Monday, July 15, 2013

இன்ப அதிர்ச்சி தந்த காஞ்சி!

தாம்பரம் நிதி அளிப்புப் பொதுக்கூட்டத்தில் #வைகோ

காஞ்சிபுரம் மாவட்ட மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில், 29.6.2013அன்று தாம்பரத் தில், கழக வளர்ச்சி நிதி - தேர்தல் நிதி அளிப்புப் பொதுக்கூட்டம் பேரெழுச்சி யுடன் நடைபெற்றது.நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் வைகோ ஆற்றிய உரையில் இருந்து....

வானம் துலங்கினும் மீனம் படினும், அலைகள் பொங்கினும் மலைகள் வீழி னும், தன்னிலை மாறாது தாய்த் தமிழகத்தின் விடியலுக்காகவும்,தரணியில் தமிழ் ஈழத் திருநாட்டின் விடுதலைக் கொடியை உயர்த்தவும், அறிவாசான் தந்தை பெரியார், தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா நிலை நாட் டிய இலட்சியங்களை வென்றெடுப் பதற்காகவும், இருபதாவது ஆண்டில்
களங்களுக்கு மத்தியில் கம்பீரமாகத் தலைநிமிர்ந்து நிற்கிற தமிழ்ப் பெரு மக் களின் கனிவான அன்பைப் பெற்று இருக்கின்ற மறுமலர்ச்சி திராவிட முன் னேற்றக் கழகத்தின், காஞ்சி மாவட்ட நாடாளுமன்றத் தேர்தல் நிதி வழங்கு கின்ற பொதுக்கூட்டத்தில், உங்களை எல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி
அடைகின்றேன்.
பிரமிக்கத்தக்க வகையில் ஏற்பாடுகளைச் செய்து, இந்தக் கூட்டத்தை வெற்றி கரமாக நடத்திக் காட்டி இருக்கின்ற, எனது ஆருயிர்ச் சகோதரர் பாலவாக்கம் சோமு; கடல் மல்லை கழகத்துக்குத் தந்து இருக்கின்ற கருவூலமான, பெயரள வில் அல்ல, களத்தில் யுத்தங்களை நடத்துகின்ற சேனாதிபதி என்று நான்
மகிழ்ச்சியோடு உச்சரிக்கின்ற தகுதியைப் பெற்று இருக்கின்ற, இந்த நிகழ்ச்சி யின் வெற்றிக்குப் பெருந்துணையாகத் திகழ்கின்ற என் ஆருயிர் இளவல், கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா இருவரையும் நெஞ் சாரப் பாராட்டக் கடமைப்பட்டு இருக்கின்றேன். இந்தப் பெரு நிதியைத் திரட்டிட உறுதுணையாக நின்ற, காஞ்சி மாவட்டக் கழகத்தின் முன்னோடிகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.

நெஞ்சின் கனலை எழுத்துகளில் வார்ப்பிக்கின்ற கவிஞர் அண்ணன்  தமிழ் மறவன் அவர்கள்,

விழிகள் இரண்டு
இலக்கு ஒன்று
தோள்கள் இரண்டு
வீரம் ஒன்று
அதுவே சோமு சத்யா

என்று பொருத்தமாகக் குறிப்பிட்டார்.

மழைத்துளிகளுக்கு மத்தியில் ஒருநாளில்தான், 1949 செப்டெம்பர் 18 ஆம் நாள், பேரறிஞர் அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கி னார்.அண்ணாவின் கொள்கை சாகாது; அவருடைய இலட்சியங்கள் மடியாது;
அண்ணாவின் இயக்கம் புதிய பரிமாணமாக மறுமலர்ச்சி பெற்று உயர்ந்து நிற்கும் என்பதை நினைவூட்டுவதற்காகவே, இங்கே மழை பொழிந்து கொண்டு
இருக்கின்றது.

வாழையடி வாழையாக திராவிட இயக்கத்தில் இளம் தோழர்கள் உருவாகி வரு கிறார்கள் என்ற நம்பிக்கையை நம் மனங்களில் விதைக்கின்ற விதத்தில்,நமது
இயக்கத்தில் இளைஞர் பட்டாளம் அணிவகுத்துக் கொண்டு இருக்கின்றது. மழைத்துளிகளுக்கு நடுவிலும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டு இருப் பது, நம்பிக்கையை விதைக்கின்றது.கட்டுப்பாடாக இருப்பது வியப்பு அளிக் கின்றது. இயற்கைக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

மழையில் நான் நனைந்துவிடக் கூடாது, என் உடல் நலம் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காக, குடைகளைக் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அதை நான் அகற்றச் சொன்னேன். காரணம், நீங்கள் எல்லாம் மழைத்துளிகளுக்கு
மத்தியில்தான் நின்றுகொண்டு இருக்கின்றீர்கள். பொதுமக்கள் நலனில் அக் கறைகொண்டு, அவர்களுக்காக உழைப்பவன், போராடுகிறவன், தன்னை வருத்திக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.அதை என் வாழ்நாள் நெடு கிலும் கடைப்பிடித்து வந்து இருக்கின்றேன்.

என் தம்பி சோமுவுக்காக, சத்யாவுக்காக, காஞ்சி மாவட்டக் கழகக் கண்மணி களுக்காக, அவர்கள் இரவு பகலாகப் பட்ட பாடும் உழைப்பும் , பெருமழை பெய்து நான் பேச முடியாமல் போய்விட்டால், அவர்கள் உள்ளம் கலங்குமே என்றுதான் நான் வருத்தப்படுவேன்.

28 முறை சிறை சென்றபோதும்,அடிமட்டத் தொண்டனாக சிறைச்சாலையில் இருந்தேன். சி வகுப்புக் கைதியாக, அலுமினியத் தட்டில்தான் எளிய உணவை
உட்கொண்டு, தொண்டனுக்குத் தொண்டு ஊழியம் செய்தவன்தான் இந்த வைகோ.

1964 ஆம் ஆண்டு, கோகலே அரங்கில், இந்தி ஆதிக்க எதிர்ப்புக் கருத்து அரங் கில், பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு முன்னால் உரை ஆற்றுகின்ற பேறு பெற்றேன். அந்தப் படத்தைத்தான் என் சொத்தாகக் கருதி வீட்டில் வைத்து இருக்கின்றேன். 49 ஆண்டுகள் உருண்டு ஓடி விட்டன.அடுத்த ஆண்டு ஐம்ப தாவது ஆண்டு.தன்னலம் இன்றிப் பாடுபட்டு வந்து இருக்கின்றேன். இலட்சி யங் களுக்காக வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன்.



சோமு தந்த முதல் நிதி

இந்த மழைத்துளிகள் பல செய்திகளை எனக்கு நினைவூட்டுகின்றன.1989 ஆம் ஆண்டின் இறுதிக்கட்டம். நான் கேட்காமலேயே, சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டேன்.செலவுக்குப் பணம் இல்லை யே; யாரிடம் போய்க் கேட்பது? என்று எண்ணிக் கொண்டு இருந்தேன்.மறுநாள் பொழுது விடிகையில், மழை வெள்ளமாகப் பொழிந்து கொண்டு இருக்கின்றது.

வீட்டுக் கதவு தட்டப்படுகிறது. திறந்து பார்த்தால், ஒரு இளைஞர் முழுக்க
முழுக்க மழையில் நனைந்த படி நிற்கின்றார். வாங்க என்றேன். அண்ணா நான் ஒரு தி.மு.க.தொண்டன். ஒரு ஆலையில் வேலை செய்கிறேன். உங்கள் மேல் உயிராக இருப்பவன். நேற்று இரவில்தான் நீங்கள் போட்டியிடப் போவதாகச்
செய்தி கிடைத்தது. நேற்றுதான் சம்பளம் வாங்கினேன். அதில் இருந்து என் னால் இயன்ற இந்த நிதியைக் கொடுக்கிறேன் என்று சொல்லி, 2000 ரூபாயை அந்த இளைஞர் என்னிடம் கொடுத்தார். எல்லாமே இருபது ரூபாய்  நோட்டு கள்.

சம்பளமாக வாங்கிய பணத்தில் இருந்து கொடுக்கின்றீர்களே? என்றேன். இல் லை அண்ணா. நான் மகிழ்ச்சியோடு கொடுக்கின்றேன் என்று சொல்லிக் கொடுத்தார். அதுதான், எனக்கு வந்த முதல் நிதி. அந்த இரண்டாயிரம் ரூபாயை
அப்படியே இன்னமும் பத்திரமாக வைத்து இருக்கிறேன்.

இன்றைக்கு நீங்கள் தந்து இருக்கின்ற நிதி சாதாரணமானதா? இன்ப அதிர்ச்சி
அல்லவா தந்து இருக்கின்றீர்கள்? நாம் ஒன்றும் அதிகாரத்தில் இல்லை;
நாளைக்கே அதிகாரத்துக்கு வந்து விடப் போகிறோம் என்று சொல்லி  நிதி யைத் திரட்டுகின்ற நிலையிலும் நாங்கள் இல்லை.

ஆனால், இந்தத் தாய்த் தமிழகம் ஒருநாள் அதிகாரத்தை மறுமலர்ச்சி தி.மு. கழகத்திடம் கொடுக்கும். நீங்கள் திரட்டி இருக்கின்ற இந்த நிதி, தமிழக மக்கள் நம்மீது கொண்டு இருக்கின்ற நம்பிக்கையின் அடையாளம்.

கடலூர் ஜெயராமன்

இந்த மேடையில் என்னிடம் நிதி அளித்தார் ஜெயராமன். கடலூர்  மாவட்டத் தில் ஒரு குக்கிராமத்தில் பெட்டிக் கடை வைத்து இருக்கின்ற ஜெயராமன். அங்கே ஒரு நாளைக்கு 100, 150 ரூபாய் லாபம் கிடைப்பது கூட அரிது. தன் கடைக்கு வருகின்றவர்களிடம், மறுமலர்ச்சி தி.மு.கழகத்துக்கு நிதி தாருங்கள்
என்று கேட்டு, 10 ரூபாய், 20 ரூபாய் என அவர்களிடம் இருந்து பெற்று,அதற்குக் கணக்கு எழுதி, 3583 ரூபாயை இங்கே கொண்டு வந்து கொடுத்து இருக்கின்றார். அவருக்கு ஒரு கண் பார்வை கிடையாது. அவர் மனைவி இறந்து கொஞ்ச நாள் கள் தான் ஆகிறது. ஜெயராமனுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த இயக்கத்தைக் காக்கின்ற காவல் தெய்வங்களாக இப்படிப்பட்ட  தோழர் கள் தான் இருக்கின்றார்கள். இதற்கு முன்பு நீங்கள் தந்த காசுகள்தாம், தாயக மாக எழுந்து நிற்கிறது. காஞ்சி மாவட்டக் கழகக் கட்டடமாக இருக்கின்றது.
நேற்றைக்கு ஒரு தகவல். நமது தோழர்கள் நிதி கேட்டுச் செல்கிறார்கள். சம் மட்டி எடுத்துக் கல் உடைக்கின்ற ஒரு தொழிலாளி அவர்களைப் பார்த்து, என் னிடம் ஏன் கேட்கவில்லை? என்கிறார். நீயே கஷ்டப்படுகிறாயே என்றபோது, நான் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என்னிடம் ஏன்  கேட்க வில்லை? என்கிறார். அருகில் செல்லுகிறார்கள். 250 ரூபாய் சீட்டுதான் இருக் கின்றது. வேறு இல்லை. தயங்கிக் கொண்டே அதைக் கொடுக்கின்றார்கள். இதற்கு மேல் வேறு சீட்டு இல்லையா? என்று கேட்கிறார். 500 ரூபாய்தான்
இருக்கிறது என்கிறார்கள். அப்படியா, அதைக் கொடுங்கள் என்கிறார். தோழர் கள் மெய்சிலிர்த்துப் போகிறார்கள். அடுத்து ஒரு தோழன். அன்றாடம் உழைக் கின்ற, துணி வெளுக்கும் சகோதரர் ஒருவர், 1000 ரூபாய் கொடுத்து இருக் கின் றார்.வைகோ தமிழ்நாட்டுக்காக உழைக்கின்றார். அவருக்கு நான்  கொடுக் கிறேன் என்று சொல்லி இருக்கின்றார். எனக்கே நம்ப முடியவில்லை. இப்படி மக்களே காசும் கொடுத்து, வாக்கும் அளிக்கின்ற காலம் வரும். (கைதட்டல்).

இந்த நிதியை அள்ளித் தந்த நல்ல உள்ளங்களுக்கெல்லாம் நான் நன்றி கூறு கிறேன். தமிழக அரசியலில் உங்கள் நம்பிக்கைக்கு உரியவர் களாக நாங்கள் நடந்து கொள்வோம். அரசியல் ஒழுக்கத்தைப் பாது காப்போம்; நாணயமாக நடப்போம். தாய்த் தமிழகத்தின் உரிமை களுக்காகப் போராடுவோம்.

நிலத்தில் விதையை ஊன்றுகிறோம்.அந்த நிலம் ஈரமாக இருந்தால்தான்
விதை முளைக்கும். அந்த நிலையில் தண்ணீர் ஊற்ற வேண்டும். அப்போது தான் செடியாக வளரும், மரமாகி கிளை பரப்பும். அப்படித்தான் இந்த இயக்கத் தை இருபது ஆண்டு களுக்கு முன்பு விதையாக ஊன்றி னோம். இது பட்டுப் போய்விடாமல், தாய்த்தமிழகத்து மக்கள் தண்ணீர் ஊற்றி வளர்த்து இருக்கின் றார்கள். இன்றைக்கு மரமாக வளர்ந்து இருக்கின்றது. தன்மானத்தையும்,
சுய மரியாதையையும் காத்து நிற்கின்றது.

அருமைத் தோழர்களே, நீங்கள் எந்த நம்பிக்கையோடு இந்த இயக்கத்தில் என் னோடு இணைந்து பணி ஆற்றுகின்றீர்களோ, என் சுவாசம் இருக்கின்ற வரை யிலும் அந்த நம்பிக்கையைக் காப்பாற்றித் தருவேன்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment