மே 18 ஆம் தேதி, உலகம் முழுமையும் தமிழன் இரத்தக்கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்கின்றான்.ஆனால், தமிழரின் இரத்தக் குளியல் நடத்திய இராஜ பக்சேவோடு இந்திய அரசு ஒப்பந்தம் போடுகிறது. எதற்காக அதை அனுப்ப வேண்டும்? தமிழர்களுக்குச் சொரணை இல்லை என்று கருதுகிறாயா? உணர் வுகள் மரத்துப் போய்விட்டன என்று கருதுகிறாயா? அந்தக் கொலைகாரனை இங்கே அழைத்து வந்து, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பரிவட்டம் கட்டுகிறாய்.
கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிக்கு, அவனைச் சிறப்பு விருந்தினராக அழைக்கின்றீர்களே, அவன் கேட்டதை எல்லாம் செய்து கொடுக்கின்ற நீ, ஈழத் தமிழர் இனப்படுகொலையில் ஒரு கூட்டுக் குற்றவாளி.மன்மோகன் சிங் தலைமையிலான, சோனியா காந்தி இயக்குகின்ற அரசு, நடைபெற்ற இனப் படுகொலையில் ஒரு கூட்டுக்குற்றவாளி. நாம் எப்படி மன்னிக்க முடியும்?
பாரிஸ் நகரில் இருக்கின்ற மோனாலிசா ஓவியத்தைப் பல நாடுகள் கேட்டுப் பார்த்தபோதும், பிரான்ஸ் நாடு அனுப்பவில்லை. அது 500 ஆண்டுகள் பழமை யான ஒரு ஓவியம் அவ்வளவுதான். நீ ஏன் அனுப்புகிறாய் என்று கேட்டு, ஒரு கடுமையான கண்டனக் கடிதத்தை, இன்றைக்கு நான் இந்தியப் பிரதமருக்கு அனுப்பி இருக்கின்றேன். பிஹார் முதல் அமைச்சர் அருமை நண்பர் நிதீஷ் குமாருக்கும் எழுதி இருக்கிறேன்.இதைக் கொண்டு போய்க் காட்டி,இராஜபக்சே மீது தவறு இல்லை என்று காட்டுவதற்கு இந்திய அரசு முயற்சிக் கின்றது.
அந்தத் திமிரில்தான், ‘தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற மாட்டோம்’ என்று நேற்று அவன் சொல்லி இருக்கிறான். அங்கே தமிழர் பகுதி யில் , 300 மீட்டருக்கு ஒரு சிங்கள இராணுவ சோதனைச் சாவடி, மூன்று கிலோ மீட்டருக்கு ஒரு இராணுவ முகாம்.கடவுள் வழிபாட்டில் ஈழத்தமிழர்கள் நம்பிக்கை கொண்டு இருக்கின்றார்கள். தமிழரின் வழிபாட்டுத் தலங்களில்
புத்தரின் சிலைகளைக் கொண்டு வந்து அமைத்து விட்டான். திருக்கேதீச்சரம் என்ற புகழ்மிக்க சைவ ஆலயத்தில், ஐம்பது மீட்டருக்கு உள்ளாக, ஒரு புத்தர்
கோவிலைக் கட்டி விட்டான்.
பலாலி உயர் பாதுகாப்பு வளையத்துக்குள் மட்டும், 88 சிலைகளை வைத்து விட்டார்கள். எல்லாம் பெளத்த மயம், எங்கும் விஹாரைகள். எதற்காக? கருணை,அன்பைப் போதிக்கவா? இது சிங்கள நாடு. இங்கே வேறு எவருக்கும் இடம் இல்லை என்று காட்டுவதற்காக.

தமிழர் தாயகம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று சொல்லிவிட்டான். புலி களை நாங்கள் ஒழித்து விட்டோம். இங்கே ஆதரவு இல்லை. வெளிநாடுகளில்
இருப்பவர்கள், தேவை இல்லாமல் கூச்சல் போடுகிறார்கள் என்கிறான். தமிழ கத்து இளைஞர்களே, உணர்வு கொள்ளுங்கள். இங்கே பல இளைஞர்கள் கருஞ் சட்டைப் பட்டாளமாக வந்து சேர்ந்தார்கள்.அவர்களை வரவேற்கிறேன். வெறும் 28 பேர்களோடு வன்னிக்காட்டுக்குள்ளே சென்ற பிரபாகரன், இலட்சம்
பேர் கொண்ட படையை எதிர்த்து நிற்கவில்லையா? அப்படி வீறுகொண்ட இளைஞர்கள் வருவார்கள்.
ஒரு பள்ளிக்கூட ஆசிரியராகப் பணி ஆற்றிய உமர் முக்தார், 88 வயதில் ஆயு தம் ஏந்திப் போராடவில்லையா? பாலைவனத்தில் பயணம் செய்யவில்லை யா? இறுதி மூச்சு அடங்குகின்ற வரையிலும் உறுதியோடு இருந்தாரே? தூக் கில் போடுவதற்கு முன்பு சொன்னார், உங்கள் சர்வாதிகாரி முசோலினிக்குச் சொல்லி வையுங்கள்; அவனது மரணம் மிகக் கொடுமையானதாக இருக்கும் என்று முன்கூட்டியே சொன்னார்.அதுபோலத்தானே நடந்தது. தூக்கில் போடப் பட்டபோது, அவரது மூக்குக் கண்ணாடி கீழேவிழுகிறது. ஒரு ஐந்து வயதுச் சிறுவன் அதைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறான்.அடுத்த கட்டத்தில் இளைஞர் கள் போராடினார்கள்.இத்தாலியிடம் இருந்து லிபியா விடுதலை பெற்றது.
இந்தக் கருத்துகளை எல்லாம் இங்கே சொல்லுவது,ஓட்டுக்காகவோ, பதவி வேட்டைக்காகவோ அல்ல.இவ்வளவு கொடுமைகள் நடந்து இருக்கின்றதே, பாடம் கற்பிக்க வேண்டாமா?
முன்பு விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசினாலே,தேசத்துரோகம் என்றார் கள். புலிகளை ஆதரித்துப் பேசினால், அரசியலில் முகவரி இருக்காது என்றார் கள். வைகோ வீணாகப் போனதே, புலிகளை ஆதரித்ததால் தான் என்றுகூடச் சொன்னார்கள்.அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.எவ்வளவு சோதனை கள் வந்தபோதும், நாங்கள் தொடர்ந்து புலிகளை ஆதரித்து வந்து இருக்கின் றோம். (பலத்த கைதட்டல்). இன்றைக்கு வீதியிலே தலைநிமிர்ந்து நடக்கின் றோம். நேற்றைக்கும் ஆதரித்தோம், இன்றைக்கும் ஆதரிக்கின்றோம், என் றைக்கும் ஆதரிப்போம் என்று பொடா நீதிமன்றத்திலேயே சொன்னோம்.
அந்தக் கட்டத்தில், கடையில் போய் புளி என்று கேட்டாலே புலி என்று கருதி உள்ளே போட்டு விடுவார்களோ என்று பயந்துபோய், பேசாமல் இருந்தவர் களைப் பற்றி எனக்குத் தெரியும். இன்றைக்கு அவர்கள், விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேச வந்து இருக்கின்றார்கள். வரவேற்கிறோம். மகிழ்ச்சி. உங்களு டைய பேட்டியைப் பார்த்தேன். சரியாகத் தான் இருக்கிறது. ஒப்புக் கொள் கிறேன்.

புலிகளை ஆதரித்தால் அரசியலில் முகம் இழந்து விடுவோம் என்று கருதிய வர்கள், இன்றைக்கு நீங்கள் தமிழ் ஈழத்தை ஆதரித்துப் பேச முன்வந்து இருக் கின்றீர்களே, இதுவே வெற்றிதான்.இல்லாவிட்டால், தமிழ் ஈழத்தைப் பார்க் காமல் நான் மறைவேனா என்று கோபாலபுரத்தார் சொல்லுவாரா? (பலத்த சிரிப்பு) பரவாயில்லை.
பொது வாக்கெடுப்பு என்ன? இங்கே தமிழ் இனமான நடிகர் ஆருயிர் சகோதரர் சத்யராஜ் அருமையாகச்சொன்னார். ஒருவன் மணிபர்சைத் திருடிக் கொண்டு
போய்விட்டான். காவல்நிலையத்தில் முறையிடுகிறோம். அதுபோல, ஈழத் தமிழர்களின் நாட்டை ஒருவன் ஆக்கிரமித்துக்கொண்டு நிற்கின்றான். உலகி லேயே பெரிய போலீஸ் ஸ்டேசன் ஐ.நா. சபை. அங்கே போய் முறையிட்டு இருக்கின்றோம்.
இங்கே உள்ளூரில் இருக்கின்ற இந்தியா என்கின்ற போலீஸ் ஸ்டேசன், ஆக்கி ரமிப்பாளனோடு சேர்ந்து கொண்டு விலைபோய்விட்டது. இந்திய அரசை எச்ச ரிக்கிறேன். இலங்கையின் ஒற்றுமையைக் காப்பாற்றப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டு, இந்திய ஒற்றுமையை அடியோடு இழக்கப் போகிறாய்.

தமிழக அரசு துணிந்து நடவடிக்கை எடுக்கட்டும்!
இரண்டு செய்திகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம்மை எளிதாக ஏமாற்றி விடலாம் என்று சிலர் கருதுகிறார்கள். ஜெனீவாவில் தீர்மானத்தை இந்தியா ஆதரித்து விட்டது என்பது ஒரு ஏமாற்று வேலை. முல்லைப்பெரியா றிலும் அதுதான். நீதிபதி ஆனந்த் குழு, ஏதோ நமக்குச் சாதகமாக அறிக்கை கொடுத்து விட்டது என்று தப்புக்கணக்குப் போட வேண்டாம். தாமஸ் நமக்குச் சாதகமாக அறிக்கை தந்து விட்டதாகவும்,தவறாகக் கருதி விடாதீர்கள்.
தமிழகத்துக்கு அது பெரும் பாதகமே என்று, நமது மூத்த பொறியாளர்கள் சங் கம் விளக்கமாக அறிக்கை அளித்து இருக்கின்றது. ஆபத்து காத்து இருக்கிறது. புதிய அணை கட்டப் போகிறோம் என்று சொல்லி, முல்லைப்பெரியாறு
அணையை உடைக்கின்ற வேலையில் ஈடுபட்டு வருகின்றார்கள். அதற்காகப் பணம் ஒதுக்கி வைத்து இருக்கின்றார்கள். அணையில் ஆய்வுக்காக, ஆழ மாகத் தோண்டிய எட்டுத் துளைகளை அடைக்க வேண்டாமா? இன்றுவரை அதை அடைக்க விடவில்லை.
முல்லைப்பெரியாறு அணையை மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாக்க வேண் டும் என்று கேட்டோம். மன்மோகன் சிங் ஏற்கவில்லை. அது நம்முடைய அணை. நான் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். அந்தத் துளைகளை
அடைப்பதற்கான ஆக்கபூர்வமான வேலையை, தமிழக அரசு துணிந்து எடுக்கட்டும்.
தமிழ் ஈழம் அமைப்பதற்காக, பொது வாக்கெடுப்பு கேட்கின்றீர்களே, இது சரி தானா? ஆம்.ஆயுதப்போராட்டம் நடத்திக்கேட்டோம்.தமிழ் ஈழத்தை அமைத்தே வைத்து இருந்தார்கள். அதை நீ குலைத்து விட்டாய். இப்போது, அறவழியில், ஜனநாயக வழியில் கேட்கிறோம். உலகத்தின் பல நாடுகளில் நடத்தி இருக் கின்றீர்கள் அல்லவா, அதுபோல நடத்துங்கள் என்று கேட்கிறோம்.
ஒவ்வொரு நாடும்,எப்படிப் பிறந்தது என்று சத்யராஜ் பேசினார்.இந்தியா எப்படி உருவானது. பிரிட்டிஷ் காரனின் இலத்திக் கம்புகளால் உருவானது. தந்தை
பெரியார் சொன்னதை நினைவூட்டுகிறோம்.இந்திய அரசின் போக்கு இப்படியே நீடிக்குமானால், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற குரல் மீண்டும் ஒலிக்கும். இதற்காக இன்னும் ஒரு வழக்கை வேண்டுமானால் போட்டுக் கொள். கவலை இல்லை.
1990 டிசம்பர் 23 பொது வாக்கெடுப்பு. 83 விழுக்காடு ஆதரவு. ஸ்லோவேனியா புதிய நாடு.
1991 ஜனவரி 17 பொது வாக்கெடுப்பு. 90 விழுக்காடு ஆதரவு. குரோஷியா தனி நாடு அதே ஆண்டில், மாசிடோனியாவில் பொது வாக்கெடுப்பு.தனி நாடாக மலர்ந்தது.
உக்ரேனில் பொது வாக்கெடுப்பு, அது தனி நாடு.
1993 இல் ஆறு இலட்சம் மக்களையே கொண்ட எரித்ரியாவில் பொது வாக் கெடுப்பு. அது தனி நாடு.
1994 இல் மால்டோவா பொது வாக்கெடுப்பு, அது தனிநாடு.
1999 ஆகஸ்ட் 30. கிழக்குத் தைமூரில் பொது வாக்கெடுப்பு. 78 விழுக்காட்டினர் ஆதரவு. அது தனி நாடு.
இந்த நாட்டுக்கான பொது வாக்கெடுப்பை நடத்தத் தூண்டியது யார் தெரியுமா? வரலாற்றின் விசித்திரத்தைப் பாருங்கள். போர்சுகல் நாட்டின் காலனியாக, இந்த கிழக்குத் தைமூர் உள்ளிட்ட இந்தோனேசியா இருந்தது.பின்னர் விடு தலை பெற்றது. இப்போது, இந்தோனேசியாவின் நுகத்தடிக்குக் கீழே நாங்கள் அடிமைகளாக இருக்க மாட்டோம் என்று கிழக்குத் தைமூர் விடுதலை கேட் டார்கள். அதற்காக வாக்கெடுப்பு நடத்த, போர்சுகல் நாடுதான் ஏற்பாடு செய்தது.
இப்போது, அதே கடமை இலங்கையை ஆண்ட பிரிட்டனுக்கு வந்து இருக்கின் றது. அந்தக் குற்ற உணர்ச்சி பிரித்தானிய மக்களுக்கு வந்து விட்டது. கூடங் குளத்தில் அணு உலை கூடாது என்று கூட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப் பினர்கள் குரல் கொடுக்கின்றார்கள். அதே இலண்டனில்தான், நள்ளிரவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டு, மகிந்தனை அங்கிருந்து அடித்து விரட்டினார்கள்.
அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேசுகின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தபோது, குற்றவாளி நீங்கள்தான் என்று சொன்னேன். நீங்கள்தான்
தமிழர்களை, சிங்களவர்களிடம் ஒப்படைத்து விட்டீர்கள்.அடிமை நுகத்தடி யைச் சுமக்க வைத்த நீங்கள்தான், இன்று இவ்வளவு கொடுமைக்கும், துயரத் துக்கும் காரணம். மேலே நான் குறிப்பிட்ட பல நாடுகளில், தமிழர்களுக்கு ஏற் பட்டது போன்ற உயிர்ச்சேதங்கள் இல்லை. தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை களைப் போல நடக்கவில்லை.
கிளிநொச்சியில் மடிந்த மாவீரர்களுக்காகப் புலிகள் கட்டிய துயிலகங்களை இடித்து விட்டு, இப்போது, சிங்கள இராணுவத்தின் கால்பந்தாட்டத் திடலாக ஆக்கி விட்டான்.அங்கே சிங்களவனின் வெற்றிப்பட்டயத்தைக் கல்வெட்டிலே பொறித்து இருக்கின்றான். இதற்கான ஒரு தீர்வை, ஒரு விடியலை ஏற்படுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் உங்களுக்குத்தான் உண்டு என்று சொன் னேன். மேற்கண்ட நாடுகளைப் போல, சுதந்திரத் தமிழ் ஈழத்துக்காக ஒரு வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
2006 ஆம் ஆண்டு தெற்கு ஒடீசியாவில் ஒரு பொது வாக்கெடுப்பு. அண்மை யில், கடந்த ஆண்டு 2011 ஜூலை மாதம், தெற்கு சூடான் நாட்டில் ஒரு பொது
வாக்கெடுப்பு. தெற்கு சூடான் ஒரு புதிய நாடாக ஆகி விட்டது. இப்போது, 2014 ஆம் ஆண்டு, நியூ கேலடோனியா என்கின்ற ஒரு புதிய நாடு அமைவதற்கான பொது வாக்கெடுப்பை நடத்த,ஐ.நா.மன்றம் தீர்மானித்து இருக்கின்றது. 2015 இல், போகெய்ன்வில்லே என்ற நாடு அமைய பொது வாக்கெடுப்பு நடத்தவும் தீர்மானித்து இருக்கின்றார்கள்.அந்தப் பட்டியலில், தமிழ் ஈழத்தையும் சேருங் கள்.
இந்தக் கோரிக்கையை, பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில், ஐரோப்பிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு உள்ளே முதன்முதலாக முழங்கி ய வன் என்ற தகுதியோடு இங்கே பேசுகிறேன். (பலத்த கைதட்டல்). இன்றைக்கு உலகின் பல நாடுகளில் சிதறிக் கிடக்கின்ற ஈழத்தமிழர்கள், அந்தந்த நாடுகளி லேயே இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்வதற்கான வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்று சொன்னேன்.

அன்றைக்கு இரவே அங்கிருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்தேன். பெல்ஜியத் தைச் சுற்றிப் பார்க்கவில்லை.அடுத்த இரண்டாம், நாள், மன்னார்குடியில் ஒரு
பொதுக்கூட்டத்தை, பெரியார் திராவிடர் கழகம் முன்கூட்டியே ஏற்பாடு செய்து இருந்தது. மணி அழைத்து இருக்கின்றார். அந்தக் கடமை அழைத்தது. அங்கே வந்து நான் கலந்து கொண்டதை நினைவூட்ட விரும்புகிறேன்.
இன்னொன்றையும் சொல்லுகிறேன். இனப்படுகொலை செய்த ராஜபக்சே யைக் குற்றக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்று சொல்லுவதற்குக் காரணம்
இருக்கின்றது. அப்படி நிறுத்தினால்தான், ஈழத்தமிழர்களின் தமிழ் ஈழக் கோரிக் கை நியாயம் என்பதை உலகம் உணரும். அதை வலியுறுத்துகின்ற வேளையி லேயே, சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான கருத்தும் வலுப்பெறுகிறது.
நான் பெற்ற பெரும்பேறு
நமது சத்யராஜ் அவர்கள், 24 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஈழம் சென்று வந்த தைப் பற்றிப் பேசினார்கள். அதிலே ஒரேயொரு செய்தியை நான் இங்கே குறிப் பிட விரும்புகிறேன். புலிகளிடம் நஞ்சுக்குப்பியை வாங்கி நான் கட்டிக்கொண் டது,ஏதோ வீரதீர பராக்கிரமத்துக்காக அல்ல.அவர்களைப் போல நான் தியா கம் செய்து விட முடியாது. நான் அங்கே இருந்தபோது, தி.மு.க. பொதுச்செய லாளர் விடுத்த அறிக்கையால் மனம் நிலைகுலைந்து போனேன்.
நான் இனி தமிழ்நாட்டுக்குத் திரும்பிச் செல்ல மாட்டேன் என்ற நிலையில், பிர பாகரன் என்னை வற்புறுத்தி அனுப்பி வைத்தார். எனக்கு முன்னும் பின்னுமா கச் செல்லுங்கள்; பக்கத்திலே செல்லுங்கள் என 56 பேர்களைப் பாதுகாப்பாக அனுப்பி வைத்தார். யானை இறவிலே கொடி ஏற்றியவர் எங்கே? எதிரிகளைக் கலங்கடித்த தளபதி பால்ராஜ் எங்கே? அப்படிப்பட்ட ஏழு தளபதிகளை என்னு டன் அனுப்பினார். அப்போது நான் கேட்டேன்.ஒருவேளை இந்திய இராணுவம் சுற்றி வளைத்துக் கொண்டு தாக்கினால், தப்பித்தவறி நான் பிடிபட்டால்,இந்தப் பாசறை எங்கே இருக்கிறது? என்று அறிந்து கொள்வதற்காக என் நகக்கண் களில் ஊசிகளை ஏற்றினால் என்னால் எப்படித் தாங்க முடியும்?
ஆகையால், எனக்கும் ஒரு குப்பி தந்தால், அந்த நிலையில் நான் என்னைக் காப்பாற்றிக் கொள்வேன் என்று சொன்னபோது, தன் கழுத்தில் கட்டி இருந்த
இரண்டு குப்பிகளுள் ஒன்றைத் தனியாகப் பிரித்து எடுத்து, பொட்டு அம்மானை வரச்சொல்லி, புதிய கயிறு கொண்டு வரச்சொல்லி அதைக் கட்டி என் கழுத் தில் அணிவித்தார் மாவீரர் பிரபாகரன். அதுதான் என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த பெரும்பேறு.
நாங்கள் தமிழ் ஈழ விடுதலைக்காகக்குரல் கொடுக்கின்றோம்.அதற்கான பொது வாக்கெடுப்பு நடக்கத்தான் போகிறது. அதற்காகத் தமிழகம் ஒருசேரக் குரல் கொடுக்க வேண்டும்!
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இவ்வாறு உரையாற்றினார்.

No comments:
Post a Comment