மாற்று சக்தி மறுமலர்ச்சி தி.மு.கழகம்தான் என
மக்கள் மன்றம் பேசுகின்றது; புறம் சிறப்பாக இருக்கின்றது;
அகப்பணிகளை ஆற்றுங்கள்; அமைப்புகளை வலுப்படுத்துங்கள்!
மறுமலர்ச்சி தி.மு.க. இளைஞர் அணி மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள்,துணை அமைப்பாளர்கள் கூட்டம் 22.06.2013 அன்று தாயகத் தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்றோர் ஆற்றிய உரைகளில் இருந்து...
வே. ஈஸ்வரன் (மாநில இளைஞர் அணிச் செயலாளர்):
தமிழ் இனத்தைக் காக்கவும், தமிழகத்தை வளப்படுத்தவும், கடந்த இருபது
ஆண்டுகளாக நாம் பாடுபட்டுக் கொண்டு இருக்கின்றோம்.இன்றைக்குத் தமி ழக அரசியல் களத்தில்,எந்தக் கொள்கைகளைப் பேச வேண்டும்? எதற்காகப் போராட வேண்டும்? என்ற அடிப்படையை எடுத்துக் கொடுப்பது மறுமலர்ச்சி
தி.மு.கழகம்தான். ஈழத்தமிழர்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது
கழகம்தான். அதன் விளைவாகத்தான்,இன்றைக்குத் தமிழகத்தின் அனைத்து
அரசியல் கட்சிகளும், அதைப் பற்றிப் பேசுகின்ற நிலைமை உருவாயிற்று.
அதைப்போலத்தான், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை.அதற்கான போராட்டக் களத்தை அமைத்ததும் மறுமலர்ச்சி தி.மு.கழகம்தான்.
தற்போது, தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் சேருகின்ற மாணவர்களின் எண்ணிக்கை 36 விழுக்காடுதான். அரசுப் பள்ளிகளால் மாணவர்களை ஈர்க்க
முடியவில்லை. அரசின் கல்விக் கொள்கை தோற்று விட்டது. அதைப் போலத் தான் அரசு மருத்துவமனைகள்.அங்கே செல்லுகின்ற மக்கள் படுகின்ற வேதனைகள் கொஞ்சநஞ்சம் அல்ல.மருத்துவக் கொள்கையும் தோல்விதான்.
விவசாயம் அழிந்து கொண்டு இருக்கின்றது. விவசாயத்தைக் கைவிட்டு, நகரங்களுக்குச் சென்று கூலி வேலைகள் செய்கிறார்கள். 2008 ஆம் ஆண்டில் தமிழகத்தில் சாலை விபத்துகளில் இறந்தவர்கள் 8000 பேர் என்றால், 2013 இல், 16,000 பேர் சாகின்றார்கள். பாதுகாப்பான சாலைப் பயணத்தை அரசு உருவாக் கித் தர முடியவில்லை; சாலை விபத்துகளைக் குறைக்க முடியவில்லை.
ஆட்சிகள் மாறுகின்றன என்றால், வாங்குகின்ற கமிசனின் அளவுதான் மாறு கின்றது. அவர்கள் ஆட்சியில், 10 விழுக்காடு என்றால், இவர்கள் 20 விழுக்காடு. அரசின் ஒவ்வொரு துறையையும் கூறு போட்டுக் கொள்ளை அடித்துக் கொண் டு இருக்கின்றார்கள்.இந்த நிலையை நாம் மாற்றியாக வேண்டும். தமிழகத்தை ஆளும் பொறுப்பை ம.தி.மு.க கைப்பற்ற வேண்டும்.
நாம் பதவிகளைப் பற்றிக் கவலைப் பட்டது இல்லை. இருபது ஆண்டுகளாக
எந்தப் பதவிகளிலும் இல்லை; இனி எப்போது பதவிகள் கிடைக்கும் என்ற உறுதியும் இல்லை. இருப்பினும், இலட்சக்கணக்கான தொண்டர்கள் இந்த
இயக்கத்தில் தன்னலம் கருதாமல் இயங்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.
எனவேதான், தெருவில் நடந்து செல்லுகின்றபோது, தமிழக மக்கள் நமக்கு அளிக்கின்ற மரியாதை, வேறு யாருக்கும் கிடையாது. (கைதட்டல்).நம்மைப் பற்றி யாரும் தவறாகப் பேசுவது இல்லை. குறை சொல்லுவது இல்லை.நமது தலைவரை மட்டுமே, நேர்மையான தலைவர் என்று புகழ்கின்றார்கள். உங் களால் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லையே என்றுதான் வருத்தப்படு கின்றார்கள்.
நம் எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கின்றது. மறுமலர்ச்சி திராவிட முன் னேற்றக் கழகத்தின் தொண்டர்களுக்கு மட்டும் அல்ல; உலகெங்கும் வாழு கின்ற தமிழ் மக்கள் எல்லோருக்கும் அந்தக் கனவு இருக்கின்றது; தமிழகத்தின் முதல்வராக தலைவர் வைகோ அவர்கள் வர வேண்டும் என்பதுதான் அந்தக் கனவு. அதை நிறைவேற்றுவதற்காக, ஒரு மிகப்பெரிய வேள்வியில் நம்மை ஒப்படைத்துக் கொள்ள வேண்டும்.
மாவோவின் அழைப்பை ஏற்று, தொடக்கத்தில் அவர் பின்னால் வந்தவர்கள் நான்கு பேர்கள்தாம். அதைப் பார்த்து மாவோ தளர்ந்து விடவில்லை. என்னால் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் காட்ட முடியும் என்ற நம்பிக்கையை அவர்கள் மனதில் விதைத்தார். நான்கு பேர்கள் என்ற எண்ணிக்கை, நானூறாக உயர்ந் தது; நாடு முழுவதும் பரவியது; சீனப்புரட்சி மலர்ந்தது. அதைப்போல, மறு மலர்ச்சி தி.மு.கழகத்தால் மட்டுமே தமிழகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும்;தமிழ் இனத்தைக் காக்க முடியும் என்ற வைராக்கியம் இருந்தால், நம்மாலும் சாதிக்க முடியும். அதற்காக எந்தத் தியாகத்தையும் செய்வதற்கு நாம் ஆயத்தமாக வேண்டும்.
நாம் ஒன்றும் நாள் முழுவதும், 24 மணி நேரமும் உழைத்துக் கொண்டு இருக்க
வில்லை. ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் இந்த இயக்கத்தின் வளர்ச்சி யைப் பற்றிச் சிந்தித்தால் போதும்; செயல் பட்டால் போதும். நமது தலைவர்
வைகோ அவர்களது உழைப்பில் ஒரு பத்து விழுக்காடேனும் நாம் செய்து
காட்ட வேண்டும். கழகத்தின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். புதிய இளைஞர்களை நமது இயக்கத்தில் சேர்க்க வேண்டும். அடுத்த ஆறு மாத
காலத்துக்குள், ஒரு இலட்சம் இளைஞர்களை நமது இயக்கத்தில் சேர்த்துக் காட்டுவோம். மாற்று சக்தியாக மக்கள் நம்மை ஏற்றுக் கொள்வார்கள்!
க. அழகுசுந்தரம் (கொள்கை விளக்க அணிச் செயலாளர்)
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்படைகளாம் இளைஞர்
அணி, மாணவர் அணி, தொண்டர் அணிப் பொறுப்பாளர்களாகிய உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அண்மையில் ஜனசக்தி நாள் இதழில் வெளியாகி இருந்த ஒரு சிறப்புக் கட்டுரையில், வரப்போகும் நாடாளுமன்றத் தில், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் யாருக்கு வெற்றி வாய்ப்பு என் பதை அலசி ஆராய்ந்து எழுதி இருக்கின்றார்கள்.தமிழகத்தைப் பற்றி எழுதும் போது, ‘இந்திய தேசியம் வீரியம் இழந்து, தமிழ்த் தேசியம் தலைதூக்கி இருக் கின்றது’ என்று எழுதி இருந்தார்கள். அடுத்து, தமிழ் ஆழி என்ற ஏடு நடத்திய தமிழ் ஆழி கருத்துக்கணிப்பில், தமிழ்த் தேசியச் சிந்தனையாளர்களில், தமிழ்த் தேசிய அமைப்புகளுக்குத் தலைமை தாங்கி, ஆளுங்கட்சி,ஆளுகின்ற கட்சிக்கு ஒரு மாற்றாக உருவாகக் கூடிய வாய்ப்பு யாருக்கு இருக்கின்றது? என்கின்ற
போது, அந்தக் கருத்துக்கணிப்பில் பங்கு ஏற்றவர்களுள் 65 விழுக்காட்டினர்
நம்முடைய தலைவர் வைகோ அவர்களைத்தான் தேர்வு செய்து இருக்கின் றார்கள். எனவே, வருகின்ற காலம், வைகோவின் காலம்தான்.அதற்கான களப்பணிகளில் நாம் முனைப்போடு பணி ஆற்றுவோம்.
மல்லை சத்யா துணைப் பொதுச்செயலாளர்
கடந்த 15 நாள்களாக, காஞ்சி மாவட்டச் செயலாளர் மற்றும் முன்னணி யின ரோடு சேர்ந்து, நாங்கள் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு இருக்கின்றோம். நாங்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் மக்கள் மகிழ்ச்சியோடு தருகின்றார்கள்.
அப்போது அவர்கள் சொல்கின்ற கருத்துகளை எல்லாம் தொகுத்து எழுதினால், ஒரு புத்தகமே போடலாம். சோழிங்கநல்லூரில் ஒரு கடைக்குச் சென்று இருந் தோம். 25,000 ரூபாய் கொடுத்த ஒருவர், அடுத்து எத்தனை ரூபாய்ச் சீட்டு வைத்து இருக்கின்றீர்கள்? என்று கேட்டார்.
10,000 ரூபாய் சீட்டு இருக்கின்றது என்றோம். அதிலும் ஒரு சீட்டு கொடுங்கள் என்று சொல்லி, மேலும் 10,000 கொடுத்தார். அத்துடன் நிற்காமல், ‘தமிழ் நாட் டில் நிதி பெறுகின்ற தகுதி, மறுமலர்ச்சி தி.மு.கழகத்துக்கு மட்டும்தான் இருக் கின்றது’ என்று மகிழ்ச்சியோடு சொன்னார். அத்தகைய மதிப்பை நாம் பெற்று இருக்கின்றோம்.
இன்றைக்குத் தமிழகத்தில் உண்மையான ஜனநாயக இயக்கம் எது? என்று கேட்டால், அது மறுமலர்ச்சி தி.மு.கழகம்தான். மற்றவை அனைத்தும், வாரிசு களை வளர்க்கின்ற, குடும்ப நலனுக்காக மட்டுமே இயங்குகின்ற இயக்கங் களாக மாறி விட்டன. தமிழக அரசியலில், சாதி, மத உணர்வுகளுக்கு அப்பாற் பட்ட இயக்கம் நமது இயக்கம்தான். திராவிட இயக்கத்தில் நிலைத்த புகழைப் பெற்று இருக்கின்ற இயக்கம் நமது இயக்கம்தான்.
புறம் வெகு சிறப்பாக இருக்கின்றது.அடுத்த முதல்வர் வைகோதான் என்ற
நம்பிக்கை மக்கள் மனதில் ஏற்பட்டு விட்டது. ஒரு இலட்சம் இளைஞர்களைச்
சேர்க்க வேண்டும் என்று இங்கே தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றீர்கள்:
ஈடுபாட்டோடு பணி ஆற்றினால், ஒரு இலட்சம் அல்ல; பத்து இலட்சம் இளைஞர்களை உங்களால் திரட்ட முடியும். அதற்கான வாய்ப்புகள் கனிந்து
இருக்கின்றன.
விழுப்புரம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வீ.சீத்தாபதி:
திராவிட முன்னேற்றக் கழகத்தை அண்ணா உருவாக்கி, 18 ஆண்டுகள் கடந்த பின்னர்தான், பட்டம் பதவிகள் வந்து சேர்ந்தன. நாம் இந்த இயக்கத்தை உரு வாக்கி 19 ஆண்டுகள் கடந்து விட்டன. இனி நமது வெற்றிப்பயணம் தொடரும். இந்தக் கூட்டத்துக்கான அறிவிப்பு வந்தபிறகு, எங்கள் மாவட்டத்தில் உள்ள இளைஞர் அணிப் பொறுப்பாளர்கள் அனைவரையும் தொடர்பு கொண்டேன். முதலில், பொறுப்பாளர்களாக இருப்பவர்கள் அனைவரும் கழகத்தின் வாழ் நாள் உறுப்பினர்களாக ஆக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு உள்ளேன்.
கடலூர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கண்ணன்:
கடலூர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கண்ணன்:
எங்கள் மாவட்டத்தில் உள்ள ஆறு நகரங்களுக்கு அமைப்பாளர்கள், துணை
அமைப்பாளர்களை நியமித்து விட்டோம். 29 ஒன்றியங்கள் உள்ளன.அதில் 23 ஒன்றியக் கழகங்களில் அமைப்பாளர்களை நியமித்து விட்டோம். ஒரு பேரூர் கழகத்தில் நியமித்து விட்டோம்; மற்ற பேரூர்களில் முயற்சிகளை மேற் கொண்டு உள்ளோம். ஒட்டு மொத்தமாக, 98 பொறுப்பாளர் களை நியமித்து இருக்கின்றோம். இங்கே குறிப்பிட்டு உள்ள ஒரு இலட்சம் இளைஞர்கள் என்ற இலக்கை எட்டு வதற்கு, எங்கள் மாவட்டத்தில் அனைத்து முயற்சிகளையும்
மேற்கொள்வோம்.
மாநில இளைஞர் அணித் துணைச் செயலாளர் சீர்காழி மார்கோனி:
அமைப்பாளர்களை நியமித்து விட்டோம். 29 ஒன்றியங்கள் உள்ளன.அதில் 23 ஒன்றியக் கழகங்களில் அமைப்பாளர்களை நியமித்து விட்டோம். ஒரு பேரூர் கழகத்தில் நியமித்து விட்டோம்; மற்ற பேரூர்களில் முயற்சிகளை மேற் கொண்டு உள்ளோம். ஒட்டு மொத்தமாக, 98 பொறுப்பாளர் களை நியமித்து இருக்கின்றோம். இங்கே குறிப்பிட்டு உள்ள ஒரு இலட்சம் இளைஞர்கள் என்ற இலக்கை எட்டு வதற்கு, எங்கள் மாவட்டத்தில் அனைத்து முயற்சிகளையும்
மேற்கொள்வோம்.
மாநில இளைஞர் அணித் துணைச் செயலாளர் சீர்காழி மார்கோனி:
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, 150 இளைஞர்களை பொதுச் செயலாளர்
முன்பு கட்சியில் இணைத்தோம். கழக வளர்ச்சி நிதியாக, என் சொந்த நிதியாக
1 இலட்சம் ரூபாய் கொடுத்து உள்ளேன்.மேலும் இரண்டு இலட்ச ரூபாய் வசூல்
செய்து கொடுப்பேன். கரூர் மாநாடு வெற்றி கரமாக நடந்தது. நாங்கள் சுடர்
ஓட்டமாக அங்கே வந்து சேர்ந்தோம். கரூர் மாவட்டக் கழகத் தோழர்கள் சிறப் பாக ஏற்பாடு செய்து இருந்தார்கள்.அதைப் போல விருதுநகர் மாநாடு சிறப்பாக நடைபெறுவதற்காக, இன்று, ரூ10,000 தலைவர் அவர்களிடம் வழங்குகிறேன்.
திருவாரூர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மாசி அமைப்பாளர் மாசிலாமணி:
முன்பு கட்சியில் இணைத்தோம். கழக வளர்ச்சி நிதியாக, என் சொந்த நிதியாக
1 இலட்சம் ரூபாய் கொடுத்து உள்ளேன்.மேலும் இரண்டு இலட்ச ரூபாய் வசூல்
செய்து கொடுப்பேன். கரூர் மாநாடு வெற்றி கரமாக நடந்தது. நாங்கள் சுடர்
ஓட்டமாக அங்கே வந்து சேர்ந்தோம். கரூர் மாவட்டக் கழகத் தோழர்கள் சிறப் பாக ஏற்பாடு செய்து இருந்தார்கள்.அதைப் போல விருதுநகர் மாநாடு சிறப்பாக நடைபெறுவதற்காக, இன்று, ரூ10,000 தலைவர் அவர்களிடம் வழங்குகிறேன்.
திருவாரூர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மாசி அமைப்பாளர் மாசிலாமணி:
கடந்த முறை ஊராட்சி மன்றத்தலைவர் தேர்தலில்,250 வாக்குகளில் தோல்வி
அடைந்தேன். இம்முறை வெற்றி பெற்றுக் காட்டுவேன் என்ற முனைப்போடு பணி ஆற்றினேன்; வெற்றியும் பெற்றேன். எனக்கு உறுதுணையாக இருந்து பணி ஆற்றிய கழகத் தோழர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள் கின்றேன். அதுபோல, இங்கே அறிவிக்கப்பட்டு உள்ள இலக்கை எட்டுவதற் கும் நான் முயற்சிகளை மேற்கொள்வேன்.
திருச்சி புறநகர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பன்னீர்:
அடைந்தேன். இம்முறை வெற்றி பெற்றுக் காட்டுவேன் என்ற முனைப்போடு பணி ஆற்றினேன்; வெற்றியும் பெற்றேன். எனக்கு உறுதுணையாக இருந்து பணி ஆற்றிய கழகத் தோழர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள் கின்றேன். அதுபோல, இங்கே அறிவிக்கப்பட்டு உள்ள இலக்கை எட்டுவதற் கும் நான் முயற்சிகளை மேற்கொள்வேன்.
திருச்சி புறநகர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பன்னீர்:
கடந்த மே மாதம் 26 ஆம் தேதி, மண்ணச்ச நல்லூரில் அண்ணன் நடராசன் அவர்கள் பெயரில் கட்டப்பட்டு உள்ள திருமண மண்டபத் திறப்பு விழா,பொதுக் கூட்டம் நடைபெற்றது. அன்று, 450 இளைஞர்களை, தலைவர் வைகோ அவர் கள் முன்னிலையில் கழகத்தில் சேர்த்தோம். அதற்குப்பிறகு, அந்தப்பகுதியில் எங்களைச் சந்தித்த பல இளைஞர்கள், எங்களையும் அந்த நிகழ்ச்சிக்கு அழைக் கவில்லையே, நாங்களும் வைகோ முன்னிலையில் சேர்ந்து இருப்போமே என்று வருந்தினார்கள். எனவே, இளைஞர்கள் நமது இயக்கத்தில் சேர ஆர்வத் தோடு இருக்கின்றார்கள். எங்கள் ஒரு ஒன்றியத்தில் மட்டும் 450 என்றால்,
திருச்சி மாவட்டத்தில் 10,000 இளைஞர்களை உறுதியாகச் சேர்க்க முடியும். அந்தக் கணக்குப்படிப் பார்த்தால், தமிழகத்தில் குறைந்தது மூன்று இலட்சம் இளைஞர்களை நாம் திரட்ட முடியும்.எங்கள் மாவட்டச் செயலாளர் எங்க ளுக்கு உறுதுணையாக இருக்கின்றார்.
சேலம் ரவிகுமார்:
திருச்சி மாவட்டத்தில் 10,000 இளைஞர்களை உறுதியாகச் சேர்க்க முடியும். அந்தக் கணக்குப்படிப் பார்த்தால், தமிழகத்தில் குறைந்தது மூன்று இலட்சம் இளைஞர்களை நாம் திரட்ட முடியும்.எங்கள் மாவட்டச் செயலாளர் எங்க ளுக்கு உறுதுணையாக இருக்கின்றார்.
சேலம் ரவிகுமார்:
சேலம் மாவட்டத்தில் 21 ஒன்றியம், 33 பேரூராட்சி, 4 நகராட்சிகள் உள்ளன. அனைத்துப் பகுதிகளுக்கும் ஒருமுறை சுற்றுப் பயணம் சென்று வந்து விட் டோம். இன்னும் ஒரு மாத காலத்துக்குள், முழுமையாகப் பொறுப்பாளர்களை
நியமித்து விடுவோம்.
நியமித்து விடுவோம்.
தொடரும் ....
No comments:
Post a Comment