Sunday, July 7, 2013

இயற்கை எரிவாயு விலைக் கொள்கை(ளை?)

சங்கொலி தலையங்கம்

மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு பன்னாட்டு நிதிநிறுவனங்கள், உள்நாட்டுப்
பெரு முதலாளிகளுக்கான அரசு என்பதை மீண்டும் மீண்டும் மெய்ப்பித்து வரு கின்றது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து
கடந்த ஒன்பது ஆண்டுகளாகக் கடைபிடிக்கப்பட்டு வரும் நாசகார பொருளா தாரக் கொள்கைகளால் ரூபாயின் மதிப்பு 60.73 என்ற அளவுக்கு வரலாறு காணாத வீழ்ச்சியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றது.

இதையே காரணம் காட்டி இந்த அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு
விலைகளைத் தாறுமாறாக உயர்த்திக் கொண்டே போகிறது. பணவீக்கம் விகிதம் அதிகரிப்பதால் விலைவாசி கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் கடுமை யாக உயர்ந்து விட்டது. சாதாரண, ஏழை, எளிய மக்கள் மட்டுமின்றி மாத
ஊதியம் பெறுவோர்கூட சமாளிக்க முடியாத அளவுக்கு விலைவாசி ஏற்றம் நாளுக்கு நாள் மக்களை வாட்டி வதைக்கிறது.
ஆனால், மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு இதைப் பற்றியெல்லாம் பெரிதாக
அலட்டிக் கொள்ளவே இல்லை. பொருளாதார சீர்திருத்தங்கள் என்ற பெயரால்
நாட்டின் இயற்கை வளங்களைத் தனியார் பெரு முதலாளிகள் கொள்ளை அடிக்கவும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் நிறுவனங்களிடம் தாரை வார்க்கவும் திட்டமிட்டு அதை நடைமுறைப் படுத்துவதில்தான் அக் கறை காட்டி வருகின்றது.

இந்தியாவின் முன்னணி நிறுவனமும் மத்திய ஆட்சியாளர்களுக்கு ‘நெருங் கிய’ பெரு முதலாளி முகேஷ் அம்பானியின் நிறுவனமுமான ரிலையன்ஸ்
நிறுவனத்திற்காக, இயற்கை எரிவாயு விலையை அதிகரிக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இது மிகப் பெரிய ஊழலுக்கு வழிவகுக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பின ருமான குருதாஸ் தாஸ்குப்தா பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

மத்தியப் பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி இந்தப் புகாரை மறுத்து வந்தவர் திடீரென்று பெட்ரோலியத் துறை அமைச்சர்களாக யார்
பொறுப்பேற்றாலும் அவர்கள் மிரட்டப்படுவதாகப் பகிரங்கமாகக் கூறினார்.
ஆனால், யாரால் மிரட்டப் படுகிறார்கள் என்பதை அவரால் கூற முடிய வில்லை. அதைப் பகிரங்கப்படுத்தவும் முடியாது. அப்படி அந்த உண்மையை
வெளிப்படுத்தினால், வீரப்ப மொய்லி மத்திய அமைச்சராக நீடிக்க முடியாது.

ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சாதகமான முடிவுகளை எடுக்க ‘நிர்பந்தங் கள்(?)’ வந்தபோது, அதை அலட்சியம் செய்த பெட்ரோலியத் துறை அமைச் சர் கள் மணிசங்கர் அய்யர், ஜெயப்பால் ரெட்டி மற்றும் முரளீதர ராவ் போன்றோர்
பெட்ரோலிய அமைச்சரவையிலிருந்து தூக்கி வீசப்பட்டனர்.

நாட்டின் இயற்கை எரிவாயு மிக அதிகமாகக் காணப்படும் கிருஷ்ணா-கோதா வரி படுகையில், எரிவாயு எடுப்பதற்கான ஒப்பந்தத்தை முகேஷ் அம்பானி யின் ரிலையன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் பெற்றிருந்தது. கிருஷ்ணா-கோதாவரி படுகையில் (KG Basin - D6) எரிவாயு எடுக்கப் போடப்பட்டிருந்த ஒப் பந்தத்தை விட குறைவாகவே ரிலையன்ஸ் இந்தியா நிறுவனம் உற்பத்தி செய்துள்ளது.

மேலும் ரிலையன்ஸ் ஒப்பந்தம் பெற்றிருந்த எரிவாயு படுகையில் பல முறை கேடுகளைச் செய்துள்ளதாகவும், வளம் நிறைந்த எரிவாயு படுகை ஒப்பந்தத் தின் மூலம் தமது பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை
செய்து கொள்ளை லாபம் ஈட்டி வந்ததாகவும், இந்தியத் தலைமைக் கணக்கு
தணிக்கையாளர் (Comptroller and Auditor General - CAG ) மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இயக்குநர் (Directorate General of Hydrocarbons - DGH) ஆகியோர் குற்றம் சாட்டினர்.

2011-12 ஆம் ஆண்டுகளில் எரிவாயு உற்பத்தியை ஒப்பந்தப்படி நிறைவேற்ற
முடியாததால் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஒரு பில்லியன் டாலர் (இன் றைய ரூபாய் மதிப்பில் சுமார் 6,073 கோடி) அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது.
ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து அபராதத் தொகையை வசூல் செய்வதற் குப் பதிலாக, காங்கிரஸ் அரசு ரிலையன்ஸ் கோரிக்கையை ஏற்று இயற்கை எரிவாயு விலையை உயர்த்தி இருக்கின்றது.

காங்கிரஸ் அரசு பெரு முதலாளிகளுக்கானதே தவிர, இந்திய மக்களுக்கான அரசு அல்ல என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவை இல்லை. கடந்த ஜூன் 27- ஆம் தேதி பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழுக் கூட்டத்தில், இயற்கை எரிவாயு விலை உயர்வு முடிவு எடுக்கப்பட்டதாக நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார்.

தற்போது இயற்கை எரிவாயு விலை ஒரு மில்லியன் பிரிட்டீஷ் தர்மல் யூனிட் டுக்கு 4.2 டாலர் என்று இருப்பதை இரு மடங்கு உயர்த்தி 8.4. டாலராக 2014 ஏப்ரல் மாதம் முதல் எரிவாயு உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்படும். பொதுத்துறை நிறுவனங்களான ஓ.என்.ஜி.சி., ஆயில் இந்தியா மற்றும் தனி யார் நிறுவனமான ரிலையன்ஸ் போன்றவை இயற்கை எரிவாயு உற்பத்தி யில் ஈடுபட்டுள்ளன.

இந்நிறுவனங்களிடமிருந்து மத்திய அரசு எரிவாயுவை விலைகொடுத்து வாங் கிக் கொள்கிறது. தற்போது ஒரு யூனிட் எரிவாயு ரூ. 247/- விலை கொடுக்கப் படுகிறது. அடுத்த ஆண்டு முதல் ரூ. 495/- கொடுக்க வேண்டும். அரசின் இந்த முடிவால் பொதுத்துறை நிறுவனங்களும் பயன்பெறும் என்று மத்திய அரசு கூறுகிறது.ஆனால், உண்மை நிலை, நாட்டின் இயற்கை எரிவாயு உற்பத்தி யில் 80 சதவீதம் ரிலையன்ஸ் மற்றும் சில தனியார் நிறுவனங்களுக்குத்தான் உரிமம் வழங்கப்பட்டிருக்கின்றது.

மத்திய அரசின் முடிவை அறிவித்த நிதி அமைச்சர் ப. சிதம்பரம், உள்நாட்டில்
இயற்கை எரிவாயு உற்பத்தியில் மந்த நிலை உள்ளதால், இந்தத் துறையில்
முதலீடுகளை ஈர்க்கவும் எரிவாயு விலை உயர்வு பயன்படும் என்று கூறியி
ருக் கின்றார். நாட்டின் எரிவாயுத் தேவையில் 70 சதவீதம் உள்நாட்டிலேயே
உற்பத்தி ஆகிறது. இருந்தபோதிலும், எரிவாயுவை உற்பத்தி செய்ய உரிமம்
அளிக்கப்பட்ட ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தப்படி நடந்து கொள்ளாததால்
அரசுக்குப் பெரும் நட்டம் ஏற்பட்டு வருகின்றது.

ரிலையன்ஸ் நிறுவனத்திற்குப் போடப்பட்ட அபராதத் தொகை 2011-12 இல் ஒரு பில்லியன் டாலர் (ரூ. 6,037 கோடி). இதே அடிப்படையில் 2012-13 ஆம் ஆண்டிற்கு 4.17 பில்லியன் டாலர் (ரூ.25,324 கோடி); 2013-2014 ஆம் ஆண்டிற்கு 3 பில்லியன் டாலர் (ரூ. 18,219 கோடி) அபராதம் விதித்திருக்க வேண்டும். ஆனால்,  மன்மோகன் சிங் அரசு ரிலையன்ஸ் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று அந்நிறுவனம் இலாபம் அடைய எரிவாயு விலையை உயர்த்தி இருக் கின்றது.

பிரதமரின் பொருளாதார ஆலோசகர் ரங்கராஜன் உருவாக்கிய வழிகாட்டு முறையை அடிப்படையாகக் கொண்டு இயற்கை எரிவாயு விலை நிர்ணயம்
செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆனால், உல கின் வேறு எந்த நாடுகளிலும் இவ்வளவு தொகை எரிவாயுவிற்கு நிர்ணயிக்கப்
படவில்லை.

2010-ஆம் ஆண்டில் எரிவாயு விலை 1.79 டாலரிலிருந்து 4.2 டாலராக உயர்த்தப் பட்டது. தற்போது இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவ னத்திற்கு மட்டுமே இலாபம் தரும் வகையில் 2008-ஆம் ஆண்டிலிருந்து 300 மடங்கு தற்போது விலை உயர்த்தப்பட்டு இருக்கின்றது. இது மட்டுமின்றி
இயற்கை எரிவாயு விலையைப் படிப்படியாக உயர்த்தி 15 டாலர் என்ற அளவுக் கு வழங்க வேண்டும் என்றும் ரிலையன்ஸ் கோரி உள்ளது. மத்திய அரசு இதை யும் நிறைவேற்றினாலும் வியப்பு இல்லை.

இயற்கை எரிவாயு விலை உயர்வின் காரணமாக எரிவாயுவைப் பயன்படுத்தி
உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் உற்பத்திச் செலவு (Gas plant energy production cost) அதிகரித்து விடும். தற்போது எரிவாயு மின்சாரத்தின் விலை ஒரு யூனிட் ரூ. 5.20 ஆகும். எரிவாயு விலை உயர்வினால் ஒரு யூனிட் ரூ. 6.40 என்று
அதிகரிக்கும். இதனால் மின் கட்டணம் உயர்ந்து மக்கள் தலையில்தான் சுமை
ஏற்றப்படும்.

இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தும் உர ஆலைகள் இந்த விலை உயர்வி னால் கடுமையாகப் பாதிக்கப்படும். உர ஆலைகளின் உற்பத்திச் செலவு கூடும் போது, யூரியா மற்றும் இரசாயன உரங்களின் விலையையும் உர நிறுவனங் கள் தாறுமாறாக உயர்த்தி விடும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் இரசாயன உரங்களின் விலை மூன்று, நான்கு
மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கடும் பாதிப்பிற்கு உள் ளானார்கள். தற்போது மேலும் யூரியா, உரம் விலை ஏறினால் விவசாயிகள்
வேளாண்மைத் தொழிலை விட்டு வெளியேறிவிட வேண்டியதுதான். மேலும் உர ஆலைகளுக்கு மத்திய அரசு அளிக்கும் மானியமும் சுமார் ரூ. 2,500 கோடி
அதிகரித்து விடும்.

மத்திய அரசின் இயற்கை எரிவாயு விலைக் கொள்கை முடிவு எந்த வகை யிலும் நியாயப்படுத்த முடியாதது ஆகும். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பதவிக்காலம் இன்னும் 10 மாதங்களே உள்ளன.இதற்குள் எந்தெந்த வகையில் எல்லாம் பன்னாட்டு நிறுவனங்களுக் கும், உள்நாட்டுப் பெரு முதலாளிகளுக்கும் நாட்டின் வளங்களைக் கூறு போட்டு வேகவேகமாக விற்கலாம் என்று சிந்தித்தபடியே உள்ளனர்.

மன்மோகன் சிங் அரசின் மக்கள் விரோதக் கொள்கை முடிவுகளை மாற்ற முடியாது.ஒரேயடியாக இந்த அரசைத் தூக்கியெறிவது மட்டுமே நாட்டுக்கு நலன்பயப்பதாக இருக்கும். மக்களுக்கு நன்மை தருவதாக இருக்கும்.

No comments:

Post a Comment