லை.இது ஒரு பொது இடம். எனவேதான், என் கட்சிக் கொடியைக் கழற்றி வைத்தேன்’ என்று தலைவர் அவர்கள் சொன்னதைக் கேட்டு, எங்களுக்கு வியப்பாக இருந்தது.அப்படிப்பட்ட நேர்மையைக் கடைப்பிடிக்கின்ற தலைவர் என்பதால்தான், அன்றுமுதல் இன்று வரை அடிபிறழாமல் அவர் வழி யில் நடந்து வருகின்றேன். எந்தப் பதவியையும் எதிர்பார்த்து நாங்கள் அரசியலில் இல்லை.தலைவர் வைகோ அவர்கள் தமிழக முதல்வராக ஆனால் போதும்.

மதுரை மாநகர் இளைஞர் அணி அமைப்பாளர் எஸ்.ரஞ்சித்குமார் : 

மது ஒழிப்புப் பிரச்சாரத்துக்காக, தலைவர் வைகோ அவர்கள், உவரியில் இருந்து மதுரைக்கு நடைபயணம் வந்தபோது,மதுரை நகரில் எங்கள் பகுதி யில் 200 இளைஞர்களைத் திரட்டி, ஒன்று போல பனியன் சீருடை அணிவித்து
அணிவகுக்கச் செய்தோம். தலைவருக்கு மிகப்பெரிய வரவேற்பு அளித்தோம்.

ஒரு இலட்சம் இளைஞர்களைத் திரட்ட வேண்டும் என்கிறபோது, படிவத்தை
எடுத்து, ஒவ்வொரு வார்டுக்கும் 25 பெயர்களை எழுதிக் கொடுத்து விடலாம்.
ஆனால், அது வளர்ச்சி அல்ல. உண்மையாக உழைக்கின்ற மூன்று பேராவது கிடைத்தால் போதும். அவர்கள் உறுதியான இளைஞர்களைச் சேர்த்துத் தரு வார்கள். முதலில் அப்படிப்பட்டவர்களை அடையாளம் காண வேண்டும்.
ஆடம்பர அரசியல் தொடர்ந்து எடுபடாது.

அன்றைக்கு எங்களோடு வந்த 200 இளைஞர்களுக்கும், நான் தொடர்ந்து அலை பேசியில் குறுஞ்செய்திகளை அனுப்பிக் கொண்டே இருக்கின்றேன். அவர் களுள் குறைந்தது 30 இளைஞர்கள் என்னோடு அன்றாடம் நெருங்கிய தொடர்பு களில் இருக்கின்றார்கள். அவர்களுடைய நண்பர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்துக் கொண்டே இருக்கின்றார்கள்.அப்படி நான் புதிதாகச் சந்திக் கின்ற கல்லூரி மாணவர்கள், நமது தலைவரைப் பற்றி மிக உயர்வாகச் சொல் லுகின்றார்கள். நமது தலைவர் நமக்கு மட்டும் அல்ல, தமிழகத்தில் எல்லோ ருக்குமே ஒரு எடுத்துக்காட்டாக, முன்மாதிரியாக, ரோல் மாடலாக இருக் கின்றார்.

மதுரை விமான நிலையத்துக்கு அருகில் இருப்பதால் எங்களுக்கு ஒரு வசதி.
தலைவரின் மதுரை வருகை குறித்து, மாவட்டச் செயலாளர் அண்ணன் பூமி நாதன் அவர்கள் குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டே இருப்பார்கள். உடனே புறப்பட்டு விடுவோம். தென் மாவட்டங்களுக்கு வருகின்ற தலைவரை, வரும் போதும் போகும் போதும் விமான நிலையத்தில் அடிக்கடி சந்திக்க முடிகின் றது. அதனால், எங்களுக்கு பேட்டரி ரீசார்ஜ் ஆகிக் கொண்டே இருக்கின்றது. தலைவரை ஒருமுறை பார்த்தால், ஒரு மாதத்துக்கு உற்சாகம் சார்ஜ் ஆகி விடும். (பலத்த சிரிப்பு)

மது அருந்தும் வழக்கம் உள்ள எனது நண்பர்கள் நான்கு பேரை, நடைப் பயணத் துக்காக உவரிக்கு அழைத்து வந்தேன். கொளுத்தும் வெயிலில் நடக்க முடியா மல் மிகவும் சிரமப்பட்டு நடந்து வந்தார்கள். பிற்பகலில் தலைவர் அவர்களும் களைத்துப் போய், ஒரு இடத்தில் அமர்ந்து விட்டார்கள். ஆனால், பத்து நிமி டங்களில் திரும்பவும் எழுந்து நடந்தார்கள்.

அதைப் பார்த்த என் நண்பர்களுக்கு ஆச்சரியம்.‘இனி அவரால் நடக்க முடியாது என்று நினைத்தோம். புது வேகத்தோடு புறப்பட்டு விட்டாரே?’என்று அவர்கள் வியந்தார்கள். அந்த நான்கு பேரும், இப்போது மது அருந்துவதை நிறுத்தி விட் டார்கள். (பலத்த கைதட்டல்).

இப்போது, ம.தி.மு.க நிகழ்ச்சிக்குப் போகிறோம் என்றால், அவர்கள் வீடுகளில் மகிழ்ச்சியோடு வழி அனுப்பி வைக்கின்றார்கள். மது ஒழிப்பு நடைப்பயணம், நமது இயக்கத்தை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்து இருக்கின்றது. வெற் றியை நோக்கி நாம் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்.இந்த வேளையில், நாம் கவனமாக ஆட்களைச் சேர்க்க வேண்டும்.

எனது குடும்பத்தில் பலர் ஆசிரியர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் எல்லோ ரும் என்னை மதிக்கின்றார்கள் என்றால், எனக்காக அல்ல, நான் தலைவர் வைகோ அவர்களோடு இருக்கின்றேன் என்பதற்காகத்தான். மறைந்த எனது
மாமனார், தலைவருடைய புத்தகங்கள் அனைத்தையும் வாங்கிப் படித்து விடு வார்.

ஒரு விபத்தில் சிக்கியதால், நான் சற்றே ஊனம் அடைந்தேன். நடக்க முடிய
வில்லை என்றாலும் சிரமப்பட்டு நடந்தேன். இன்றைக்கு ஓரளவு நன்றாக
நடக்கின்றேன். நானெல்லாம் கட்சியிலே எந்தப் பொறுப்பையும் எதிர்பார்த்தது
கிடையாது. ஆனால், மாவட்டச் செயலாளரே பார்த்து எனக்குப் பொறுப்பைக் கொடுத்து இருக்கின்றார் என்றால், அந்த அளவுக்கு உழைத்து இருக்கின்றோம். இன்றைக்கு இந்த இடத்தில்,தாயகத்தில்,தலைவர் முன்பு நின்று பேசுகிறேனே, இதுவே எனக்குப் போதும். இதைவிட வேறு பதவி ஒன்றும் எனக்குத் தேவை இல்லை. என் உயிர் பிரியும் வரையிலும், வைகோவோடு உறுதியாக நிற்பேன்.

தேனி மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சு.செல்வகுமார்: 

நான் கல்லூரியில் மாணவர் பேரவைத் தலைவராக இருந்தேன். அண்மையில்
தேனி வழக்கறிஞர்கள் சங்கப் பொறுப்புக்குப் போட்டியிட்டேன்.தலைவர் பெய ரைச் சொல்லி, தி.மு.க., அ.தி.மு.க. வை எதிர்த்து வெற்றி பெற்றேன். எங்கள் மாவட்டத்தில் 4 ஒன்றியங்கள் 6 பேரூராட்சி, 2 நகரங்களுக்கு, அமைப்பாளர் கள், துணை அமைப்பாளர்களை அறிவித்து விட்டோம். விடுபட்ட பகுதிகளுக் கும் விரைவில் தெரிவு செய்து விடுவோம்.

சிவகங்கை மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன்: 

பத்து மாதங்களுக்கு முன்பு இதே போன்று ஒரு கூட்டம் நடந்தது. அப்போதும் பல உறுதிமொழிகளை அளித்தோம். ஆனால், நிறைவேற்று வதில் சிக்கலாக
இருக்கின்றது. சிவகங்கை மாவட்டத்தில் 12 ஒன்றியங்கள். ஒரு ஒன்றியத் துக்கு 100 பேர் என, 12 ஒன்றியத்துக்கு 1200 பேர்களைச் சேர்க்க வேண்டும். எங்கள் மாவட்டம் சற்றே பின்தங்கிய மாவட்டம்.காங்கிரசில் இரண்டு மத்திய
அமைச்சர்கள் உள்ளனர். தி.மு.க. வில் முன்னாள் அமைச்சர் இருக்கின்றார்.
அண்ணா தி.மு.க. ஆளுங்கட்சி. எனவே, அரசியல் நெருக்குதல்கள் அதிகம்.

திருப்பத்தூர் பேரூரில், ஏழாம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட ஒரு குளம் இருக் கின்றது. அது சரியாகப் பராமரிக்கப் படவில்லை. அது குன்றக்குடி ஆதீனத் துக்குச் சொந்தமான குளம். அதைச் சீர்படுத்த நாங்கள் முயற்சிகளை மேற் கொண்டோம். தற்போது, அரசு உதவியுடன், ஆதீனமே அதற்கான முயற்சி களை மேற்கொண்டு இருக்கின்றது.

காரைக்குடி திண்டுக்கல்; காரைக்குடிமதுரை தொடர்வண்டித் தடங்கள் அமைக் கக் கோரினோம். தற்போது, ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். எங்கள் பகுதியில் மாணவர் பிரச்சினைகளையும் கையில் எடுத்தோம். அத னால், மாணவர்கள் பார்வையும் நமது பக்கம் திரும்பி இருக்கின்றது. குறைந் தது, 500 பேர்களையாவது விரைவில் சேர்ப்போம் என உறுதி அளிக்கின்றேன். நான் சிங்கப்பூரில் பணிபுரிந்தேன். அங்கே அரசியல் நடவடிக்கைகளை மேற்
கொள்ளக் கூடாது. அதையும் மீறி அங்கே நாங்கள் செயல்பட்டு வந்தோம்.

அதனால், இப்போது சிங்கப்பூர் அரசு காவல்துறை உன்னிப்பாகக் கவனித்து,
நெருக்கடி கொடுத்து வருகின்றார்கள். தீவிரமாகச் செயல்பட்டு வந்த நண்பர்
பழனியின் விசாவை ரத்து செய்து விட்டார்கள். அவர் இந்தக் கூட்டத்துக்கும் வந்து இருக்கின்றார்.இருப்பினும், சிங்கப்பூரில் உள்ள நமது தோழர்கள், அஞ்சா மல், ஆர்வம் குன்றாமல் செயல்பட்டு வருகின்றார்கள்.

விருதுநகர் மாவட்டம் இராஜேஷ்:

தலைவர் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, சீனப் பட்டாசு கள் இந்தியாவுக்கு உள்ளே நுழைய விடாமல் தடுத்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் இப்போது, பட்டாசுத் தொழில் இப்போது நசிந்து வருகின்றது. வேலை வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. ஏனென்றால், இப்போதைய சிவகாசி நாடா ளுமன்ற உறுப்பினரை எளிதாகச் சந்தித்து விட முடியாது. இப்போதுதான், சிவ காசி மக்கள் உணருகிறார்கள். தலைவருடைய உழைப்பைப் பற்றித் தான் பேசிக் கொண்டு இருக்கின்றார்கள். நாம் கேட்கின்ற நிதியை மனம் உவந்து கொடுக்கின்றார்கள்.

தலைவர் வைகோ அவர்கள் கற்றுக் கொடுத்த ஒழுக்கம்தான், என்னைப் போன் ற இளைஞர்களை பக்குவப் படுத்தி இருக்கின்றது. மறுமலர்ச்சி தி.மு.கழகத் தில் இருப்பவர்கள் ஒழுக்கமானவர்கள் என்று மக்கள் நினைக்கின்றார்கள். பத்து ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு ரூம் பாயாக இருந்தேன். அதன்பிறகு, பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டு, பட்டாசுகளை வாங்கி வட இந்தியாவுக்கு அனுப்பி வந்தேன்.இப்போது, ஒரு சிறிய தொழிற் சாலையைத் தொடங்க, இன் றைக்குத் தான் எனக்கு அனுமதி கிடைத்து இருக்கின்றது. (கைதட்டல்).

என்னுடைய நண்பர் ஒருவருக்கு சிறுநீரகம் பழுதுபட்டு விட்டது.தலைவரிடம் சொன்னேன். சென்னை குமரன் மருத்துவமனையில் அவனைச்சேர்த்து, தலை வரே மருத்துவமனைக்கு வந்து பார்த்து, நல்ல சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார் கள். அந்த நண்பன் முழு உடல் நலம் பெற்று வந்தான்.

வைகோ ஒரு கட்சித் தலைவர் அல்ல; அவர் கழகக் குடும்பத்தின் தலைவர். குடும்பத்தில் இருக்கின்ற அனைவரைப் பற்றியும் அவர் நேரடியாக அறிந்து
வைத்து இருக்கின்றார். எனவே, எங்கள் மாவட்டத்தில் நிறைய இளைஞர் களை எளிதாகச் சேர்க்க முடியும்.

கன்னியாகுமரி மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.ஆர்.அரி ராம ஜெயம்: 

எங்கள் மாவட்டத்தில் உள்ள ஒன்றிய நகரங்களில், இளைஞர் அணி பொறுப் புக்கு அறிவிக்கப்பட்டு உள்ள ஒவ்வொருவருடைய இல்லத்துக்கும் சென்று அவர்களைச் சந்தித்து வருகின்றோம். அவர்களைப் பார்த்து,அவர்களைப் பற்றி நேரடியாகவே அறிந்து கொள்கின்றோம். அத்துடன் நில்லாமல், தொடர்ந்து அலைபேசியில் தொடர்புகொண்டு,அவர்களை இயக்கப் பணிகளில் ஈடுபடுத்தி வருகின்றோம்.போராட்டங்கள் என்றால், எல்லோரும் வந்து கலந்து கொள் கின்ற வகையில் செயல்பட்டு வருகின்றோம்.

புதுவை மாநில இளைஞர் அணி அமைப்பாளர் ப.இளங்கோ: 

எங்கள் அமைப்பாளர் மாநிலத்தில் இளைஞர் அணி அமைத்து, ஏழு மாதங்கள் ஆகின்றன. மாநிலக் கழக அமைப்பாளர் ஹேமா பாண்டுரங்கம் அவர்களும், பொறுப்புக் குழு உறுப்பினர்களும் சேர்ந்து, இளைஞர் அணி அமைப்பாளர் பொறுப்புக்கு என்னைத் தேர்ந்து எடுத்தார்கள். எங்கள் மாநிலம் எதற்குப் பெயர் பெற்றது என்பது உங்களுக்குத் தெரியும். சிறிய மாநிலம். என்னுடைய உழவர் கரை தொகுதியில், அமைச்சர் பன்னீர்செல்வம் இருக்கின்றார். எங்கள் மாநிலத் தில் அமைச்சர்கள் என்றாலும், ஒரு தொலைபேசி மூலமாக எங்கள் வீட்டில்
ஒரு நிகழ்ச்சி நடக்கின்றது என்று சொல்லி அழைத்தால் வந்து கலந்து கொள் வார்கள். அரசியல் நெருக்கடிகள் அதிகம். எளிதில் கட்சி வளர்க்க முடியாது.

என்னுடைய தொகுதியில், கழகக் கொள்கை விளக்க அணித் துணைச் செயலா ளர் ஈட்டிமுனை இளமாறன் அவர்களை அழைத்து வந்து, 200 இளைஞர் களை யும், 300 பெண்களையும் இயக்கத்தில் சேர்க்கின்ற நிகழ்ச்சியை நடத்தினோம். அதேபோல, புதுவை மாநிலத்தில் 30 தொகுதிகளிலும் புதியவர்களை இயக்கத் தில் சேர்க்கும் நிகழ்ச்சிகளை நடத்துவோம்.

பிப்ரவரி மாதம் நான் மலேசியாவுக்குச் சென்று இருந்தேன். அங்கே இரண்டு
மாதங்கள் இருந்தேன். மலேசிய நண்பன் நாள் இதழில், தலைவர் வைகோ அவர்களுடைய செய்திகள்தாம் படத்தோடு வருகின்றன. தி.மு.க., அண்ணா தி.மு.க.வுக்கு அந்த அளவுக்குச் செய்தி போடுவது இல்லை. நமது தலைவருக் குத்தான் அங்கே மரியாதை. வைகோவைப் பற்றித்தான் மலேசியத் தமிழர்கள் பெருமையாகப் பேசுகின்றார்கள். அங்கே நான் சந்தித்த மலேசிய நண்பர்கள் எல்லாம், உங்கள் தலைவரை நாங்கள் நேரில் சந்திக்க வேண்டும் என்று என் னிடம் தெரிவித்தார்கள். அந்த அளவுக்கு நமது தலைவருக்கு மலேசியாவில் மரியாதை இருக்கின்றது.

நான் லாரித் தொழில் செய்து வருகிறேன்.சாஞ்சி அறப்போருக்கு எங்கள் லாரி யை அனுப்பி இருந்தேன். அங்கே தலைவர் அவர்கள் சாலையில் அமர்ந்து
போராட்டம் நடத்திக் கொண்டு இருந்தபோது, மனிதநேய மக்கள் கட்சியின் வளைகுடா துணைத்தலைவர் என்னோடு பேசினார்.‘தலைவருடைய போராட் டம் இங்கே வளைகுடாவில் எல்லோரையும் ஈர்த்து இருக்கின்றது’ என்றார். தலைவருடைய பெயரும், புகழும் மலேசியா மட்டும் அல்ல, உலகம் முழு வதும் பரவி இருக்கின்றது.

விழுப்புரம் இராசநாயகம்:நான் ஒன்றியக்குழு உறுப்பினராக உள்ளேன். கட்சி தொடங்கும்போது, தொண்டர் அணியில் இருந்தேன். இப்போது, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர். அரசியலுக்கு அப்பாற்பட்ட முறையில், இளந்தமிழர் பண்பாட்டுப் பாசறை என்ற அமைப்பை இருபது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினேன். ம.தி.மு.க.வில் சேர்ந்து இருபது ஆண்டுகள் ஆகின் றன. ஈழத்தமிழர் பிரச்சினையில் தீவிரமாகக் களத்தில் இறங்கிப் பணி ஆற்றிய தால், அந்தப் பேராட்டத்தைத் திசை திருப்ப, விழுப்புரம் அருகே சித்தனையில் தி.மு.க. அரசே ஒரு வெடிகுண்டை வைத்து விட்டு, எங்களைக் கைது செய்து,
காவலில் வைத்தார்கள். உடனே உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு
தாக்கல் செய்தோம். சென்னை உயர்நீதி மன்ற உத்தரவின்பேரில், காவலில்
இருந்து வெளியே வந்தோம்.

2001 உள்ளாட்சித் தேர்தலில் ஒரு வழக்கில் என்னைச் சேர்த்தார்கள். ஈரோட் டில் சுவரொட்டி ஒட்டியதாக ஒரு வழக்கில் சேர்த்தார்கள். இப்படிப் பல போராட்டங்களில் ஈடுபட்டு இருந்தாலும், எனக்குள் ஒரு போராட்டம். ஆம்; நான் மதுவுக்கு அடிமையாக இருந்தேன். கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி இரவு 11 மணி வரையிலும், அந்தப் போராட்டம் தொடர்ந்தது. ஒன்று ம.தி.மு.க.வில்
இருக்க வேண்டும்; அல்லது மதுவோடு இருக்க வேண்டும். எது வேண்டும்? என அன்று இரவுதான் உறுதியாக முடிவு எடுத்தேன். மதுவைக் கைவிட்டேன்.
தலைவருடைய மது ஒழிப்பு நடைப்பயணத்தில் பங்கு ஏற்றேன். பல நண்பர் களையும் அழைத்து வந்தேன். மதுவை ஒழிக்க மன ரீதியான பயிற்சி வேண் டும் என்பதற்காக, மது ஒழிப்பு நடைபயணத்தில் நான் முழக்கங்களை எழுப்பிக் கொண்டே வந்தேன். தமிழ்த் தேசியம் பேசுகின்ற என்னுடைய நண்பர்கள் பலர், முன்பு நமது தலைவரை விமர்சித்துக் கொண்டு இருந்தார்கள்.இப்போது, அவர் கள் அதை நிறுத்தி விட்டார்கள். இப்போது, அவர்களது தேர்வு ம.தி.மு.க.தான். வேறு வழி இல்லை. அதுபோலத்தான்,தமிழக அரசியலிலும் நிலைமை மாறும்.

விழுப்புரம் மாவட்ட இளைஞர் அணித் துணை அமைப்பாளர் எஸ்.இராஜேந் திரன்:  

நான் மிகச் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவன்.21.1.96 இல் கண்ட மங்கலத் தில் என் திருமணத்தை, தலைவர் வைகோ அவர்கள் நடத்தி வைத்தார்கள்.
ஒன்றியக்குழுத் தேர்தலில் போட்டி இட்டபோது, என்னுடைய மொபைல் போன் கடையை உடைத்தார்கள். வீட்டையும் தாக்கினார்கள். என்னுடைய
குழந்தை விபத்தில் படுகாயம் அடைந்தது. அதைப் பார்த்த என் மனைவிக்கு மனநலம் பாதிக்கப்பட்டது. தற்போது நரம்பு முடக்குவாத நோயால் பாதிக்கப் பட்டு உள்ளார். கரூர் கே.சி.பி. தொழிற் சாலையில் பணிபுரிந்தேன். அவர் தி.மு.க.வுக்குப் போனபோது, அந்த வேலையை விட்டு விலகினேன்.தற்போது ஜெராக்ஸ் கடை வைத்து உள்ளேன்.

தலைவர் வைகோ அவர்களும், டாக்டர் மாசிலாமணி அவர்களும் என் மனைவி, மகள் மருத்துவத்துக்கு பல உதவிகள் செய்தார்கள். என் மகள் நலம் பெற்று, இப்போது பத்தாம் வகுப்பு படிக்கின்றாள். என் மனைவி இன்னமும் படுக்கையில் தான் இருக்கின்றார். நான் கழக நிகழ்ச்சிக்குப் போகிறேன் என்றால், ‘சரி போய் வாருங்கள்’ என்று மகிழ்ச்சியோடு அனுப்பி வைப்பார்கள். எத்தனை இடர் பாடுகளைச் சந்தித்தாலும், இயக்கத்தில் உறுதியாக இருக் கின்றேன்!

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே.

No comments:

Post a Comment