Monday, July 8, 2013

திருவாசகம் சிம்ஃபொனி விழா-வைகோ-பகுதி 3

ஆற்றல் எங்கிருந்து வந்தது?

நான் நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் சொன்னேன். இந்த நாட்டின் கவ னத்துக்கு வராமல் போன காரணத்தினால் சொன்னேன். ஒரு கொரியாக் காரன் சாதிக்காததை, சீனாக்காரன் சாதிக்காததை, ஜப்பான்காரன் சாதிக்கா ததை, ஓர் இந்தியன் - ஒரு தமிழன் - ஒரு தென்னாட்டுத் தமிழன் எங்கள் பண்ணைப்புரத்து இளையராஜா சாதித்து இருக்கிறார். அந்த இளையராஜாவுக்கு ஆற்றல் எங்கி ருந்து வந்தது? இது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக உலகத்தில் தோன்றிய முதல் இசை - தமிழ் இசை என்ற காரணத்தினால் தடைகளை உடைத்து எறிந் து கொண்டு, அந்தத் தென்னாட்டுத் தமிழன் இசையைப் படைத்து இருக்கின் றார். இசை எங்கே இருந்து வந்தது? சாம வேதத்தில் இருந்து வந்தது அல்ல. ‘ச ரி க ம ப த நி’ என்றார்கள். சட்சமம், ரிஷிபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிசாதம் - சரிகமபதநி என்று சொன்னார்கள்.


அதையே இளங்கோவடிகள்,

குடமுதல் இடமுறையா, குரல் துத்தம்
கைக்கிளை உழை இளி விளரி தாரமென
விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே!

இங்கே பல நாடுகளுக்குப் போய் வந்தவர்கள் இருக்கிறீர்கள். மதிப்புக்குரிய ராம் அவர்கள் இருக்கி றார்கள். உலகத்தின் பழமையான நாகரிகத்தை அடை யாளம் காட்டிக் கொள்கிற ஈமக் கோபுரங்கள். மன்னர்கள் இறந்ததற்குப் பிறகு அவர்களின் உடல்களை அடக்கம் செய்து வைத்து இருக்கிறார்களே பிரமிடு கள் - அந்த எகிப்தியப் பிரமிடுகளில் யாழ் கருவியின் தோற்றம் வடிவு அமைக் கப்பட்டு இருக்கின்றது. அங்கே யாழ் என்கின்ற கருவி இருந்தது. 3,500 ஆண்டு களுக்கு முற்பட்டு அந்த யாழ் இசைக் கருவி இலண்டன் நகரத்தின் அருங் காட் சியகத்தில் வைக்கப்பட்டு இருக்கின்றது.

அதைப்போலவே மெசபடோமியாவில் 5,000ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சுமேரிய நாகரிகம் பழமையான நாகரிகம். அங்கே இருந்த யாழ் இசைக் கருவி ஒன்று பாக்தாத் நகரத்தின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருக்கின்றது. ஓர் இசைக்கருவியில் ஏழு சுரங்கள் வருகின்றன. ஏழு நரம்புகளைக் கொண்ட யாழ் இருந்தது என்று இட்ச்சு சுவான் என்கின்ற ஒரு சீன இசை நூல், கி.மு. 522-ஆம் ஆண்டு அதைத் தெரிவிக்கிறது. கிரேக்கத்தின் ஹோமர் யாழின் திறமை யை - நரம்புக் கருவிகளின் திறமையைச் சொல்கிறார். ஆனால், அருமைச் சகோதரர்களே, மொஹஞ்சதாரோ, ஹரப்பாவில் அகழ்வு நடந்தபோது, ஈராஸ் பாதிரியார் அதைப்பற்றிக் குறிப்பிடுகின்றார். இங்கே யாழ் என்கின்ற அந்த இசைக்கருவியின் முத்திரை கிடைத்து இருக்கின்றது. இது பூர்வீகத் தமிழர்கள் - ஆதித் தமிழர்கள் பயன்படுத்திய கருவி என்று குறிப்பிட்டார்.

இசை இங்கே பிறந்தது!

ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த ‘பெருநாரை, பெருங்குருகு’ என் கின்ற இசை நூல்கள் இதைத் தெரிவிக்கின்றன. இது ஒன்றும் கற்பனை அல்ல - கட்டுக்கதை அல்ல. லெமூரியாக் கண்டத்தில் - தென் மதுரையில் இந்தக் கருவிகள் இருந்தன என்பதை, தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் ‘கருணாமிர்த சாக ரம்’ என்னும் 1376 பக்கங்கள் கொண்ட தமது நூலில் - இருபதாம் நூற்றாண்டில் வந்த முதல் ஆராய்ச்சி நூலில் - 1917-ஆம் ஆண்டு வெளியிட்ட அந்த நூலில் யாழின் பெருமைகளைக் குறிப்பிடுகின்றார். விபுலானந்த அடிகள் எழுதிய ‘யாழ் நூலில்’ குறிப்பிடுகின்றார்.

14 வகையான யாழ்கள் தமிழர்களிடம் 7,000 ஆண்டு களுக்கு முன்னால் இருந்தன. ‘பேரியாழ்’ என்ற ஆயிரம் நரம்புகளைக் கொண்ட ஒரு யாழ் இருந்தது. உலகில் எந்த நாட்டிலும், எந்தக் காலத்திலும் இல்லாதது - தென் மதுரையில் இருந்தது. அது அழிந்துவிட்டது கடலிலே. அதற்குப்பிறகு,

19 நரம்புகளைக் கொண்ட மகரயாழ்,
14 நரம்புகளைக் கொண்ட சகோடயாழ்,
7 நரம்புகளைக் கொண்ட செங்கோட்டியாழ்,
100 நரம்புகளைக் கொண்ட கீசக யாழ்,

நாரத யாழ், தும்புரு யாழ், மருத்துவ யாழ், மகதி யாழ், கச்சவி யாழ், திருக்குச்சிகை யாழ், வராளி யாழ், வல்லிகி யாழ், வில் யாழ் என்கின்ற பதினாறு வகையான யாழ்கள் இருந்தன என்று குறிப்பிடுகின்றார். எனவே, இசை இங்கே பிறந்தது. இந்தத் தென்னாட்டில் பிறந்தது இசை. இசை யின் வடிவில் இறைவனைக் கண்டார்கள்.

நான் விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு ஒரு பார்வையாளராக, ஓர் இரசி கனாக, இசையில் புலமை பெற்றவனாக அல்ல - ஒரு தமிழ்ப் பற்றாளன் என் கின்ற முறையில் அதைப் பார்க்கிறேன். தேவார மூவர்கள் அதைத்தான் சொன் னார்கள். ‘ஏழிசையாய், இசைப் பயனாய், என்னுடைய தோழனுமாய்’ என்று சுந்தர மூர்த்தி நாயனார் இறைவனைப் பற்றிச் சொன்னார். அதே உணர்வில் ‘ஓசை, ஒலி எல்லாம் ஆனாய் நீயே’ என்று நாவுக்கரசராம் அப்பர் அடிகள் சொன்னார்கள். ‘பதம் ஏழும் பண்ணும் உருதாளத்து ஒலி பலவும் நின்றான் இறைவன்’ என்று திருஞான சம்பந்தர் சொன்னார்.

இதைத்தான் இங்கே கத்தோலிக்கத் திருச்சபையினர் - தென்இந்திய கிறித்துவ மார்க்கத்தின் திருச்சபையினர் இங்கே வந்து இருக்கின்றார்களே, அவர்கள் போற்றுகின்ற விவிலியத்தில் - புதிய ஏற்பாட்டில், யோவான் சுவிஷேசத்தில் - அந்த அதிகாரத்தின் முதல் வசனம் - ‘ஆதியில் வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது. அந்த வார்த்தை தேவ னாகவே இருந்தது.’ எனக் கூறுகிறது. அதைத்தான் சங்கீதத்தில் 122-ஆவது அதிகாரத்தின் மூன்றா வது வசனத்தில் “எருசலேம் இசைவிணைப்பான நகரமாகக் கட்டப்பட்டிருந் தது” எனக் கூறுகிறது. தாவீதின் சங்கீதங்கள் - யூதர்களுக்கும், கிறித்தவர் களுக்கும் மகிழ்ச்சி ஊட்டுகின்ற சங்கீதங்கள் கிறித்து மார்க்கத் துறவிகளின் உள்ளத்தைக் கவர்ந்த காரணத்தினால் திருவாசகத்தைத் தந்த மாணிக்கவாச கரை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
தொடரும் ....

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

No comments:

Post a Comment