இழந்த சுதந்திரத்தை, தங்கள் தாயகத்தை மீட்கத் துடிக்கின்றார்கள்!
2009 ஆகஸ்ட் மாதம், சேனல் 4 தொலைக் காட்சி வெளியிட்ட காட்சிகளை நினைத்துப் பாருங்கள். எட்டுத் தமிழ் இளைஞர்களின் கண்களைக் கட்டி, கை களைப் பின்புறமாகக் கட்டி,அம்மணமாக இழுத்து வந்து, எட்டி மிதித்து, மண்டி யிட்டு உட்கார வைத்து, எட்டுப் பேரின் பிடறிகளிலும் சுட்டுக் கொன்றார்களே, இரத்த வெள்ளத்தில் துடிதுடித்துச் செத்தார்களே? இந்தக் காட்சிகள் உண்மை தானா என்று சரிபார்த்து விட்டு, ஐ.நா. சபை நிபுணர் ரிச்சர்டு ஹெய்ன்ஸ் சொன்னார், இது உண்மைதான் என்று.அதிர்ச்சி அடைந்தேன். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சொன்னார். கடந்த ஆண்டு, மனித உரிமை கள் கவுன்சிலில், இது கொடூரமான இனப்படுகொலை என்றும் குறிப் பிட்டார். சேனல் 4 தொலைக்காட்சியின் மற்றொரு செய்தியாளர் சொன்னார்:
இதைவிடக் கொடூரமான காட்சிகள் எங்களிடம் இருக்கின்றன. அதில், பெண் கள் கூட்டம் கூட்டமாக அம்மணமாக இழுத்து வரப்பட்டுச் சுட்டுக்கொலை
செய்யப்பட்ட அந்தக் காட்சிகளை எங்களால் வெளியிட இயலாது, மனம் தாங்காது என்று குறிப்பிடுகிறார்.
2010 நவம்பர் 30ஆம் தேதி அவர்கள் மற்றொரு காட்சியை ஒளிபரப்பினார்கள். தன் ஐந்து மாதக் குழந்தை அகல், துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பறிகொடுத்த
இசைப்பிரியா, கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். மிருகங்கள் கூட இப்படிச் செய்யாது.அம்மணமாக, குற்றுயிரும், குலையுயிருமாகக் கிடக் கின்ற பெண்ணைப் பார்த்து, கெக்கலி கொட்டி, ஏளனம் செய்தார்கள்; எப்படிக் கற்பழித்தோம் என்று சிங்கள மொழியில் விவரிக்கின்றார்கள் என்று சேனல் 4
காட்டியது. இதைவிடக் கொடிய நிகழ்வுகளை வேறு எங்கே பார்க்க முடியும்?
முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிர் ஈந்தவர்களுக்கு 3 ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார் பில், 17.5.2012 அன்று, சென்னை-வில்லிவாக்கத்தில், பழ.நெடுமாறன் தலைமை யில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்று கழகப்பொதுச் செயலளர் #வைகோ ஆற்றிய உரையில் இருந்து...
எங்கள் தோழர்களின் புதைகுழியில், மலர்தூவிப் பயணிக்கின்றோம்; கழுத்தில் நஞ்சைக் கட்டிய புலிகள், களங் கண்டு அஞ்சியது இல்லை. அவர்களது நிலத் தில் எதிரிகளை வீழ்த்திய நிகழ்வுகள் ஒன்றல்ல, இரண்டல்ல,எண்ணற்றவை. இந்த இரண்டையும் நம் நெஞ்சில் பதிக்கின்றவகையில், சூழலில் வடிவமைக் கப்பட்டு,ஒருபுறத்தில் தரணியில் தமிழனுக்குத் தன்மான முகவரியைத் தேடித் தந்த மாவீரர்திலகம் பிரபாகரன் அவர்களுடைய திருவுருவப் படம்; அவர் சுடர் ஏந்துகின்ற படம். இன்னொருபுறத்தில், ஈழத்தில், முள்ளிவாய்க்காலில், நந்திக் கடல் பகுதியில், கிளிநொச்சி, மன்னார்,விஸ்வமடு, அனந்தபுரத்தில் இலட்சக் கணக்கில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு, அவர்கள் சிந்திய இரத்தத் துளிகள் வீண்போகாது என்பதை, நினைவூட்டச் சூளுரைக்க, சுடர் ஏந்துகின்ற
வடிவமைப்பு.
இந்த மேடையின் பின்புலத்தில், இதுவரை கண்ணை மூடிக்கொண்டு இருந்த உலகம், ஈழத்தமிழர்களின் துயர வாழ்வின்பக்கம் கண்ணைத் திறந்து இருக் கின்றதுஎன்பதை எடுத்துக்காட்டுகின்ற வகையில் ஒரு விழிப்படலம். அந்த விழியை உற்றுக் கவனியுங்கள்.அதன் கருமணியில், அனைத்து நாடுகள் மன்றத்தின் மனித உரிமைகள் குழுவின் இலச்சினை பொறிக்கப்பட்டு இருக் கின்றது. அந்தக் கருவிழியில் இருந்து கண்ணீர்த்துளிகள் உருண்டு விழுகின் றன. அங்கே, இரத்தத் தடாகத்தில் மிதக்கின்ற தமிழ் ஈழம் காட்சி அளிக்கின் றது. அது, தமிழர்கள் கொட்டிய குருதி. அதன் பின்புலத்தைக் கவனியுங்கள். அடர்ந்த கருப்பு வண்ணம் காட்சி அளிக்கின்றது. சிங்களக் கொடியோரின் ஆதிக்கக் கரங்களில் சிக்கி இருக்கின்ற தமிழர் வாழ்வில்கருமையாகச் சூழ்ந்து விட்ட இருளை நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்துகின்ற இந்தக் கூட்டம் சம்பிரதா யத்துக்காக நடத்தப் படவில்லை. முள்ளிவாய்க்கால் நினைவு ஏந்தல் நிகழ்ச்சி
இது. இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் பழ. நெடுமாறன் அவர் கள், சுடரை ஏற்றி வைத்து உரையாற்றினார். பெரியார் திராவிடர் கழகத்தின்
தலைவர், தன் வாழ்வைத் தன்மான இயக்கத்துக்கும்,அறிவாசான் பெரியாரின் கொள்கைக்கும், தமிழ் ஈழ விடுதலைக்கும் ஒப்படைத்துக் கொண்டு இருக் கின்ற, புலிப்படைக்குப் பயிற்சி கொடுப்பதற்குத் தன் சொந்தத் தோட்டத்தை யும் தந்து, இதுகுறித்துப் பேசுகின்ற தகுதியோடு, எதிர்காலக் கடமைகளை நினைவூட்டி, சிந்தனைக்குக் கூர் தீட்டுகின்ற வகையில் அரியதோர் உரை யாற்றி அமர்ந்து இருக்கின்றார், என் ஆருயிர்ச் சகோதரர் கொளத்தூர் மணி அவர்கள். இருதயத்தைப் பிளக்கக்கூடிய ஈழத்தமிழர் துயரத்தை, உச்சிதனை
முகர்ந்தால் என்ற திரைப்படமாகத் தந்தார் புகழேந்தி தங்கராஜ். இன்றைக்கு நோர்வே திரைப்பட விழாவில் பல விருதுகளை அந்தத் திரைப்படம் பெற்று இருக்கின்றது.எழுத்தாளராக,பத்திரிகையாளராக, காற்றுக்கென்ன வேலியைத் தந்தவராக, ஈழத்தமிழர் துயர் துடைப்பதற்காகக் களத்தில் நிற்கின்ற ஒரு தன் மானப் போராளியாக, இங்கே உரை ஆற்றி அமர்ந்து இருக்கின்றார்.
கருத்துச் செறிவுள்ள உரைகள், இங்கே நிகழ்த்தப்பட்டன. முள்ளிவாய்க்கால், தமிழர்களின் குருதி வாய்க்கால். இலட்சக்கணக்கான தமிழர்களின் இரத்தம் பெருக்கெடுத்து ஓடிய குருதிக் கால்வாய்.இன்னும் எத்தனை நூறாண்டுகள் சென்றாலும், ஒரு மனிதப் பேரழிவைக் குறிக்கின்ற சொல்லாகவே, முள்ளி வாய்க்கால் ஒலிக்கும். உலக வரலாற்றில், சில இடங்கள், சில பெயர்கள், ஆழ மான காயங்களை நினைவூட்டுகின்றன. ஜெர்மனியின் டாசோ, ஆஸ்ட்விட்ஸ் சித்திரவதை முகாம்கள். இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும், அடால்ஃப் ஹிட்லரின் நாஜிப்படைகளால், விஷவாயு அறைகளில் கொண்டு வந்து அடைக்கப்பட்டுத் துடிக்கத்துடிக்கக் கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான யூதர்களை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும். சிரபெரெனிகா என்ற சொல், போஸ்னிய செர்பியாவில் ஈவு இரக்கம் இன்றிக் கொல்லப்பட்டவர் களை நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.
ருவாண்டா என்றாலே, இலட்சக்கணக்கானவர்கள் வெட்டிக் கொல்லப்பட்டது நினைவுக்கு வரும். நூறு ஆண்டுகளுக்கு முன்பு, அர்மீனியாவில் 15 இலட்சத் துக்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இன்னமும் அந்தப்
படுகொலைகளை நினைவூட்டிப் போராடுகின்ற மக்களைப் பற்றி இங்கே சுட்டிக்காட்டி கொளத்தூர் மணி அவர்கள் பேசினார்கள். கம்பூச்சியாவில் இலட் சக்கணக் கானவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அதைப்போலத்தான், முள்ளிவாய்க் கால் என்று சொல்லுகிறபோது, அங்கே தமிழர்கள் எழுப்பிய
ஓலக்குரல் நம் காதுகளில் எதிரொலிக்கிறது. அங்கே மடிந்தவர்களுக்காக நாம் இங்கே நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்திக்கொண்டு இருக்கின்றோம்.
இந்தப் படுகொலைகளை நிகழ்த்திய குற்றவாளிகளை,இனக்கொலைக் குற்றத் துக்காகக் கூண்டிலே நிறுத்த வேண்டும்; சுதந்திரத் தமிழ் ஈழம் அமைத்திட
வேண்டும். இருமுனைத் தாக்குதல் என்பதைப்போல, இவைதான் நம்முடைய
இலக்கு. அதை வலியுறுத்துவதற்காகத்தான் நாம் இங்கே திரண்டு இருக்கின் றோம்.இரண்டாம் உலகப் பெரும்போரின்போது,நாஜிகளின் ஸ்வஸ்திக் கொடி பல நாடுகளில் பறந்தன. செக்கோஸ்லோவேகியா, போலந்து, ஆஸ்திரியா எனப்பல நாடுகள் ஹிட்லரின் ஆதிக்கத்தின் கீழ் வந்தன. பாரிஸ் நகரிலும்
அவனது வெற்றிக்கொடி பறக்கிறது. அகிலமே அவர்களைக் கண்டு அஞ்சி நடுங்கியது. உலகமே என் காலடியில் என்று கொக்கரித்தார்கள். ஆனால், அந்தப் போரின் முடிவில், 1945 ஏப்ரல் 30 இல்,பெர்லின் நகர நிலவறை ஒன்றில், இவா பிரவுனோடு சேர்ந்து தன்னைத்தானே சுட்டுக்கொண்டு, தற்கொலை செய்து மடிந்தான் ஹிட்லர்.
ஆனாலும், இந்தப் படுகொலைகளுக்கு எல்லாம் காரணமானவர்களைக் கூண் டிலே நிறுத்தித் தண்டிக்க வேண்டும் என்று நேச நாடுகள் தீர்மானித்தன. அமெ ரிக்க நாட்டின் குடியரசுத் தலைவராக அதுவரையிலும் இருந்த ஃபிராங்ளின் டி.
ரூஸ்வெல்ட், அதற்கென ஒரு விசாரணை மன்றம் அமைய வேண்டும் என்று தெரிவித்த கருத்தை, அவரை அடுத்துப் பொறுப்புக்கு வந்த ட்ரூமன் நிறை வேற்ற முயல்கிறார். அதே ஜெர்மனி நாட்டின், நூரெம்பர்க் நகரில் விசாரணை மன்றம் அமைக்கப்பட்டது. ரிச்சர்டு ஜாக்சன் என்ற அமெரிக்க உச்சநீதிமன்றத் தின் புகழ்மிக்க நீதிபதி,இந்த விசாரணை மன்றத்துக்கு வழக்கறிஞராகச் செல் கிறார். சோவியத் நாட்டில் இருந்தும் வழக்குரைஞர்கள் வருகிறார்கள்.

பிரான்ஸ், பிரிட்டன் எனப் பல நாடுகளின் வழக்கறிஞர்கள் வருகிறார்கள்.
1945 நவம்பர் 16 இல் நீதி விசாரணை தொடங்குகிறது.டிசம்பர் 2 ஆம் தேதி,ரஷ்ய நாட்டின் வழக்குரைஞர், ஒரு ஆவணப்படத்தைக் கொண்டு வந்து திரையிடு கின்றார். அதிலே ஒரேயொரு காட்சிதான். ஒரு பத்து வயது யூதச் சிறுவன். அவன் கையிலே ஒரு வெண்புறாவை வைத்து இருக்கிறான். நாஜி சிப்பாய் ஒருவன், அந்தப் புறாவைக் கேட்கிறான். சிறுவன் அதை ஆசையோடு வைத்து
இருக்கிறான். எனவே தர மறுக்கிறான். தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொள்கிறான். துப்பாக்கிக் குண்டு பாய்கிறது, அந்தச் சிறுவனின் மார்பைத்
துளைத்துக்கொண்டு, மணிப்புறாவையும் சேர்த்தே கொல்கிறது. துடிதுடித்துச் சாகிறான் அந்தச் சிறுவன்.
அடுத்து, யூதப் பெண்களை இழுத்து வருகிறார்கள்.அம்மணமாக்குகிறார்கள். அவர்கள் மீதும் துப்பாக்கி ரவைகள் பாய்கின்றன. உயிர் அற்ற சடலங்களாகக் கீழே விழுந்து மடிகின்றார்கள். இந்தக் காட்சிகள், அந்த நீதிமன்றத்தையே திடுக் கிட வைத்தது. 1946 அக்டோபர் 1 ஆம் தேதி, குற்றவாளிகளான, நாஜிகளின் தளபதிகள், ஹிட்லரின் எடுபிடிகள் அனைவருக்கும் மரண தண்டனை எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இலட்சக்கணக்கான யூதர்களைக் கொன்றார்கள்.ஆனால், இந்தக் காட்சிகள் ஒன்றே போதும் அதை மெய்ப்பிப்பதற்கு என்ற அடிப்படையில் அந்தத் தீர்ப்பு
வழங்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின்போது ஐரோப்பியக் கண்டத்தை யே அஞ்சி நடுங்கச் செய்த கோயரிங், தீர்ப்பைக் கேட்டுத் தற்கொலை செய்து
கொண்டான். அதைப்போல, இந்தச் சிங்களக் கொடியோரை, சர்வதேச நீதிமன் றத்தின் குற்றக்கூண்டில் நிறுத்த வேண்டும் என்ற உறுதியோடு நாம் இங்கே கூடி இருக்கின்றோம்.
1942 ஜனவரி 23 ஆம் தேதி, ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடா பெஸ்ட் நகரில், நான்கு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டவன் சாண்ட்ரோ கேப்பி ரோ. கடந்த ஆண்டு, அவனுக்கு வயது 97. ஆயினும் அவனை அடையாளம் கண்டு கைது செய்தார்கள். எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு அவன் குற்றக் கூண்டிலே நிறுத்தப்பட்டான். அவனால், நடக்க முடியவில்லை, செவிகள் கேட்கவில்லை, பார்வை மங்கி விட்டது. வயது 97. எழுபது ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம். ஆனால், அவனைக் கூண்டிலே நிறுத்தி விட்டார் கள். அதைப்போலத்தானே, எட்டுத் தமிழ் இளைஞர்கள், அம்மணமாக இழுத்து வரப்பட்டு, பின்னந்தலையில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அந்தக் காட்சி களை இங்கே சித்தரித்து வைத்து இருக்கிறார்கள் ஆருயிர்ச் சகோதரர் ஜீவனும், மணிமாறனும்.
1995 ஆம் ஆண்டு, ஜூலை 17 ஆம் நாள். சிரபெரெனிகா.இந்த ஊரின் பெயரும் இன்றைக்கு உலகம் முழுமையும் ஒலிக்கின்றது. அங்கே போஸ்னிய முஸ் லிம் இளைஞர்கள் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சேனல் 4 காட்டியதே, ஈழத்தமிழ் இளைஞர்கள் படுகொலைக் காட்சிகளை அதைப்போலத்தான்
அன்றைக்கு அங்கே நடந்தது.
இந்தக் கொலைகளைச் செய்த இராணுவப் பிரிவுக்குப் பெயர் ஸ்கார்பியன்ஸ்- கொடுந்தேள்கள். அன்றைக்கு அந்த இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது,
உலகத்துக்குத் தெரியாமலே போய்விட்டது. உண்மை புதைக்கப்பட்டு விட்டது. இனி எவருக்கும் தெரியாது என்று நினைத்தார்கள். பத்து ஆண்டுகள் கழிந்தன.
அந்தக் கொலைகாரர்களுள் ஒருவன்,இதைப் படம் பிடித்து வைத்து இருந்தான். அந்த சாட்சியம் வெளியே வந்து விட்டது. அதைச் செய்த ஆறுபேர், பெல்கிரே டிலே கூண்டில் நிறுத்தப்பட்டார்கள். அவர்களுக்கு 58 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
1992 முதல் 1995 க்குள், செர்பியாவில், ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டனர். இருபது லட்சம் பேர், புகலிடங்களை இழந்தனர். குறிப்பிட்ட ஒரே இடத்தில்
மட்டும் 8,000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இந்தப் படுகொலைகளுக்குக் காரணமான ராட்கோ மிலாடிக், கைது செய்யப்பட்டு கூண்டில் நிறுத்தப்பட் டான்.நேற்றைய தினம், ஹேக் நகரில் உள்ள, அனைத்துலக நாடுகளின் குற்ற வியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று இருக்கின்றது. அவன் மீது
இனப்படுகொலைக் குற்றச்சாட்டு. அதை அவன் மறுத்தான். அந்த நீதிமன்றத் துக்கு வெளியில் 25 சகோதரிகள் வந்து நின்றார்கள். Mothers of Srebrenica சிரபெ ரெனிகாவின் அன்னையர் என்ற அட்டையை ஏந்திக்கொண்டு வந்து, முழக்கங் களை எழுப்பினார்கள். இந்தக் கொடூரமான கொலையாளியைத் தப்ப விட்டு விடாதீர்கள். அவனைத் தண்டியுங்கள் என்று வெறும் 25 பெண்கள் வந்து முழங்கினார்கள்.
தமிழர்களாகிய நாம், இந்தப் புவியெங்கும் இருக்கின்றோம். 2008 ஆம் ஆண்டு
நடத்திய படுகொலைகளுக்காக, செர்பிய ஜனாதிபதியாக இருந்த ரோடோவன்
கராட்சிக், கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். சூடான் நாட்டின் அதிபர் அல் பசீர், தெற்கு சூடானில் இலட்சக்கணக்கான மக்களின் படுகொலைக்குக் கார ணமானவர் என்ற குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டு, பன்னாட்டுக் குற்ற இயல் நீதிமன்றத்தில் அவர் மீது குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டு, அவர் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இன்றைக்குச் சூடானை விட்டு வேறு எங்கும் வெளியில் வர முடியாமல் பதுங்கிக் கிடக்கிறார்.
இவற்றையெல்லாம் விடக் கொடூரமான நிகழ்வுகள் அல்லவா முள்ளிவாய்க் கால்?
வழங்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின்போது ஐரோப்பியக் கண்டத்தை யே அஞ்சி நடுங்கச் செய்த கோயரிங், தீர்ப்பைக் கேட்டுத் தற்கொலை செய்து
கொண்டான். அதைப்போல, இந்தச் சிங்களக் கொடியோரை, சர்வதேச நீதிமன் றத்தின் குற்றக்கூண்டில் நிறுத்த வேண்டும் என்ற உறுதியோடு நாம் இங்கே கூடி இருக்கின்றோம்.
1942 ஜனவரி 23 ஆம் தேதி, ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடா பெஸ்ட் நகரில், நான்கு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டவன் சாண்ட்ரோ கேப்பி ரோ. கடந்த ஆண்டு, அவனுக்கு வயது 97. ஆயினும் அவனை அடையாளம் கண்டு கைது செய்தார்கள். எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு அவன் குற்றக் கூண்டிலே நிறுத்தப்பட்டான். அவனால், நடக்க முடியவில்லை, செவிகள் கேட்கவில்லை, பார்வை மங்கி விட்டது. வயது 97. எழுபது ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம். ஆனால், அவனைக் கூண்டிலே நிறுத்தி விட்டார் கள். அதைப்போலத்தானே, எட்டுத் தமிழ் இளைஞர்கள், அம்மணமாக இழுத்து வரப்பட்டு, பின்னந்தலையில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அந்தக் காட்சி களை இங்கே சித்தரித்து வைத்து இருக்கிறார்கள் ஆருயிர்ச் சகோதரர் ஜீவனும், மணிமாறனும்.
1995 ஆம் ஆண்டு, ஜூலை 17 ஆம் நாள். சிரபெரெனிகா.இந்த ஊரின் பெயரும் இன்றைக்கு உலகம் முழுமையும் ஒலிக்கின்றது. அங்கே போஸ்னிய முஸ் லிம் இளைஞர்கள் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சேனல் 4 காட்டியதே, ஈழத்தமிழ் இளைஞர்கள் படுகொலைக் காட்சிகளை அதைப்போலத்தான்
அன்றைக்கு அங்கே நடந்தது.
இந்தக் கொலைகளைச் செய்த இராணுவப் பிரிவுக்குப் பெயர் ஸ்கார்பியன்ஸ்- கொடுந்தேள்கள். அன்றைக்கு அந்த இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது,
உலகத்துக்குத் தெரியாமலே போய்விட்டது. உண்மை புதைக்கப்பட்டு விட்டது. இனி எவருக்கும் தெரியாது என்று நினைத்தார்கள். பத்து ஆண்டுகள் கழிந்தன.
அந்தக் கொலைகாரர்களுள் ஒருவன்,இதைப் படம் பிடித்து வைத்து இருந்தான். அந்த சாட்சியம் வெளியே வந்து விட்டது. அதைச் செய்த ஆறுபேர், பெல்கிரே டிலே கூண்டில் நிறுத்தப்பட்டார்கள். அவர்களுக்கு 58 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
1992 முதல் 1995 க்குள், செர்பியாவில், ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டனர். இருபது லட்சம் பேர், புகலிடங்களை இழந்தனர். குறிப்பிட்ட ஒரே இடத்தில்
மட்டும் 8,000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இந்தப் படுகொலைகளுக்குக் காரணமான ராட்கோ மிலாடிக், கைது செய்யப்பட்டு கூண்டில் நிறுத்தப்பட் டான்.நேற்றைய தினம், ஹேக் நகரில் உள்ள, அனைத்துலக நாடுகளின் குற்ற வியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று இருக்கின்றது. அவன் மீது
இனப்படுகொலைக் குற்றச்சாட்டு. அதை அவன் மறுத்தான். அந்த நீதிமன்றத் துக்கு வெளியில் 25 சகோதரிகள் வந்து நின்றார்கள். Mothers of Srebrenica சிரபெ ரெனிகாவின் அன்னையர் என்ற அட்டையை ஏந்திக்கொண்டு வந்து, முழக்கங் களை எழுப்பினார்கள். இந்தக் கொடூரமான கொலையாளியைத் தப்ப விட்டு விடாதீர்கள். அவனைத் தண்டியுங்கள் என்று வெறும் 25 பெண்கள் வந்து முழங்கினார்கள்.
தமிழர்களாகிய நாம், இந்தப் புவியெங்கும் இருக்கின்றோம். 2008 ஆம் ஆண்டு
நடத்திய படுகொலைகளுக்காக, செர்பிய ஜனாதிபதியாக இருந்த ரோடோவன்
கராட்சிக், கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். சூடான் நாட்டின் அதிபர் அல் பசீர், தெற்கு சூடானில் இலட்சக்கணக்கான மக்களின் படுகொலைக்குக் கார ணமானவர் என்ற குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டு, பன்னாட்டுக் குற்ற இயல் நீதிமன்றத்தில் அவர் மீது குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டு, அவர் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இன்றைக்குச் சூடானை விட்டு வேறு எங்கும் வெளியில் வர முடியாமல் பதுங்கிக் கிடக்கிறார்.
இவற்றையெல்லாம் விடக் கொடூரமான நிகழ்வுகள் அல்லவா முள்ளிவாய்க் கால்?
2009 ஆகஸ்ட் மாதம், சேனல் 4 தொலைக் காட்சி வெளியிட்ட காட்சிகளை நினைத்துப் பாருங்கள். எட்டுத் தமிழ் இளைஞர்களின் கண்களைக் கட்டி, கை களைப் பின்புறமாகக் கட்டி,அம்மணமாக இழுத்து வந்து, எட்டி மிதித்து, மண்டி யிட்டு உட்கார வைத்து, எட்டுப் பேரின் பிடறிகளிலும் சுட்டுக் கொன்றார்களே, இரத்த வெள்ளத்தில் துடிதுடித்துச் செத்தார்களே? இந்தக் காட்சிகள் உண்மை தானா என்று சரிபார்த்து விட்டு, ஐ.நா. சபை நிபுணர் ரிச்சர்டு ஹெய்ன்ஸ் சொன்னார், இது உண்மைதான் என்று.அதிர்ச்சி அடைந்தேன். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சொன்னார். கடந்த ஆண்டு, மனித உரிமை கள் கவுன்சிலில், இது கொடூரமான இனப்படுகொலை என்றும் குறிப் பிட்டார். சேனல் 4 தொலைக்காட்சியின் மற்றொரு செய்தியாளர் சொன்னார்:
இதைவிடக் கொடூரமான காட்சிகள் எங்களிடம் இருக்கின்றன. அதில், பெண் கள் கூட்டம் கூட்டமாக அம்மணமாக இழுத்து வரப்பட்டுச் சுட்டுக்கொலை
செய்யப்பட்ட அந்தக் காட்சிகளை எங்களால் வெளியிட இயலாது, மனம் தாங்காது என்று குறிப்பிடுகிறார்.
2010 நவம்பர் 30ஆம் தேதி அவர்கள் மற்றொரு காட்சியை ஒளிபரப்பினார்கள். தன் ஐந்து மாதக் குழந்தை அகல், துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பறிகொடுத்த
இசைப்பிரியா, கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். மிருகங்கள் கூட இப்படிச் செய்யாது.அம்மணமாக, குற்றுயிரும், குலையுயிருமாகக் கிடக் கின்ற பெண்ணைப் பார்த்து, கெக்கலி கொட்டி, ஏளனம் செய்தார்கள்; எப்படிக் கற்பழித்தோம் என்று சிங்கள மொழியில் விவரிக்கின்றார்கள் என்று சேனல் 4
காட்டியது. இதைவிடக் கொடிய நிகழ்வுகளை வேறு எங்கே பார்க்க முடியும்?
தொடரும் .......
No comments:
Post a Comment